தேதி: December 15, 2012
ஐஸ்க்ரீம் குச்சிகள் - 10 முதல் 15 வரை
க்ளூ கன்
கத்திரிக்கோல்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4 குச்சிகளை சரி பாதியாக வெட்டி படத்திலுள்ளது போல 2 செட்டாக ஒட்டி வைக்கவும். ஒரு குச்சியின் மேல் பக்கத்திலிருந்து கால் பகுதியும், கீழிருந்து கால் பகுதியும் வெட்டியெடுத்து, 4 குச்சிகளை ஒட்டி வைத்த ஒரு செட்டில் படத்திலிருப்பது போல் ஒட்டவும்.

அதேபோல் வேறொரு குச்சியின் மேல் பக்கத்திலிருந்து கால் பகுதியும், கீழிருந்து கால் பகுதியும் வெட்டியெடுத்து, நடுவில் சிறிய துண்டு குச்சியை படத்தில் இருப்பதுபோல ஒட்டி வைக்கவும். நாற்காலியின் கைப்பிடி தயார். இப்போது ஏற்கனவே வெட்டி ஒட்டி வைத்த 4 குச்சிகளின் இரண்டு பாகத்தையும் படத்தில் இருப்பது போல் ஒட்டவும்.

கைப்பிடிக்காக வெட்டிய குச்சியின் மீதியில் படத்தில் உள்ளது போல துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெட்டிய துண்டுகளை படத்தில் உள்ளது போல் நாற்காலியின் அடி பகுதியில் ஒட்டவும்.

ஒரு குச்சியை இரண்டாக வெட்டி, அதை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து விரல்களால் நடுவில் அழுத்தி வளைத்து விடவும். அதை நாற்காலியின் அடியில் ஓட்டி விடவும். நாற்காலி தயார்.

மேசை செய்வதற்கு 5 குச்சிகளை இரண்டாக அடுத்தடுத்து வைத்து ஒட்டி விடவும். 3 குச்சிகளை இரண்டாக வெட்டி, மேலும் கீழும் இருக்கும் வளைவுகளையும் வெட்டி நடுவில் உள்ள துண்டுகளை படத்தில் இருப்பது போல ஒட்டி விடவும். மீதமுள்ள துண்டுகளை மேசைக்கு கால்களாக ஒட்டி முடிக்கவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் செய்யப்பட்ட மேசை, நாற்காலி தயார்.

Comments
கலா
பாராட்ட வாரத்தை இல்லை :) அத்தனை கியூட், அத்தனை சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலா
மினி ஃபர்னிச்சர்ஸ் அழகோ அழகு...!!
க்ரேட் கலா..
அறுசுவையில முதன்முதலில் நீங்கதான் என்னோட சேட்ல பேசினது..ஒரு 4 வருடம் முன்பு..அப்ப நீங்க கன்சீவ் ஆகி இருந்தீங்க..
ஞாபகமிருக்கா?அதுக்குபிறகு இப்பதான் உங்கக்கிட்ட பேசறேன்...:)நல்லா இருக்கீங்களா? சாரி வேற எங்க மெசேஜ் போட முடியல சோ இங்க போட்டுட்டேன்..
நல்ல க்ராப்ட் வொர்க்
வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
க்ராஃப்ட்
சூப்பரா இருக்கு கலா. பிடிச்சிருக்கு.
- இமா க்றிஸ்
கலா க்யூட்டா அழகா இருக்கு
கலா
க்யூட்டா அழகா இருக்கு
கலா
ரொம்ப அழகா இருக்குங்க...
கலா
கலா
ரொம்ப அழகா இருக்கு. குறிப்பா அந்த பூ தொட்டி..
வாழத்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கலா,
கலா,
Supercute !!! வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)
Kalai
வனிதா அக்கா
மிக்க நன்றி :)
Kalai
இளவரசி
இளவரசி மேடம் நலமா?ஆமாம் பேசி வருஷம் ஆச்சு. பேச சான்ஸ் கிடைக்கல. இனி பேசிடலாம்.வாழ்த்துக்கு நன்றிங்க :)
Kalai
இமா
இமா ஆன்டி மிக்க நன்றி :)
Kalai
நிகிலா
ரொம்ப நன்றி :)
Kalai
சுமதி
நன்றிங்க சுமதி :)
Kalai
ரம்யா
மிக்க நன்றி ரம்யா :)
Kalai
கவிதா
மிக்க நன்றி கவி :)
Kalai
கலா அக்கா
கலா அக்கா குட்டி சோபா செட் அழகோ கொல்லுதே என்ன சொல்லி உங்கல புகழ்ட்ரதுனே தெரில அக்கா மொத்ததுல வொன்டர்புல் அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Mrs. Kala
ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப அழகா இருக்கு..... :)
வாழ்த்துக்கள்...
கலா என்றதும் ஓடி வந்தேன்
கலா என்றதும் ஓடி வந்தேன் , நீங்க அந்த கலாதானே,,,,,,,,,,,,
மிக அழகு
எப்படி இருக்கீங்க , அக்கா வானதி நலமா???/
Jaleelakamal
கனிமொழி
மிக்க நன்றி கனிமொழி:)
Kalai
தீபா
தீபா மிக்க நன்றி:)
Kalai
ஜலீலா
நீங்க வேற யாரையோ நினைச்சு சொல்றீங்கனு நினைக்கிறேன்.
பாராட்டுக்கு நன்றிங்க:)
Kalai
ஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது.
ஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது. வேறு ஏதாவது ஐஸ்குச்சியில் செய்யும் கைவினைப் பொருட்கள் இருந்தால் எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லித்தரவும்
செந்தில் வடிவு
தெரிந்ததை கட்டாயம் சொல்லித்தருவேன்.
//ஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது.// நன்றிகள்.
Kalai
கைவினைப் பொருட்கள் கிடைக்கும் இடம்
Mrs. கலா
கைவினைப் பொருட்கள் செய்வதற்கு தேவையான பொருட்கள் திருச்சியில் எங்கு கிடைக்கும். எங்களுக்கு திருச்சிதான் பக்கம். உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்
super very very super
super very very super
all is well
I LIKE THIS
I LIKE THIS CRAFT VERY MUCH . It's SO NICE, SO BEAUTY, and SO CUTE.