deva madam, oil make apply panna solli kudunga

தேவா மேடம்,
எனக்கு நார்மல் ஸ்கின். நிவியா உபயோகப்படுத்துரேன்
பயோடிக் ஸ்கரப் மற்றும் மாஸ்க் உபயோகப்படுத்துரேன்.
ஆயில் மேக் அப் போட சொல்லி குடுங்ஹ.
i use himalaya cleaning milk.

I first apply moisturiser, then foundation(bare mineral) powder, eye liner, lip liner, konjam lipstick,
nalla taan irukku. but something missing.

I like the shine and glow of oil makeup. eppadi sollunga.

regards

Renuka

ஹாய் ரேணுகா, நீங்கள் கேட்டிருக்கும் ஷைனிங்கான மேக்கப்புக்கு தேவையான பொருட்கள் நீங்க உபயோகிக்கும் லிஸ்ட்டில் இல்லை. முகத்திற்கு மேக்கப் போடும்போது ஒரு பொதுவான விஷயத்தை நினைவில் வெச்சுக்குங்க. அது இரவு மேக்கப்பா அல்லது பகல் மேக்கப்பா என்பது மிகவும் முக்கியம். பகல் மேக்கப்பாக இருந்தால் முகத்தில் அரேபியன் க்ளோ பவுடர் அல்லது Pearls உபயோகிக்க வேண்டும். இது Maybelline, L'Oreal, Avon போன்ற பிராண்டுகளிலும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட Tan Spray போன்றது. ஆனால் முகத்தை Tan Spray போல கருப்பாக்காது. முகம் பள பளவென்ற ஜொலிப்புடன் இருக்கும். அதே சமயம் அதிக மேக்கப் போட்டது போல் தெரியாது. இதனை முகம் முழுவதிலோ அல்லது கன்னம், கண்கள் பகுதியிலோ மட்டுமோ கூட தடவலாம். இதில் பவுடர் வாங்கிக் கொண்டு உபயோகிப்பது நல்லது. ஏனென்றால் ஸ்ப்ரே உபயோகிக்க மிகுந்த அனுபவம் வேண்டும்.

அடுத்து லிப் கிளாஸ். இது போடாமல் உங்கள் மேக்கப் பளப்பள வென்று தெரியாது. நல்ல தரமான லிப்கிளாஸை உபயோகியுங்கள். ரெவ்லான், மேபலின் மற்றும் அனைத்து பிரபலமான பிராண்டுகளிலும் Lip Highlighter மற்றும் Lip Illuminator கிடைக்கும். லிப்ஸ்டிக் ஷேடுகளுக்கு தகுந்த ஷேடுகளை வாங்கி அதனை லிப்ஸ்டிக் மேலாக தடவினால் நேச்சுரல் லுக்கில் ஷைனிங்காகவும், அதே சமயம் அழகாகவும் இருக்கும். லிப் கிளாஸ், ஹை லைட்டர் இவற்றில் எதாவது ஒன்றை உடைகளுக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுங்கள்.

இரவு மேக்கப் என்றால் அரேபியன் க்ளோ வேண்டாம். அதற்கு பதிலாம ரெவ்லானில் Face Illuminator என்று விற்கிறார்கள். அதில் உங்களுக்கு தகுந்த ஷேடை வாங்கி உபயோகியுங்கள். இதனை இரண்டு கன்ன மேடுகளிலும் தடவினாலும் நன்றாக இருக்கும். முகம் முழுதும் லேசாகவும் ( ஒரு பிரஷ் அளவு மட்டும்) நன்றாக இருக்கும். உங்க ஐஷேடோ போடும் முறையையும் பார்த்து அதில் மாற்றம் செய்ய வேண்டும். மஸ்காரா போடாவிட்டாலும் எடுப்பாக இருக்காது. ஏனெறால் மேக்கப்பின் அழகே ஐ மேக்கப்பினால்தான் அழகாக தெரியும். அது சரியில்லாவிட்டால் எத்தனை அழகான மேக்கப் போட்டாலும் பளிச்சென்று தெரியாது.

இன்னும் மேக்கப்பில் சின்ன சின்ன டிப்ஸ் இருக்கு. அதனை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு வேலையிடையில் எழுத இயலாமல் போய் விடுகிறது. இப்படி கேள்விகள் கேட்கும்போதுதான் எழுத தோன்றுகிறது. காலையிலிருந்து அறுசுவையில் எழுத வேண்டும் என்று நினைத்து இப்போதுதான் முடிகிறது. இனி வரும் வாரங்களில் இன்னும் வேலை அதிகமாகி விடும். யாருக்காவது உடனடியாக பதில் எழுதவில்லையென்றால் கோபித்துக் கொள்ளாதீர்கள். நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுவேன்.

