சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 8

அனைவருக்கும் வணக்கம் _()_

அறுசுவையினர் அனைவரையும், சமைத்து அசத்துமாறு அன்போடு அழைக்கிறேன். :) (லலிதா விடுமுறையிலுள்ளதால் இமா இவ்வாரம் இங்கு பொறுப்பிலிருக்கிறார்கள்.)

போட்டிக்கான காலம் - இன்று (17 டிசெம்பர்) முதல் டிசெம்பர் 24ம் ஆம் தேதி வரை

முயற்சித்துப் பார்க்கவுள்ள குறிப்புகள் பற்றிய விபரம் -
<b>இந்திரா.S.பிள்ளை - 27 குறிப்புகள் http://www.arusuvai.com/tamil/expert/222
தயாபரன் வஜிதா - 26 குறிப்புகள் http://www.arusuvai.com/tamil/expert/541
பவித்ரா ராம் - 25 குறிப்புகள் http://www.arusuvai.com/tamil/expert/24082
ஹலீலா ஃபர்வீன் - 21 குறிப்புகள் http://arusuvai.com/tamil/expert/23414
ரூபி - 1 குறிப்புகள் http://arusuvai.com/tamil/expert/17805</b>
(மொத்தம் 100 குறிப்புகள்)

நீங்கள் செய்ய வேண்டியது -
* குறைந்தது இரண்டு குறிப்புகளாவது முயற்சி செய்ய வேண்டும். 100 குறிப்புகளையும் முயன்றாலும் மகிழ்ச்சியே. ;) அதிக குறிப்புகளை முயற்சித்தவர் வெற்றியாளராகக் கருதப்படுவார்.
* முயற்சி செய்த குறிப்பு யாருடையது என்பதை அவ்வப்போது இந்த இழையில் பதிவு செய்யுங்கள்.
* தொடர்பான குறிப்புகளின் கீழ் அவை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு குறிப்புக் கொடுத்தவரை ஊக்குவியுங்கள்.
* ஏற்கனவே 'யாரும் சமைக்கலாம்' பகுதியில் இல்லாத குறிப்புக்களை முயற்சித்துப் பார்க்கும்போது, விரும்பினால் குறிப்புக்கு ஏற்ற விதத்தில் செய்முறைப் படங்களை எடுத்து குறிப்புக்கான தொடர்போடு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். (இங்கும் அது பற்றிக் குறிப்பிட்டால் மற்றவர்கள் அதைத் தவிர்த்து வேறு குறிப்புக்களை முயற்சிக்க உதவியாக இருக்கும்.)
* விரும்பினால்... இறுதிப் படத்தை குறிப்புக்கான தொடர்புடன் அறுசுவை முகநூல் பக்கதில் பகிரலாம்.

எப்போதும் போல சகோதரி ஸ்கந்தா தொடர்ந்து தனது கணக்கெடுப்புப் பணியை நடத்துவார்கள்.

இப்போது இந்திய நேரப்படி காலை 7.00! ஆரம்பியுங்கள் சமையலை.

உற்சாகமான உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்த்து...
'சமைத்து அசத்தலாம்' குழுவினர் சார்பாக
- இமா

புதிதாக பொறுப்பேற்றதற்காக முதலில் என் வாழ்த்துக்கள். இருங்க சமைக்க ஆரம்பிச்சிட்டு பதிவிட ஓடி வரேன். நன்றி இமாம்மா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

டொய்ங்... இன்னமும் பட்டி ஓடுதோ!!!!! 'திங்கட்கிழமை' என்கிறதைத் தவிர வேறு எதையும் கவனிக்காமல் ஆரம்பித்திருக்கிறாங்க இமா. ;)) திட்டாதீங்க. வேண்டுமானால் முடிவு தேதியை பின்போட்டு விடலாம்; நிறைய சமைத்து அசத்த நேரம் கிடைக்கும். ;D

எப்போவாவது மட்டும் எட்டிப் பார்க்கிற இமாவுக்கு இப்போதெல்லாம் அறுசுவை பற்றி எதுவுமே தெரியவில்லை. உதவிக் கரம் நீட்டிய அக்கா & தங்கைக்கு என் அன்பு நன்றிகள். ;))

‍- இமா க்றிஸ்

//டொய்ங்... இன்னமும் பட்டி ஓடுதோ!!!!! //
இமாம்மா தெய்வமே!! நேத்துதான் பட்டியே ஆரம்பிசிருக்குங்கோ!!
இனி ஓடுமா நடக்குமாங்கிறது உங்க கையிலயும் தோழிகள் கையிலயும் தான் இருக்குதுங்கோ!! ஸ்டாட்டிங் மீசீக் கொஞ்சம் ஆழ் மனசுல கிலிய உண்டு பண்ணுதுங்கோ!!

