கானல் மீனே!! - நித்திலா

இருள் லேசாய் கவிந்திருக்க, நிலவைக் காணாமல் மேகம் சோகம் கொண்டு சிந்திய கண்ணீரில் பூமிப்பந்து நனையத் தொடங்கியது. மலர்ந்திருந்த மலர்கள் எல்லாம் மழைத்துளி பட்டு மந்தகாசப் புன்னகை சிந்தின. கல்லூரி சென்ற தன் மகளுக்காக காத்திருந்த ரத்னாவின் உள்ளம் மழை வலுக்கும் முன் மகள் வீடு வந்து சேர வேண்டுமே எனத் தவித்துக் கொண்டிருந்தது.

"அம்மா சுபா"

"ஒரு நிமிஷம் அத்தை" என தான் மடித்து வைத்துக் கொண்டிருந்த துணிகளை வைத்துவிட்டு எழுந்து ஹாலிற்கு சென்றாள் சுபத்ரா.

"கயல் லேட்டாகும்னு எதுவும் போன் பண்ணாலாமா"

"ஆ.. ஆமாங்கத்தை! ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு சொன்னா! நான் தான் மறந்துட்டேன்! சாரிங்கத்தை"

"பரவாயில்லை கண்ணு! காலங் கெட்டு கிடக்குதே! அதான் பயமாயிருக்கு"

"வந்துடுவா அத்தை! நான் போன் பண்ணி கேட்கறேன்! நீங்க டென்சனாகாதீங்க"

விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்று தனது கைபேசியிலிருந்து கயல்விழியை அழைத்தாள் சுபத்ரா.

"ஏய் கயல்! எங்கிருக்க"

"வீட்டு பக்கத்துல வந்துட்டேன் அண்ணி"

"மழை தூறுது! குடை எடுத்துட்டு வரட்டுமா"

"வேண்டாம் அண்ணி! அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்"

"சீக்கிரம் வா! அம்மா கவலைப்படறாங்க"

"அம்மா! அம்மா" என்று வாசலில் கயல்விழியின் குரல் கேட்க, வந்து விட்டாள் என நிம்மதி அடைந்த சுபத்ரா, தாய், மகளின் உரையாடலை ஒரு புன்முறுவலோடு கேட்டவாறே விட்ட பணியை மீண்டும் தொடர்ந்தாள்.

"அண்ணீ..!!" என்ற உற்சாகக் கூச்சலை கேட்ட பின்பும் சுபத்ரா நிமிரவில்லை.

"சாரி! சாரி! அண்ணி! இதுதான் கடைசி தடவை! இனிமேல் லேட்டா வர மாட்டேன்! என் பிரெண்ட்ஸ் எல்லாம் ட்ரீட் கேட்டாங்க! மறுக்க முடியலை! அதான் லேட்டாயிடுச்சு! நான் நாலு மணிக்கே உங்களை கூப்பிட்டேன்! ஸ்விட்ச் ஆப் பண்ணி வைச்சிருந்தீங்க! சரி.. ஏதோ மீட்டிங்ல இருக்கீங்க அப்புறம் கூப்பிடலாம்னு நினைச்சு... அப்படியே மறந்துட்டேன்! சாரி அண்ணி"

"ஆமா கயல்! ஆபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்! சாரிடா! சரி, எதுக்கு ட்ரீட்? அதைச் சொல்லு"

"இந்த செமஸ்டர்ல நான்தான் பர்ஸ்ட் மார்க் அண்ணி"

"கயல்..!!" தான் கேட்டது நிஜம்தானா என ஒரு கணம் தாமதித்து பின்,"ரொம்ப சந்தோஷம்டா! என்ன வேணும் கேளு"

"ம்ம்... அப்புறம் கேட்கறேன் அண்ணி! தேங்க்ஸ் அண்ணி" என சுபத்ராவை அணைத்துக் கொண்டாள் கயல்விழி.

"நீங்க இல்லைனா நான் அழிஞ்சு போயிருப்பேன் அண்ணி"

"அசடு! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" என தட்டிக் கொடுத்தாள் சுபத்ரா.

