கணவரின் தோழி - அருட்செல்வி சிவப்பிரகாசம்

திருமணம் முடிந்த கையோடு தனது புது மனைவி ஆனந்தியுடன் ஆனந்தன் தனிக்குடித்தனம் வந்தான். ஹனிமூன், உறவு மற்றும் நட்புகளின் விருந்து முடிந்து, அலுவலகம் செல்லும் நாளும் வந்தது. மனசே இல்லாமல் கிளம்பினான் ஆனந்தன்.

மாலை வழக்கத்தைவிட சீக்கிரமாக அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆனந்தனை அனைவரும் கிண்டலும் , கேலியும் செய்து வழியனுப்பி வைத்தனர். அதற்கேற்றார் போல் வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள் ஆனந்தி.

இன்னிக்கு எப்படி போச்சு பொழுது என அன்புடன் வினவிய கணவனிடம்,

ம் நல்லாப்போச்சு, உங்களோட பழைய புக்ஸ் எல்லாம் எடுத்து அடுக்கி வைச்சதில நேரம் போனதே தெரில. என கூறிக்கொண்டே சர்க்கரை அள்ளி போட்ட காஃபியை கணவனிடம் கொடுத்தாள் ஆனந்தி. துளி சர்க்கரை அதிகமானாலும் மெஸ்ஸில் சண்டையிடும் ஆனந்தனுக்கோ, மனைவியின் காஃபியை குறை கூற மனம் வரவில்லை.

தினமும் கடைகளுக்கு செல்வதும் வீட்டுக்கு வேண்டிய பாத்திர பண்டங்களை வாங்குவதிலுமே ஒரு மாதம் உருண்டோடியது. வாடகை வீட்டில் வசிக்கவேண்டிய கட்டாயத்தினால் பொருட்களை வாங்கும் வேலையை தன் பெற்றோர்களுக்கு கொடுக்கவில்லை. இதுவும் ஒரு சுவாரஸ்யமாக தெரிந்தது இருவருக்கும். தேவையானவற்றை வேண்டும் என்கிற போது மட்டுமே வாங்கி சேகரித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்திக்கு தனியாக இருப்பது சில சமயங்களில் போரடிக்கும் நிலைமையானது.

அலுவல் நிமித்தமாக ஆனந்தன் வெளியூர் செல்லும் போது தாய் வீடு செல்லும் ஆனந்தி தன் புது தனிக்குடித்தன வாழ்க்கையை சிலாகித்து சொல்லிவந்தாள்.

இப்படியே நாட்கள் வேகமாக உருண்டோடின.

ஒரு நாள் ஆனந்தன் தனது புதுத்தோழி ஒருத்தியை வீட்டுக்கு அழைத்து வந்தான். அதைக் கண்டு ஆனந்திக்கு எல்லையில்லா சந்தோஷம். வெகுளிதனமிக்க அப்பாவியான ஆனந்திக்கு அப்போது அதன் விபரீதம் புரியவில்லை. அவளும் கணவனுடன் சேர்ந்து கொண்டு கெக்கே பிக்கேவென சிரித்துக் கொண்டும், கலாய்த்துக்கொண்டும் நாட்களை ஓட்டினாள். அவள் சொல்லும் சித்தி கொடுமையை கண் இமைக்காமல் கண்ணீர் மல்க அவளுக்கு நேர்ந்த கொடுமை தனக்கே நேர்ந்ததாக எண்ணி வருந்திகொண்டும் இருந்தாள்.

அவள் தங்களை பிரிக்க வந்த கோடாரி என்றும் தெரியவில்லை. மாறாக சந்தோஷமாக தங்களுடன் தங்கிக்கொள்ளவும் அனுமத்திது, தன் சிறிய வீட்டில் மனதில் எந்த கள்ளம் கபடமுமின்றி தங்கவும் அனுமதியளித்தாள்.

ஆரம்பத்தில் இருவரும் மாலைவேளையில் காலாற நடப்பதும், பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு சென்று செடிகொடிகளை ரசிப்பதும் அறவே நின்றுபோயிற்று. பூங்காக்களில் பூக்களுக்கும் தாழ்வுமனப்பானமையை உண்டு பண்ணும் மழலைகளின் அழகினையும், மொழிகளையும் மறந்தே போனார்கள்.

தோழியோ வெளியில் அழைத்துச்செல்ல முடியாதவள். ஆனால் பல மொழி வித்தகி. அவளுடைய பேச்சு, நாளடைவில் ஆனந்திக்கு எரிச்சலூட்டியது, கட்டிய கணவன் தன் கண்முன்னாலயே தன்னை மறந்து இப்படி இருப்பது ஏனோ மனதை வாட்டியது.

