அசத்தும் தேவா மேம்

அறுசுவையில் அழகுக்குறிப்புகள் சொல்லி அசத்தும் தேவா மேம் அவர்களுக்கு ,
என் இனிய பாராட்டுக்கள்.
எனக்கு கொஞ்சம் உங்கள் ஆலோசனை வேண்டும். நீண்ட நாள்களுக்கு முன்னே உங்களிடம் கேட்க நினைத்தேன் முடியவில்லை. எனவே என்னுடைய அத்தனை கேள்விகளளைஉம் இப்போது கோட்கிறேன். எனக்கு தலையில் பொடுகு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் நன்றாக இருந்த என் முடி வளர்ச்சி குறைந்து,ரொம்ப கொட்டுது. ரொம்ப டிரையாக இருப்பதாக எண்ணுகிறேன்.

இதற்காக மருத்துவரிடம் சென்று டிரிட்மென்ட் எடுதேன். 1.nizoral ஒரு நாள் 2.scalp t lotion மறுநாள் என்று மாற்றி மாற்றி உபயோகிக்க சொன்னார்கள். பன்படுத்தியதும் பொடுகு கண்ட்ரோல் ஆயிடுசு.ஆனால் எனக்கு தொடர்ந்து கெமிக்கல்ஸ் உபயோகிக்க பயந்து விட்டுவிடேன்.
இப்போது மீண்டும் பொடுகு பிரச்சினை தாங்க முடியலே. என் முடி வளராதது ஒரு பக்கம், மூக்கில் பிளேக் ஹெட்ஸ் கவனித்து பார்த்தால் தெரியும்.

இப்போது நீங்கள் எனக்கு பொடுகு,பிளேக் ஹெட்ஸ் நீங்க வழி சொல்லுங்கள்.

ஹெர்பல் முறைப்படி செய்வது நல்லது என்றால் அதையே சொல்லுங்கள்.
எனக்கு இயற்கை பொருள்கள் பன்படுதுவதுதான் பிடித்திருக்கு.

ஆலோவேரா தலைக்கு உபயோகிப்பது எப்படி.? வாரத்தில் எவ்வள்வு நாள் பயண்படுத்துவது.?

என் ஸ்கின் ஆயில் ஸ்கின்.நான் லோட்டஸ் ஆயில் கண்ட்ரோல் பேஸ் வாஷ் யூஸ் பண்ணுறேன்.

தலைக்கு விவிடி கோல்ட் கோகோனட் ஆயில் யூஸ் பண்றேன்.

அம்லா ஹேர் ஆயில் என்னிடம் இருக்கு.பயண்படுத்தவா வேண்டாமா?

உங்களின் பதிலை மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்காத்திருக்கேன்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதில் தரவும்.

நான் இது தான் முதல் முதை பேசுறேன். எப்படி இருக்கீங்க. உங்க பையன் எப்படி இருக்கான். ஆசியா மேடம் கேட்ட கேள்வி தான் நானும் கேட்கனும் அதான் இங்க வந்து கேட்குறேன். எனக்கு ப்ளாக் ஹெட்ஸ் இருக்கு நோஸ்ல அத எப்படி ரிமூவ் பண்றது சிலர் பேஸியல் 3 அல்லது 4 சிட்டிங்க்ல போய்டும்னு சொல்றாங்க. அப்ப்டி பண்ணலாமா இல்ல வேற ஏதாவது நானே செய்துக்கலாமா? அதுவும் ஹெர்பல் ப்ராடெக்டா இருந்தா பரவாயில்லையின்னு நினைக்கிறேன். நான் சென்னையில் இருக்கிறேன் அங்க கிடைக்கிற ப்ராடக்ட் சொல்லுங்க ப்ளீஸ். நீங்க பிஸியா இருக்கீங்க போல ஓய்வா இருக்கும் போது வந்து பதில் கொடுங்க. நன்றி மேடம்.

