இரத்தப்போக்கு

டியர் பிரண்ஸ் நம்ம ஜலீலக்கா ஊர் வந்தாச்சு..உங்களிடம் ஒரு முக்கியமான சொலுஷன் கேட்க சொன்னாங்க..அவங்களுக்கு தெரிஞ்ச கல்யாணம் ஆகும் வயதுள்ள ஒரு பெண்ணுக்கு 2 1/2 மாசமா கண்டினீவா இரத்தப்போக்கா இருக்கு பாவம் ரொம்ப கஸ்டப்படுறாங்கலாம்..எல்லா டாக்டரிடமும் போயாச்சு ஆனாலும் நோ யூஸ் உங்களுக்கு யாருக்காவ்து இதுக்கு தெரிஞ்ச நல்ல கை மருந்து இருந்தால் சொல்ல சொல்லி சொன்னாங்க பதில் போடுங்கப்பா!

டியர் பிரண்ஸ் நம்ம ஜலீலக்கா ஊர் வந்தாச்சு..உங்களிடம் ஒரு முக்கியமான சொலுஷன் கேட்க சொன்னாங்க..அவங்களுக்கு தெரிஞ்ச கல்யாணம் ஆகும் வயதுள்ள ஒரு பெண்ணுக்கு 2 1/2 மாசமா கண்டினீவா இரத்தப்போக்கா இருக்கு பாவம் ரொம்ப கஸ்டப்படுறாங்கலாம்..எல்லா டாக்டரிடமும் போயாச்சு ஆனாலும் நோ யூஸ் உங்களுக்கு யாருக்காவ்து இதுக்கு தெரிஞ்ச நல்ல கை மருந்து இருந்தால் சொல்ல சொல்லி சொன்னாங்க பதில் போடுங்கப்பா!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Ummu Shaheera (Jul 3 2008 - 17:55)
அன்புள்ள சகோதரிகளே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். நான் இன்று தான் புதிதாக சேர்ந்திருக்கிறேன். தொடர் மாதவிடாய் குணமாவதற்கு மாதவிடாய் தொடங்கிய அன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு முழு வாழைப்பூவினை அதன் தோல், பூ எல்லாம் சேர்த்து ஜூசரில் சாறு பிழிந்து (மிக்சியில் அரைப்பதாக இருந்தால் சிறிதழவு தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்}. முடிந்தவரை தண்ணீர் சேர்க்காமல் வாழைப்பூ சாரை மட்டும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மற்ற உணவுகள் சாப்பிடலாம். தினமும் காலையிலும் மாலையிலும் பேரீத்தம் பழசிரப்பை பாலில் கலந்து குடிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் மூன்று மாதங்களில் குணமாகிவிடும். எனது மகளுக்கு பனிரண்டு வருடங்களாக இருந்த தொடர் உதிரப் போக்கு இந்த மருத்துவத்தின் மூலம் குணமானது.

1 வருடம் முன்பு கேட்ட அதே கேள்வி.இன்னமும் என் மகளுக்கு காது குத்திய பாடில்லை.ஒரே பயமாக் இருக்கிறது.
ஒன்னும் வலிக்காது லேசா அழும் என்பார்கள் ஆனால் தைரியமாக காடிக் கொடுக்கும் குழந்தை கூட குத்தியவுடன் வீரிட்டு அழும்..அதைப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது...வலியில்லாமல் காது குத்த முடியுமா?
காது குத்தியபின் குத்திவிட்டோமே என்று வருத்தப்படுவோமா..என்னுடைய சுயநலய்த்திற்காக என் குழந்தையை இழுத்து பிடித்து வைத்து கொடுமைப்ப் படுத்டஹ் வேண்டுமா என்று மனசு பதறுகிறது..ப்லீஸ் யாருடைய குழந்தைக்காவது வலியில்லாமல் குத்தியிருகிறீர்களா?
கோவையில் எங்கு வலியில்லாமல் குத்துகிறார்கள்..இங்கு ஹாஸ்பிடலில் கேட்டேன் லேசா தான் வலிக்குமென்றார்கள் ஆனால் அங்கே குத்திய குழந்தை அழுத அழுகையைக் கண்டு மகளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன் நானும் அழுது விட்டேன் அந்த குழந்தையை நினைத்து.
தானாக வரும் வலி ப்ரச்சனை இல்லை நான் அதர்காக கவலைப் படுவதில்லை ஆனால் நாமாக கொடுக்கும் வலி தேவையா என்று தோன்றுகிறது..ஆனால் குழந்தையின் தாத்தா பாட்டி ஆசைப் படுகிறார்கள்.

தளிகா எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணு நல்லா இருக்காளா? beauthy parlour ல கேட்டு பாருங்க தளிகா. அங்க ஏதோ வழி இல்லாம இருக்க மருந்து தடவி குத்துவாங்களாம். இத பார்த்த உடனே பதிவு கொடுத்துட்டேன். அக்கா பொண்ணுக்கு அப்படி தான் குத்துனாங்க நான் அவங்க கிட்ட கேட்டு சொல்றேன். என்ன ஒரு சென்சிடிவான அம்மா

கேட்டு சொல்லுங்க சரியா..ஆமா காயத்ரி வேக்சினேஷன் அது மாதிரி என்றால் நான் தைரியமாக நிற்பேன் சரி நல்லதுக்கு தானேன்னு ஆனால் இந்த விஷயம் மனதுக்குள் ஒரு உறுத்தல் பாவமாக இருக்கிறது.எனக்கு தானாக கேட்கும்பொழுது குத்தலாம் இல்லையென்றால் விட்டு விடலாம் என்பது விருப்பம்..பெரியவர்கள் திட்டுகிறார்கள்..
இவரோ நியே போய் குத்து நான் உள்ள வரவே மாட்டேன் என்கிறார்.எனக்கு தகுந்த மாதிரி குத்தி ட்ரெஸ் இழுத்து காது கிழிஞ்ச ரெண்டு குழந்தைகளைப் பார்த்து விட்டேன் அதனால் இன்னும் பயம்.இம்முறை ஊருக்கு போனால் என்னவெல்லம் திட்டு வாங்க போகிறேனோ என்று பயம்

மேலும் சில பதிவுகள்