உளவியல் ரீதியான ஒரு பிரச்சனைக்கு அறுசுவை தோழிகளின் ஆலோசனை தேவை

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறேன். என் தம்பியின் நண்பர் ஒருவருக்கு (உறவினரும் கூட) உளவியல் ரீதியாக ஒர் பிரச்சனை. அவர் வாழ்க்கையை நேர் செய்யும் பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்கும் விஷயம் அல்ல எனவே அவர் பிரச்சனையை உங்களிடம் வைத்தால் அறுசுவை உறுப்பினர்களாக இருக்கும் தோழிகள் கூறும் யோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நானோ புதியவள். முன் பின் அறியாதவளுக்கு யோசனை கூற யாருமே யோசிப்பார்கள். எனக்கு சொல்வார்களா என்ற தயக்கம் இருக்கிறது? இது முள் மேல் விழுந்த சேலை கதை. யாருக்கும் பாதகம் இல்லாமல் கையாள வேண்டிய பிரச்சினை. என்ன செய்வது என்று தெரியாமல் உங்கள் ஆலோசனையை கேட்டு இங்கே இதை தெரிவிக்கின்றேன்.

என் தம்பியின் நண்பன் ஒருவன் மிகவும் தங்கமான, பொறுப்பான பையன். வீட்டிற்கு ஒரே பையன். சின்ன வயசிலிருந்து தனியே வளர்ந்ததால் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்ற ஏக்கம் அதிகம் உண்டு. தாழ்வு மனப்பான்மை குணம் கொண்டவர் அதிக POSSESSIVE அதிக SENSITIVE TYPE. யாருடனும் அதிகம் பழக மாட்டார். பள்ளி கல்லூரி காலத்தில் ஒரே ஒரு 8 வருட நண்பன் மட்டும் அதிக அன்பு காட்டியிருக்கார். அதை அவர் தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கறிவேப்பிலையை போல் எறிந்து விட்டதால் (ஒரு சில உறவினர்களும்) மனமுடைந்து விட்டார். நட்பு என்றாலே வெறுக்கும் அளவிற்கு.

இந்நிலையில் என் தம்பியின் திருமண சமயத்தில் எங்களுடன் மிக இனிமையாக பழகினார். அந்த சமயம் என் தம்பியும் அவன் மீது CARE எடுத்து எதையும் எதிர்பார்க்காத என் தம்பியின் தூய நட்பு அவர் மனதிற்கு ஆறுதலாக இருக்கவே என் தம்பியின் மீதும் என் குடும்பத்தின் மீதும் அதிக பற்றாகி விட்டான். அவனை என் தம்பி அவன் வேலை பார்க்கும் COMPANY ல் வேலை வாங்கி கொடுத்து கூடவே தங்க வைத்து கொண்டான். அங்குள்ள நண்பர்களுக்கு என் தம்பியின் நண்பன் அங்கு வந்தது பிடிக்கலை போல... என் தம்பி இல்லாத போது அவன் POSSIVE ஆக இருக்கான் என தெரிந்து அவனுக்கு TORCHER கொடுத்திருக்கிறார்கள். ROOM ஐ விட்டு போக சொல்லியிருக்கார்கள்.

இதை அறியாத என் தம்பியும் அவன் தாழ்வும் மனபான்மையை போக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் எல்லோரிடமும் பழக சொல்லியிருக்கிறான். ஆனால் அவனோ என் தம்பியை தவிர யாரிடமும் பழகவில்லையாம். அதுமட்டுமில்லாமல் அங்கு ஒரு நண்பர் என் தம்பியின் பதவியை இறக்கி விட்டு அதில் உள்ள வேலைகளை என் தம்பியை வைத்தே முடித்து விட்டு அவர்கள் பேர் வாங்கியிருக்கிறார்கள். என் தம்பி வேலையை முடிக்கலை என BOSS இடம் திட்டு வாங்கியிருக்கிறான். அது மட்டுமில்லாமல் எங்கு போனாலும் என் தம்பி தான் செலவாம். என் தம்பி மிகவும் இளகிய மனம் படைத்தவன். இதனால் என் தம்பியின் நண்பனை இடைஞ்சலாக நினைத்து விரட்ட முற்பட்டு torture கொடுத்திருக்கிறார்கள். அவன் தற்கொலை முயலும் அளவிற்கு.

