எனக்கு பொக்கிஷம்!!! உங்களுக்கு???

"குப்பைய சேர்க்காதடி"

எங்க வீட்ல என் கிட்ட எல்லாரும் சொல்ற ஒரே டயலாக் குப்பைய சேர்க்காதடி.........
நான் ஒன்னும் குப்பைய சேர்க்கலங்க... வீட்ல நல்லா இருக்க பொருள தூக்கி போட மனசு வராம எதாவது செய்யலாம் செய்யலாம்ன்னே சேர்ந்தி வைப்பேன், ஆனா செய்யறதுக்கு முன்னாடியே நிறையா தூக்கியும் போடுவேன்ங்கறது தனி கதை...
இந்த ஊர்ல தேவையில்லைன்னு தூக்கி போடற பால் கேன், தயிர் பாக்ஸ், செய்தி தாள், இன்னும் நிறையா இருக்கு அடுக்கிகிட்டே போகலாம். இதெல்லாம் நம்மூர் பழையகடைல போட்டா 2 , 3 கல்யாணத்திற்க்கு சூப்பர சீர் வரிசை செய்திடலாம்...அம்புட்டு பொருள்கள் தூக்கி குப்பைல போடறேன்...
கிராப்ட்ன்னு ஒன்னும் செய்ய ஆரம்பிச்சதும், எல்லாமே தேவையான பொருளா தெரிஞ்சது, அதானலா தூக்கிபோட மனசு வராம நிறையா சேர்த்துவேன் எதாவது செய்யலாம்ன்னு அப்பறம் இடத்தை அடைக்குதுன்னு தூக்கியும் போடுவேன்..ஒன்னுமே செய்யாம...
இங்க செய்தி தாள் ஒரு நாளுக்கு அரைகிலோ பேப்பர் வரும், செய்திய விட விளம்பரம் தான் அதிகமா இருக்கும்... பேப்பரை மொத்தமா தூக்கி போட மனசே வராது.. இருந்தாலும் என்ன செய்யன்னு தூக்கி போட எடுத்தா எதாவது செய்யலாம்ன்னு தோனும், இத்தனை நாள் சும்மா தானே இருந்தது அப்ப செய்ய வேண்டியது தானேன்னு என்னையே திட்டிக்குவேன்,
பால்கேன்னும் அதே தான்.. கேனுக்கு வித்தியாசமான ஐடியா கிடைக்காம மூடிய சேர்த்துனேன், அதுவும் இப்ப என்ன முறைக்குது...ஏன்னா அதுக்கும் ஐடியா கிடைக்கல:)....பீச்சுக்கு போனா கல்லு மண்ணு எல்லாம் எடுத்து வந்து காய வைச்சு அது ஒரு பாட்டில் வீட்ல இருக்கு, என்னவர் கிண்டல் பன்னுவார்,உப்புமாவுக்கு ரவை பத்துலைன்னா மிக்ஸ் பன்னவா இந்த மண்ணு வைச்சுருக்கன்னு,
அதுமட்டும் இல்லாம, சோப்பு, மருந்து, மாத்திர இதெல்லாம் இருக்க குட்டி அட்டை பாக்ஸ் எதையும் தூக்கி போட மனசு வராது:) அதுவும் ஒரு பக்கம் பாதுகாக்கப்படுது....

