விளக்கப்பட குறிப்போடு வெட்டி காட்ட முடியுமா

அறுசுவை கூட்டாஞ்சோறு தோழிகளே உங்கள் சமையல் குறிப்புகளில் காய்கறிகள் பழவகைகள் அழகாக வெட்டப்படுவதை பார்த்து ரசித்திருக்கிறேன் ஒரு உணவின் சுவையும் அழகும் அதன் நேர்த்தியில் தான் உள்ளது என்ன நம்புகிறேன் பார்த்தாலே சாப்பிட தோன்றவேண்டும் ஆகவே எனக்கு ஒவ்வொரு காய்கறிகளும் எவ்வாறு வெட்டினால் அழகாயிருக்கும் என்று யாரும் சமைக்கலாம் பகுதியில் விளக்கப்பட குறிப்போடு வெட்டி காட்ட முடியுமா ? வனிதா மேடம் உங்க கட்டிங் ரொம்ப நல்ல இருக்கு ப்ளீஸ் சொல்லிகொடுங்க யாரும் என் கேள்விய பார்த்து விட்டு சிரிக்காதிங்க என்னவர் கூட அழகாக வெட்டப்பட்டு சமைத்த உணவைத்தான் அதிகம் விரும்புகிறார் பட் பாவம் இந்த சின்ன பிள்ளைக்கு வெட்ட தெரியல கட்டிங் பிளேட்டில் வைத்து கட் பண்ணினால் கை விரல் தான் கட் ஆவுது very bad.......

நிச்சயம் வெளியிடுகின்றோம். அறுசுவை ஆரம்ப தினங்களில் காய்கறிகளை எப்படி துண்டு போடுவது, மீன், சிக்கன் வெட்டுவது, நண்டு எப்படி உடைப்பது, இறால் சுத்தம் செய்வது போன்றவற்றிற்கான செய்முறை விளக்கப் படங்கள் எடுத்து, பிறகு வெளியிடாமலே வைத்துவிட்டோம். அந்தப் படங்களைத் தேடி எடுத்து வெளியிட முயற்சி செய்கின்றோம். அறுசுவை நேயர்கள் படங்கள் எடுத்து அனுப்பினாலும் அதனை இங்கே வெளியிடுகின்றோம்.

சில அடிப்படை விசயங்கள் அறுசுவையில் மிஸ் ஆவது தெரிகின்றது. நான் ஏற்கனவே தயிர் தயாரிப்பு பற்றி ஒருமுறை பேசி இருக்கின்றேன். எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்று நினைக்கும் சில விசயங்கள், சிலருக்கு புதிதாக இருக்கலாம். அல்லது சரியாக தெரியாமல் இருக்கலாம். அவற்றை எல்லாம் கொண்டு வர வேண்டும். அந்த மாதிரியான விசயங்கள் எவை எல்லாம் அறுசுவையில் மிஸ் ஆகின்றன என்பதை நேயர்கள் இங்கே சுட்டிக் காட்டினால், அவற்றை எல்லாம் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்குவோம். உங்கள் தேவைகளை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஓ அப்படியா மிகவும் நன்றி ரொம்ப சந்தோசம் அறுசுவைக்கு நிகர் அறுசுவையே தான் என்போன்ற சமையலில் புதியவர்களுக்கு உதவி செய்யும் ஒரே online சமையல் அரிச்சுவடி அம்மா அறுசுவைதான்.சீக்கிரம் வெளியிடுங்கள் sir காத்திருக்கிறோம்.........................

அண்ணா பதில் சொல்லிட்டார், என் பதில் தேவை இருக்காது, இருந்தாலும் என் பேரை சொல்லி கூப்பிட்டீங்க, அதுக்காகவாது நான் சொல்லிடனும்... கூடவே உண்மையையும்.

என் சமையல் என்று நீங்க கொஞ்ச மாதம் முன்பு வரை உள்ளதை சொல்லி இருந்தால், அதில் வரும் காய்கறி எல்லாம் சுத்தம் செய்து நறுக்கி தந்தவர்கள் வீட்டில் வேலை செய்தவர்கள், சமையலில் கை தேர்ந்தவர்கள். நானில்லை. நானும் உங்க கட்சி தான்... ;) காயை நறுக்க சொன்னா கையை நறுக்கும் புத்திசாலி. நறுக்க தெரிந்தாலும் ரொம்ப மெதுவா தான் அழகா பார்த்து பார்த்து நறுக்குவேன். அப்படி முடியாமல் வேகமாக செய்ய நினைத்தால் கையில் கட்டு போட வேணும். இவரே சில நேரம் “என்ன பூச்சி பிடிக்கிற? என்னை கேட்டா நிமிஷத்தில் நறுக்கியிருப்பேன்” என்று பொறுமை இழந்து காய்களை நறுக்கி தந்தது உண்டு. ஒரு செஃப் அளவுக்கு நேர்த்தியாக வெட்டியும் தருவார். அதனால் அண்ணா வெளியிடும் படத்துக்காகவே காத்திருப்போம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அண்ணா... எனக்கு ஆரம்பகாலத்தில் சிரமமான (அப்படி சொன்னா பொய் தெரியாத விஷயம் என்றால் சரியாக இருக்கும்) விஷயம்...

