உங்கள் பிராத்தனைகள் வேண்டும் - ஜெயந்தி

அன்பு தோழிகளே,

என் தோழி இந்திரா தனது ஒரே மகன் அருண் (20) ஆஸ்துமாவிற்கு பலி கொடுத்து துக்கத்திலிருந்து மீளமுடியாமல் துடிக்கிறார். அவர் மகன் இறந்து ஒரு மாதம் ஆயிற்று. ஆனால் இன்னமும் மகன் மருத்துவமனையில் இருந்து

வீடு திரும்புவார் என தன் மனம் நம்புவதாக கூறுகிறார். மகன் இறப்பை அவர் மனம் இன்னும்

ஏற்கவில்லை. அவர் வேதனையை என்னால் சகிக்கமுடியவில்லை. என் அம்மா இறந்த பின் நானும் இப்படி அவஸ்தை பட்டவள். மொட்டை மாடி , கிச்சன் , வீட்டின் பின் உள்ள தென்னை மரம் , முன் வாசல் கேட் என்று எல்லாயிடமும் திடீர் திடீர் என்று ஓடிச்சென்று பார்ப்பேன். என் தாயின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள 6 வருடம் பிடித்தது. என் தோழியும் இப்படி துன்பப்படுவாரோ என நினைக்கையில் வேதனையாய் இருக்கு. இந்திராவும் அவர் கணவர் சக்திவேல் அவர்களும் இத்துன்பத்திலிருந்து விரைவில் மீளவும் அவர்கள் புதல்வன் அருணின் ஆன்மா சாந்தி அடையவும் உங்களது பிராத்தனைகளை வேண்டி நிற்கிறேன்.

ஜெயந்தி
உங்கள் தோழிக்காய் நிச்சயம் பிரார்த்திப்பேன். இப்படியான இழப்புக்கள் தாங்க முடியாதவைதான்,என்ன செய்ய விதியின் வழியில் பயணிக்கத்தான் வேண்டும். முடிந்தளவு உங்கல் தோழியுடன் தொடர்பிலிருங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்கள் தோழிக்கு துணையாய் இருங்கள் ,அவர்களின் மகன் ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்திக்கிறேன்

உங்கள் தோழிக்கு துணையாய் இருங்கள் ,அவர்களின் மகன் ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்திக்கிறேன்

தோழியே, இந்த செய்தி என்னை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. எனக்கே இப்படி என்றால் பெற்ற தாய்க்கு எப்படி இருந்திருக்கும்? உறவுகளின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அத்தனை சீக்கிரம் அந்த வலி வேதனைகளில் இருந்து வெளி வருவது என்பது இயலாத ஒன்று. முகம் தெரியாத மூன்றாமவருக்கே எதாவது ஒன்று என்றால் பதறும் மனது, சொந்த பிள்ளையின் இழப்பை எப்படி தாங்கிக் கொள்ளும். இந்த நேரத்தில் அவரின் நெருங்கிய தோழியாகிய நீங்கள் அவரை தனியே இருக்க விடாமல் முடியும் போதெல்லாம் துணையாக இருக்க பாருங்கள். அவரை நன்றாக அழ விடுங்கள். அப்போது தான் மனம் லேசாகி, துயரம் துளியாவது குறையும். அவர் மகனின் ஆன்மா சாந்தியடையவும், அவரை பெற்ற தாயின் மனம் சீக்கிரமே சகஜ நிலைக்கு திரும்பவும் என் பிரிய பாபாவை பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லதொரு மன்நல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்...என் உற்வினர் ஒருவரும் 20 வயது மகனை நீரில் மூழ்கி இழந்தார்..அதன் பின்பு அதனை ஏற்க முடியாமல் மகனோடு சிரிப்பது போலவும் பேசுவது போலவும் அனைவரையும் கலங்கடித்துவிடுவார்..அதன்பின் மருத்துவரின் உதவியால் மெல்ல மெல்ல அவருக்கு மகனது இழப்பை ஆழ்மனதிற்கு ஏற்றுக் கொள்ள வைத்து அவர் இறந்து விட்டார் என்பதை புரியவைத்தனர்..அதன் பிறகு தான் வீட்டில் மற்ற உறுப்பினர்களோடு பேசவே தொடங்கினார்..நீங்களும் முயற்சித்து பாருங்கள்...யாருக்கும் இறைவன் இப்படியொரு சோகத்தை தராமல் காக்க வேண்டும்

தோழி தளிகா சொன்னதுபோல மகன் இழப்பை அவர்கள் புரிந்து கொண்டால், அவர்கள் சிறிதேனும் ஆறுதல் பெற இயலும். நீங்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அவர்களுக்காக என் பிரார்த்தனைகள்.

பிள்ளை பாசம்... எல்லாத்தையும் விட பெருசு இல்லையா... பாவம் உங்க தோழியை நினைத்தால் மனதுக்கு வேதனையாக இருக்கு. நீங்க அவங்களுக்கு துணையா இருந்து பார்த்துக்கங்க. ஆறுதல் சொல்லுங்க. அவர்கள் மகன் ஆத்மா சாந்தி அடையவும், இவர்கள் மனம் அமைதியடையவும் இறைவனை பிராத்திக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயந்தி உங்கள் தோழிக்கு ஏற்பட்டிருப்பது தாங்கமுடியாத துயரம். உறவினர்கள் நண்பர்களின் அன்பு ஆதரவோட நல்ல கவுன்சிலிங்கும் கொடுத்தா அவங்கள இந்த துயரில் இருந்து மீட்டு கொண்டு வந்து விடலாம். கண்டிப்பாக எங்கள் பிரார்த்தனைகள் அவர்களுக்காக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயந்தி

உங்கள் தோழி மனம் அமைதியடைய நிச்சயம் இறைவனை ப்ரார்திக்கிறேன் நீங்கள் உங்கள் தோழிக்கு துணையாய் இருங்கள்.தோழி தளிகா சொன்னதுபோல நீங்களும் முயற்சித்து பாருங்கள்.. ..காலத்திற்க்கு எல்லா காயங்களையும் ஆற்றும் சக்தி இருக்கிறது.. அவர்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்திக்கிறேன்

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

hello mam.,
Mighty LORD CHRIST will help your friend and her family to recover from this great problem..HE is a great consoler..HE will give the peace and joy to your friend and her family which can not be given by this worldly people..and also GOD bless you as you are praying and requesting prayers for this such needy people..Your friend and her family will be always in our prayers...and very soon you will see a great change on her...
"GOD BLESS YOU ALL"
Thank you...

மேலும் சில பதிவுகள்