ஆசியா,காயத்திரி நலமா இருக்கிங்களா?எனக்கும் உங்களை மாதிரி பிரச்சைனை இருந்தது.நான் கொடுப்பவை எல்லாம் என் அனுபவத்தில் கண்டவை.இப்போழுது எனக்கு எந்த பிரச்சைனையும் இல்லை.நீங்களும் முயற்சி செய்து பாருங்க.
1.பாலுடன் கடலைமாவைக் குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம் ஊறிய பின் நன்கு தேய்த்து கழுவி வர பிளாக் ஹெட்ஸ் மறையும்.
2.கெட்டித்தயிரில் 1 ஸ்பூன் மஞ்சள் பொட் கலந்து முகத்தில் தடவி 10நிமிடம் ஊறிய பின் பாசிப்பருப்பு மாவினால் தேய்த்துக் கழுவவும்.தினம் 1 முறை தொடர்ந்து செய்தால் முகம் மென்மையாகிப் பள பளக்கும்,பரு,பிளாக் ஹெட்ஸ் வராது.
3.முல்தானிமெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் மாதிரி குழைத்து முகம் முழுக்க தடவவும்.இந்த முல்தானிமெட்டி உடலுக்கு குளிர்ச்சி தர்றதோடு முகத்துல இருக்கற பிளாக் ஹெட்ஸ் நீக்கி முகம் நிறம் இழக்காம பாதுகாக்கும்.
4.சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவி 10 நிமிஷம் பிறகு கழுவினால் முகத்திலுள்ள பிளாக் ஹெட்ஸ் மறையும்.

ஆலோவேரா தலைக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.வாரத்தில் 3 நாட்கள் பயன்படுத்தலாம்.நான் இப்படித்தான் செய்வேன் ஆசியா.முடியும் நன்கு வளரும்.நான் டாபர் வாட்டிக ஹேர் ஆயில் யூஸ் பண்றேன்.
பொடுகுக்கு:
1 .துருவிய தேங்காய்- 1 சிரிய கப்,கசகசா - 1 டீஸ்பூன் இரண்டையும் அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைத்து ஷாம்பூ(அ)சீயக்காய் போட்டு அலசலாம்.
2.வாரம் 2 தடவை முட்டையோட வெள்ளை கருவை தலையில் தேய்ச்சு,15 நிமிஷம் ஊற வைத்து ஷாம்பூ போட்டு குளித்தால் பொடுகு வராது,முடியும் பளபளப்பாக இருக்கும்.
3.கரிசலாங்கண்ணி கீரை,முட்டையின் வெள்ளைக்கரு,எலுமிச்சை சாரு - 1 டேபிள்ஸ்பூன்,தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,துளசி,வேப்பிலை,தேயிலை நீர் - 2 டேபிள்ஸ்பூன் இவற்றை தலைக்கு பேக் போட்டால் பொடுகு தொல்லை நீங்கி ,முடி வளரும்.
இந்த பொடுகு தைலம் எனக்கு ஒரு பெரியவங்க சொன்னாங்க.இதை பயன்படுத்தியதில் இருந்து பொடுகு இல்லை.
1/2லி- பசும்பால்,1/2லி - தே.எண்ணெய்,10 மில்லி - துளசி இலைச்சாரு,25 மில்லி செம்பருத்தி இலைச்சாரு,10 மில்லி வேப்பிலைச்சாரு,25 மில்லி கறிவேப்பில்லைச்சாரு,10 மில்லி மல்லிகைப்பூச்சாரு எடுத்து கொள்ள்வும்.இந்த சாருகளுடன், காய்ச்சிய பால்,தே.எண்ணெய் சேர்த்து இளம் சூடாக காய்ச்சவும்,பால் நுரை வற்றிய பிறகு ஆற வைத்து வடிகட்டினால் எண்ணெய் தனியாக வரும்.7 நாட்கள் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு போய்விடும்.
இப்போ எனக்கு எந்த பிரச்சையும் இல்லை.நான் ஹெட்&சோல்டர் ஷாம்ப்பூ யூஸ் பண்ரேன்.நீங்கள் இருவரும் இந்தியாவில் இருப்பதால் இந்த பொருட்கள் எல்லாம் ஈசியாக கிடைக்கும்.முயற்சி செய்து பாருங்க.

ஹாய் Asia Fazeela, எப்படி இருக்கீங்க? என்ன இது இப்படி தலைப்பை போட்டு என்னை ரொம்ப சிரிக்க வைக்கறீங்க. என்னை இப்படிலாம் வெக்கப்பட வைக்காதீங்க. மேடம்லாம் வேணாம். தேவான்னே சொல்லுங்க.

நீங்க கேட்ட கேள்விகளுக்கான பதிலை இங்கே தருகிறேன். முடி வளர்ச்சிக்கு, பொடுகுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனது கீழ்க்கண்ட பதிவில் சொல்லி இருக்கிறேன். பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/3956

பொடுகுக்கு வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறை எடுத்து நன்றாக தலை வேர்க்கால்களில் படுமாறு தேயுங்கள். எரிச்சல் இருக்கும். ஆனாலும் அதன் பலனைப் பார்த்தால் எரிச்சலைப் பொறுத்துக் கொள்ளலாம். நன்றாக ஊற வைத்து (30-45 நிமிஷம் போல) பிறகு தலையை அலசுங்கள். அதிக வீரியமுள்ள ஷாம்பூக்கள் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது ஹெட் அண்ட் ஷோல்டர் போன்ற பிராண்டுகளில் தினமும் உபயோகிக்கும் ஆண்டி டாண்ட்ரப் ஷாம்பூக்கள் மிகவும் மைல்டாக உள்ளவை இருக்கின்றன. அதனை உபயோகிக்கலாம். வாரம் ஒரு முறை மட்டும் போதும். பொடுகு ட்ரீட்மெண்ட் எடுத்தும் ஏன் போகவில்லை என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. பொடுகு இருக்கிறது என்று ட்ரீட்மெண்ட் எடுத்தால் , தலை குளிக்கும் அன்றே சீப்பு, போர்வை, தலையணை உறை,டவல் என்று அனைத்தும் புதிதாக அல்லது துவைத்து உபயோகப்படுத்துகள். நன்றாக ஷாம்பூ போட்டுக் குளித்து பொடுகை போக்கிய பிறகு, துவைக்காத தலையணை உறையில் படுத்தாலோ, சீப்பை கழுவாமல் உபயோகித்தாலோ அதில் ஏற்கனவே படிந்திருக்கும் பொடுகு மீண்டும் கூந்தலில் பரவ வாய்ப்புள்ளது. இப்படி நாம் சரியாக கவனிக்காமல் விட்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட மீண்டும் பொடுகு வர காரணம். (விவிடியிலேயே)தேங்காய் எண்ணெயில் சூடம் போட்டு ஊறவைத்து( ஒரு லிட்டருக்கு 12 என்ற கணக்கில்) அந்த எண்ணெயை தடவி வந்தால் பொடுகு வராது. எலுமிச்சைக்கு பதில் தயிரில் மிளகு சேர்த்து அரைத்து தலையில் ஊறவைத்து கழுவுவார்கள். அதுவும் நல்ல பலன் தரும். ஆனால் எலுமிச்சை பெஸ்ட். பொடுகு நீங்கும் வரை இப்படி எலுமிச்சையை வாரம் ஒரு முறை உபயோகிக்கலாம். ஷாம்பூவை பொடுகு சரியான பிறகும்கூட வாரம் ஒரு முறை போட்டால் பொடுகு வராது. மண்டை ( Scalp) அதிகமாக வறண்டு போவதாலும் பொடுகு வரும். எனவே தலை அதிகம் வறண்டு விடாமலும், அதிக அழுக்கு சேராமலும் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் (Depression) கூட பொடுகு வர காரணம்.