ஏங்க....

ம்ம்

இருவருக்கும் இடையிலான உரையாடல் இந்த அளவிற்குத்தான் இருந்தது. ரங்கோலியை போல் வண்ணமாக இருந்த வாழக்கை, நாலு புள்ளிக்கோலம்போல் சுருக்கமாக போனது.

ஆனந்த்....

ம்ம்

என்னது.. நான் என்ன சொல்லி கூப்பிட்டாலும் ஒரே ரியாக்‌ஷனை காட்றீங்க, வர வர உங்க போக்கே சரியில்லை.

ச்சே ஏன் ஆனந்தி இப்படி நை நைங்கிற......

மனுஷன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கவிடுறியா???

என்ன வேணும் சொல்லு......

ஆனந்திக்கு தலையில் இடிவிழுந்தாற்போல் இருந்தது..

தன் கணவனா இப்படி பேசுவது...

என் முகவாட்டத்தை துல்லியமாக கணக்கெடுப்பவன் ஆயிற்றே!! எப்படி இப்படி மாறினான்.

ஒருவேளை நாந்தான் ஏமாளியா இருந்துட்டனோ?? என ஆனந்தியின் மனம் பல்வேறு யோசனைகளில் மூழ்கியது.

இங்க பாருங்க இப்படியே தோழி தோழின்னு பழியா கெடந்தீங்கனா எனக்கும் கோபம் வரும், அப்புறம் பாருங்க நடக்கிறதே வேற....

என்னது திருமணம் முடித்ததிலிருந்து அதிர்ந்து பேசாத தன் மனைவியா இப்படி கடுஞ்சொற்களை வீசிவிட்டு விசும்புவது என திடுக்கிட்டு பார்த்தான் ஆனந்தன்.

ஆனி என்னாச்சு ஏன் இவ்வளவு கோவம் உனக்கு... இருந்தாலும் இவ்வளவு பொஸஸிவ் ஆகாது உனக்கு. நான் அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வரப்பவே வேண்டாம்னு சொல்லியிருக்கணும். அப்ப நீயும் தானே சந்தோஷமா தலையை ஆட்டினே. இப்ப இப்படி கோவப்படலாமா??

ஆமா ஆனி, ஆடி, ஆவணின்னு இதுக்கொன்னும் கொறச்சலில்ல...

அவ வந்ததிலிருந்து நீங்க என்னைய மறந்துட்டீங்க... நான் செய்யும் சமையலை மறந்துட்டீங்க.. ருசிய மறந்துட்டீங்க.. நான் எதை போட்டாலும் எந்த ரியாக்கஷனும் இல்லாம, எத்தன இட்லி சாப்பிட்டோம், எத்தனை பூரி சாப்பிட்டோம்னு கூட தெரியாம அவளோட ஆட்டத்தையே ரசிச்சிட்டு இருக்கீங்க.

அந்த மினுக்கு வேலையெல்லாம் எனக்கு தெரியாது. சதா வாய் ஓயாம வாயாடியா என்னால இருக்க முடியாது. வேணா நீங்களும் அவளுமே இருந்துக்குங்க, நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன். அவளுக்கு கிரிக்கெட் தெரியுது ஃபுட்பால் தெரியுதுன்னு பீத்திட்டு திரியுறா...அத கேட்டுக்கிட்டு என்னைய மறக்கிற நிலமைக்கு வந்துட்டீங்கல்ல.. அப்ப என்னோட உண்மையான அன்பு உங்களுக்கு இளக்காரமா தெரியுது அப்படித்தானே?? எனக்கு சமைக்கத்தெரியும்..அன்பு காட்டத்தெரியும் அவ்வளவுதான்... என்னால அவள மாதிரி இருக்க முடியாது...

அதுனால இன்னிக்கு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும். ஒன்னு இந்த வீட்ல நான் இருக்கணும் இல்ல அவ இருக்கணும் முடிவு பண்ணிக்கோங்க என சுடுசொற்களை வீசிச்செல்லும் தன் மனைவியை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழித்தான் ஆனந்தன்.

ஊர் உலகத்தில என்னமோ நான் ஒருத்தந்தான் இப்படி இருக்கிறாப்பில ரொம்பத்தான் முறுக்கிக்கிற என வெளியில் சொல்லாமல் மனதில் நினைத்துக்கொண்டான்.

ஆனி இப்ப என்னதான் சொல்ல வர்ற... மீண்டும் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான் ஆனந்தன்.

