ரீசைக்கிள்ட் ஷாப்பிங் பை

கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் பைகளில் கடைகளின் பெயர் அச்சடித்திருக்கும். திரும்பவும் பயன்படுத்தக் கூடிய பைகள்தான் என்றாலும் எல்லா இடங்களுக்கும் எடுத்துப் போக முடியாது.

உட்புறம் மை கசிந்திராத பையாகத் தெரிந்து கொள்ளுங்கள். பைக்கு மேக்கப் போட கூட ஏதாவது தெரிந்து வையுங்கள்.

பையை அப்படியே தையல் இயந்திரத்தில் கொடுத்து, மூன்று பக்கங்களிலும் தையல் ஓரம் விட்டு (ஒரு சென்டிமீட்டர் அளவு விட்டு) ஒரு வரி தையல் போட்டுக்கொள்ளுங்கள். ஆரம்பிக்கும் போதும் முடிவிலும் மறக்காமல் 'ரிவர்ஸ் ஸ்டிச்' போட வேண்டும்.

* பையை உட்புறம் வெளியே வருமாறு திருப்பி எடுங்கள். இப்போது அச்சடித்த பகுதி பையின் உள்ளே போயிருக்கும்.
* வாய்ப் பகுதியை வெளிநோக்கி மடித்து வைத்து (இந்நிலையில் கைபிடி கீழ் நோக்கி இருக்கும்.) சுற்றிலும் ஒரு தையல் போடுங்கள்.
* கைபிடிகளை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டுவந்து தைத்து விடுங்கள்.

இனித் தயக்கமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம்.
~~~~~~~~~
குட்டிப் பெண் ஒருவருக்காக உரு மாற்றம் பெற்ற பை இது. ஃபோம் துண்டுகளாலான பூக்கள், வட்டங்களை ஹாட் க்ளூ (hot glue) கொண்டு ஒட்டி அலங்கரித்திருக்கிறேன். அவர் லஞ்ச் பாக்காகப் பயன்படுத்துகிறார்.

யோசனை பிடித்திருந்தால் முயன்று பாருங்களேன்

5
Average: 4.2 (5 votes)

Comments

புது யோசனையா? கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

இமாம்மா அழகான உபயோகமான யோசனை சூப்பர்ங்கம்மா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமா-மா,

ரீசைக்கிள்ட் ஷாப்பிங் பை அழகான முயற்சி. நல்ல விளக்கமாவும், தெளிவாகவும், எளிமையாகவும் தந்திருக்கீங்க. உங்க வீட்ல குப்பையே சேராதோன்னு யோசிக்க வச்சுட்டீங்க. எதையும் வேஸ்ட் பண்ணாம உருமாத்தி நம்பவே முடியாதபடி மாத்தி விட்டுடுறீங்களே :)

தொடரட்டும் உங்களின் அழகான படைப்புகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர் :) அழகாக இருக்கு. நான் இது போல பேக் எதுவும் கைவசம் வெச்சிருக்கனா தெரியல, கையில் கிடைச்சா செய்துடுறேன். ஆளை காணோம்... ஆனா பதிவு எங்குட்டு இருந்தோ வந்துட்டே இருக்கு. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லதொரு யோசனை கொடுத்தீங்க, இப்பலாம் ஆர்.கே.வி, போத்தீஸ், பிஎஸார் போன்ற துணிக்கடைகளில் நீங்க போட்டிருப்பது போலவே சற்று பெரியதான பைகள் கொடுக்கிறாங்க, ஆனா அதை நீங்க சொல்வது போல எல்லா இடங்களுக்கும் எடுத்துசெல்ல முடியாது, பை நல்ல செவச்செவனு இருக்கும். இப்படி கெடதிருப்பி போட்டு மேல ஸ்டிக்கர் கூட ஒட்டலாம்தானே!!

(வேணும்னா ஸிப் வெச்சும் கூட பயன்படுத்தலாம் போல இருக்கு,) சூப்பர் :) லன்ச் பேக் ஐடியா நல்லா இருக்கு, குட்டி பையா தேடிப்பார்க்கணும், துவைக்கவும் மிக எளிதா இருக்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல யோசனை. அருமையா இருக்கு. நன்றி வாழ்த்துக்களும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

good think

அன்பு இமா,

கலக்கலான ஐடியா, அழகான வேலைப்பாடு! வழக்கம் போலவே சூப்பர்!!

அன்புடன்

சீதாலஷ்மி

புதிது அல்ல. நிறையத் தடவைகள் செய்ததுதான் குணா. இந்த முறை அறுசுவையில் பகிரக் கிடைத்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

//உங்க வீட்ல குப்பையே சேராதோ// ;) இப்படி ஏதாவது செய்யலாம் என நினைத்து நினைத்தே ஏராளமான குப்பை சேர்த்து வைத்திருக்கிறேனே. ;)

‍- இமா க்றிஸ்

வந்தேன். ஊரில் இருந்த வரை என் கணனி இறந்து விட்டதாக நினைத்திருந்தேன். வெகு சிரமப்பட்டு வேறு ஒருவர் கணனியிலிருந்து போட்ட பதிவு அது.

‍- இமா க்றிஸ்