அதன்பின் தான் பிரச்சினையின் ஆழத்தை என் தம்பி உணர்ந்து அவர்களை விட்டு கொஞ்சம் விலகியிருக்கான். இதை உணர்ந்த அவர்கள் என் தம்பிக்கும், அவனுக்கும் சண்டை மூட்ட தொடங்கியிருக்கின்றனர். இதனால் என் தம்பியின் நண்பனுக்கு, நம்மை பிரித்திடுவார்களோ, என் தம்பியும் அவர்கள் பேச்சை இவனை விலக்கிடுவானோ என்ற பயத்தினால் என் தம்பியின் உறுதியின் மீது சந்தேகம் வந்துவிட்டது. என் தம்பியும் சில நேரங்களில் அவர்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்தை மறந்து பழையபடி பேசுவது, உதவி செய்வது, வெளியே செல்வது ஏதும் இவனுக்கு பிடிக்காமல் போயிற்று. ஏனா என் தம்பி கூட இவன் தனியே வெளியே போவது பிடிக்கலை என வெளிப்படையாக சண்டையிட்டார்களாம். இதனால் OVER POSSESSIVE ஆகி தினம் தினம் என் தம்பியிடம் அவர்கள் சிரித்து பேசினாலோ கூட வெளியே போனாலோ கோபபடுகிறானாம்.

தனியே போனால் கூட அவர்கள் வெளியே சந்தித்து கொள்கிறார்கள் ஹோட்டல் போகிறார்களோ என சந்தேகப்பட்டு சண்டை போடுகிறாராம். என் தம்பி போனும் அவர்கள் போனும் பிஸியாக இருந்தால்கூட இருவர்களும் பேசுகிறார்களோ என சந்தேகபடுகிறாராம். மேலும் நீங்கள் எப்படியும் என்னை வெறுத்து ஒதுக்கிடுவீர்கள். அதனால் இன்றே அனுப்பிடுங்கள் பிரிஞ்சிடுவோம்னு அழுகிறாராம்... பாவம் என் தம்பி அவர் நண்பருக்காக நிறைய மாறியிருக்கிறார். இருந்தாலும் தினம் பிரச்சினை. என் தம்பிக்கு அவரை தனியே விட மனமில்லை அவ்ளோ நல்ல பையன் என் தம்பி கூடவும் இருக்கணும். அவனை இந்த பிரச்சினையிலிருந்து மீட்டு NORMAL ஆக மாற்றணும்.

இதனால் என் தம்பிக்கும் தினம் தினம் மன உளைச்சல் ஒரு சில சமயம் என் தம்பி வேறு வேலை தேடி போகலாம் னு முடிவெடுத்தாலும் அவர் அழுகிறாராம் அவர் என் தம்பிக்கு யார் உண்மையாக பழகுகிறார், யார் காரியத்திற்காக பழகுகிறார் என்று புரிய வைத்திருக்கிறார் என் தம்பியின் பணத்தை சுரண்டி தின்று கூட்டத்தை சுட்டி காட்டியிருக்கிறார் பணத்தை மதிக்காமல் பிடுங்கி தின்றும் கூட்டத்தினருக்கு தினம் தினம் செலவு செய்த என் தம்பிக்கு காசின் அருமையை உணர்த்தி அவர்களிடமிருந்து மீட்டிருக்கிறார்.

பிரச்சனை முழுவதும் அவரின் சந்தேக குணம், HIGH POSSESSIVENESS, SENSITIVE எதிலும் திருப்தி அடையாமை முன்கோபம், இதிலிருந்து மீட்டுவிட்டால் வெளிநாட்டு வாழ்க்கை இருவருக்கும் சிறப்பாக அமையும். PLEASE மீட்க யோசனை கூறி உதவுங்கள் இந்த வேலையையோ என் தம்பியையோ விட்டு சென்றால் அவர் மிகவும் கஷ்டப்படுவார் இவரை கறிவேப்பிலை போல் பயன்படுத்தி தூக்கியெறிந்த கூட்டத்தினர் முன்பு இவரை தலை நிமர்ந்து வாழ செய்ய வேண்டும் என்பது எனக்கும் என் தம்பிக்கும் ஆசை.

