குழந்தை கல்வி

ஹாய், என் மகன் யுகேஜி படிக்கிரார் படிப்பிற்காக நான் அவரை அழைத்தால் துக்கம்,வருத்தம் என்று நொன்டி சாக்கு சொல்கிறார் அதிலிருந்து அவரை மீட்பது எப்படி

ஹாய் என் மகனும் யூ.கே.ஜி தான். தினமும் சொல்வதை சொல்லும் நேரத்தில் செய்பவன் ஒருசில சமையங்களில் மட்டும் (தூக்க சமையங்கள்,விளையாட்டு)தவிர்ப்பது உண்டு.
அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். இதை முடித்தாயானால் நான் உன்னுடன் விளையாடுவேன்,அல்லது அவனுக்கு பிடித்த படம் காட்டுஏன் என்பதுபோல.
டைம் டேபிள்போல நேரத்திற்கு செவதில் நீங்க கண்டிப்புடன் இருங்கள்.
ஒருமுறை சொன்னால் சொன்னதுதான் என்பதுபோல கண்டிப்பு.(இது பல சமையங்களில் வேலை செய்துள்ளது,படிப்பு தவிர கூட)
அடுத்து இதுதா ரொம்ப முக்கியமாக்கும்.....எனக்கு இது தெரியலப்பா அம்மா ஸ்கூலுக்கே போகல இன்னைக்கு இதை உங்க மிஸ் எப்படி சொல்லிதந்தாங்க? எனக்கு புரிய வைப்பயான்னு கேளுங்க.
இப்ப நீ மிஸ் நான் ஸ்டூடண்டுன்னு சொல்லி விளையாட்டாக ஆரம்பிங்க,அப்படியே படிப்பில் மாறிடுவான்.....முடியலைன்னா அரைமணின்னா அரைமணி படி இல்லையா நான் ஹாஸ்டல் போயிடுவேன்,நீதா சமைக்கனும்னு சொல்லுங்க பயபுள்ள அடங்கிடுவான்.....
எல்லாமும் விட குட்டீஸ் ஸ்கூல்ல எவ்வளவு நேரம் ஒதுக்கறோம். அதிலும் கம்மியா ஒருநாளைக்கு அரமணி உக்காந்தா போதும்பா ஃபோர்ஸ் பண்ணாதீங்க,பிரியம் விட்டுடும் படிப்பிடமும் நம்மிடமும்.
கடைசியா ஒரு சின்ன டிப்ஸ், அவன் படிப்பதை ரெக்கார்டு பண்ணி போட்டு காட்டுங்க...இது நல்லா வேலை செய்யும்.....
நானெல்லாம் என் குட்டீஸ்கு நான் சொல்வதை செய்யனும்னா எப்படியெல்லாம் கதையடிப்பேன் தெரியுமா?இதுக்கெல்லாம் மூளை கவுட்டி கவுட்டியா பிரியணுமாக்கும்.....தாங்கலடா சாமீன்னு சொல்றது புரியுது இப்ப இதோட அப்பீட்டு. பின்னாடி டவுட்டுன்னா நா ரிப்பீட்டு.ஓகேவா.......:-)

Thankspa

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்