வழுகையில் முடி வளர

30 வயது ஆண் வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்யலாம்

தோழி, வழுக்கையில் முடி வளரச் செய்வது சாத்தியமா என்று தெரியவில்லை. பரம்பரை( உங்கள் கணவரின் அப்பா, தாத்தாவிற்க்கு முடி குறைவு என்றால்) என்றால் ஓன்றும் செய்ய முடியாது. வெளிநாட்டில் சிலர் முடி ட்ரான்பிளான்ட் என்று செய்கிறார்கள். அது நிறைய பணம் செலவாகும், அத்தோடு அது எவ்வளவு தூரம் உண்மை என்றும் தெரியாது. வேறு தோழிகள் வந்து ஆலோசனை தருவார்கள்.
வாணி

வாணி சொன்னது போல் பரம்பரை என்றால் ஒன்றும் செய்யமுடியாது.ஆனால்Hair treatment செய்வது நல்லது கிடையாது.பின்விலைவுகள் வரும் என்று படித்துள்ளேன்.சிலருக்கு அது ஒத்துக்கொள்ளாது.Be careful.
veena.

from,veena.

gulf gate hair fixing கூகில் பன்னி பாருங்கள்..அங்கு தான் நிறைய பேர் முடி வரவைக்கிறார்கள்..என்னமோ ஜெர்மன் டெக்னாலஜியாம் சைட் எஃபெக்ட் இல்லையாம்.
ஆனால் இயற்கையாக முடி வரவழைக்க முடியுமா என்பது தெரியவில்லை
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு
"வழுக்கைக்கும் பொறாமைக்கும் மருந்து இல்லை"

மூன்று மாதம் விடாமல் தொடர்ந்து வெங்காயம் மிளகு உப்பு கலந்து அரைத்த சாரை காலை மாலை தவறாமல் தடவி வரவும்.கால தாமதம் ஆகும் ஆனால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.அதே போல் விளக்கென்னை உபயோகிக்கலாம்.பரம்பரை முடி வழுகையை கூட இதன் மூலம் மாற்றலாம்.என் அனுபவத்தில் கண்டது.

வெங்காயம் மிளகு உப்பு = எந்த‌ அளவுகளில் சேர்த்து அரைக்கணும், விவரம் சொன்னால், நிறையப் பேருக்கு சொல்லலாம். பலருக்கும் உபயோகப்படும் இந்தக் குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஒரு வெங்காயம், 5, முழு மிளகு, அரை ஸ்பூன் உப்பு, மூன்றையும் அரைத்து , அதில் வரும் சாரை தலையில் நன்றாக தேய்க்க வேண்டும்

பதில் தந்ததற்கு நன்றி.

கவலைப்படறவங்க‌ நிறையப் பேர் இருக்காங்க‌, சொல்லிப் பார்க்கிறேன். முயற்சி செய்தால் = பலன் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்