தொப்புள் கொடி இரத்தம் (plz help )

நிறைய மருத்துவமனையில் தொப்புள் கொடி இரத்தத்தை சேமியுங்கள் நு போட்டு இருகாங்க... ஆனா எனக்கு தெரிந்த யாருமே அதை சேமித்து வைத்த மாதிரி தெரில ... யாராவது சேமித்து இருகிங்களா ? அதை பத்தி தெரிந்துக்க ஆசை .... தோழிகள் உதவவும் ...

தொப்புள் கொடி எடுத்து வைக்க சொல்வாங்க... அந்த ஸ்டெம் செல்கள் பின்னாளில் எதாவது உடல் பிரெச்சனைகளில் இருந்து குணப்படுத்த உதவும்னு சொல்வாங்க. குழந்தை பிறந்துதும் காய்ந்து விழும் தொப்புள் கொடியை சிலர் எடுத்து பத்திரப்படுத்துவாங்க. அந்த காலத்தில் தாயத்தில் வெச்சு இடுப்பில் கட்டி விடுவாங்க. ஆனா அது எந்த அளவு உதவும்னு எனக்கு தெரியாது.

இப்பலாம் பிரசவத்துக்கு முன்பே மருத்துவமனையில் சொன்னா பிறந்ததுமே அந்த குழந்தையின் தொப்புள் கொடியையும் அதில் உள்ள ரத்தத்தையும் முறையாக சேகரித்து வைப்பாங்க. பின்னாளில் குடும்பத்தில் (ரத்த தொடர்புடைய) யாருக்கு மருத்துவ உதவின்னாலும் இது உதவும்னு சொல்வாங்க. எனக்கு எங்க அம்மா எப்பவோ டிவியில் பார்த்து சொன்னாங்க. ஆனா அதுக்குள்ளவே என் இரண்டு பிள்ளைகளும் பிறந்தாச்சு. அப்போ இதை பற்றி எல்லாம் தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani அக்கா முதலில் வந்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி..இந்த வசதிகள் எல்லாம் இபோ தான் வந்து இருக்கு ...இவ்வளவு நன்மைகள் இருந்தும் இப்போ எல்லாம் இவ்வளவு வசதிகள் வந்து விட்டது .. அனாலும் ஏன் யாருமே இதை சேமிக்க வில்லை நு தெரியல.. நான் இபோ 7 மாதம் எனது குழந்தைக்கு இதை சேமிக்கலாம் நு இருக்கேன் .ஒரு வேலை இதை சேமிக்க செலவு அதிகம் ஆகுமோ ?

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

எனக்கு தெரிந்தவை ஸ்டெம் செல் என்பது குழந்தை பிறக்கும் போது நம் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கபடும் ரத்த செல்கள். நமக்கு ஏற்படும் சில நோய்களுக்கு மருந்தாக பயன்படும்.இவை தாய்,சேய்க்கு நன்கு பொருந்தும் என்றும் தந்தைக்கு 50% வாய்ப்பும் மற்றும் தாய் வழி உறவுகளுக்கும்,தந்தை வழி உறவுகளுக்கும் எந்த அள்வு என்பது சொல்லமுடியாது என்றும் நான் விசாரித்தலில்தெரிந்து கொண்டது.இதற்கு நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதமாகவோ பணம் செலுத்தலாம். இதுவும் ஒரு இன்சுரன்ஸ் போல் தான்.இதற்கென்று சில கம்பெனிகள் உள்ளன. நமது நாட்டில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை ஆதலால் நான் இதை பதிவு செய்யவில்லை.தாங்கள் பதிவு செய்ய நினைத்தால் தாங்கள் செல்லும் மருதுவமனையில் விசாரிக்கவும்.மேலும் இதன் ஆராய்ச்சி இன்னும் தொடர்கின்றது. இவை நான் தெரிந்து கொண்டவை

Sangiselva

செளவு ஆகும்னு தான் நினைக்கிறேன். சேமிச்சு வைக்கனுமே பல வருடம். ஆனா அது நல்லது தான்... கேன்சர் போன்ற கொடூரமான நோயில் இருந்து கூட உயிரை காப்பாற்ற இந்த ஸ்டெம் செல்ஸ் உதவும்னு சொல்றாங்க. பதிவு பண்ணிக்கங்க சங்கீதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி ஸ்டெம் செல் சேகரிப்பது இங்கு என்ன வசதிகள் இருக்குன்னு தெரில... இந்த முறை hospital போகும் போது விசாரிக்கணும்...இது என் மூலமாகவாவது எங்க ஊரில் ஒரு விழிப்புணர்வு வரணும்னு ஆசை ...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

hi, i think its around 80000 before 1 1/2 year.and first u pay initial 25% amount balance u can pay monthily system also. u can ask your hospital receiption they wil tell the correct current systematic and the payment system, or they give the number of company.best u can ask your doctor she wil explain the benefit of stem cells.

Sangiselva

நிச்சயமா இதுக்கான முயற்சிகளை எடுக்கறேன் ... இது சேமிக்க தேவையான வழிமுறைகள் தெரிந்துக்க முயற்சிக்கிறேன்... தெரிந்தால் நிச்சயம் எல்லோரிடனும் பகிர்ந்து கொள்வேன்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

80000 ஆ ?காஸ்ட்லி யாதான் இருக்கு .. ஒரு உயிரை காப்பாற்ற அப்படின்னு நினைத்தால் செலவு செயலாம் ...இலச்ச கணக்கில் இபோலம் மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கு ..அதுக்கு இது எவ்வவோ better ...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

பதிவு செய்வது தபில்லதான்,2 years before என் தோழி பதிவு செய்து உள்ளாள்.என் கணவர் விசாரித்த வகயில் நமது நாட்டில் எந்த அளவு பதுகாப்பு என்று ஒன்றும் சரியாக படல.தாங்கள் மருதுவமனையில் விசாரிக்கவும்.அது தான் சரியாக இருக்கும்.

Sangiselva

Hello sister
Yes it cost around 80,000 to 1 lakh last week my friends two of them delivered a baby and they took these stem cells for future use...available in all major hospitals...have to fill a form and give somr details

மேலும் சில பதிவுகள்