ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் ஐந்து...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்லியா

இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். Great ya. I like your spirit

MOUNTROAD MARLIYA NA MOUNTROAD MARLIYA DHAAN. GREAAT

எப்படி இருக்கீங்க?உங்க பொண்ணு ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டாளா?தாங்ஸ் பார் கம்மிங் பேக் டூ நார்மல்.டேக் கேர்.

சாரதா,
என்ன ஆஃபீஸ் வந்தாச்சா?ம்ம்ம்ம்......அரட்டை பாகம் 5க்கு பிள்ளையார் சுழி போடுட்டீங்க போல......குட்.

நெட்ல ஒரு கதை படிச்சேன்னு ஒரு கதை சொன்னீங்க பாருங்க.ஆதிரக்கார பையன் கதை,அது ரொம்ப நல்லா இருந்தது.

இப்போ உங்க குட்டி சாப்பிடுதா?எல்லா வீட்டிலும் இதே கதை தான் சாரதா.இதோ என் குட்டி தூங்கிட்டு இருக்கா.இப்போ எழுந்திரிச்சதும் அவ பின்னாடியே ஓடனும்.எல்லாம் நல்ல பிள்ளை மாதிரி வாயத்திறந்து வாங்குவா,ஆனால் அவளால் எவ்வளவு முடியுமோ அத்தனையும் வாயின் ரெண்டு பக்கத்திலும் அடக்கி வச்சிக்குவா.ஒரு துளி உள்ளே போரதுக்குள்ளே என் கண் முழி பிதுங்கிடும்.சரி,தண்ணீர் குடுத்து வாயில அடச்சி வச்சிருக்கிர சாபாட்டை உள்ளே தள்ளலாம்னு பாத்தா,தண்ணீர மட்டும் சாமர்த்தியமா முழுங்கீட்டு,சாதம் அப்படியே அதே இடத்திலே வச்சிருப்பா.ரூபி சொன்ன மாதிரி,ஒரு வருஷம் முடிந்ததுனா இப்படி தான் இருப்பார்களாம்.
so do not worry,be happy.

எப்படி இருக்கே. நீ வந்ததை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது அதுக்குள்ள போய்ட்டியா. பழைய மாதிரி நீ வந்து எல்லாருடனும் பேசினால் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸாக இருக்கும். நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லார் கூடயும் பேசினால் கொஞ்சம் மைண்ட் ப்ரீயா இருக்கும்னு நீயே சொல்லுவாய் தானே அதனால உனக்கு முடியும் போது வந்துட்டு போ. மரியம் எப்படி இருக்கா அவளை நல்லபடியா பார்த்துக்கோ. பாவம் நம்ம பீலிங்ஸ் பிள்ளைகளுக்கு எங்க தெரியும் சரியா. மற்றவை உன் பதில் பார்த்த பின்பு.

அன்புடன் கதீஜா.

என் குட்டி சாப்பிட்டா அன்னிக்கு மெட்ராஸ்ல மழைதான்.
எல்லாம் உங்க பொன்னு ஸ்டோரியே தான். வாயில் வாங்கி கீழெ துப்பும் கதைதான் நடக்குது. நாளொரு வண்ண்ம் பொழுதொரு மேனியாகப் போய் கொண்டிருக்கிறது.

அன்னிக்கு அறுசுவை அக்காக்களின் ஆலோசனைக்கு பிறகு நான்தான் கொஞ்சம் கவலைபடுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

அப்புறம் இன்னிக்கு என்ன சமையல். நான் இன்று காலை டிபன் இட்ல்ய், வேர்க்கடலை சட்னி மதியம் முட்டை குழம்பு , ரசம்.

சின்னக் குழந்தைங்க சாப்பிடலைன்னு பீஃல் பண்ணறீங்க எல்லாரும். 24 வயது குழந்தை படுத்தற பாடு. வேலைக்கும் போயாச்சு. இன்னும் சாதம் பிசைந்து கொடுக்கிறேன். இப்ப ஹைதராபாத்தில் ஒரு வேலைக்கு செலெக்ட் ஆகி இருக்கான். தங்கை கிட்ட வெளியூருக்கு போனா யார் இப்படி பிசைந்து தருவார்கள். நான் சென்னையை விட்டு போக மாட்டேன் என்கிறான். நேற்று கப்பில் வைத்த அவரைக்காய் பொரியல் அப்படியே இருக்கு. ராத்திரி கேட்டா நான் இதை பார்க்கவே இல்லையே என்கிறான்.
வாழைப்பழ மில்க் ஷேக்கில் கேசர் பாதாம் சேர்த்து கொடுத்தால் நீயும் பாவம் என்னென்னவோ செஞ்சு பார்க்கறன்னு கிண்டல் வேற. போறாத்துக்கு என் தம்பி வேற நான் எல்லாம் குண்டாகி ரொம்ப கஷ்டப்படறேன். நீ இப்படியே இருன்னு சொல்லிட்டான்.
எனக்கு ஒரு வருத்தமும் கிடையாது. பொது இடங்களுக்குப்போனா இந்த உறவுக்காரங்க பண்ணற லொள்ளு தாங்காது. என்ன ஒல்லியா இருக்கானே. புள்ளைக்கு சோறு கீறு போடறியா இல்லையா இதே கேள்வி. ஒரு தரம் ரொம்ப கோவம் வந்து ஒருத்தரிடம் நீங்க வந்து போடுங்கன்னு சொல்லிட்டேன்.
அன்புடன்
ஜெய்ந்தி மாமி

எப்படி இருக்கீங்க. குழந்தை நலமா. உங்களுடைய இன்டெர்நெட் கதை நன்றாக இருந்தது.தவறாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு பதில் போட்டது கே,ஆர். மர்ழியா கிடையாது. நீங்க அவசரத்துல சரியா கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.அதனால த்ஆன் சொன்னேன்பா சரியா.அப்புறம் நீங்கள் கவலை படுவதை நிறுத்தியது மிகவும் சந்தோஷம். தினமும் அறுசுவைக்கு வாங்க எல்லார்கூடவும் பேசுங்க உங்களுக்கு தெரிந்ததையும் எங்கள் கூட பகிர்ந்துக்கோங்க.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. மாமா எப்படி இருக்காங்க.வீட்டில் அனைவரும் நலமா.உங்ககிட்ட பேசி நிறைய நாள் ஆகிறது. இப்ப ஆன்லைனில் இருக்கிறது தெரிந்து உடனே பதில் போட்டேன். நாங்கள் எல்லாரும் எங்க பசங்க சாப்பிடலைன்னு புலம்பினால். நீங்க உங்க வளர்ந்த பிள்ளையே சாப்பிடலைன்னு சொல்றீங்க என்ன செய்ய. சரி வளர்ந்தால் சரியாகிடுவாங்கன்னு பார்த்தால் அதுவும் கூட பயமா இருக்கே. எப்பதான் என் பையன் சரியா சாப்பிடுவானோன்னு நானும் கவலைப்பட்டுடுதான் இருக்கேன்.இப்ப பாருங்க மாமி நான் அவனுக்கு சாப்பாடு ஊட்டி முடிக்க 1 மணி நேரம் ஆனது. அதுவும் முழுவதும் சாப்பிட்டால் கூட திருப்தியாக இருக்கும் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு.ஆனால் கொஞ்சம் சாதம் சாப்பிட்டு முடிக்கவே இவ்வளவு நேரம். அவனா பசிக்கிதுன்னு சொல்லவே மாட்டான் என்ன வயிரோ உனக்குடான்னு சொல்லுவேன். பசிக்காத பண்டம் சாப்பிட்டாயாடா என்று கேட்டால் சிரிப்பான்.அன்னைக்கு தளிகா கிட்ட பாதி புலம்பிட்டேன் இவனை பற்றிதான் பால் குடிக்க கூட அடம் என்ன செய்ய எப்ப தான் எல்லாம் சரியா சாப்பிடுற நாள் வருமோன்னு தெரியலை. ஆமா மாமி உங்க கிட்ட புலம்பிட்டே இருக்கேன் பாருங்க. நீங்க இப்ப வீடு மாறிட்டீங்களா. ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போகுது என் ஐடி கேட்டு இருந்ததாக செல்வி அக்கா சொன்னங்க முடிந்தால் மெயில் பண்ணுங்க.

அன்புடன் கதீஜா.

ரொம்ப ரொம்ப சாரி KR . இதுதான் ஒரே நேரத்துல் ரெண்டு வேலை செய்தால் இப்படிதான். ஐயோ KR மனசு எப்படி இருந்திருக்கும்.

தேன்க்ஸ் கதீஜா எனக்கு சொன்னதற்க்கு. நீங்க சொல்லலைனா எனக்கு தெரிய வாய்ப்பில்லை.

once again i am very sorry

மேலும் சில பதிவுகள்