பட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 2

தேதி: July 1, 2013

4
Average: 3.9 (8 votes)

 

பட்டர்நட் ஸ்குவாஷ் (Butternut Squash)
கத்தி (பெரியது ஒன்று, சிறியது ஒன்று)
பீலர்
ஆப்பிள் கோரர் (Apple Corer)
உட் கார்விங் டூல்ஸ் (Wood Carving Tools)
பேப்பர் டவல்
மிளகு
கடுகு
லாவண்டர்
டூத்பிக்

 

பயன்படுத்தியதற்கு அடுத்த அளவான வளைவான டூலினால் இதேபோல சுற்றிலும் இன்னொரு வட்டம் வரையவும். இது இன்னும் ஆழமாக (2 mm) இருந்தால் நல்லது.
அதனைச் சுற்றிலும் V டூலால் இதழ்களை வெட்டிக் கொள்ளவும்.
மீதமுள்ள இடத்தைப் பொறுத்து எத்தனை பூக்கள் வேண்டுமானாலும் வெட்டி நிரப்பலாம். (ஆனால் பூக்கள் அதிக நெருக்கமாகிவிடாமல் இருந்தால் நல்லது).
காம்புகளை மெல்லிய கத்தியால் வரையவும். கத்தியை சரித்து (30° கோணத்தில்) பிடிக்க வேண்டும். ஒரு முறை வரைந்துவிட்டு மீண்டும் காயை அப்படியே 180° திருப்பிப் பிடித்து முதலில் வரைந்த கோடு முடிந்த இடத்தில் ஆரம்பித்து இதே போல சரித்து வரைந்து முடிக்கவும். கத்தி முனையால் மெதுவே தட்டினால் அந்தத் துண்டு வெளியே வரும். காய்கள் வரைய விரும்பினால் சிறிய வளைந்த டூலால் சுழற்றி உட்பகுதியை முற்றிலும் எடுத்துவிடவும்.
ஆப்பிள் கோரர் கொண்டு கழுத்துப் பகுதியில் சம இடைவெளியில் அழுத்திச் சுழற்றி வட்டங்கள் வரையவும். நடுவில் சிறிய வளைவு கொண்ட டூலால் வட்டங்கள் அழுத்தி, வெளியே எடுக்கும் போது துண்டுகளைச் சேமித்துக் கொள்ளவும். இவற்றை பின்பு விருப்பம் போல இடம் மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம்.
காயின் மேலே நடுவில் ஆப்பிள் கோரரை வைத்துச் சுழற்றி விட்டு கத்தியால் வெட்டி நீக்கினால் இப்படி வரும். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு சென்டிமீட்டர் வரை ஆழமாகத் தோண்டி எடுக்கவும்.
வட்டத்தின் விளிம்புகளை கத்தியால் வளைத்து வெட்டவும். உட்புறத்தை சுரண்டி வடிவத்தை சீராக்கிவிடவும்.
மேலே வாய்ப்பகுதியில் காயின் தோலிலும் வட்டமான துளைகள் செய்யவும். இவற்றை இறுதியாக வெட்டவும். அந்த இடம் மெல்லிதாக பலமில்லாததாக இருக்கும். கவனமாகப் பிடிக்கவும். (ஏற்கனவே வளைவுகளிலிருந்து வெட்டியெடுத்து வைத்துள்ள மஞ்சள் நிற வட்டத் துண்டு ஒன்றினை ஆரஞ்சு நிற வட்டத்தின் நடுவில் பொருத்தியிருப்பதை இந்தப் படத்தில் காணமுடியும்).
கழுத்துப் பகுதியும், கோளப்பகுதியும் இணையும் இடத்தில் ஒரு வரி சிறிய வட்டங்கள் வரைந்தால் அழகாக இருக்கும்.
வாஸை இப்படியே கூட உணவு மேசையில் வைக்கலாம்.
பூக்கள் மத்தியிலும் காய்கள் உள்ள இடங்களிலும் சிறிய வட்டத் துளைகள் உள்ள இடங்களிலும் மிளகு வைத்து அழுத்திவிடுவது வாஸுக்கு மேலும் அழகு சேர்க்கும். குருவியின் கண்களுக்கு கடுகு வைத்து அழுத்தவும்.
பூக்கள் வைப்பதானால் பாரமில்லாத மெல்லிய தண்டுள்ள பூக்களைத் தெரிந்து கொள்ளவும். (லாவண்டர் Herb என்பதால் உணவு மேசைக்குப் பொருத்தமாக இருக்கும் தோன்றிற்று. அதைத் தவிர பூக்கள் இலைகளின் அளவு, நிறம் அனைத்தும் இந்த வாஸுக்குப் பொருத்தமாக இருந்தது). வாஸின் உட்பகுதியில் டூத்பிக்கினால் ஆழமாக துளைகள் குத்தவும். பிறகு பூக்களை அழகாகச் சொருகிவிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் சூப்பர் சூப்பர் :) ரொம்ப நாளைக்கு அப்பறம் கார்விங்... பார்த்ததும் நினைச்சேன், இமா பண்ற மாதிரி கார்விங் என்று ;) இமாவே தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மரத்தாலான சிற்பம் மாதிரி அருமையா வந்திருக்கு. செதுக்குவது கொஞ்சம் கஷ்டமோ./?