இவர் இப்படி SENSITIVE ஆக இருந்தால் எங்கள் ஆசை நிறைவேறாமல் போய்டுமோனு பயமாக இருக்கு பாவம் வாழ வேண்டிய பையன். நான் கேட்டேன் ஏன்பா இப்ப என் தம்பி உன்னைய மற்றவர்கள் மாதிரி கறிவேப்பிலையாக நினைத்து பழகல என்றேன். அதற்கு அவன் எனக்கே நான் பண்றது தப்புனு புரியுது அக்கா... வெளியே யாராவது என் தம்பியை வெளியே FRIEND கூட பார்த்தாக சொன்னாலோ இல்லை போன் பேசும் போது பக்கத்தில் அந்த நண்பர் குரல் கேட்டாலோ தன்னையும் மீறி போன் பண்ணி சண்டை போடுகிறேன் என்னை எப்படியாவது இதிலிருந்து மீட்டு கொடுங்கன்னு அழறான் இல்லாட்டா என் தம்பியை விட்டு போயிடுறேனு அழறான் பாவாமா இருக்கு. என்ன செய்யலாம் தோழிகளே. எனக்கு நல்ல ஆலோசனை சொல்லுங்க. ப்ளீஸ்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து
ஷிஃபாயா

ம்ம்.. இது போல ஒரு நட்பு என்னைக்குமே பிரெச்சனை தான். என்ன சொல்ல... முன்ன போனா முட்டும், பின்ன போனா ஒதைக்கும். கூடவே இருப்பது சிரமம். காலத்துக்கும் அது சாத்தியமில்லை. சிலர் இது போல உள்ளவங்க உங்க தம்பி கட்டிய மனைவியிடம் பழகினா கூட தாங்க மாட்டாங்க. எடுத்து சொல்லி இப்படி இருப்பது சரியில்லைன்னு சொல்லலாம்... ஆனால் அதையும் நாம் சொன்னா தாங்கும் மனம் வேண்டும். எதாவது மருத்துவ கவுன்சலிங் கொடுக்கலாம்... இது ஆண்களின் பொதுவான குனம் இல்லை... பெண்களை விட ஆண்கள் தான் அதிக நண்பர்களோடு எப்போதும் ஒற்றுமையா இருப்பாங்க, பொஸஸிவ்னஸ் ஆண்களுக்கு மனைவி மேல் தான் ஏற்படும், சக நண்பர்கள் மேல் ஏற்படுவது ரேர் கேஸ். அதை புரிய வைக்க டாக்டரை அனுகுவது நல்லது. உங்க தம்பி சொல்லி புரியவைக்க ட்ரை பண்ணி எக்குத்தப்பா எதாச்சும் நடந்துட கூடாது, தப்பான அர்த்தம் எடுக்க கூடாதில்லையா, அதனால் தான். ஏன்னா இது போல மனநிலை உள்ளவங்க, நாம் என்ன சொன்னாலும் அதை அவங்க எண்ணத்துக்கு ஏற்றபடி சாயம் பூசி தான் அர்த்தம் எடுப்பாங்க. சைக்காடிஸ்ட் பார்க்க சொல்லுவது சரின்னு எனக்கு தோனுது. இது என் கருத்து மட்டுமே... மற்ற தோழிகள் சொல்வதை கேளுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது கண்டிப்பாக‌ மணம் சம்பந்தபட்ட‌ பிரச்சனையே தவிர‌ குணம் சம்பந்தபட்ட‌ பிரச்சனை இல்லை..தனிமையே இதற்கு காரணம்.. அதனால் தான் தன்னிடம் பழகுபவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற‌ பயம்.. யாரையும் நம்பி நம் வாழ்க்கை இல்லை என்ற‌ வாழ்கையின் உண்மையை புரிந்து கொண்டால் போதும் இது சரி ஆகிவிடும்.. இதை நாம் சொல்லி கண்டிப்பாக‌ புரிய‌ வைக்க‌ முடியாது.. இது என் நண்பனின் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.. எனது நண்பனும் நீங்கள் சொன்ன‌ சூள்நிலையில் இருந்தார்.. கூட‌ இருந்த‌ நண்பர்க‌ளும் நாம் சொல்லி புரிய‌ வைக்கலாம் என்று நினைத்து அறிவும் சொன்னார்கள் ஆனால் அது பலன் இல்லை அவன் மன‌ அழுத்தம் காரணமாக‌ தற்கொலை செய்து கொண்டான்.. பாவம் அந்த‌ ரூம்மில் தங்கி இருந்த‌ அனைவரும் கோர்ட் கேஸ்ணூ அலையுறாங்க‌..நீங்க‌ சொல்றது விட‌ நல்ல‌ மன‌ தத்துவ‌ மருத்துவரிடம் காட்டுவது தான் நல்லது அவர்கள் கொடுக்கும் கவுன்சிலிங் நிச்சயம் பலன் அழிக்கும்...