"ஒரு ராங் கால் என்னோட வாழ்க்கையையே திசை மாத்தியிருக்கும்! நீங்க மட்டும் அவன் ஒரு பிராடுனு கண்டு பிடிச்சு சொல்லலைனா... கானல் நீரை நிஜம்னு நம்பி வர்ற மீன்களோட நிலைமைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்! அவனை நம்பி போயிருந்தா.. நினைக்கவே பயமாயிருக்கு அண்ணி! நான் என்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சிருப்பனோ.."

"உஷ்! என்ன இது! அதையெல்லாம் மறந்துடனும்! திரும்பி பார்த்து, உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே! நல்லா படிச்சு, நல்ல பேர் எடுக்கனும்! உன் ரூம்ல நீ கேட்ட அனார்கலி சுடிதார் வாங்கி வைச்சிருக்கேன்! போய்ப்பார்"

"தேங்க்ஸ் அண்ணி" என துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் கயல்விழி.

சிறகடித்து பறக்க வேண்டிய வயதில் கயவர்களின் தூண்டிலில் அகப்பட்டுத் துடிக்கும் மீன்களை எண்ணி வருந்தினாள் சுபத்ரா. கயல்விழியை அவளால் மீட்க முடிந்தது. அவளும் மீண்டு இயல்பு நிலைமைக்கு திரும்பி விட்டாள். ஆனால், அதற்கும்தான் எத்தனை போராட்டம்! அறியாமையால் அன்றாடம் அல்லலுறும் மலர்கள் எத்தனையோ? மீளாமல் உதிர்ந்த பூக்கள் கதை எத்தனை எத்தனையோ?

இளம் பெண்கள்,இல்லத்தரசிகள் என பாரபட்சமின்றி தனது கோர முகத்தை தொழில்நுட்பமெனும் முலாம் பூசி காட்டுகின்றது வஞ்சக நரிக் கூட்டம்! கைபேசியில்,அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை துண்டித்து விடுவதே தூண்டிலில் சிக்காதிருக்க இருக்கும் எளிய வழி! தொல்லை தொடர்ந்தால் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. இன்றைய தொழில்நுட்பம் நமக்கு உதவும் நண்பனாவதும், நம்மையே விழுங்கும் பூதமாவதும் அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தே உள்ளது. அறிமுகமற்றவருடன் பேசும் முன் யோசியுங்கள்! இழந்தவை எதுவும் திரும்பாது! கறையது கண்ணீரிலும் மறையாது!

"சுபி...!!"

"ஹேய் நரேன்! எப்ப வந்தீங்க? சாரி! நான் கவனிக்கலை"

"நான் வந்து பத்து நிமிஷம், பத்து செகண்ட் ஆச்சு! அப்படி என்ன யோசனை"

"நம்ம கயலை பத்திதான் நரேன்! பர்ஸ்ட் மார்க் வாங்கியிருக்கா நரேன்! சொன்னாளா"

"ம்.எல்லாம் உன்னாலதான் கண்ணம்மா"

"ம்ஹூம்! உங்கனாலதான்! அந்த கசப்பான அனுபவத்தில இருந்து இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்ததுக்கு முதல் காரணம் நீங்கதான்! அவளை வெறுக்காம, திட்டாம, அன்பா பேசி புரிய வைச்சீங்க நரேன்" தாயறியாமல் தங்கையை தேற்றுவதற்கு எத்தனை போராடினான் கணவன் என சுபத்ராவின் குரல் தழுதழுத்தது. ஆறுதலாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட நரேந்திரன், மனைவியின் முகம் வாடுவது பொறுக்காமல் பேச்சை வளர்த்தான்.

"நம்ம கயல் நல்லபடியா மீண்டு வந்துட்டா சுபி! ஆனா, நீ கொடுத்த அடியில இருந்து அந்த பிராடு இன்னும் மீளவே இல்லை"

"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா.
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

"அசத்தறே கண்ணம்மா!" என்ற நரேந்திரன்,மெல்ல அவள் தாடை தொட்டு நிமிர்த்தி, "பாரதியார் வேற என்னவெல்லாம் சொல்லியிருக்கார் தெரியுமா சுபி" என்றவன் பார்வை காதல் மொழி பேசியது.