பிட்டு பேப்பர், ஸ்கூல் புக்ஸ் அட்டை போடும் போது வெட்டி போடும் ப்ரவுன் சீட்...பழையா புக்ஸ் இப்படியும் கொஞ்சம் சேர்த்திருக்கேன், நெயில் பாலிஷ் கைக்கு வைச்சதை விட கிராப்ட்டுக்கு யூஸ் பன்னினதுதான் அதிகம்.
ஊர்ல காடுக்குள்ள சுத்தி கோழி இறக்கையெல்லாம் பொறுக்கி இருக்கேன்:)இதையெல்லாம் இங்க இருந்து துபாய் கொண்டு போய் என்னடி பண்ண போறன்னு வீட்ல கிண்டல் என்னை சுத்தி இருந்ததும் உண்டு.....
வாழ்த்து அட்டை செய்த போதெல்லாம் மேலே அழகுக்கு ஒட்ட டிசைன் பேப்பர் கிடைத்ததில்லை,( எனக்கு கடையில தேடி வாங்க தெரியல).அப்ப ஊரில் நிறைய கல்யாண பத்திரிக்கை கையில் கிடைத்தது, அதையெல்லாம் சேர்த்து எடுத்து வந்தேன், ஆனால் இதை மட்டும் உபயோகபடுத்தியதே இல்லை, பத்திரிக்கை அல்லாவா,மரியாதையின் காரணமாய் கட் பண்ண மனசு ஏத்துக்கல, ஆனாலும் சேர்த்துவதை நிறுத்தல:)

துணி மாட்டும் வயர் ஹாங்கர், புது டிரெஸ் உள்ளே இருக்கும் அட்டை, பஞ்சு,தீர்ந்து போன டிஷ்சு பாக்ஸ், அழகான சாக்லெட் பேப்பர் இப்படி இன்னும் எத்தனைய சொல்ல எல்லாமே பொக்கிஷமா இருக்கு, எதுக்காச்சு ஆகும், ஏதாவது செய்யலாம் இப்படின்னே நிறையா நான் கையில எடுப்பேனான்னு காத்து கிடக்கு,
நிறையா யோசிப்பேன் இதை எப்படி பன்னுனா நல்லா இருக்கும், அது ரீ சைக்கிள் கிராப்ட்ன்னு தெரிய கூடாது, வித்தியாசமா இருக்கனும் அப்படின்னு யோசிச்சு சிலது பன்னிருக்கேன், ஆனா அதெல்லாம் இப்ப வரல அடுத்த பதிவில் வருவாங்க, இல்லைன்னா கைவினை பகுதியில் வருவாங்க......
எந்த தொந்தரவும் இல்லாம 24 மணி நேரம் கைவேலை பார்க்க சுதந்திரம் கிடைச்சா ரெம்ப சந்தோஷமா இருக்கும், நேரம் கிடைக்கவே மாட்டிக்குது, ஐடியா மட்டும் கிடைக்குது, அதனால் அதிகமான இரவு தூக்கம் விற்று நேரம் வாங்கி எனக்கு பிடித்த வேலைகள் செய்து அழகு பார்பது உண்டு..
இனி வரும் குறிப்பையெல்லாம் பார்த்துட்டு நீங்களே தீர்ப்பு சொல்லுங்க நான் குப்பைய சேர்க்கறேனா? இல்லை பொக்கிஷத்தை சேர்க்கறேனான்னு? ஓ.கே.வா???

Average: 5 (2 votes)

Comments

நீங்க எதை செய்தாலும் அழகா தான் இருக்கும் ;) அது மண்ணு போட்ட உப்புமாவா இருந்தாலும் சரி, பால் டப்பாவா இருந்தாலும் சரி. பார்க்க நாங்க காத்திருக்கோம். “குப்பையை சேர்க்காத”னு சொல்ல நான் வாய்ப்பு கொடுத்ததில்லை கேட்காமலே வாங்கி சேர்ர்த்துடுவேன். அதன் பின் எடுத்தால் அம்மா ஒரே ஹேப்பி தான்... “கொண்டு போக போறியா? அள்ளிட்டு போ உன் குப்பையை”னு. ஹஹஹா. அதே அதே... அன்னைக்கு நான் ஃபோனில் பேசியதே தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இப்படியெல்லாம் ஐஸ் வைக்காதீங்க, படம் போட்டதும் பார்த்து விட்டு சொல்லுங்க சந்தோசமாய் இருக்கும்,
நான் பள்ளபட்டியில் கொஞ்சம் சேர்த்தி, திருச்சியில் கொஞ்சம் சேர்த்தி பெட்டி கட்டி அபுதாபி வரும் போது மாட்டிக்குவேன், இதை போய் தூக்கி போறயான்னு, எல்லாரும் தூக்கிபோட சொல்லுவாங்க, ஆனா எப்ப கேட்டு இருக்கேன், இப்ப அவங்களே சேர்த்தி வைச்சு தராங்க:) புள்ள எதாவது உருப்படியா பன்னும் என்று தான், இங்க இப்ப திட்டு விழுது உன் குப்பைக்கு ஒரு ரூமே பத்தாதுன்னு:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சீக்கிரம் உங்க கைவினைகளை பார்க்க ஆவல்.ஆனாலும் இதையெல்லாம் சேர்த்து வைக்க ஒரு பொறுமை வேணும் நிச்சயமாய் .