அப்புறம் மறுபடியும் ஒரு வெலக்கம் தேவை, நீங்க கொடுத்திருக்கிற இழைய searchல
போட்டா no result னு வருதே நான் எப்படி குறிப்பு எடுத்து சமைப்பேன்!!
மறுபடிய்ம் தங்களின் உதவி தேவை தோழி!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாவ்! இமா ஆரம்பித்தாகி விட்டதா? கலக்குங்க, அசத்துங்க :) வாழ்த்துக்கள் :)

அருட்செல்வி, எல்லா லின்க்கும் சரியா தானே இருக்கு... :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என் அக்கவுண்ட்டை ஓபன் பண்ணிக்கோங்கோ:) நேற்றைய சாதம் மீதம் இருந்ததை பவித்ராவின் குறிப்பில் பார்த்து 1.பழையோதரை ரெடி பண்ணியாச்சு. 2.அவல்உப்புமா இந்திரா பிள்ளை அவங்களோட குறிப்பை பார்த்து செய்து முடிச்சாச்சு. ரெண்டுமே ரொம்ப ஈஸியான சுவையான ரெஸிபிஸ். ஸ்கந்தா கணக்குல வெச்சிக்கோங்க ஓகேயா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா (2): பழையோதரை, அவல்உப்புமா

புது தலை இமாக்கு வாழ்த்துக்கள் :) இப்படிலாம் இமாவை உட்கார வெச்சு பார்க்க இம்புட்டு நாள் காத்திருக்க வேண்டி இருக்கு ;)

ஆமாம் கொஞ்சம் வேகமா தான் ஆரம்பிச்சு புட்டீங்க... ;) பரவாயில்லை. நான் இன்னைக்கு தானே பார்த்திருக்கேன், நாளையில் இருந்து சமைச்சு உங்க கணக்கில் சேர்ந்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் வாழ்த்துக்கு நன்றி.

பழையோதரை! ஞாயிறு சமைத்த சாதம்! அது திங்கள் கணக்கில் வருமா!! ;D

சுலபமான குறிப்புகளாக ஆரம்பித்திருக்கிறீங்கள். தொடருங்கள். நேரம் கிடைக்கும் போது 'அவல் உப்புமா' குறிப்பின் கீழும் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். போட்டியை ஆரம்பித்து வைத்த நித்யா வெற்றி பெற என் வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

//ஓடுமா நடக்குமா// நீங்க எல்லோரும் எதுக்கு இருக்கிறீங்க! இரண்டும் நன்றாகவே ஓடும். :-)
//ஒரு வெலக்கம் தேவை// ம்.... முழுசா பேர், குறிப்பு எண்ணிக்கை எல்லாவற்றையும் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணினீங்களா!! வேணாம். லிங்க் மட்டும், அதுவும் 'சர்ச்'ல போடாம மே...ல போட்டுருங்க. தேவையான பக்கம் திறக்கும்.

குறள் சொன்னால் போதாது அருட்செல்வி, எந்த சாக்கும் சொல்லாமல் திரும்ப கணக்கோடு வர வேண்டும், சரிதானே! :-)

‍- இமா க்றிஸ்

ம்... காப்பி, தேநீர் குறிப்பு யாராச்சும் கொடுத்திருக்காங்களா!! லிங்க் கொடுத்தா கலக்கிருவேன். ;)
தப்பான நாள்ல கலக்கி ;) இருக்கிறேன். பரவாயில்லை, ஒரு முக்கிய பிரமுகர் கூட சொல்லி இருக்காங்க, "Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift." என்று. ;))

கணக்கு ஆரம்பிக்கவில்லை!! :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்