பிறந்த நாள் பரிசு - பிரேமா ஹரிபாஸ்கர்

ஆழிப் பெண்ணவள் தன் கருவில் வளர்த்த மஞ்சள் நிற மேனி கொண்ட அழகிய பிள்ளையான சூரியனை சிறிது சிறிதாய் பிரசவிக்க, இம்மகிழ்ச்சியை பறவைகள் ரீங்காரமிட்டு உலகிற்கு சொல்லிக்கொண்டிருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இவ்வழகிய காலைப் பொழுதை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் தளத்தில் இருக்கும் தன் படுக்கை அறையிலிருந்து ரசித்து முடித்துவிட்டு, எப்போதும் போல் தன் கணவன் முகம் பதித்த தேநீர் கோப்பையுடன் கணினி முன் அமர்ந்தாள் பூவிதா.

“ஹை ஸ்வீட்டி, குட் மார்னிங் !!!" என்று அகிலேஷிடம் இருந்து ஸ்கைப் மெசேஜ் எட்டி குதித்து பூவிதாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது.

“ஹாய் ஹனி, வெரி குட் மார்னிங், இன்னைக்கு வொர்க் லோட் எப்படி இருக்கு?"

“நாட் மச் டா !!!"

இப்படியே வழக்கமான கேள்வி, பதில்களும் காதல் பரிமாற்றங்களும் முடிந்து, “அகில், நாளைக்கு நம்ம திருமணத்திற்கு பிறகு வரும் என்னோட முதல் பிறந்த நாள் ஆச்சே... உங்க அன்பு மனைவிக்கு ஸ்பெஷலா என்ன பரிசு குடுக்க போறீங்க ???"

“இப்படி நாம ரெண்டு பேரும் கடல் தாண்டி இருக்கும்போது நான் எப்படி உனக்கு பரிசு குடுக்க முடியும். அதனால நீ ஷாப்பிங் போகும்போது உனக்கு என்ன பிடிச்சிருக்கோ என் சார்பில் நீயே வாங்கிக்கோடா பூவி, எவ்ளோ விலையானாலும் பரவாயில்லை."

“தூரத்தில் இருக்கறதுனால இப்ப தப்பிச்சீங்க... சரி சரி நானே எனக்கு பிடிச்சதை வாங்கிக்கறேன்.. சரி நைட்டு 12 மணிக்கு போனாச்சும் பண்ணுவீங்கல்ல???"

“போன் பண்றதா ! ! ! ஸ்கைப் வீடியோவிலேயே வந்து என் செல்ல மனைவிக்கு வாழ்த்து சொல்லுறேன் சரியா.. சரிடா இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. நான் ஃப்ரீயானதும் கூப்பிடறேன்" என்று ஆப்லைனிற்கு சென்று விட்டான் அகில்.

திருமணத்திற்கு பின் தன் பெற்றோரின் பிரிவை எண்ணி அவள் சிறிதும் வருந்தாத அளவிற்கு அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் அகில். இதை எண்ணி எண்ணியே அகிலேஷை தனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாய் நினைத்து பூரித்துக்கொண்டிருந்தாள் பூவி.

ஷாப்பிங் சென்று தன் கணவனுக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் நீல நிற சமிக்கி வேலைப்பாட்டில் சிம்பிளிலான ஒரு சிப்பான் சேலையை தேர்ந்தெடுத்தாள். மேட்சிங்காக மஞ்சளும் நீலமும் கலந்த வளையல்களையும் வாங்கினாள். தன் கணவனுக்கு வெளிர் மஞ்சள் நிற சட்டையும், கருப்பு ஃபார்மல் பேன்டும் வாங்கிவிட்டு பிறந்தநாள் ஷாப்பிங்கை ஒரு வழியாய் முடித்தாள் பூவிதா.