Be simple be sample

பொக்கிஷம்தான். ;) ஆனா என்ன கடை போட்ட மாதிரி ஸ்டைலா அடுக்கி வைச்சிருப்பேன்.

//24 மணி நேரம் கைவேலை பார்க்க சுதந்திரம் கிடைச்சா// ஆஹா! சூப்பர்! ;))

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொன்ன எல்லாமே பொக்கிஷ்ம் தான் எல்லாமே அழகாகவும் உள்ளது. மூடி கேரன் போர்டு காயின் மாதிரி உள்ளது. நீங்க ரொம்பா அழகாக சொல்லுறீக்கீங்க. உங்களுக்கு மட்டும் பொக்கிஷ்ம் அல்ல எங்களுக்கும் தான்.

ஹாய்,
அதிகமான‌ இரவு தூக்கம் விற்று நேரம் வாங்கி எனக்கு பிடித்த‌ வேலைகள்செய்து அழகு பார்ப்பது உண்டு,//////////உங்கள் உள் மனதின் வெளிப்பாடுங்க‌ இது.உங்கள் பொக்கிஷ்ம் பொக்கிஷ்மாகவே இருக்கட்டும்.குப்பையாக‌ வேண்டாம்.எனது வாழ்த்துங்கள்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நானும் இப்படி தான் ஏதாவது முயற்சிகலாமேன்னு எடுத்து வைப்பேன் கொஞ்சம் நாட்கள் வெயிட் பண்ணிட்டு அது குப்பைக்கு போய்டும் போய்ருக்கு. நீங்க அசத்தலா க்ராஃப்ட் செய்றீங்க முயற்சி செய்ங்க ரேணு.
கேப் வச்சு பொம்மை செய்யலாமே ரேணு உங்களுக்கு ஐடியா இருக்கும் இது சும்மா என்னோட யோசனை

உங்க பதிவையும்,படங்களையும் பார்த்தால், எனக்கு என் மகள் செயல்கள் தான் நினைவுக்கு வருது , இப்படித்தான் கிச்சன்னிலிருந்து பாக்ஸ், கூடுகள்,அட்டைகள் என்று எல்லாவற்றையும் சேகரித்து அவள் ரூமில் வைத்திருக்கிறாள், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஏதாவது செய்து எனக்கே பரிசளிப்பாள். கைவினைக்கென்று ஒரு திறைமையும், கற்ப்பனையும் வேண்டும்,உங்களுக்கு நல்லாவே இருக்கு ரேணுகா, பாராட்டுகள்.

ரெம்ப நன்றி வாணி, அய்யோ இப்படி யாராவது இருக்காங்கன்னா எனக்கு ரெம்ப சந்தோஷமாயிடும், உங்க பொண்ணு கைவினை யெல்லாம் போட்டோ போடுங்க, நாங்களும் பார்ப்போம் தானே.. ஆசையா இருக்கு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அவசியம் பொடறேங்க,அவள் உங்க அளவுக்கு நேர்த்தியா இல்லைனாலும் அவ வயசு ஏத்தமாதிரி ஓரளவுக்கு( 6 வயசு) செய்திடுவா.