மேஜை அலங்காரத்துக்கு உங்களை மிஞ்ச யாரால் முடியும்?
வாழ்த்துக்கள் இமா.

இமாம்மா சூப்பர். ரொம்ப அழகா இருக்கு. இதுவரைக்கும் கார்விங் முயற்சி செய்ததே இல்லை. இதை பார்த்ததும் ஆசை வந்திடுச்சு :). கூடிய விரைவில் முயற்சி செய்கிறேன். ஆனால் பொறுமை ரொம்ப வேணும் போல இருக்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா,
ஆஹா சூப்பர்!!
(இதுக்கு தான் நீங்க வேணும்ங்கறது !!!
நானெல்லாம் காயை கண்டாலே இதை எப்படி சாப்பிடலாம்னு மட்டும் தான் யோசிப்பேன் ;( )

என்றும் அன்புடன்,
கவிதா

lovely........................ thank you

பட்டர்நட் குவாஷ் வாஸ்-2 ​ரொம்ப அழகு & அருமை, வாழ்த்துக்கள்ங் மா

நட்புடன்
குணா

எப்பவும் போல முதல் கருத்து வனியோடது. ரொம்ப சந்தோஷம் வனி.

செதுக்குவது கஷ்டமாக இருக்கவில்லை நிகிலா. அதிக நேரமும் எடுக்கவில்லை. ரசித்துச் செய்த கைவேலை இது.

ஹாய் கவீஸ்... ரொம்ப சந்தோஷம். அங்க கார்விங் டூல்ஸ் ஈசியா கிடைக்கும் என்று நினைக்கிறேன். //பொறுமை// வேலை சட்டென்று முடிஞ்சுரும். பேப்பர் டூலிப்புக்கு இருந்ததை விட கம்மியா இருந்தா போதும். ;)))

ஹாய் கவிதா & லாவண்யா! :-))

குணா... அப்போ... பகுதி-1 அழகா இல்லைங்கறீங்களா மகன்!! ம். :))

உங்கள் அறுவருக்கும் என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்

ஆஹா.! இமாம்மா பகுதி-1 ம் ரொம்ப அருமைங் :-)

நட்புடன்
குணா

வாஸ் ரொம்ப அழகா இருக்கு ஆன்டி. செய்து பார்க்கணும். வாழ்த்துக்கள்.

Kalai

மிக்க நன்றி குணா & கலா. :-)

‍- இமா க்றிஸ்