"அண்ணி! அண்ணி" கயல்விழியின் அழைப்பில் விழியால் இருவுள்ளம் படித்த கதை நீளாமல் முடிந்தது.

"வரேன் கயல்" என விலகிய சுபத்ராவின் கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்த நரேந்திரன்," கேட்டுட்டு போ"

"அப்புறம் வந்து கேட்கறேன் நரேன்! சமர்த்துதானே நீங்க" என அவன் கன்னத்தில் அவசரமாய் தன் இதழ் பதித்துவிட்டு ஓடினாள் சுபத்ரா.

மனைவியைத் தொடர்ந்த நரேந்திரன் பார்வையில் காதல் பொங்கி வழிந்தது. துயில் கலைந்து எழுந்து வந்திருந்த நிலவின் வருகையால் மேகம் மகிழ்ந்து ஆனந்தமாய் பொழியத் தொடங்கியதில் அகிலம் அழகானது.

Comments

எனது கதையை உடனடியாக வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும்,

அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நீங்கள் அனைவரும் என்றும் இன்புற்றிருக்க விழைகிறேன்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு கதையோடு உங்களை சந்திக்க

வந்திருக்கிறேன்.

கானல் மீன்களைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நேரம் அனுமதிக்கும் போது வாசித்து,சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி,வணக்கம்.

அன்புடன்
நித்திலா

வணக்கம்,
ரொம்ப ரொம்ப ஆழ்ந்த கருத்தை அழகா சொல்லியிருக்கீங்க, கவிதையுடன் உள்ள வர்ணனைகளும் மிக அருமைங்க, வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

நித்தி
கதையின் தலைப்பும்,கருத்துச் செறிவும் அருமை.
முதற் பாராவும்,கடைசி பாராவும் வர்ணனை அருமையோ அருமை நித்தி.
இப்படி அண்ணி கிடைத்தால் எப்போதும் சந்தோஷம் தான்.

வணக்கம் குணா,

முதல் பதிவிற்கு மிகவும் நன்றி குணா.

//ரொம்ப ரொம்ப ஆழ்ந்த கருத்தை அழகா சொல்லியிருக்கீங்க//

மிகுந்த மகிழ்ச்சி,நன்றி குணா.

//கவிதையுடன் உள்ள வர்ணனைகளும் மிக அருமைங்க//

வர்ணணையை கவனித்து கூறியதற்கு மீண்டும் எனது நன்றிகள்.

உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றீங்க குணா.

பேரோட கூட "ங்க" போடனுமா குணா?

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி குணா.

அன்புடன்
நித்திலா

ஹாய் நிக்கி,

வாங்க :)

//கதையின் தலைப்பும்,கருத்துச் செறிவும் அருமை//

ரொம்ப சந்தோஷம்டா,நன்றி நிக்கி.

//முதற் பாராவும்,கடைசி பாராவும் வர்ணனை அருமையோ அருமை//

வர்ணணையை ரசித்து,பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றிடா.

//இப்படி அண்ணி கிடைத்தால் எப்போதும் சந்தோஷம் தான்//

ஆமாடா.அன்பான உறவென்றால் மகிழ்ச்சிதான்.

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிடா நிக்கி.

அன்புடன்
நித்திலா

ரொம்ப நல்லாருக்கு. நல்ல கருத்தை சொல்லியிருகீங்க. வர்ணனைகளும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள். இன்றைய இளம் பெண்கள் கட்டாயம் கவனமா இருக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய் உமா,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

//ரொம்ப நல்லாருக்கு. நல்ல கருத்தை சொல்லியிருகீங்க.//

உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி உமா.

//வர்ணனைகளும் சூப்பரா இருக்கு.//

வர்ணணையை கவனி்த்து குறிப்பிட்டு கூறியதற்கு நன்றி தோழி.