வாவ் தேவி சேர்த்தும் பழக்கம் இருந்தால் செய்து சொல்லுங்கப்பா முயற்சி பன்னுங்க, ஆர்வம் தன்னால வரும், எப்படி பொம்மை செய்ய? விளக்கமா சொல்லுங்க, நான் முயற்சித்து படம் போடுகிறேன், எனக்கு எல்லோரட யோசனையும் வேனும்பா, கொடுங்க, புதுசா ஒன்னு உருவாக்குவோம்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணு,
சேம் பிஞ்ச்.
வீட்டில எங்க தேடினாலும் எதுக்காவது ஆகும்னு சேர்த்த பொருட்கள் ஏராளம். இதில் என்னைவிட என் ஆத்துக்காரர் அதிகமா சேர்ப்பார். உரித்து விட்டு, சோப் போட்டு கழுவி வைத்த பிஸ்தா தோல் முதல் டிரஸ்ஸில் விலை எழுதி இருக்கும் அட்டை வரை....

திருமணப் பத்திரிக்கையில் என் கணவர் அழஅழகான நோட்டுகள் செய்வார். வீட்டுக்கு வர்ரவங்க கண்டிப்பா இரண்டு நோட்டாவது எடுத்து போவாங்க.

இருப்பதில் புதுசா எதாவது சொல்லித் தாங்க. நாங்களும் முயற்சிக்கிறோம்.

அன்புடன்,
செல்வி.

ரேணு(கா) என்னிடமும் இது போன்ற பழக்கம் உண்டு. ஆனால் என்ன வீடு சுத்தம் செய்வதில் உதவுகிறேன் என்று, என்னவர் ஆகறது, ஆகாதது எல்லாத்தையும் தூக்கி போட்டுவிடுவார். என்கண்ணில் தட்டுப்பட்டால் மீண்டும் உள்ளேயே வந்துவிடும்.
ஒவ்வொருமுறை வீடு மாறும்போதும் தூக்கி எறிந்து, மறுபடியும் சேகரித்துனு இருந்தது.
ஆனால் உங்களைப்போல கைவேலையெல்லாம் செய்யாமல், தூக்கிபோடவும் மனமில்லாமல் வைத்திருப்பேன். எனக்கு கைவேலை தெரியாது, அவ்வளவு பொறுமை இல்லை :(
என்மகளுக்கும் இதிலெல்லாம் விருப்பம் உண்டு, கிளாஸ்பெயிண்டிங்,ஸ்கூபி ஒயர்வைத்து பின்னுவது இதெல்லாம் செய்வார்.
அதே போல ஸ்கூலிலிருந்து கற்கள் பொறுக்கிக்கொண்டு வந்து சேமிப்பப்து.
அவருடைய விழுந்த பால்பற்களை ஒரு டப்பாவில் சேமித்து வைத்திருக்கிறார்.
இறகு கிடைச்சா போதும் வீட்டுக்கு வந்துவிடும். காக்கா பொங்க கூட விட்டு வைப்பதில்லை, நாந்தான் அதில் கிருமிகள் இருக்கும் என பயமுறுத்தி வைத்துள்ளேன் :(
கல்யாண அழைப்பிதலில் வரும் விநாயகர் சேமிப்பது என் பொண்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நல்ல பதிவு ரேணுக்கா :))))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல‌ பதிவு,எனக்கு கைவினைப் பற்றி தேறியாது.ஆனால் தையல் பொருட்கள்,எம்ராய்ட‌ரி,ஜமுக்கி,லேஸ்,ஜர்தோசி என்று எது தேவை என்று தேறியாமல் கன்னாபின்னா என்று சேர்த்து வைத்துள்ளேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நானும் சேர்த்து வச்சிருக்கேன். கடையில் வாங்கிறதை விட‌ நாமே செய்யறதுல‌ கிடைக்கிற‌ சந்தோசமே தனி தான்.
குப்பைன்னு சொன்னவங்க‌ வியக்கிற‌ மாதிரி குப்பையை பொக்கிசமா மாத்தணும்.