1. வாழைத்தண்டு சுத்தம் பண்ண தெரியாது.
2. வாழைப்பூ சுத்தம் பண்ண தெரியாது.
3. பூசனிக்காய், புடலங்காய் போன்ற காய்களில் தோல் நீக்கனுமா, விதை நீக்கனுமான்னு கூட தெரியாது.
4. கீரை சுத்தம் பண்ணி ஆய்ந்து எடுக்க தெரியாது.
5. மீனை சுத்தம் செய்ய தெரியாது (குடல் பகுதி எடுக்க)
6. ப்ரான், நண்டு எல்லாம் இன்னுமே சுத்தம் பண்ண தெரியவே தெரியாது.
7. மீன், கறி எல்லாம் எப்படி நன்றாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது என்பது இப்போதுமே சில நேரம் மிஸ் ஆகும் விஷயம் தான்.

பலருக்கு உதவும் என்றால்... பேசிக்கா நெய் காய்ச்சுவது, தயிர் தயாரிப்பு, பனீர் தயாரிப்பு, ஃபில்டர் காஃபி, பயிறு வகைகள் முளைகட்டுவது, இனிப்புகளுக்கு பாகு பதம் பார்க்க தெரிவது போன்றவை சொல்லலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டி.வி.யில் காண்பிக்கும் விளம்பரங்களில் - ஃப்ரென்ஞ் கட்டர், அப்புறம் வெஜிடபிள் கட்டர் இந்த விளம்பரங்களை எல்லாம் சலிக்காம பார்ப்பேன்.

எனக்கு தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு எவர்சில்வர் முறத்தின் மேல் அரிவாள்மணையை வைத்துக் கொண்டு, அதில்தான் காய் நறுக்க வரும்.

மருமகள்கள் இருவரும் கத்தியும் கட்டிங் போர்டும் வைத்துக் கொண்டு, நிமிஷமாக காய்களை அழகாக, பொடியாக நறுக்குவாங்க. நான் பார்த்து ரசிப்பதோடு சரி.

மகன் வீட்டுக்கு யு.எஸ் போறப்ப, பல சந்தேகங்கள் கேட்டு, படுத்திட்டேன். அதில் முக்கியமான ஒன்று - அங்க எப்படி கத்தி வச்சு காய் நறுக்கற்து என்பது.

ட்ரேயில் பல விதமான கத்திகள் - தக்காளியை எப்படி கத்தி முனையை வைத்து, கோடு போட்டாற்போல நறுக்கணும், காரட் கிழங்கு எல்லாம் பீலர் வச்சு எப்படி தோல் சீவணும், கொஞ்சம் திக் ஆன காயை எப்படி கத்தியை படுக்கை வசத்தில் வச்சுகிட்டு நறுக்கணும் என்று சொல்லித் தந்தாங்க மகனும் மருமகளும்.

சில பல முறை கையை வெட்டிக் கொண்டதும் உண்டு. எப்படியோ சமாளிச்சுட்டேன்.

பலருக்கும் உதவக் கூடிய விஷயம் என்றால் - நிறைய இருக்கு. சின்ன சின்ன விஷயங்கள் - மத்தவங்க சமைக்கும்போது பார்த்து, பழக்கத்தில் வரணும்.

இட்லி எடுக்கும்போது, தட்டில் இட்லித் தட்டை வாட்டமாகக் கவிழ்த்தி, லேசாக தண்ணீர் தெளித்து, அரை நிமிஷம் பொறுத்து, பொறுமையாக தட்டு, இட்லித் துணியிலிருந்து அழகாக இட்லியை எடுப்பது, அப்புறம் தோசைக்கு அரைக்கும்போது, உளுந்த மாவில் முதலிலேயே தண்ணீர் ஊற்றாமல், நன்றாக அரைபட்டதும் பிறகு 5-10 நிமிடத்துக்கு ஒரு முறை - கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து(தண்ணீர் ஊற்றக் கூடாது)அரைத்து எடுப்பது - இப்படி நிறைய இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்