ஸ்டாக்கிங் பூக்கள்

தேதி: February 23, 2013

5
Average: 4.6 (20 votes)

 

ஸ்டாக்கிங் துணி - பச்சை, சிகப்பு, ஆரஞ்சு
ஸ்டாக்கிங் கம்பி
க்ரீன் டேப்
மூடிகள் - ஒரு இன்ச், 2 இன்ச், 3 இன்ச் அளவுகளில்
கூழாங்கல் அல்லது பொடி கற்கள்
சின்ன பேஸ்கட் அல்லது பாட்
சற்று கெட்டியான கம்பி
தெர்மாகோல்
கத்திரிக்கோல்
முத்துக்கள் - 6
ஸ்டாமின்
நூல்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பேஸ்கட் அல்லது பாட் உள்ளே வைக்கும் அளவுக்கு தெர்மாகோலை வெட்டி தயார் செய்து கொள்ளவும்.
ஒரு இன்ச் அளவு மூடியில் கம்பிகளை படத்தில் உள்ளது போல் சுற்றி நறுக்கி வைக்கவும்.
6 பூக்கள் செய்ய. இது போல் 24 வளைவுகள் தேவை. ஒவ்வொரு பூக்களுக்கும் 4 இதழ்கள்.
ஆரஞ்சு கலர் ஸ்டாக்கிங் துணியில் 6 முத்துக்களையும் தனித்தனியாக கட்டி வைக்கவும். அடியிலுள்ள துணியை முழுவதும் வெட்டாமல் படத்தில் உள்ளதுபோல் சிறிது துணியை விட்டு வெட்டி வைக்கவும்.
2 இன்ச் மற்றும் 3 இன்ச் அளவுகளில் தேவையான அளவு இலைகளுக்கு கம்பியை வளைத்து வைக்கவும். இது பூக்கள் செய்த ஸ்டாக்கிங் கம்பியை விட சற்று தடித்த கம்பியாக இருந்தால் நல்லது. (நான் பூக்களுக்கு பயன்படுத்திய அதே கம்பிகள் தான் பயன்படுத்தி இருக்கிறேன்).
24 வளைவுகளையும் சிகப்பு கலர் ஸ்டாக்கிங் துணி கொண்டு சுற்றி நூலால் கட்டி விடவும்.
முத்துக்களை சுற்றிலும் ஸ்டாமின்ஸ் வைத்து நூலால் கட்டி விடவும். இதற்கு முத்துக்களை கட்டும்போது அடியில் சிறிது விட்டு வைத்த துணி உதவும்.
இனி ஒரு கெட்டியான கம்பியை தண்டு பகுதிக்கு வைத்து ஒவ்வொரு இதழாக அதனுடன் சேர்த்து பூ கட்டுவது போல் கட்டிக்கொண்டே வரவும்.
4 இதழ்களையும் கட்டி முடிக்கவும்.
பூவின் கீழே உள்ள கம்பியில் க்ரீன் டேப் சுற்றி விடவும்.
4 இதழ்களையும் ஒன்றன் மேல் ஒன்று வருவது போல் ஒரு சீராக எடுத்து விடவும்.
2 இன்ச் மற்றும் 3 இன்ச் வளைவுகளில் பச்சை துணி சுற்றி நூலால் கட்டி கொள்ளவும்.
பூக்களின் இதழ்களை எல்லாம் விரல் நகத்தால் லேசாக வளைத்து வடிவம் கொடுக்கவும்.
கூடைக்குள் தெர்மாகோல் வைத்து அதில் பூக்களையும், இலைகளையும் சொருகி வைக்கவும். பின் தெர்மகோல் தெரியாமல் இருக்க மேலே கூழாங்கற்கள் (அ) மீன் தொட்டியில் போடப்படும் பொடி கற்களை நிரப்பவும்.
பூக்களை சுற்றி இலைகளை வைத்து செட் செய்து, சில பூக்களில் இதழ்களை விரித்து விடாமல் மூடி அரும்பு போலவும் விடலாம்.
சுலபமாக செய்ய கூடிய மலர்கள் இவை. விரும்பிய வண்ணங்களில் செய்து வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நான்தான் ஃபர்ஸ்ட்!! ;)

அதாரு எனக்கு முன்னால வந்து இவ்வளவு அழகான க்ராஃப்ட்டுக்கு கமண்ட் போடாம ஓட்டு மட்டும் போட்டு போயிருக்கிறது! ;)

சூப்பர், சூப்பர், சூ...ப்பர் வனி. எங்கயோ ;) அவசரத்துல அரைக்கண்ணுல ஒரு கூடைல பாப்பிப் பூக்கள் தெரிஞ்சு வைச்சுது. மூச்சு வாங்க ஓ...டி வந்து, முதலாவதா கமண்ட்டியாச்சு. கலர், அமைப்பு எல்லாம் அருமை. எனக்கு வேணும் இது.