தலைக்கு விவிடி ஆயிலையே உபயோகப்படுத்துங்கள். ஆம்லா ஆயில் இருக்கின்றதே என்பதற்காக எப்போதும் உபயோகிப்பதை மாற்றாதீர்கள். முகத்திற்கு நீங்கள் உபயோகிக்கும் பேஸ் வாஷ் ஒத்துக் கொள்கிறது என்றால் அதனையே தொடருங்கள். எண்ணெய்ப் பசையால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளி பிரச்சனை என்றால் மட்டும் Clearsil Face wash உபயோகியுங்கள்.

முகத்தில் ஏற்கனவே உள்ள பிளாக் ஹெட்ஸை பேஷியல் செய்துதான் நீக்க வேண்டும். க்ரீம் போடுவதால் முழுதுமாக நீங்காது. ஸ்க்ரப் உபயோகித்தால் மேலே உள்ள சொர சொரப்பு போகும். ஏற்கனவே உள்ள பிளாக் ஹெட்ஸ் மூக்கில் நன்றாக ஆழப் படிந்திருக்கும். அதனை எளிதாக நீக்க முகத்தை நீராவியில் நன்றாக காட்டி, பிறகு மூக்கில் இருக்கும் பிளாக் ஹெட்ஸை அதற்கென்று உள்ள ரிமூவர்( பிளக்கர் போன்று இருக்கும். அல்லது சுத்தமான டீ ஸ்பூனின் மழுங்கிய கைப்பிடி பகுதியைக் கொண்டு) கொண்டு அழுத்தி எடுக்கலாம். எனது கீழ்க்கண்ட பதிவில் இதனை விரிவாக கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/forum/no/6566

பிளாக் ஸ்ட்ரிப் கூட உபயோகிக்கலாம். ஆனாலும் அவையெல்லாம் ப்யூட்டி ரொட்டீன் ( Beauty Routine) வகையை சேர்ந்தவை. ஏற்கனவே பிளாக் ஹெட்ஸை முறைப்படி பேஷியல் மூலம் நீக்கி விட்டு பிறகு மாதம் ஒரு முறை வராமல் காப்பதறகும், லேசாக வந்தவற்றை எடுப்பதற்கும் உபயோகிக்க ஏற்றவை. பிளாக் ஹெட்ஸ் ரிமூவல் க்ரீம்களும் அந்த வகையை சேர்ந்தவைதான். முதல் முறை உபயோகிக்க சிறந்தது என்று சொல்ல மாட்டேன். முதல் முறையாக பிளாக் ஹெட்ஸ் நீக்க பேஷியல் செய்யுங்கள். பிறகு வராமல் காக்க இது போன்ற க்ரீம்கள், பேக்குகள், ஸ்ட்ரிப்ஸை உபயோகியுங்கள்.

ஹரி காயத்திரி, உங்களுக்கும் இந்த தகவல்கள் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தேவா.........வாவ் எப்படிங்க உங்களால இவ்வளவு குறிப்பு தர முடியுது.

உங்கள் பதில் பார்த்ததும் பதில் தர எண்ணம், ஆனால் நிறைய எழுத நேரம் இல்லைபா.

தேவா நீஙகள் சொல்லுவதுப்போல் நான் தினமும் ஒவ்வொரு முறை தலைப்பின்னியதும் சீப்பை நன்றாக கழுவிவிடுவேன்.தலைக்கு pantene சேம்பு யூஸ் பண்ணுறேன்

என் பொருள்களும் சுத்தமாக தான் வைதிருக்கேன்.
நீங்க சொன்ன முறை ட்ரைபண்றேன்.உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி.

தேவா இவ்வள்வு குறிப்புகள் தருகின்ற நீங்கள் ரொம்ப அனுபவசாலியாக இருக்கனுமே,அதான் பெரியவங்க நினைத்து மேம் சொன்னேன்.

உங்களை பற்றி பயோடேட்டா திரெட்டில் போடுங்கள் நான் அறிந்துக்கொள்வேன்.

அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம், கால்களில் வரும் வெடிப்பு நிரந்தரமாக நீங்க என்ன செய்யலாம். நான் வீட்டில் இருக்கும் போதும் செருப்பு அணிகிறேன்.
திடீரென்று சில நேரங்களில் வலி அதிகமாக இருக்கு.அப்போது moyzen,persol ஜெல் யூஸ் பண்ணுகிறேன்.,

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.
நீங்கள் பிரியாக இருக்கும் போது பதிலளிக்கவும்

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

ஹாய் மேனு, நலமா? உங்களுக்கு உடனே பதிவு போட முடியலமா...

உங்க டிப்ஸ் நல்லா இருக்கு, நான் டிரை பண்றேன்.

முல்தானி மெட்டி எல்லா ஸ்கின்கும் சரிவருமா. எனக்கு தெரிந்த டாக்டர் மஞ்சள்,சந்தனம் யூஸ்செய்தால் நிறம் பாதிக்கும் என்றார். அதனால் தான் கேட்கிறேன்.

ஆலோவேரா குறிப்பு தந்ததுக்கும் ரொம்ப நன்றிபா. நான் கன்டிப்பாக டிரை பண்றேன்.
.
ASIMS
PEACE BE ON EARTH

hhijk

நலமா?நான் நலம்.உங்களுக்கு ஆயில் ஸ்கின் என்பதால் தாரளமாக முல்தானி மெட்டி போடலாம்.
1.முல்தானி மேட்டியை பன்னீரில் குழைத்து போட்டால் சாதரண சருமம் போல் இருக்கும்.
பாலில் குங்குமப்பூவை கலந்து முகத்தில் தடவி நல்லா மசாஜ் பண்ணால் முகம் பளபளபாகும்.
காலில் வெடிப்புக்கு ,பேன்ஸி ஸ்டோர்களில் காலில் தேய்க்கும் ஸ்க்ரப்பர் என்று கேளுங்க அது ஒரு ஸ்டோன் மாதிரி இருக்கும்,குளிக்கும் போது அந்த ஸ்டோன் போட்டு தேய்த்தால் பாதத்த்ல் இருக்கும் தேவையில்லாத தோல் வந்துவிடும்.பாதமும் பொலிவாக இருக்கும்.
1.மாமரப்பிசினை தே.எண்ணெயில் ஊற வைத்து வெடிப்புகளில் பூசினால் விரைவில் மறையும்.
2.மஞ்சளும் தடவலாம்.
3. இரவில் படுப்பதற்க்கு முன் நல்லெண்ணெய் வெடிப்புகளில் தேய்த்து படுத்தால் வலி இருக்காது.
இவை எனக்கு தெரிந்தவை.டிரை பண்ணி பாருங்க.

ஹாய் Asia, எப்படி இருக்கீங்க? பயோடேட்டா பகுதியில் நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன்.

கால் எப்போதும் வெடிப்பு வராமல் நன்றாக இருக்க காலில் உள்ள ஈரத்தன்மை போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தில் அதிக நேஎரம் நிற்பவர்களுக்குக் கூட வெடிப்பு வருகிறதே என்றால் அவர்கள் அழுக்கு நிறைந்த நீரில் நிற்பதும் ஒரு காராணம். டிடெர்ஜெண்ட் நிறைந்த தண்ணீர் துணி துவைக்கும்போதும், பாத்திரம் கழுவும் போது, தோட்ட வேலை செய்யும்போதும் காலில் ஏற்கனவே உள்ள வெடிப்புகளின் வழியே சென்று கிருமியை ஏற்படுத்தி வலி வர காரணமாகிறது. அதிகமாக வறண்டு விடுவதால் வெடிப்புகள் ஏற்பட்டு அதில் அழுக்கும் புகுந்துக் கொள்ள வலி ஏற்படும். முதலில் நல்ல ப்யூட்டீஷியனிடம் சென்று Pedicure செய்துக் கொள்ளுங்கள். முடிந்தால் Spa Pedicure செய்துக் கொள்ளுங்கள். காலுக்கும் இதமாக இருக்கும். டயர்ட்னெஸ்சும் போய்விடும். வீட்டிலேயே சுலபமாக செய்துக் கொள்ளும் முறை ஒன்று இங்கே சொல்கிறேன். இது Complete Pedicure இல்லை. இதனை வாரம் ஒரு முறையோ 15 நாளைக்கு ஒரு முறையோ செய்துக் கொள்ளலாம். ரொம்ப டீடெய்லாக சொல்ல வேண்டுமென்றால் படம் இருந்தால்தான் முடியும். அதனால்தான் சுலபமான முறை மட்டும் சொல்கிறேன். அதோடு இனி வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதனையும் சொல்கிறேன்.

