குழம்பில் உப்பு அதிகமானால் என்ன செய்வது?

அனைவருக்கும் வணக்கம் என் இனிய அறுசுவை தோழிகளே . எனக்கு சந்தேகம்
கூறுங்கள். குழம்பில் உப்பு அதிகமானால் என்ன செய்வது. ப்ளீஸ் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .

ஒரு துணியில் சிறிதளவு சாதத்தை மூட்டையாக கட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடவும்.

ஹாய் புவனேஸ்வரி நல்ல இருக்கீங்களா? நீங்க கொடுத்த ideava ட்ரை பண்ணி பார்கிறேன். நன்றி. freeya இருந்தீங்கன அரட்டை பக்கம் வாங்க.
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

simple. Add some jaggery in kuzhambu. If you make poriyal and salt is more, add 1 teaspoon sugar. You will not believe, the poriyal will taste good.

HAI, how r u? thankyou for your information, i will try and tell u the taste.
ur name is different. what is mean by newmom.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

கிழங்கை வெட்டிப் போட்டு கொதிக்க விட்டால் அது உறிஞ்சி விடும். அறுசுவையில் வேறொரு இழையில் ஆப்பிள் போட்டாலும் உப்பை உறிஞ்சும் என்று சொல்லி இருந்தாங்க. நீங்க என்ன குழம்புக்கு கேட்கிறீங்க என்று தெரியல. சிலதுக்கு தக்காளி, சாஸ் சேர்க்கலாம். சிலதுக்கு பருப்பை வேகவைத்து சேர்க்கலாம். ப்ரெட் ஸ்லைஸ் தோய்த்து எடுத்தாலும் உப்பை உறிஞ்சும் என்பாங்க. செய்து பார்த்தது இல்லை. (அது குழம்பையும் சேர்த்தே உறிஞ்சி எடுத்துரும்.) ;)

‍- இமா க்றிஸ்

நன்றி இமா எனக்கு பதில் கூறியதற்கு . மீன் குழம்பு மற்றும் தேங்காய் அரைத்து வாய்த்த குழம்பிற்கு கேட்கிறேன். கிழங்கு என்றால் எந்த கிழங்கு?

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

உருளை கிழங்கு தான்

sathaththai rendu urundai pidithu poottal sariyagum

saathathai kulambil poottal kulambuil saathamaaga irukkum allavaa?

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நான் சேனை கிழங்கில் கட்லெட் பண்ணினேன்,சுவை நல்லா இருந்தது,ஆனால் உப்பு அதிகமாகியதால் சாப்பிட முடியவில்லை,அதை அப்படியே ஃபிரீஸரில் போட்டு விட்டேன், அதை உபயோகித்து வெறு என்ன பண்ணலாம்,ஏதாவது குழம்புகளில் சேர்க்கலாம? அப்படின்னா என்ன மாதிரி குழம்பில் சேர்க்கலாம்
ஃபிளீஸ் பதில் சொல்லுங்க தோழிஸ்,வீணாக்க மனசு இல்லை.

மேலும் சில பதிவுகள்