‍- இமா க்றிஸ்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று...
உங்களுடைய craft work எல்லாம் ரொம்ப creative இருக்கு..வாழ்த்துக்கள்.

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

வனி கொள்ளை அழகு ரொம்ப அருமையா செய்துருக்கீங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பூக்களை அடுக்கிய விதம் அருமை. என்னிடமும் இந்த துணியில் நான்கைந்து வித மலர்கள் உள்ளன. பாராட்டுக்கள் வனிதா.

அன்புடன் ஜெயா

வனி அருமையோ அருமை:) இந்த வார்த்தைக்கு மேல எதாவது இருக்கானு தேடிப்பார்த்து ஒண்ணுமே கிடைக்காம, இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கேன். பாராட்ட வார்த்தைகளில்லை தோழி :))
வாழ்த்துக்கள் வனி :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸ்டாக்கிங் பூக்கள் ரொம்பவே அழகா இருக்கு:-)
எந்த ஒரு பொருளயும் வேஸ்ட் பன்னாமா நீங்க பன்ன்னுர ஒரு ஒரு விஷயதுக்கும் எடுகுர முயற்சி இருகே ஹப்பா
நிறயவே கத்துகனும் அக்கா உங்க கிட்ட இருந்து :-)

நிஜமாவே இந்த கைவினை உருவான விதத்த முகனூல் ல பார்த்து தெரின்சுகிடேன் நிஜமாவே அக்கா ரொம்பவே சந்தோஷ பட்டுதான் போய் இருப்பாங்க இப்டி ஒரு தங்கசிய நினச்சு

எனகு என்ன சொல்லுரதனே தெரியல அக்கா மொத்ததுல உங்க எண்ணங்கலுக்கும் அதுக்கு உயிர் குடுத்த உங்க கைக்கும் மனமார்ந்த் பாராட்டுக்கள் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்டாக்கிங் பூக்கள் சூப்பர் கூடையோட பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

சூப்பரோ சூப்பர். எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லா துறையிலும் பிரகாசிக்க முடிகிறது. சீக்ரெட் சொல்லுங்க.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

வனி
சிம்பிளா சொல்லனும்னா, கொள்ளை அழகு..
இப்ப எனக்கு ஸ்டாகிங் கிளாத்ள ஏதாவது செய்யனும்ங்கற ஆசையை தூண்டி விட்டுடிங்க.. செய்து படம் அனுப்பறேன் ..இங்கே கடையில் பாக்குறேன் .எளிகண்ட் .. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா ரொம்ப அழகா இருக்கு கலர் காம்பினேஷன் அருமை.

வனி பூங்கொத்து சூப்பர்.அழகா இருக்கு

hi vanitha mam,
you flower makiing is realy very super. i like it so much and thank you mam.

hi vanitha mam,
you flower makiing is realy very super. i like it so much and thank you mam.

hai,parka romba azaha irukku,seivatharkum easy ya irukku nan ippodhu riyadhil irukken idharkku kambi, cloth engey kitaikkum therindhal sollungappa

வர வர நான் ரொம்ப சோம்பேரி ஆகிடேன்ல... தேன்க்ஸ் சொல்ல எம்புட்டு நாள்... ;) அழகாக வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி... :) கட்டாயம் உங்களுக்கு ஒன்னு செய்து ஊருக்கு அனுப்பியே விடுறேன்... இல்லைன்னா செய்து பத்திரமா எடுத்து வைப்பேனாம், இமா பெங்களூர் வந்து வாங்கிப்பீங்களாம் ;) டீல் நல்லா இருக்கு தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நான் வேணும்னா வேற வார்த்தை தேடி தரேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நம்ம மேல அன்பா ஒருவர் தருவதை தூக்கி போடுறது வலியான விஷயம். அது எனக்கு எப்பவும் விருப்பமில்லை... அதான் இப்படி ஒரு சின்ன முயற்சி. நன்றி கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எங்கே மீண்டும் காணாம போயிட்டீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பிடிச்சதை செய்தா எல்லாருமே நல்லா செய்யலாம் லீமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து அசத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ரியாதில் எங்க கிடைக்கும்னு எனக்கு தெரியலங்க. தோழிகளை கேளுங்க மன்றத்தில் தெரிஞ்சவங்க சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா