
அந்தி சாயும் நேரத்திலும் பழுத்து காய்ந்து பிய்த்து போட்ட பனை நுங்கு போல காய்ந்து கிடந்தது பூமி. தூரத்தில் எங்கோ ஒரு சில் வண்டு மழைக்கு ஏங்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. மாலை வேளையிலும் காற்று அனலாய் அடித்துக் கொண்டிருந்தது.
”தே புள்ளே குட்டியான பாத்துக்க நானு போயி மாட்டுக்கும் ஆட்டுக்கும் புல்லு பிடிங்கிட்டு வாறேன்” அம்மா குப்பாயின் குரல் கேட்டு குடிசைக்கு வெளியே வேப்ப மரத்து நிழலில் விளையாடிக் கொண்டிருந்த இந்திராணி உள்ளே வந்தாள். உங்கொப்பன் டவுனுக்கு மூட்ட தூக்க போயிருக்கு... தண்ணி போட்டுட்டு வந்தாக்க அதுகிட்டே வாய் கொடுக்காத, கண்டபடி என்னத்தான் ஏசும், புள்ளைய பாத்துக்க வெளிய எங்கயாச்சும் போயிட போறான்.
தொட்டிலில் காற்றுக்காக ஒரு குச்சியை வைத்து உண்டாக்கப்பட்டிருந்த இடைவெளியில் குழந்தையை பார்த்தாள் இந்திராணி, விரலை சூப்பிக் கொண்டு தூங்கி கொண்டிருந்தது குழந்தை, ஒரு வருடமாகும் அவனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இவள் மூத்தவளானதால் இவன் குட்டியான் ஆனான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்திராணிக்கு நாளை கணக்கு பரிட்சை. அப்பனிடம் பேனா வாங்கி வர சொல்லி பல நாட்களாகின்றது. இருக்கும் பேனாவை சரியாக எழுத வைக்க எடுத்த முயற்சிகள் வீணானது. கணக்கு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததும் குட்டியான் விழித்து கொண்டு அழ ஆரம்பித்தான். ஓடிச் சென்று அவனை தூக்கி வைத்து சமாதானபடுத்த ஆரம்பித்தாள்.
”டேய்... எவண்டா என்னை கேக்குறது... வாங்கடா பாக்கலாம்” தூரத்தில் குடி போதையில் குழறிய படி வரும் வார்த்தைகளில் அப்பனின் குரல் கேட்டது. ”இந்த்ராணி... இந்த்ராணி...எங்கபுள்ள போயிட்ட...?” வாசலில் இருந்த கட்டிலில் பொத்தென விழும் சப்தம் கேட்டது வெளியே சென்று பார்த்தாள் மல்லாக்க விழுந்து கிடந்தான் அப்பன் சுப்பு.
”இங்கதாம்பா இருக்கேன்”
”எங்க போயிட்டா அவ”
“அம்மா மாட்டுக்கு புல்லு புடுங்க போயிருக்குப்பா”
”சோறு ஆக்காம புல்லு புடுங்க போயிருக்காளா”
”அப்பா பேனா வாங்கியாந்தியாப்பா?”
பதில் இல்லை... போதையில் அரை மயக்கத்துக்கு போயிருந்தான் சுப்பு. சட்டை பையை தடவி பார்த்தாள் பேனா இல்லை... கண்களில் நீர் அரும்பியது.
-தொடரும்
Comments
வெட்ட வெளி பொட்டலிலே
எங்கள் நாமக்கல் சேலம் மாவட்டங்களில் புழங்கிவரும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன்... பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் கருத்துகளை சொல்லுங்கள் நன்றி...
அன்புடன்
THAVAM
தவமணி சார்
அட்டகாசம் ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சிட்டு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் சொல்லிபுட்டீங்க, ரொம்ப பிடிச்சிருக்கு சீக்கிரம் வந்து தொடருங்க. இந்த மாதிரி வார்த்தைகள் பேசிகேட்க எவ்வளோ நல்லா இருக்கும்.
தவமணி
உங்கள் தமிழ் நடையும் அருமை, உங்கள் கதையும் அருமை தொடர்ந்து கதையை எதிர்பார்க்கிறேன்.
தவமணி அண்ணா
கதையும் அருமை தமிழ் மொழியும் அருமை..தொடருங்க அண்ணா வாழ்துக்கள்!
தவமணி
அன்பு சகோ. தவமணி,
நம்ம ஊரு தமிழ். நல்லா இருக்கு. தொடருங்க!
அன்புடன்,
செல்வி.
தவமணி அண்ணா,
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க கதையும், தமிழும்..
மேலும் தொடருங்க ...
நட்புடன்
குணா
வெட்ட வெளி பொட்டலிலே
யதார்த்தமான கதையும், வார்த்தைகளும் ரொம்ப பிடிச்சிருக்கு. தலைப்பும், படமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
அன்புடன்
ஜெயா
தவமணி அண்ணா
கதை சூப்பரா இருக்கு. உங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம். படம் மற்றும் தலைப்பு பொருத்தமாக உள்ளது.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
கீதா கோபால்
தவம்...
கலக்கிட்டீங்க தவம். ஆரம்பமே அசத்தல். சீக்கிரமா மீதியையும் போடுங்க.
- இமா க்றிஸ்
அன்புடன் நன்றிகள்...
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சகோதரிகளுக்கு மகிழ்வுடன் நன்றிகள்...
அன்புடன்
THAVAM
திரு. தவமணி
நல்ல ஆரம்பம்... தொடருங்க, படிக்க காத்திருக்கோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தவம் அண்ணா
ஆரம்பமே அசத்தல் ...தொடருக்கு எதிர் பார்ப்போடு இருக்கோம்.
Be simple be sample
அண்ணா
கதை ரொம்ப உருக்கமா இருக்கு.அடுத்து??/