நோன்பு கால பித்தம் பிரச்சனை அவசரம் உதவுங்கள்

சகோஸ், அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு நீண்ட காலமாக காலையில் எழுந்திருக்கும் போதோ பகல் நேரத்தில் தூங்கினாலோ எழும் போது குமட்டுகிறது அதை கூட பொறுத்துகலாம் முக்கியமாக நோன்பு நேரங்களில் ஷஹர் சாப்பிட்ட பின்பு தூங்கி காலை எழும் போது தொண்டையில் உமிழ்நீர் தங்கி பயங்கரமாக குமட்டுகிறது சில நேரங்களில் வாந்தி வருகிறது நானும் சஹரில் சோறு, டிபன், வெறும் ஜீஸ் மட்டும் காபி மட்டும் ஏன் வெறும் தண்ணீர் மட்டும் கூட சாப்பிட்டு நோன்பு வைத்தேன் இந்த காலை நேர அவஸ்தை குறைந்த பாடில்லை, பிரண்டை சம்பால் AVOMINE TAB எல்லாம் சாப்பிட்டு பார்த்தேன் NO USE நோன்புகால 30 நாளும் அவஸ்தையாக இருக்கு இதை நிறுத்த வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்... நோன்பு வேறு நெருங்கிவிட்டது இதை நினைத்தால் பயமாக உள்ளது. தோழிகளின் பதிலை எதிர்பார்க்கும் ஷிஃபாயா தஸ்லிமா.

நீங்க டாக்டரைப் பார்த்தீன்ங்களா, ஏனென்றால் இது பித்தம் இல்லை, செரிமான சுரப்பிகளின் சமச்ச்சீரற்ற செயல்பாடுகளின்(digestive enzymes dysfunction) காரணம்தான் இது. இதற்க்கு மாத்திரை சாப்பிட்டால் எளிதில் குணப் படுத்தி விடலாம். அதனால் மருத்துவ உதவி நாடுவதே நல்லது.என் கணவரோடு வேலை பார்த்த இஸ்லாமிய நண்பருக்கும் இதேப் பிரச்சனை இருந்தது, மாத்திரை சாப்பிட்டு குறைந்து விட்டது.

நிறைய முறை டாக்டர் பார்த்தேன் மா. இது ஒருவகை அலர்ஜி என்று மாத்திரை கொடுத்தார்கள் DEEP SLEEP ஆச்சு. ப்ராப்ளம் சால்வ் ஆகலை 2 YEARS போல மருந்து சாப்ட்டேன் சரியாகலை அதன் பின் தான் என் மூமா (பாட்டி) பிரண்டை சம்பல் செய்து கொடுத்தார் அதுக்கு மசியலை அதனால பகல்நேர தூக்கம்னாலே எனக்கு அலர்ஜி ஆயிட்டு மதியம் தூக்கம் வந்தால்கூட தூங்குவதில்லை பயந்துகிட்டு, சாதா நாளில் ADJUST பண்ணிப்பேன் நோன்பு நாளில் தான் முடியல என் மாமா சொல்றாங்க விடிகாலை சாப்பிட்டுட்டு தூங்காதே என்று நோன்பு வெச்சிட்டு தூங்கலைனா பகலில் வேலை செய்ய முடியல மயக்கமா வருது எதும் கை வைத்தியம் இருந்தா சொல்லுங்கமா.

மேலும் சில பதிவுகள்