தேவா மேடம்,
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி. நான் வாங்க வேண்டியது face illuminator மற்றும் arabian glow powder . I sincerely appreciate your immediate response. Thank you so much.
so are my steps correct? 1. moisturiser 2. foundation powder(arabian glow) 3. eye liner, shadow
4.lipliner, lipstick, lip gloss
will this give me oil makeup look madam?
i hv one more doubt. I apply revlon lipstick and revlon lip gloss. It looks very good for sometime and then i guess i eat away the lip gloss and the lips get a dry look.
madam, pls give me a tip for keeping the makeup(madeup) for a long time. I bought diana of london- finish loose powder-transparent ivory and bare mineral maquillage. both these give me a dry look. how do i use it. madam both are costly. i cannot just throw it away.
pls. suggest me.

regards
Renuks

nationality

ஹாய் ரேணுகா, தாமதமான பதிலுக்கு சாரி. நீங்கள் ஏற்கனவே வைத்த்திருக்கும் பவுடர், க்ரீமை தூக்கிப் போட வேண்டாம். நான் குறிப்பிட்டுள்ள அரேபியன் க்ளோ மற்றும் இலுமினேட்டர் மேக்கப்பின் மேல் தடவுவது. பவுடரை கொஞ்சம் குறைத்துப் போட்டு ( ஜஸ்ட் ஒரு லேயர் மட்டும்) மேலே அரேபியன் க்ளோ போடுங்கள். இலுமினேட்டருக்கு, நன்றாக பவுடர் அப்ளை செய்து விட்டு பிறகு இலுமினேட்டரை உபயோகியுங்கள். பவுடரை, இவை இரண்டுமே ரீப்ளேஸ் செய்யாது. உங்களுக்காக ஸ்டெப்ஸ் போலவே சொல்கிறேன்.1. மாய்ஸ்சுரைசிங் லோஷன் 2. பவுண்டேஷன்( 10 நிமிடம் அதனை பரவ விடுங்கள்) 3. பவுடர் ஒரு கோட்டிங் 4.அரேபியன் க்ளோ அல்லது பவுடர் 2 கோட்டிங் மற்றும் இலுமினேட்டர் (மூக்கின் பக்க வாட்டிலும் போட வேண்டும்) 5. லிப் லைனர் 6.லிப் கிளாஸ் 7.ஐ ஷேடோ 8.ஐ லைனர் 9. மஸ்காரா 10.ரூஜ் மிக லேசாக

கலர் ஸ்டே லிப் ஸ்டிக் உபயோகியுங்கள். லிப் கிளாஸ் ஒன்றை எப்போதும் கைப்பையில் வைத்திருங்கள். சாப்பிட்டுவிட்டால் மீண்டும் ஒரு கோட்டிங் போட்டுக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் L'Oreal Kiss Proof உபயோகியுங்கள். நீண்ட நேரம் இருக்கும். அதே போல் Avon Berry Lavish நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும்.

தேவா மேடம்
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
உங்களுக்கு ஒரு பெரிய ஓஓஓஓ!
சூப்பரா ஸ்டெப்ஸ் குடுத்து அசத்தீட்டீங்க.
thanks once again.
naam neenga sonna maadiri potten. photos nalla vandirukku.
thanks.

nationality

அருசுவைக்கு நான் புதியது.உஙலின் குறீப்புகள் நான் பார்த்தேன் அது மிகவும் நன்றாக இருக்கிறது.எனக்கு உத வி செய்யுயங்கள் கன்ன்ம் குண்டு ஆக,please
BY: UMA

அருசுவைக்கு நான் புதியது.உஙலின் குறீப்புகள் நான் பார்த்தேன் அது மிகவும் நன்றாக இருக்கிறது.எனக்கு உத வி செய்யுயங்கள் கன்ன்ம் குண்டு ஆக,please
BY: UMA

அருசுவைக்கு நான் புதியது.உஙலின் குறீப்புகள் நான் பார்த்தேன் அது மிகவும் நன்றாக இருக்கிறது.எனக்கு உத வி செய்யுயங்கள் கன்ன்ம் குண்டு ஆக,please
BY: UMA

ஹாய் உமா, தங்கள் பாராட்டுக்கு நன்றி. கன்னம் குண்டாக நன்றாக சாப்பிடுங்கள். அதைத்தவிர எளிய பயிற்சி என்று டாக்டர்கள் சொல்வது வாயில் தண்ணீரை ஊற்றி கொப்பளிப்பது போல் செய்வது. தண்ணீர் இல்லாமல் காற்றை மட்டும் நிரப்பியும் செய்யலாம். சிலர் பலூன் ஊதுவதுபோல் பயிற்சியும் செய்வார்கள். அதுவும் நல்ல பலனைக் கொடுக்கும். இது தவிர, பேஷியல் செய்யும்போது அல்லது குளிப்பதற்கு முன் எண்ணெயோ, க்ரீமோ தடவி கன்னங்களை கீழிருந்து மேலாக அழுத்தமாக மசாஜ் செய்யுங்கள். கன்னம் நன்றாக இருக்கும்.

நான் இன்று தான் இந்த லிங்க் பார்தேன்.மேக்கப் ஷைன் டிப்ஸ் மிகவும் பயனுள்ளது.எனக்கும் மேக்கப் ஷைன் ஆக இருக்கவேண்டும் என்று ஆசை.Thank u deva madam.

from,veena.

மேலும் சில பதிவுகள்