இவ நம்பளை நம்பி வந்துட்டாடா.. ..

இனிபோய் இவள எங்க விடுறது நீயே சொல்லு....

ஏன் உங்கம்மா வீட்ல கொண்டு போய் விடுங்களேன்....

அட என் புத்திசாலி மனைவியே .... நல்ல ஐடியா கொடுத்தே ... இந்த வாரமே அழைச்சிட்டு போயிறாலாம் சரியா...

ஆனா அதுவரை அவளோட அரட்டையை கேட்டுட்டு இருப்போம் சரியா...

ம் ... சரி சரி அவ எப்படியோ போய்த்தொலைஞ்சா சரிதான் என்னும் நினைப்பில் கணவனின் டீலுக்கு ஓகே சொன்னாள்.

மனைவி பேச்சை சிரமேற்கொண்ட ஆனந்தனும் வார விடுமுறையில் தனது காரிலேயே அழைத்துச்சென்று தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு வர ஆயத்தமானான். ஆனி அவளுக்கு முன்சீட்ல உக்கார்ந்தாதான் சௌகர்யமா இருக்கிறாப்பில நினைக்கிறா போலடா... என கணவன் கூறவும்

ஆனந்திக்கு ஏகப்பட்ட கோபம்... இது ஒன்னுதான் கொறச்சல் போங்க...

ஏன் மடிலதான் உக்கார வெச்சுக்கங்களேன்.. நானா வேண்டாங்கிறேன்.

மடில உக்கார வெச்சா கார் ஓட்ட இடைஞ்சலா இருக்குமேன்னு பார்க்கிறேன் எனக்கூறி ஆனந்தியின் கோப டெஸிபலை உச்சத்திற்கு கொண்டு சென்றான் ஆனந்தன்.

பத்ரகாளி முகம் காட்டிய ஆனந்தி நல்லது போற வழில தலைல உக்கார வெச்சுக்கோங்க போற வாரவங்களாம் நல்லா பார்த்து கைகொட்டி சிரிக்கட்டும் என வெகு எரிச்சலுடன் கூறினாள்.

ஒரு வழியாக அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்த நிம்மதியில், இருவரும் பழையபடி சந்தோஷ வாழ்க்கைக்கு திரும்பினர்.

வருடங்கள் உருண்டோடின!!

காலம் வெகுவேகமாக யாருக்கும் நிற்காமல் ஓடுகிறது என்பதை மானசீகமாக உணர்ந்தாள் ஆனந்தி.

மீண்டும் ஆனந்தியின் வாழ்வில் வில்லி நுழைந்தாள்...

ஆனந்தன் மீண்டும் புதுத்தோழி ஒருத்தியை அழைத்து வந்தான். அவளோ அவன் நெஞ்சை விட்டு அகலாமல் அவனே கதியென்று இருந்தாள். மாலை வேளை ஷெட்டில் விளையாடும் நேரமும் மறந்தே போனது..இத்தனை வருட திருமண வாழ்வில் இப்படியொரு வில்லியை காணாத ஆனந்திக்கு மனம் துடித்தது.

படுக்கையின் அருகிலும் இடம்கொடுத்து சதா அவள் குரலுக்கு செவிமடுக்கும் கணவனிடமிருந்து எப்படி அவளை பிரிப்பது என அடுத்த திட்டம் தீட்டதொடங்கினாள்.

ஆனி......

ம்ம்...

இங்க பார்த்தியா இந்த ஸ்மார்ட்டிக்கு எல்லா விஷயமும் தெரியுது.....

ஒரே குரலுக்கு ஓடி ஓடி உதவி செய்யுறாடா...

கள்ளங்கபடமே இல்லாதவ....

நீ வேணா எதாவது உதவி கேட்டுப்பாறேன்....

குழந்தைகளும் அவளின் அன்பில் திளைத்து அவளுடன் ஒன்றிப்போயினர். ஏனோ ஆனந்திக்கு மனதில் மீண்டும் ஒரு வெறுமையும், எரிச்சலும் தலைதூக்கியது.

சந்தேகம் எதுவும் இருந்தால் தன்னிடம் கேட்கும் குழந்தைகள், இப்பொழுது ஏனோ தன்னிடம் கேட்காதது போல் ஒரு பிரம்மை உருவானது.

ம்ம்...

ஸ்மார்ட்டியாம் ஸ்மார்ட்டி, அப்ப நானு...

இப்ப இருக்கு உனக்கு ஆப்பு என மனதினுள் கொக்கரித்தபடி தனக்கு தேவையானதையெல்லாம் கேட்டாள் ஆனந்தி.

