குரோசே கீ செயின் பர்ஸ்

தேதி: February 3, 2014

4
Average: 3.9 (7 votes)

 

உல்லன் நூல்
குரோசே ஊசி
டிசைன் பட்டன்
கீ செயின் வளையம்
கத்தரிக்கோல்

 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உல்லன் நூலில் முடிச்சுப் போட்டு ஊசியை முடிச்சினுள் விட்டு 7 சங்கிலிகள் பின்னி, முதல் சங்கிலியோடு இணைக்கவும். சிறிய வளையம் போல இருக்கும்.
வளையத்தின் மேலே படத்தில் உள்ளவாறு இரண்டு சங்கிலிகள் பின்னவும்.
படத்தில் காட்டியுள்ளபடி வளையத்தினுள் இரட்டைக் குரோசே பின்னல் (Double Crochet Stitch) பின்னவும்.
இதேபோல் 15 இரட்டைப் பின்னல்களை வளையத்தினுள் விட்டுப் பின்னி, படத்தில் உள்ளவாறு முதலில் பின்னிய பின்னலின் மேலுள்ள சங்கிலியில் ஊசியை விடவும்.
அந்தச் சங்கிலியை இழுத்து ஒன்றாக்கி, அடுத்த சுற்றுக்கு இரண்டு சங்கிலிகள் பின்னவும்.
கீழ்பக்கம் பின்னியுள்ள ஒவ்வொரு இரட்டைப் பின்னலின் இடையேயும் இரட்டைப் பின்னலைப் பின்னி, கடைசியில் ஊசியை முதல் பின்னலின் மேலுள்ள சங்கிலியில் விட்டு இழுத்து ஒன்றாக்கி, அடுத்த சுற்றுக்கு இரண்டு சங்கிலிகள் பின்னவும். இதேபோல் மேலும் 2 சுற்றுகள் பின்னிக் கொள்ளவும்.
அதை அப்படியே படத்தில் உள்ளவாறு திருப்பி இரண்டு சங்கிலிகள் பின்னிக் கொள்ளவும்.
கீழ்பக்கமுள்ள இரட்டைப் பின்னலின் இடையே ஊசியை விட்டு, அதன் எதிர் முனை வரை இரட்டைப் பின்னல்களைப் பின்னி, இரண்டு சங்கிலிகள் பின்னவும்.
மீண்டும் அப்படியே திருப்பி 3 இரட்டைப் பின்னல்கள் பின்னவும்.
பிறகு 2 சங்கிலிகள் பின்னி, படத்திலுள்ளபடி 2 பின்னல்கள் இடைவெளி விட்டு, 3 இரட்டைப் பின்னல் பின்னவும்.
இரண்டு சங்கிலிகள் போட்டு அப்படியே திருப்பி, படத்தில் உள்ளது போல் 3 ஒற்றை குரோசே பின்னல் பின்னி, அதற்கடுத்து கீழுள்ள இடைவெளியில் ஊசியை விட்டு 3 இரட்டைப் பின்னல்களைப் பின்னவும்.
அடுத்து 3 ஒற்றைப் பின்னல்கள் பின்னி, முடிச்சுப் போட்டு நூலை வெட்டிவிடவும்.
படத்தில் காட்டியுள்ளபடி டிசைன் பட்டனை பர்ஸின் வாய்ப் பக்கத்தின் கீழே வைத்து தைக்கவும். (மூடுவதற்காக மேல் பகுதியிலிருக்கும் இடைவெளியை விட சற்று பெரிய பட்டனாக இருக்க வேண்டும்).
பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப பர்ஸின் வலது (அ) இடது புறத்தில் நூலை இணைத்து முடிச்சுப் போட்டு, 10 சங்கிலிகள் பின்னி, முதல் சங்கிலியோடு இணைத்து முடிச்சுப் போடவும். வளையம் போல இருக்கும்.
அந்த வளையத்தினுள் கீ செயின் வளையத்தை மாட்டிவிடவும். அழகிய கீ செயின் பர்ஸ் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான வேலை.. :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பராக இருக்கு வாழ்த்துக்கள்

சுப்பர்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

கீசெயின் அழகா இருக்கு வாழ்த்துக்கள்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..

சூப்பர் சுபத்ரா. பர்ஸ் ஐடியா கலக்கலா இருக்கு. இதற்காகவே குரோஷே பழகப் போறேன்.

‍- இமா க்றிஸ்

கீ செயின் சூப்ப்ரோ சூப்பர்

very good work.its very beautiful