குழந்தை பிறந்தவுடன் உணவு

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

தோழிகளின் அறிவுரைகளோடு நான் 37 வது வாரத்தை இனிதே தொடங்கிவிட்டேன். என் 2 வது குழந்தையின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் தோழிகளின் உதவி எனக்கு தேவை. நான் (France )தனியாக வசிக்கிறேன். முதல் குழந்தைக்கு தாய் பால் சில காரணங்களினால் கொடுக்கவில்லை. வரும் குழந்தைக்கு கண்டிப்பாக கொடுக்க நினைக்கிறேன். ஆதலால் குழந்தை பிறந்தவுடன் நான் என்ன மாதிரியான உணவு எடுக்க வேண்டும் என்று கூறினால் நல்லது. நான் -நான் வெஜ்ஜும் சாப்பிடுவேன்.

தோழிகளுக்கு வணக்கம்,

ஏன் தோழிகள் யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. அட்லீஸ்ட் மருத்துவமனையில் இருக்கும் 3 நாட்களுக்காவது 3 நேரமும் என்ன சாப்பிடலாம் என்று சொல்லுங்க ப்ளீஸ். ஏன்ன என் கணவர் தான் 2 வயது குழந்தை யும் வைத்து கொண்டு என்னையும் மருத்துவமனையில் பார்த்து கொள்ள வேண்டும்.அதான் கேட்கிறேன் தோழிகள் உதவுங்கள் ப்ளீஸ்.

சத்யா இதே பக்கத்தின் மேலே இருக்கும் சர்ச் பாக்ஸில் "தாய்ப்பால் சுரக்க" ன்னு போட்டு சர்ச் பண்ணுங்க. பல இழைகளில் இதைப்பற்றி பேசியிருக்காங்க. அதை எல்லாம் படித்தாலே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Ungalukku sugapirasawam aaha wenduhiren.yesterday ungaluku padhil poda ninaithen.but mudiyalla..ippo than time kidaithadhu..kandippa babyku thaipaal kodunga..babyku thewayana anaithu satthum adhil than iruku.noay edhirppu sakthi undahum.baby paadhuhappa unarum.mukkiyama thaikum babykum nerukkam undahum.thaipaal surakka suraa meen sapidunga.saapatil poondu (garlic) adhihama serunga.murungakkai, murunga keerai saapidunga.thaipaal surakkum.pirasawam aana andru milahu aanam sapidunga.romba nalladhu.pasum paal kudithal thaipaal adhihama surakkumnu kelwi pattiruken.but naan kudikkalla.mukkiyama innonru..paalutta mun soodaha enna sari kudinga..konjam thanniyawdhu kudinga..wera edhawathu sandheham irukka thoali.......

நன்றி தோழிகளே,

கவி madam நீங்கள் சொன்னது போல "தாய்ப்பால் சுரக்க" அந்த லின்கில் பார்த்தேன் மிகவும் உதவியாக இருந்தது. நன்றி.

Fareeha madam நீங்கள் சொன்னது போல நிச்சயம் தாய்ப்பால் தான் கொடுக்க போகிறேன். நன்றி.

மேலும் சில பதிவுகள்