ஹேர் ஸ்டைட்ரனிங்

வணக்கம் தோழிகளே
எனக்கு ஹேர் ஸ்டைட்ரனிங் செய்ய ஆசை. எனக்கு ரொம்ப சுருள் முடி இல்ல. ஆன ட்ரை ஹேர். சடை போட்டு போட்டு திரி திரிய இருக்கு. அதான் ஹேர் ஸ்டைட்ரனிங் பண்ணலாம் என்று. பண்ண ஹேர் லாஸ் ஆகுமா? வேற என்ன பிரச்சனை வரும் அத எப்படி சரி பண்ணலாம்? சொல்லுங்க pls pa.

Hey sister hair straighten pana hair alaga irkum...
But hair loss agumnu neraya bookla padichurken...
So, be careful, yethachum consultant kita ketu panunga..unga hair typ maara adikadi pinnama free hair vitu parunga, weekly 4days pinitu micham 3days ku vera hair style panunga like ponytail, loosehair ipdi...

All Is Well:)

R.priyadharshini

thanks janani. i will try to your ideas.

சத்யா நானும் last year hair strait பண்ணுனேன். எனக்கு ஒன்னும் hair fall problem இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சியிருந்தது. ஒவ்வொருத்தவங்க hair condition பொருத்து hair fall இருக்கும் so before check ur hair condition. beaty parler லயே shampoo and conditioner கேட்டு வாங்கி use பன்னுங்க problem ஒன்னும் இருக்காது. நல்ல soft and shining அ இருக்கும் try பன்னுங்க. all the best.

ovvoru nodiyaiyum rasithu val

thanks vino.

sathya naan 2 time panni iruken. i got toooo much hair lose. but pannunga nalla irrukkum

பார்லர்ல பண்ற ப்ரொஃபெஷனல் ஸ்ட்ரெய்ட்னிங் பற்றித் தெரியாது. எப்போவாவது வீட்டில் ஸ்ட்ரெய்ட்னிங் அயர்ன் யூஸ் பண்றது உண்டு. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும் போல. எனக்கு முடி கொட்டியது இல்லை. சொல்லப் போனால்... நேராகியதன் பின்னால் அதிகம் சிக்கிக் கொள்ளாது; வழக்கத்தை விட குறைவாகத்தான் சீப்பில் வரும். பிரச்சினை என்று தோன்றிய விஷயம்... 1. நேராக ஆனதும் அடர்த்தியாகத் தெரியாது இல்லையா! அதனால, பார்க்கிறவங்க கண்ணுக்கு முடி கொட்டியது போல தெரிஞ்சு 'கொட்டுதா?' என்று கேட்டு இருக்கிறாங்க. 2. நேர்முடியில் சடை போட்டால் ரப்பர் பாண்ட் அல்லது tie போடாவிட்டால் தன்னால பிரிஞ்சு லூஸ் ஹேர் ஆகிருது. ;) 3.... கீழ ஒரு கதை சொல்லி இருக்கிறேன் பாருங்க. எங்க வீட்லயும்... நேர் முடியோட என்னைப் பார்க்க யாரோ போல இருக்கு என்பாங்க. ;)

//ட்ரை ஹேர். சடை போட்டு போட்டு திரி திரிய இருக்கு.// ட்ரைனஸ் போக என்ன செய்யலாம் என்று சொல்லத் தெரியவில்லை. பொருத்தமான கண்டிஷனர் பார்த்து வாங்குங்க. தலை கழுவினால் உலரமுன் சிக்கில்லாமல் வாரி விடுங்க. நன்றாக உலருமுன் இறுக்கி சடை போட வேணாம். தினமும் சடை போடாமல் போனிடெய்ல் போட்டு... தேவையானால் நடுநடுவுல tie போடலாம்.

//வேற என்ன பிரச்சனை வரும்// ;) இதைப் பிரச்சினை என்பதாகச் சொல்லவில்லை. சட்டென்று நினைப்பு வந்தது, சும்மா பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு தோழி... ஊரில் அவருக்கு அடையாளம் சொல்வதானால் அவர் சுருள் முடியைத்தான் குறிப்பிட்டுச் சொல்லுவோம். பிறகு வசதிக்காக முடியை நேராக்கி விட்டார். அழகாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் இன்னொரு தோழியிடம் பேசுகையில் இவர் பேச்சும் வர "அந்த சுருள் முடி பொண்ணுதானே!" என்று கேட்டார். :) எனக்கு இனி அவர் எப்போதும் நேர்முடி பொண்ணுதான் என்று தோன்றுகிறது.

ஒரு முறை லைட்டாக வீட்டில் நீங்களே ஸ்ட்ரெய்டன் பண்ணிப் பாருங்க. பிடிச்சு இருந்தால் தொடரலாம். வீட்டில் செய்வதில் இருக்கிற வசதி... தேவையான போது மட்டும் நேராக்கலாம். அடுத்த தடவை முடி கழுவியதும் மீண்டும் முடி இயல்புநிலைக்கு வந்துவிடும். அசிங்கமாகத் தெரியாது.

‍- இமா க்றிஸ்

இமாம்மா... நன்றி... நான் கேட்கனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்த கேள்வியை அவங்க கேட்டுட்டாங்க...

எனக்கும் ஹேர் ஸ்ரெயிட்டனிங்க் பன்னனும்னு ரொம்ப நாளா ஆசை ஆனால் அது என் முக அமைப்புக்கு நல்லா இருக்குமான்னு தெரியலை... அதனால தற்காலிக ஸ்டைல் தான் முயற்சி செய்து பார்க்கனும்..

வீட்லயே எப்படி தற்காலிக ஹேர்ஸ்ரெயிட்டனிங்க் பன்றதுனு எங்களுக்கு கொஞ்சம் சொல்லி குடுங்களேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இமாம்மா... நான் கேட்கனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்த கேள்வி...

எனக்கும் ஹேர் ஸ்ரெயிட்டனிங்க் பன்னனும்னு ரொம்ப நாளா ஆசை

வீட்லயே எப்படி தற்காலிக ஹேர்ஸ்ரெயிட்டனிங்க் பன்றதுனு எங்களுக்கு கொஞ்சம் சொல்லி குடுங்களேன்{straightening gel or spray}.

மேலும் சில பதிவுகள்