முதலில் ஒரு டப்பில் ( இரண்டு பாதங்களையும் சமமாக வைக்கும் அளவு அகலமுள்ளதாக எடுத்துக் கொள்ளுங்கள்) கால் மூழ்கும் அளவு இதமான சூடுள்ள நீரை ஊற்றுங்கள். கடைகளில் Foot Spa Set என்று கிடைக்கும். அதில் Foot Wash Liquid ஐ நீரில் ஊற்றி கலக்குங்கள். அப்படி Foot Spa Set கிடைக்காவிட்டால் உங்களிடம் உள்ள மைல்ட் ஷாம்பூ ஒரு மூடி அளவு ஊற்றி கலக்குங்கள். கால்களை 15 நிமிடம் அதனுள் ஊறவிடுங்கள்.

கடைகளில் Foot Scrubber என்று கிடைக்கும். மெல்லிய சொர சொரப்பான உலோகத்தகடு பொருத்தப்பட்டு நீண்ட பிளாஸ்டிக் கைப்படியுடன் இருக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இதனோடு Corn Blade என்ற ஒன்று கிடைக்கும். அதனையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். Foot Scrubber க்குப் பதிலாக Pumice Stone ம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் Foot Scrubber உபயோகிப்பது எளிது. பலனும் நன்றாக இருக்கும். இப்போது ஊறின காலின் உட்புற பாதத்தை ஸ்க்ரப்பர் கொண்டு மெதுவாக தேயுங்கள். எங்கெல்லாம் கடினமாக வறண்டு இருக்கிறதோ, அழுக்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மேலிருந்து கீழாகவோ, வட்ட வடிவிலோ தேய்த்து விடுங்கள். இப்போது காலில் உள்ள இறந்த செல்கள், டிஷ்யூக்ள் நீங்கி கால் பளிச்சென்று இருக்கும். மிகவும் கடினமான தோல் உள்ள்வர்கள், அதிக சொர சொரப்பு உள்ளவர்கள் Corn Blade கொண்டு கவனமாக அந்த தோலை சீவி எடுங்கள். சிப்ஸ் கட்டை உபயோகிப்பது போல உள்ளங்காலில் உபயோகிக்க வேண்டும். இதுவும் பார்ப்பதற்கு சிப்ஸ் சீவுவதைப் போன்று ஆனால் மிகவும் சின்னதாக கைப்பிடியுடன் இருக்கும். எக்காரணம் கொண்டும் கையிலோ, கால் மேல் புறத்திலோ தோல் கடினமாக இருக்கிறதே என்று உபயோகிக்காதீர்கள். வெட்டி விடும்.

மறு காலிலும் இதே போல் செய்துவிட்டு, காலை நன்றாகத் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசிங் லோஷன் போட்டு நன்ராக தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். கால் மிருதுவாக இருக்கும். இவ்வளவேதான் சிம்பிள் பெடிக்யூர். கால் நகங்களை வெட்டுவதானால் பெடிக்யூர் செய்வதற்கு முன்பு வெட்டி விடுங்கள்.

