v care herbal hair oil

v care herbal hair oil use panirkingala result epdi iruku

நானும் பதில் சொல்லலாம்தானே.. :-)

முடியை பத்தி நான் அதிகம் கவலைப்படுறது இல்லை. கவலைப் பட்டா முடி அதிகம் கொட்டும்னு எப்பவோ, எங்கேயோ படிச்ச ஞாபகம். ஆனா, இப்ப என் பொண்ணே 'என்ன உன் தலை மொட்டை பாஸ் மாதிரி இருக்கு'ன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சதாலயும், குடும்ப சகிதமா வீகேர்ல ட்ரீட்மெண்டு எடுத்துக்கிட்டு வர்ற என் சகோதரி கொடுத்த தொல்லையாலயும், கொஞ்சம் காலத்துக்கு எண்ணெய் மட்டும் தடவி பார்ப்போம்னு முயற்சி பண்ணினேன். (குறிப்பு: நான் தலைக்கு சாதாரண எண்ணெய் தேய்ப்பதே மாமாங்கத்துக்கு ஒருமுறைதான்.) அந்த எண்ணெய்யை தேய்ச்சிட்டு, அதே ப்ராடக்ட் சீயக்காய் ஷாம்பு போட்டுதான் குளிக்கணும்னு கண்டிசன் எல்லாம் போட்டாங்க. (நல்ல மார்க்கெட்டிங்..) தேய்க்கிறப்ப அறுசுவை பாராட்டு பதிவுகளைப் படிக்கிறப்ப ஆகிற மாதிரி, தலை ஜில்லுன்னு ஆயிடுது. அதுக்கப்புறம் ஆறடி தூரம் வரைக்கும் பரவுற அதை நாற்றம்னு சொல்றதா, வாசம்னு சொல்றதான்னு ஒரு குழப்பம். அடுத்த நாள் காலையில குளிக்கிறப்ப வழக்கம் போல தண்ணீர்ல முடிகள் பயணிக்குது.

முடி வளர்ற, வளர்க்கிற விசயம் உடல் உள் சம்பந்தமான விசயம்ங்கிறது நல்லாவே தெரியும். தலைக்கு மேலே தேய்க்கிற எண்ணெய் சமாச்சாரங்கள் பாதுகாப்புக்கு, பராமரிப்புக்கு உதவியாய் இருக்கும். ஜீன் விசயங்களை மாற்றியமைச்சிடாது. எத்தை தின்னா பித்தம் தெளியும் நிலைமைக்கு வந்த பிறகு எதையாவது முயற்சி செய்ய வேண்டியதா இருக்கு. சரி, ரிசல்ட் என்னதான் சொல்ல வர்றீங்கன்னு கேக்குறீங்களா.. நீங்க வேற கம்பெனி பேரை தெளிவா போட்டு இருக்கீங்க. நான் எதாவது சொல்லப் போக, வம்பா போயிடப் போகுது. :-) ஒருவேளை பெண்களுக்கு அது நல்ல பயனளிக்குதோ என்னவோ.. யாராவது வந்து நல்ல பதில் சொல்லட்டும்.

அன்பு லேகா,

இந்த எண்ணெய் வாங்கியதில்லை, அதனால் பதில் தெரியலை.

வீட்டிலேயே ஹெர்பல் ஆயில் தயார் செய்யலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் எல்லாம் தலா 200 மி.லி. எடுத்துக்குங்க. விளக்கெண்ணெயும் நல்லெண்ணெயும் கொஞ்சம் குறைச்சுக்கலாம்.(தலா 100 மி.லி.) இதை எல்லாம் ஒண்ணா கலந்துக்குங்க.

சென்னையில் நாட்டு மருந்துக் கடைகளில், மூலிகைகள் பவுடர் வடிவத்தில் கிடைக்குது.

மருதாணி பவுடர்,
கரிசலாங்கண்ணி பவுடர்,
கருவேப்பிலை பவுடர்
செம்பருத்தி இலை பவுடர்
செம்பருத்தி பூ பவுடர்
ஆவாரம்பூ பவுடர்
நெல்லிக்காய் பவுடர்

இவை எல்லாம் சிறிய பாக்கெட்டுகளில் வாங்கிக்குங்க.

தலா ஒரு ஸ்பூன் எடுத்து, கலந்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, லேசாக, தட்டையாகத் தட்டி, நல்லாக் காய வச்சு, எடுத்துக்குங்க.(நிழலில் காற்றாட காய வச்சா நல்லது) கொஞ்சம் கூட உள்ளே ஈரப்பதம் இல்லாம காயணும். ஈரப்பதம் இருந்தால், எண்ணெயில் போடும்போது எண்ணெய் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கு.

இந்த தட்டைகளை, கலந்து வைத்திருக்கும் எண்ணெயில் போட்டு வைங்க. 3-4 நாளில் எண்ணெய் நல்லா பச்சை கலராக ஆகிடும். தினமும் தலைக்குத் தேய்க்கலாம்.

கருவேப்பிலை பவுடரை, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீடை மாதிரி உருட்டி, காய வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 உருண்டைகள் சாப்பிட்டு வரலாம். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இரும்பு சத்து உள்ள கீரைகள், பருப்பு வகைகள், பால், தயிர் இதெல்லாம் சேர்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி babu

vazhga valamudan

மிக்க நன்றி seethalakshmi sister

vazhga valamudan

friends.enudaya thalayil erunthu thol urigirathu .pakku pakkaga seepu fulla varugirathu.thalayila fulla otikitu eruku.ethu ethanal varugirathu.please sollunga .mudi vera athigamaga kottuthu.ethavathu tips sollungal please.

ஹாய் சுவைகா எப்படி இருக்கீங்க....எதாவது நல்ல செய்தி இருக்கா,,,மாத்திரையினால் கூட இப்படி தோல் உரியலாம்...குளிர்ச்சியாக சாப்பிடுங்கள்..நல்லது நடக்கட்டும்,,,

மேலும் சில பதிவுகள்