கேட்டதை எல்லாம் கொடுப்பேன் என்னும் ரேஞ்சுக்கு கணவனின் ஸ்மார்ட்டி ஸ்மார்ட்டாக வேலை செய்தாள்.

ஆனந்தியின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக புதுத்தோழியிடம் ஒன்றிப்போனது.

ஆனிம்மா இட்லி ரெடியா... ஆஃபிஸ்க்கு நேரமாகுது பாரு...

ம்ம்... இருங்க ஒரு நிமிஷம்.......

பரபரப்பான காலை வேளையிலும் தனது ஆன்ட்ராய்டு போனில் பரபரப்பாக ஏங்ரி பேர்டு விளையாடும் மனைவியின் முகத்தை ரசிக்க முடியாமல் எரிச்சலானான்.

என்னது நான் அழைச்சுட்டு வந்து எனக்கு நானே ஆப்பு வெச்சுக்கிடனா என மனம் நொந்தான் ஆனந்தன்.

நீதான் இப்பலாம் சதா கம்ப்யூட்டரே கதின்னு இருக்கியே அப்புறம் புதுசா என்ன இருக்கு இந்த மொபைல்ல கொடுத்துரும்மா ப்ளீஸ்...

ம்கூம்.. இருங்க ஒரு நிமிஷம்......

மீண்டும் மீண்டும் கோபப் பறவையை இலக்கு நோக்கி எறிந்து கொண்டிருந்தாள் ஆனந்தி.

ஆனந்தனுக்க்கோ நிலைகொள்ளவில்லை...

உங்க பழைய தோழி தொலைக்காட்சி பெட்டிய உங்கம்மா வீட்டுக்கு அனுப்பினேன். ஆனா, உங்க புதுத்தோழி ஸ்மார்ட்டிய நானே வெச்சுக்கிறேன் எனக்கூறும் மனைவியின் முகத்தை அதிர்ச்சியுடன் நோக்கிக்கொண்டே.....

இனிமே வீட்டுக்கு வந்தா இன்கம்மிங் கால் மட்டுமே அட்டன் பண்ணனும், தவறிப்போய் கூட மொபைலை கையிலெடுக்ககூடாது என மனதினுள் நினைத்துக்கொண்டே அலுவலகத்திற்கு கிளம்பினான் ஆனந்தன்.

Comments

அருள்.
கதை நல்லா இருக்கு,எதிர்பாரா முடிவு,

தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

கதை நல்லா இருக்குங்க. க்ளைமேக்ஸில் டிவி பொட்டியும் ஃபோனும்தான் கணவரின் தோழிகள்னு தெரிஞ்சபிறகு மனசுக்கு ரொம்ப நிம்மதியா போச்சுங்க. மறுபடியும் டிவி பொட்டியையும் ஃபோனையும் அந்தந்த இடத்தில போட்டு ரெண்டாவது முறையா உங்க கதைய படிச்சேன். சுவாரசியமா இருக்குங்க. அருமை தொடர்ந்து கலக்குங்க:)

s nice and cute story

கதையை படித்து முதல்பதிவிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி சுபா :) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாராட்டிற்கும், பதிவிற்கும் மிக்க நன்றி +மகிழ்ச்சி ராஜஸ்ரீ :) கண்டு பிடிக்கமுடிலேனு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கதையை படித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கதையை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் டீமிற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

super

ஹாய் அருள்
டி வியும் மொபைலுமா தோழி.திரும்பவும் படித்து ரசித்தேன். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. நகைசுவையா இருக்கிற அதே நேரத்தில் சிந்தனையை தூண்டுவதாயும் இருக்கு.
குடும்ப உறுப்பனர்களிடையே பேச்சையே குறைத்து விட்டது இவை.
யோசிக்கணும் எல்லோரும்.
வாழ்த்துக்கள் அருள்

Aahaa...super selvi...ethir parkavey illa.nalla azaga eduthunu poi supera mudichurukiga..

Be simple be sample

super mam its out of all people's
imagination

அருள் எப்போ இதெல்லாம் நடந்துச்சி !

