க்றிஸ்மஸ் டிஷ்யூ பாக்ஸ் (Christmas Tissue Box)

தேதி: December 19, 2012

5
Average: 4.8 (8 votes)

 

டிஷ்யூ பாக்ஸ் (Tissue Box) - ஒன்று
ஃபெல்ட் (அ) வெல்வெட் துணி - கால் மீட்டர்
ஒரு அங்குல அகல ரிப்பன் - ஒரு மீட்டர்
பேபி ரிப்பன் - அரை மீட்டர்
எலாஸ்டிக் - அரை மீட்டர்
கனமான அட்டைகள்
க்ராஃப்ட் க்ளூ
ஹாட் க்ளூ
டபுள் சைடட் டேப் (Double Sided Tape)
ஸ்டிக்கி டேப் (Sticky Tape)
ஸ்டேப்ளர் (Stapler)
கத்தரிக்கோல்
பென்சில்
அடிமட்டம்
குரடு
அலங்கரிக்க:
செயற்கைப் பூக்கள்
ப்ளாஸ்டிக் இலைகள்
சிவப்பு நிற மணிகள்
ஃப்ளோரல் ஒயர் (Floral Wire)
பொருத்தமான வாசகங்களோடு கூடிய Christmas Organza Ribbon

 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் டிஷ்யூ பெட்டியை அளந்து அந்த அளவிற்கு அட்டையில் பக்கங்களை வெட்டி எடுக்கவும். பெட்டியின் நடுவில் உள்ள துவாரத்தைப் பிரித்து, அந்தத் துண்டை வெட்டி வைத்திருக்கும் அட்டையின் பிரதான நடுப்பகுதியில் வரைந்து வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள அட்டைகளை இணைத்து ஒட்டி விடவும். (டிஷ்யூ பெட்டியை உள்ளே வைத்துக் கொண்டால் வேலை செய்வது சுலபமாக இருக்கும்).
நடுவில் துவாரத்தின் அருகே இரண்டு வரிக்கு டபுள் சைடட் டேப் ஒட்டிக்கொள்ளவும். மீதிக்கு க்ராஃப்ட் க்ளூ பூசி, ஃபெல்ட் துணியை இரண்டு பாதியாக ஒட்டவும்.
மீதிப் பக்கங்களையும் ஒட்டி விடவும்.
நடுவில் இரண்டு வரி பேபி ரிப்பன் ஒட்டவும். அடுத்து நான்கு நிலைக்குத்து விளிம்புகளிலும் 1" அகலமான ரிப்பனை படத்தில் காட்டியுள்ளது போல் ஒட்டிக் கொள்ளவும். கடைசியாக மேற்பக்கம் உள்ள விளிம்புகளையும் ஒட்டி முடிக்கவும். (ரிப்பனின் அரை அங்குலம் ஒரு பக்கமும் மீதி மறு பக்கமும் வரவேண்டும்.) ரிப்பன் ஒட்டுவதற்கு க்ளூ சரிவராது. ரிப்பன் அளவு அகலமான டபுள் சைடட் டேப் அல்லது ஹாட் க்ளூ கொண்டு ஒட்டவும்.
மேற்பக்கங்களுக்கு ஒட்டும் போது மூலைகளை 45° சரிவாக வெட்டி ஒட்டினால் அழகாக இருக்கும். பெட்டி அடியில் ஒரு வரி பேபி ரிப்பன் ஒட்டிவிடவும்.
ஆர்கன்சா ரிப்பனில் சொற்களின் பின்னால் வருமாறு டபுள் சைடட் டேப் ஒட்டி விடவும்.
இப்பொழுது ஆர்கன்சா ரிப்பனை படத்தில் காட்டியுள்ளது போல் பெட்டியில் ஒட்டவும்.
ரீஃபில் செய்வதற்கு, முதல் முறை எடுத்த அதே வகையான டிஷ்யூ பெட்டிகளைத் தெரிவு செய்ய வேண்டும். பெட்டியின் அகலத்துக்கு ஏற்றவாறு இரண்டு துண்டு எலாஸ்டிக் எடுத்து, அவற்றின் முனைகளில் முடிச்சுப் போட்டு ஸ்டேப்பிள் செய்து வைத்தால் ரீஃபில்கள் சற்று சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.
கம்பியில் மணிகளை நுழைத்து நுனியை வளைத்து, சிறிது ஹாட் க்ளூ வைத்து ஒட்டிக் கொள்ளவும். இலைகள், பூக்களின் தேவையற்ற பாகங்களை நறுக்கி விட்டு விருப்பம் போல் பெட்டியில் ஒட்டி அலங்கரிக்கவும். இதற்கு கட்டாயம் ஹாட் க்ளூ தான் பயன்படுத்த வேண்டும்.
இது பெட்டியின் மற்றொரு பக்கம். பூ ஒட்டி அலங்கரித்துள்ளேன்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்துவதற்கென்றால், இதேபோல் நேரடியாக டிஷ்யூ பெட்டியின் மேலேயே ஃபெல்ட் ஒட்டி அலங்கரிக்கலாம். முதலிலேயே விளிம்புகளுக்குப் பொருத்தமான நிற அட்டை அல்லது காகிதத்தை ஒட்டிவிட்டால் ஃபெல்ட் ஒட்டிய பிறகு இடைவெளியில் பெட்டியின் நிறம் தெரியாது. வேலை தொடங்குமுன் பெட்டியைத் திறந்து முதலாவது டிஷ்யூவை வெளியே இழுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு எடுப்பது சிரமம். அன்பளிப்பாகக் கொடுப்பதற்கென்றால், பெட்டி முழுவதாக ஒட்டி முடிந்ததும், பிரித்து எடுத்த அட்டைத் துண்டை முதலாவது துண்டு டிஷ்யூவோடு ஒட்டி மீண்டும் சொருகி விடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இம்மா அக்கா செம கிரியேடிவிட்டி அக்கா ரொம்ப அழகா கலர்புலா இருக்கு அக்கா மொத்ததுல சூப்பர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சிம்பிளான அழகான வேலை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா
வாவ்.. அழகா கடையில் வாங்கும் பெட்டி போல, பளிச் கலருடன் இருக்கு.
வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர்..கிறிஸ்மஸ் பார்ட்டிக்கு செய்ய போறேன் இதை..சரியான நேரத்தில் தந்துருகீங்க ஆன்டி..அழகா இருக்கு.வாழ்த்துக்கள்

Kalai

வெரி க்யூட் இமா நானும் செய்து பார்க்கப் போறேன்

இமா,
பிடிச்சுருக்கு..குட்டீஸ் கூட செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கிறிஸ்துமஸ் டிஸ்யூ பாக்ஸ் சூப்பர்:) அழகா செய்திருக்கீங்க வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கருத்துத் தெரிவித்த சகோதரிகள் & ரேட்டிங் கொடுத்தவர்களுக்கு என் அன்பு நன்றிகள்.

'செய்து பார்க்கிறேன்,' என்று சொன்னவர்களுக்கு - கட்டாயம் செய்து பாருங்க. (சீசன் கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு.) அப்படியே எங்காவது ;) படத்தைப் பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்கும். எதிர்பார்க்கலாமா!! ;D

‍- இமா க்றிஸ்