2.5 வருடங்களுக்கு பின் நல்ல‌ செய்தி

அன்பு தோழிகளே,

எனக்கு 2 வருடஙளுக்கு முன் அபார்ஷன் ஆனது அதற்குப் பின் எனக்கு கரு தங்கவெ இல்லை, எனக்கு முறையற்ற‌ மாதவிலக்கு (Irregular periods)தான், ஒவ்வொரு முறையும் 40 நாளில் HPT செய்து Negative பின் 60ஆவது நாளில் டாக்டரிடம் சென்று மாதவிலக்கு ஆக‌ மாத்திரை வாங்கி சாப்பிடுவேன்.2 வருடமாக‌ இப்படியே தான் வாழ்க்கையே சூனியமாக‌ தெரிந்தது.நீர் கட்டிக்கு,தைராய்டுக்கு, என‌ எல்லா டிரீட்மென்டும் எடுத்தேன், கருகுழாய் அடைப்பு இருக்க‌ என்றும் பார்த்தோம் அதும் இல்லை, கடைசியாக‌ டாக்டர் IUI செய்ய‌ வேண்டும் என்று நவம்பர் மாதம் மாதவிலக்கு ஆக‌ மாத்திரை தந்தார், மாத்திரை சப்பிட்டேன் ஆனால் ஏனோ IUI செய்ய‌ மனம் ஒத்துக்கொள்ள‌ வில்லை. டிசம் 2 மாதவிலக்கு ஆனது, ஃபோலிக் ஆசிட் மாத்திரை மற்றும் பி காம்பிலக்ஸ் டானிக் தொடந்து எடுத்துக்கொன்டேன் 45 ஆவது நாளில் HPT செய்தோம் Negaitive வந்தது, மீண்டும் 60 ஆவது நாளிள் HPT செய்தோம் Negative தான் வந்தது, மனம் நொந்து ஒருவரின் ஆலொசனையின் பேரில் திருக்கருகாவூர் திருக்கோவிலுக்கு சென்று வந்தோம்.எதேட்சயாக‌ 80ஆவது நாளில் HPT செய்தேன் அற்புதம் நடந்தது போல் Positive வந்தது ‍‍‍ இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் வாழ்க்கை நிறைவடைந்த்து போல் உள்ளது

இதை உங்க‌ளுடன் பகிர‌ வேண்டும் போல் இருந்த்து ,

முறையற்ற‌ மாதவிலக்கு உள்ள‌ தோழிகளே தயவு செய்து என் போல் அவசரம் படாதீர்கள் ‍ நன்றி

Congrates.....

No pains,No gains

ANANTHAGOWRI.G

நன்றி,, வெயிட் குறைக்க தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன், உங்க வாா்த்தை கண்ணீா் வரவைத்து விட்டது, நம்பிக்கையோட ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன், ஜிம் எல்லாம் போகல டெய்லி 4 கி,மீ வாக்கிங் போறேன், 1 மணி நேரம் நானே எக்சசைஸ் செய்யறேன், சாப்பாட கன்டெ்ரோல் சாப்பிடறேன், 3 மாசத்துக்கு ஒருடைம் தான் டைம் ஆகறேன், இதுவே எனக்கு பொிய டெனசனா இருக்கு, இதனால டெய்லி அழறேன், அம்மா இல்லாத வலி இப்பதான் ரொம்ப அதிகமா இருக்கு,

வாழ்த்துக்கள் !

vaalthukal frd... enakum remba santhosamaga irukirathu

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்