என் பிரச்சனைக்கு ஆலோசனை அளித்த வனிதாக்கா மற்றும் அபி அக்காக்கு மனமார்ந்த நன்றி என் தம்பி மனைவி அந்த நண்பனுக்கும் உறவினர் அக்கா முறை மேலும் அந்த நண்பன் வீட்டிற்கு எதிர்வீடு அதனால் குடும்ப அளவில் எந்த PROBLEMUM இல்லை அவனிடம் எடுத்து சொன்னோம் இவ்ளோ POSSESIVENESS SENSITIVE சந்தேக குணம் கூடாது தவறு என்று அவனும் எனக்கே புரியுது அக்கா BUT என்னால் CONTROL பண்ண முடியலை அக்கா எப்படி தடுக்குறதுனும் புரியலை தடுக்க நீ என்ன சொன்னாலும் கேட்கிறேனு சொல்பவனிடம் நான் என்ன சொல்வது. அவன் வெளிநாட்டில் இருப்பதால் COUNSELLING கும் வழியில்லை கொக்கு சிக்கல் ஆயிட்டு என்ன பண்ணலாம்

உங்கள் தம்பியின் நண்பருக்கு இருப்பது வெறும் Possesiveness மட்டுமல்ல,Complex reaction.இதை அப்படியே விட்டு விடவும் முடியாது,Low self esteem என்றும் சொல்லலாம்.இது ஒரு வித Behaviour problem தான். தோழிகள் சொன்னது போன்று இதற்க்கு ""பாதுகாப்பான தீர்வு"" Counselling மட்டுமே.ஏனென்றால் அதற்க்கென்று பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இப்படி பட்டவர்களை பக்குவமாக கையாள முடியும்.உங்கள் தம்பியோ,அல்லது குடும்ப நபர்களோ எடுத்து சொல்லும் பட்சத்தில் பிரச்சனைகளை அதிகப் படுத்துவதோடு,பக்க விளைவுகளையும் உண்டு பண்ணும்.இவரின் இந்த குணத்தால் பாதிக்கப் படுவது உங்கள் தம்பியும் தான்.உங்கள் சகோதரனின் சுதந்திரமும் பறிக்கப் பட்டு ஒரு கட்டத்தில் உங்கள் தம்பிக்கே வெறுப்பு வந்து விடும்.
அதோடு நிற்ப்பதில்லை,அந்த நபரின் வருங்கால மனைவியின் நிலையை நினைத்துப் பாருங்கள்,பாவம் அந்தப் பெண்,இவரின் சந்தேக குணம் அவளின் வாழ்வையே கண்ணீராக்கி விட வாய்ப்புள்ளது.அவருக்கே தெரிகிறது அவர் செய்வது தவறு என்பது,ஆனால் அவருக்கு அதிலிருந்து வெளியே வர உதவி தேவைப் படுகிறது,ஆகவே ஊருக்கு வரும் போது அவரிடம் எடுத்துச்சொல்லி நல்ல psychologist கிட்ட அழைத்துச் செல்லுங்கள்.
அவரிடம் இது Psychologist தான்(உளவியல் நிபுணர்), Psychiatrist(மன நல மருத்துவர்)இல்லை என்பதை தெளிவாக புரிய வையுங்கள்.

மேலும் சில பதிவுகள்