அன்றிரவு பதினொன்றரை மணிக்கெல்லாம் புதுச் சேலையை உடுத்திக்கொண்டு கணவனின் வாழ்த்திற்காக கணினி முன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடிகார முட்கள் ஒரு சேர மணி பன்னிரெண்டை தொட்டது. ஏனோ அகிலேஷ் இன்னும் ஸ்கைப்பிலும் வரவில்லை, போன் காலும் பண்ணவில்லை. “நமக்கு மணி பன்னிரெண்டு என்றாள் அவருக்கு இரண்டரை மணி ஆச்சே.. ஒரு வேலை அசந்து தூங்கி இருப்பாரோ? என் பிறந்த நாளைவிட அப்படி என்ன தூக்கம் வேண்டியிருக்கு. ரிமைண்டர் வச்சு எழுந்தாச்சும் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டாமா” என எண்ணிக்கொண்டிருந்த பூவிதாவின் கோபம் அவள் உச்சந்தலையை தொட்டுவிட்டது. அவரே போன் பண்ணும்வரை நிச்சயமா நான் அவரிடம் பேசப்போவதில்லை என்று தலையணையோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். மணி பன்னிரெண்டரையும் ஆகிவிட்டது, இனியும் அகில் நிச்சயமா போன் பண்ண போறதில்லை என்று ஏமாற்றமடைந்த மனது அழ ஆரம்பித்தது. கனவுகள் பொய்யாக கண்கள் குளமானது.

தன் தங்கை சுஜித்ரா தன் அறைக்குள் நுழைவதை அறிந்ததும் அழுதது தெரியாமல் நார்மலாக இருப்பது போல் நடித்தாள் பூவி.

“என்ன சுஜி நீ இன்னும் தூங்கலையா?“

“இல்லக்கா... மாம்ஸ் இன்னும் உனக்கு போன் பண்ணலையா? விடுக்கா பாவம் அவங்க தூங்கியிருபாங்க. சரி எழுந்திரி நாங்க உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்“ என்று பூவியின் கண்களை கட்டிவிட்டு ஒரு இருட்டறைக்குள் நுழைத்தாள்.

பூவியின் ஃபேவரைட் பிங்க் நிறத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட வென்னிலா ஃப்லேவர்டு கேக் "ஹாப்பி பர்த்டே ஸ்வீட்டி" என்ற எழுத்துக்களுடன், மெழுகுவர்த்தி ஒளியில் அந்த இருட்டறை அழகாய் ஜொலித்தது. கண்கள் ஆச்சர்யத்தை காட்டினாலும் மனம் ஏனோ கணவனின் வாழ்த்தை பெறாமல் அமைதியடைய மறுத்தது.

“எனக்கு இப்ப கேக் கட் பண்ற மூட் இல்ல.. நாளை காலைல வெட்டுறேன் ப்ளீஸ்... இப்ப இதை எடுத்து ஃபிரிட்ஜில் வச்சிருங்க“ என்று வாடிய முகத்துடன் கூறினாள் பூவி.

“ப்ளீஸ்டி மாமா தான் உனக்கு சர்ப்ரைஸா இந்த கேக்கை ஆர்டர் பண்ணிருக்காங்க. அவங்களுக்காகவாச்சும் இப்பவே செலப்ரேட் பண்ணுடி“ என்று சுஜி கெஞ்சவும், “போன் பண்ணி ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியலை.. இப்படி கேக் அனுப்பி கொண்டாட சொன்னால் எப்படி முடியும்“ என்று மனதுக்குள் அகிலை திட்டிவிட்டு தயங்கி தயங்கியே மெழுகுவர்த்தியை ஊதியணைக்க...

லைட்ஸ் ஆன் பண்ணாமல் சுஜி விளையாட்டு காட்ட…

பூவிக்கு திடீரென்று மனம் படபடக்க வேர்த்து கொட்டியது.

ஏன்?????????

தனக்கு பின்னாலிருந்து அவளை கட்டியணைத்து அவள் காதருகில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூவிக்குட்டி என்ற அகிலேஷின் குரல். விளக்குகள் ஒளிர அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்த இன்ப ஊற்றில் நனைந்தாள். பூவியின் முகம். சற்றும் எதிர்பார்க்காத தன் கணவனின் வருகை தந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளாமல் சந்தோஷம் கலந்த கலங்கிய கண்களுடன் பெற்றோரை மறந்து அகிலேஷை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

பெண்களுக்கு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கணவனின் அருகாமைக்கு மிகுந்த மகிழ்ச்சி வேறேதுமில்லை.

