நகச்சுற்று

GM frnds. எனக்கு மூன்று நாட்களாக நடுவிரல் நகக்கண்ணில் வலியாக இருக்கிறது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஏதாவது மருந்து சொல்லுங்கப்பா... Pls....

ப்ளீஸ்பா ரொம்ப வலிக்குது யாராவது சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,

நகச்சுத்தியா இருக்குமோ என்னவோ. விரலில் எலுமிச்சம்பழம் செருகுவாங்க, ஆனா, அது உடனடி ரிலீஃப் கிடைக்குமான்னு தெரியல.

ஏதேனும் ஆண்டிபயாடிக் எடுத்துக்குங்க. சீழ் வச்சிருந்தாலும் சரியாகிடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

உமா நகச்சுத்தியாக இருந்தால் விபூதியை (திருநீறு) தண்ணீரில் குழைத்து நகத்தில் வைத்து கட்டு போட்டால் இரண்டு நாட்களில் சரியாகி விடும். வலியும் குறையும். கட்டு காயும் போது லேசாக நனைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் வேறு ஏதும் இன்ஃபெக்‌ஷன் என்றால் இது பலனளிக்குமான்னு தெரியலை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம் நகசுத்தியா இருக்கலாம், உமா ஏதாவது சின்ன சட்டியில் மஞ்சள் தூள் போட்டு குழைக்கும் பதத்துக்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து நகத்தில் வைக்கும் அளவிற்கு சூட்டில் அந்த மஞ்சள் குழைப்பை வைத்து அப்படியே துணியை வைத்து கட்டி விடிங்க உமா. இது நிச்சயம் வலி கேட்கும் ஏதாவது இன்பெக்ஷன் ஆகியிருந்தாலும் சரிபன்னும்.

Hai friends good evening. Umma unga finger pain ipo epadiruku?
Nallennai udan manchal kalanthu kothika vaithu mithamana soodil viralil thadawungal. Suham theryum

Termeric nala palan kudukum kaila potu parunga

Kalam pon ponrathu

மிகவும் நன்றி தோழிகளே! மஞ்சள் குழைத்து போட்டு பார்க்கிறேன். வீட்டில் திருநீறு இல்லை. (Im catholic)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மஞ்சள் தொற்று இருந்தால் குணப்படுத்தும். சிலர் மருதாணி வைத்தால் நல்லது என்பார்கள். ஆனால் இவை இரண்டுமே தோலில் கறை ஏற்படுத்தும்.
பெரிதாக எதுவும் இல்லை என்பது நிச்சயம் தெரிந்தால் மட்டும் மஞ்சள் வைத்துக் கட்டுங்கள். நிச்சயம் சரியாகும். நானும் பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் மஞ்சள் கலந்த எண்ணெயை மெதுவாக சூடுகாட்டி இளஞ்சூட்டோடு வைத்துக் கட்டுவோம்.

சாதாரணமாக உள்ளே சீழ் அதிகம் இருந்தால் விரலைச் சுற்றிலும் ஊன்றிப் பார்க்க ஆங்காங்கே தோல் வெளிறியது போல (சிறிய பொட்டுகள் போல) தெரியும். இப்படி இருந்தால் மஞ்சள் வைக்குமுன் போய்க் காட்டிவிடுவது நல்லது. அல்லாவிட்டால் எல்லாமே ஒரே மஞ்சள் நிறமாக இருக்கும். நீங்கள் சொல்லும் மீதி அறிகுறிகள், வீக்கம் இவற்றை வைத்துக் கொண்டுதான் அவர்கள் மருந்து செய்ய வேண்டி இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழிகளே மஞ்சள் பூசிய பிறகு வலி குறைஞ்சிருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி அக்கா. வீக்கம் எல்லாம் இல்ல வலி மட்டும்தான் இருக்கு... இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்