ஹார்ட் ஸ்டாண்ட்

தேதி: March 3, 2014

5
Average: 4.2 (5 votes)

 

திக்கான அட்டை - 2
கத்தரிகோல்
க்ளூ
இரண்டு வகையான டிசைன்களில் கிஃப்ட் பேப்பர்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். அட்டையின் மேலே டிசைன் பேப்பர் ஒட்டிச் செய்வதால் நான் கார்ன் ஃப்ளேக்ஸ் அட்டையை எடுத்துள்ளேன். (திக்கான அட்டையாக இருந்தால் ஸ்ட்ராங்காக இருக்கும்).
அட்டையை இரண்டாக மடிக்கவும் (இதற்காக அளவு எதுவும் தேவையில்லை).
அட்டையின் நடுப்பகுதியில் படத்தில் உள்ளதுபோல இதய வடிவத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். இதே போல் மற்றொரு அட்டையிலும் இதய வடிவத்தை வரைந்து வெட்டி எடுக்கவும்.
படத்தில் உள்ளது போல் இரண்டு அட்டைகளிலும் அரை இன்ச் இடைவெளிவிட்டு கோடு வரைந்து கொள்ளவும். (ஒரு அட்டையில் அதன் வெளிப்புறத்திலிருந்து உள்நோக்கி அரை இன்ச் இடைவேளி விட்டு மேலும் கீழும் கோடு வரையவும். மற்றொரு அட்டையில் இதய வடிவத்திலிருந்து வெளிநோக்கி மேலும், கீழும் அரை இன்ச் இடைவேளி விட்டு கோடு வரையவும்).
பிறகு கோடு வரைந்த இடத்தை வெட்டிக்கொள்ளவும். அட்டைகளின் இரண்டு பக்கங்களிலும் டிசைன் கிஃப்ட் பேப்பரை ஒட்டவும்.
இரண்டு அட்டைகளையும் ஒன்றுக்குள் ஒன்றை விட்டு படத்தில் உள்ளது போல் இணைக்கவும். (வெட்டிய பகுதிகள் ஒன்றினுள் ஒன்றாக லாக் ஆகிவிடும்).
பேப்பரில் வெட்டிய இதய வடிவத்தை நூலில் கோர்த்து நடுவில் தொங்கவிட்டு மேலே ஒட்டிவிடலாம். காற்றில் அழகாகச் சுற்றிக் கொண்டே இருக்கும் இதயம். விருப்பமான புகைப்படத்தையும் நூலில் கோர்த்து நடுவில் தொங்கவிடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வெகு அழகாக செய்திருக்கிறீங்க... சூப்பர். :) செய்து பார்க்க வேண்டும், அவசியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகாக இருக்கு.. சுலபமாகவும் இருக்கு. நானும் செய்து பார்க்கிறேன்

கலை

இது ரொம்ப அழகா இருக்குங்க ரேணு

அன்பு ரேணு,
ரொம்ப‌ அழகா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப‌ அழகா இருக்கு ரேணு. அட்டையில‌ ஹார்ட் ஸ்டாண்ட் எப்படி இந்த‌ ஐடியாஸ்லாம் தோணுது. இன்னொவேட்டிவ் ஐடியா

முன்பு வேறு இன்டர்லாக்கிங் பொருட்கள் செய்திருக்கிறேன். இது அழகாக இருக்கிறது. புக்மார்க் செய்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்