கால்களுக்கென்று உபயோகிக்க மாய்ஸ்சுரைசிங் க்ரீம் கிடைக்கின்றன. இல்லாவிடில் Himalaya Foot Cream போல எதாவது ஒரு Foot Cream வாங்கி அதனை தினமும் இரவு படுக்கும் முன் கால் முழுதும் போட்டுக் கொண்டு கால்களுக்கு சாக்ஸ் மாட்டி விடுங்கள். கால்களுக்கு இப்படி க்ரீம் தடவி போடவென்றே பிரத்யேகமான சாக்ஸ் வெளிநாடுகளில் சுலபமாக கிடைக்கும். கால்கள் இரவு முழுதும் க்ரீமில் நன்றாக இருக்கும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கால் வெடிப்பு குணமாகும். செய்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். நிச்சயம் களைப்பெல்லாம் போய் ரிலாக்ஸ்டாக இருக்கும்.

ஹாய் தேவா
அறுசுவையில் உங்களது அழகு குறிப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அனைத்தும் அருமை. நன்றி தேவா. எனக்கு சில டவுட்ஸ் இருக்கு.

நான் முகத்திற்கு ஜான்சன் & ஜான்சன் பேபி சோப் யூஸ் பண்றேன். என் முகத்தில் மூக்கை சுற்றியுள்ள பகுதி மட்டும் கொஞ்சம் ஆயிலா இருக்கு. மற்ற இடம்லா நார்மலா இருக்கு. ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல சோப் யூஸ் பண்ணிணா எல்லா இடமுமே ரொம்ப ட்ரை ஆகுது. மூக்கில் கூட தோல் உரியுது. ட்ரை ஆயிட்டுன்னு மாயிஸ்ட்ரைசிங் கீரிம் போட்டா மூக்கு & தாடை பகுதியில குட்டி குட்டி வெள்ளை கலர்ல கட்டி மாதிரி வருது. கலரும் கம்மியான மாதிரி தெரியுது. அப்புறம் தலைக்கு எண்ணெய் வைத்தால் கூட முகத்தில் எண்ணெய் வழிந்து கலர் கம்மியான மாதிரி தெரியுது
எனக்கு என்ன மாதிரியான ஸ்கின் டைப். டெய்லி யூஸ்க்கு என்ன சோப் போடலாம். டெய்லி யூஸ்க்கு என்ன க்ரிம் போடலாம். என் கழுத்து முகத்தின் நிறத்தை விட சற்று கருப்பாக இருக்கு. அதற்கு என்ன செய்யலாம். தோலின் நிறம் கூட (Face & Body) என்ன க்ரிம் போடலாம். நீங்க ப்ரீயா இருக்கும் போது பதில் தாங்க.

நன்றி

ஹாலின்.

ஹாய் மேனு, உங்கள் பதிவுக்கு நன்றிபா.

நல்லெண்ணெய் பயன்படுத்த்ப்போகிறேன்.

ஆன் லைனில் உங்களைப்பார்க்க முடியவில்லை.நல்லா ரெஸ்ட் எடுங்க.
முடியும் போது மெசெஜ் பண்ணுங்க.

ASIMS
PEACE BE ON EARTH

hhijk

ஹாய்ய்...தேவா,
நான் சூப்பரா இருக்கேன்.நீங்க ,உங்க பையன் நலமா?நீங்க ஆபிஸ் செல்றீங்களா?

தேவா எனக்காக இவ்வளவு நீண்ட விளக்கமளித்ததற்க்கு ரொம்ப நன்றிபா.

pedicure நிச்சயம் முடியும் போது பண்ணிக்கொள்கிறேன்.
நான் lotus cocoa butter மாய்ச்ச்ர்ரைசிங் லோசன் பயன்படுத்துக்கிறேன்.

எனக்கு காலில் அழுக்கு கிடையாது.
தோல் வெடிப்பு மட்டும் உள்ளது .எனவே
Foot Scrubber ,Pumice Stone இதில் எது உபயோகிக்க என்று சொல்லவும்.ஹாங்காங்கில் என்றால் எந்த பிராண்ட் வாங்களாம்.

ASIMS
PEACE BE ON EARTH

hhijk

மேலும் சில பதிவுகள்