கதை ரொம்ப அருமையா இருக்கு அருள் என்னடா இப்படி போகுதேன்னு நினைச்சா கடைசில வில்லி டீவியும் போனுமா எப்படி இப்புடிலாம் யோசிக்கிறீங்க

கண்டுபிடிக்கவே முடில பா கடைசியா படிச்ச பின்னாடிதான் தெரியுது வில்லி யாருன்னு

வாழ்த்துக்கள் அருள் இன்னும் இன்னும் கலக்குங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நிகிலா :)
நிறைய வீட்ல, சாப்பிடும் போது தொலைக்காட்சி முன்பாத்தான் சாப்பிடவே உக்கராங்க :) ஒரு வாரம் டிவி பழுதாச்சினு பார்க்காம் இருக்கும்போதுதான் தெரியும் நாம இதுவரை எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கோம்னு, ஆனா அதுக்காக எல்லாரும் அப்படியே இருங்கனு சொல்லமுடியாது, ஏதோ என்மனசில தோணுச்சு எழுதிட்டேன், அனுப்பின பிறகு, அதிகப்பிரசிங்கத்தனமோனு தோணுச்சு :(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி ரேவ் :) உங்க பாராட்டும் பதிவும் உற்சாகமளிக்குது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//எப்போ இதெல்லாம் நடந்துச்சி !// 4 நாள் ஆச்சுப்பா :)
//கதை ரொம்ப அருமையா இருக்கு அருள் என்னடா இப்படி போகுதேன்னு நினைச்சா கடைசில வில்லி டீவியும் போனுமா//
கொஞ்சம் உதறலோடதான் யோசிச்சேன் சுவா :)
கண்டுபிடிக்கலேனு சொன்னது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா :)
உங்க வாழ்த்தும் பாராட்டும் உற்சாகமூட்டுது சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹஹஹஹ.... ஆனா நான் கண்டு பிடிச்சுட்டனே டிவி, மொபைலுன்னு ;) ஏனா வனி எப்படி கரப்பாம்பூச்சி, நாய்குட்டியை விட மாட்டாளோ அது மாதிரி இந்த அருள் எனக்கு தெரிஞ்சு நாக்கு, வயிரெல்லாம் வெச்சு கதை எழுதும் ஆலாச்சே ;) ஏப்புடி??? ஆனா கதை சூப்பர். டிவின்னு தெரிஞ்ச பின்னும், சுவாரஸ்யம் குறையாம போச்சு, சிரிச்சுகிட்டே படிச்சேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டுபிடிச்சிட்டீங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்..:(

//வயிரெல்லாம் வெச்சு கதை எழுதும் ஆலாச்சே// ம்கூம்.. வனி உங்களுக்கு எப்பபாரு என்னைய கிண்டல் பண்றதே வேலையாப்போச்சு... ஆலமரமாட்டம்னு சொல்றீங்களே நியாயமா?? நானே ஒல்லிக்குச்சி...இதுல இப்படி சொன்னா எனக்கு வருத்தமா இருக்காதா??

உங்க பதிவும் வாழ்த்தும் உற்சாகமளிக்குது வனி :) மனமார்ந்த நன்றிகள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மனமாற்றத்திற்க்காக எதாவது படிக்கலாமே என்று உங்க கதையை எடுத்தேன். நல்லா எழுதியிருக்கீங்க அருள். வனி போல என்னால் ஊகிக்கவெல்லாம் முடில. தொடர்ந்து எழுதி எல்லோரையும் மகிழ்வியுங்க.வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மனமாற்றத்திற்க்காக எதாவது படிக்கலாமே என்று உங்க கதையை எடுத்தேன். நல்லா எழுதியிருக்கீங்க அருள். வனி போல என்னால் ஊகிக்கவெல்லாம் முடில. தொடர்ந்து எழுதி எல்லோரையும் மகிழ்வியுங்க.வாழ்த்துக்கள்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

உங்களுடைய பாராட்டும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகம் அளிக்குது:) மிக்க நன்றி ஜெயந்தி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

kadhai arumai pudhumai. kadhai thodangiyadhularindhu suvarasiyama irundhadhu idaila irandavadhu tholiana villimeal kovam vandahdhu kadaisila phonum tvum dhanu therindha vudan vunmaiya vunara mudindhadhu.... vaalthukal. Idhu ennudaiya mudhal karuthu kooda.

தங்களுடைய பதிவிற்கும், வாழ்த்திற்கும், தங்களின் முதல் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

story is very very intersting and super..... keep it up.........

great turning point in climax but that is the real life in all family

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

தங்களின் பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக நன்றி ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தங்களின் பதிவு மகிழ்ச்சியளிக்கிறது, மிக்க நன்றி சுனந்தா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

kanavarin thozhi endra thalappai parthu vittu padikka pidakkave yillai. anal ungal vana bojanam ippo dhan padithen. edho vishayam irukkum endru padithu parthen. Classical thinking.

மிக்க நன்றி தோழி :) தங்களின் பதிவும் பாராட்டும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.