Comments

இந்த முறையும் வழக்கமான என் கிறுக்கல்களை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை டீம்க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் பிரேமா.. கதை ரொம்ப நல்லா இருக்கு... வாத்துக்கள்.. // பெண்களுக்கு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கணவனின் அருகாமைக்கு மிகுந்த மகிழ்ச்சி வேறேதுமில்லை.// உண்மைதான்.. :-)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் ஷபீ,

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அது சரி நீங்க எனக்கு வாழ்த்துக்கள் சொனீங்களா இல்லை வாத்துனு திட்டரீங்களானு தெரியலையே... அவ்வ்வ்வ்வ்

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா,கதை அருமை இயற்கை எழில் வர்ணித்த விதமும் அருமை,இனியும் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

சாரி பிரேமா... !! :( அது வாழ்த்துக்கள் தான்... தப்பா எடுத்துக்காதீங்க.. It's a typing mistake...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

கதை ரொம்ப அருமைங்க, கருத்தும் வர்ணனைகளும் ரொம்ப ரொம்ப அருமைங் அக்காங் :-)

நட்புடன்
குணா

ippo nanum en husbundum chinna pirachanaiyala pirinji irukom. phonela mattum pesipom. but v2la yarukum theriyathu. koodia seekiram seranum. enakaga vendikanga freinds. december 1st en birthday. athukulla seranum.

பிரேமா
முதல் பாரா வர்ணனையும்
கடைசி பாரா வரியும் சூப்பர் பா

எனக்கு தெரியும்பா... சும்மா உங்களை கலாட்டா பன்ன தான் அப்படி கேட்டேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சுபா,

உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் பல.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நிக்கிலா,

உங்கள் கருத்து மற்றும் பாராட்டிற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கவலை வேண்டாம்.. உங்கலுக்காக நான் கண்டிப்பா கடவுளிடம் வேண்டிக்கறேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

குணா தம்பி,

உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அக்கா நா அகில் போன் பண்ணலனு நினச்சு பூவி கோவபடும்போதே கதைல கடைசி ல சர்ப்ரைஸ் ஆ அகில் வந்துவாங்கனு நினச்சுட்டேன் ... எதிர்ப்பார்ப்பை ஏமாற்றாமல் செய்ததற்க்கு நன்றி...
அழகான கதை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பிறந்த நாள் பரிசு நல்லா இருக்கு அக்கா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

நன்றிகள் பல சங்கரேஸ்வரி.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நீ சரியா கெஸ் பன்ணும் போது நான் எப்படிபா உன்னை ஏமாற்றுவேன்... நன்றிகள் கனி.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அழகான கதை. வாழ்த்துக்கள் பிரேமா. // பெண்களுக்கு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கணவனின் அருகாமைக்கு மிகுந்த மகிழ்ச்சி வேறேதுமில்லை//.
100/100 உண்மையான வரிகள்.

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

ஹாய் பர்வீன் பரீத்,

பாராட்டிற்க்கும் வாழ்த்திற்க்கும் மனமார்ந்த நன்றிகள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா கதை அருமைங்க வர்ணனைகள் அருமை. சர்ப்ரைஸ் எபோதுமே பெண்களுக்கு பிடிக்கும் தானே.

அருமையான எழுத்துங்க... நல்லா இருக்கு படிக்க. :) தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba nalla irunthathu. en kanavaridamum ithai naan ethirparkiraen. aanal avar expression katta mataenkirar.

தேவி,

பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள். நிச்சயமாய் சர்ப்ரைஸ் எப்போதும் பெண்களுக்கு பிடிக்குமே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் வனி,

உங்கள் பாராட்டுகளுக்கும் & வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் சாந்தி,

நன்றிகள் பல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். எங்க தலைவர் காதலை வெளிபடுத்த மாட்டாங்க... ஆனால் இந்த மாதிரி அப்ப அப்ப எதுனால் சர்ப்ரைஸ் தந்து அசத்திடுவாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்