//இன்றைய இளம் பெண்கள் கட்டாயம் கவனமா இருக்க வேண்டியது அவசியம்//

ஆம் தோழி.உண்மைதான்.இன்று நிலை அவ்வாறுதான் உள்ளது.

முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி உமா.

அன்புடன்
நித்திலா

என் அருமை நித்தி ! ஒரு கவிதாயினி கதை எழுதுகிறாள் !எப்படி இருக்கு என் அபிபிராயம் .அருமை ,அற்புதம் வளர்க வளமுடன் !

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

// பேரோட கூட "ங்க" போடனுமா குணா?//
நீங்க எப்படியும் என்னைவிட பெரியவராக இருப்பீங்க, அதனாலும் டிவியில சொன்னாங்க, 'ங்க' என்பது தமிழில் மிக அழகான வார்த்தையாம், நம்ம ஊரு கோயம்புத்தூருங்க, அதிகமாக 'ங்க' சேர்த்துப்பேசி அதே பழக்கமாயிடுச்சுங்க :-)

நட்புடன்
குணா

கதை மிகவும் அருமை...
நிஜம் தான் என்னக்குமே நம்ம மனதுக்கு நெறுக்கமானவங்க நம்ம என்னதான் தப்பு செய்தாலும் நம்மை திருத்த தான் பார்ப்பார்கள் என்றுமே வெறுக்கமாட்டார்கள்..
மிகவும் பிடித்து இருக்கிறது கதையின் உட்கருத்து ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் அஸ்சு,

வாங்க,வாங்க :)

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் :)

//ஒரு கவிதாயினி கதை எழுதுகிறாள் !//ஆஹா!தேங்க்ஸ்டா.

ஆனாலும்,நீங்க ரொம்ப லேட் அஸ்சு.நான் கதை எழுத ஆரம்பிச்சு இவ்வளவு

நாள் கழிச்சு வந்திருக்கீங்க.இருந்தாலும்,உங்க அன்பான பாராட்டுக்கும்,

வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அஸ்சு.

உங்கள் வரவால் மிகவும் மகிழ்ந்தேன்.வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப

நன்றிடா அஸ்சு.

அன்புடன்
நித்திலா

ஹாய் கனிமொழி,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

நான் சின்னப்பெண்தான்,நித்திலா என்றே அழையுங்கள் கனி.

//கதை மிகவும் அருமை//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றிடா கனி.

//நிஜம் தான் என்னக்குமே நம்ம மனதுக்கு நெறுக்கமானவங்க நம்ம என்னதான் தப்பு செய்தாலும் நம்மை திருத்த தான் பார்ப்பார்கள் என்றுமே வெறுக்கமாட்டார்கள்//

ஆம் தோழி,திருத்தி நல்வழிப்படுத்தவே முனைவார்கள்.

//மிகவும் பிடித்து இருக்கிறது கதையின் உட்கருத்து//

கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,நன்றி தோழி.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி கனி :)

அன்புடன்
நித்திலா

நித்திலா,கதை நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

.நான் அறுசுவைக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது ,இப்போ உங்கதையால்தான் மறுபடியும் வருகிறேன் .நீ கதை எழுதுவது இப்போதுதான் அதுவும் முகநூலால்தான் தெரியும்.அதுக்கு நன்றி .உனக்கு அல்ல :-p

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நித்திலா அட்டகாசமா எழுதியிருக்கீங்க அருமையான கதை எதார்த்தமாவும் இருக்கு அதுல ஒரு நல்ல கருத்து, அந்த வர்ணனை எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை முடிஞ்சுட்டேன்னு இருக்கு. உங்க எழுத்த இன்னும் படிக்கனும் போல இருக்கு நிறைய கதை எழுதுங்க அப்பறம் ஒரு சின்ன விஷயம் கொஞ்சம் பெரிய கதையா எழுதுங்க சீக்கிரம் முடிஞ்சுடற மாதிரி இருக்கு :-))))))

Hello நித்திலா
Good Morg Very nice and cute story

ஹாய் சுபா,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

//கதை நன்றாக இருந்தது//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி சுபா.

உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி தோழி.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி சுபா.

அன்புடன்
நித்திலா

ஹாய் அஸ்சு,

சாரிடா,எனக்கு தெரியலை.

என் கதையால நீங்க இங்க வந்திருக்கிறதா சொல்றதை கேட்கும் போது ரொம்ப

சந்தோஷமாயிருக்கு,தேங்க்ஸ்டா செல்லம் :-)

நேரம் கிடைக்கும் போது,மத்த கதைகளையும் படிச்சு எப்படியிருக்குனு சொல்லுங்க,

நன்றி அஸ்சு :)

அன்புடன்
நித்திலா

வணக்கம் சார்,

//Very nice and cute story// மிகவும் நன்றி சார்.

வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி.

அன்புடன்
நித்திலா

ஹாய் உமா,

மீண்டும் உங்களை என் கதை பக்கத்தில் காண்பதில் மகிழ்ச்சி,நன்றி தோழி.

//அட்டகாசமா எழுதியிருக்கீங்க//

முதல் முறையாக இப்படி ஒரு பாராட்டு,மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது :-))

//அருமையான கதை எதார்த்தமாவும் இருக்கு அதுல ஒரு நல்ல கருத்து//

உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிகவும் நன்றி உமா.

//அந்த வர்ணனை எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு//

வர்ணணையை கவனித்து கூறியதற்கு நன்றி தோழி.

//கதை முடிஞ்சுட்டேன்னு இருக்கு. உங்க எழுத்த இன்னும் படிக்கனும் போல இருக்கு நிறைய கதை எழுதுங்க//

நன்றி!நன்றி உமா,உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,மனதில்

ஒரு நிறைவு,மனமார்ந்த நன்றிகள் தோழி.

நீங்கள் சொல்வது சரிதான் தோழி,என்னுடைய கதைகள் கொஞ்சம்

சிறியதுதான்,ஒரு அளவுகோல் வைத்து அதற்குள்ளேயே எழுதி வருகிறேன்.

ஷார்ட் & ஸ்வீட் என்று சொல்லும்படி இருக்க வேண்டுமென்பதே

என்னுடைய விருப்பம்.

இருந்தாலும்,பெரிதாக எழுத முயற்சிக்கிறேன் தோழி :)

வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி உமா.

அன்புடன்
நித்திலா

K.done

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கதை தொடக்கம் அருமை தோழி.

இதுல நல்ல message கொடுத்துருக்கீங்க. கைபேசியில் தெரியாமல் அறிமுகமாகும் நட்பு ஆபத்தானது என்று

.இளம் பெண்கள்,இல்லத்தரசிகள் என பாரபட்சமின்றி தனது கோர முகத்தை தொழில்நுட்பமெனும் முலாம் பூசி காட்டுகின்றது வஞ்சக நரிக் கூட்டம்! கைபேசியில்,அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை துண்டித்து விடுவதே தூண்டிலில் சிக்காதிருக்க இருக்கும் எளிய வழி! தொல்லை தொடர்ந்தால் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. இன்றைய தொழில்நுட்பம் நமக்கு உதவும் நண்பனாவதும், நம்மையே விழுங்கும் பூதமாவதும் அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தே உள்ளது. அறிமுகமற்றவருடன் பேசும் முன் யோசியுங்கள்! இழந்தவை எதுவும் திரும்பாது! கறையது கண்ணீரிலும் மறையாது!

உங்களது கதை மழைகள் தொடரட்டும் தோழி.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ஹாய் சத்யா,

//கதை தொடக்கம் அருமை தோழி//மிகவும் நன்றி சத்யா.

//இதுல நல்ல message கொடுத்துருக்கீங்க//நன்றி தோழி.வரிகளை குறிப்பிட்டதற்கு

தேங்க்ஸ்டா.

உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி சத்யா.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி தோழி :)

அன்புடன்
நித்திலா

கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்டா

இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும் அருமையான கதை