தோசை

நான் ஆச ஆசயா தோச சுட்டா அது என்னமோ சரியாவே வரலங இங்க கடையில் புலுங்கலரிசினா சிரிக்கிராங்க நாட்டரிசி தான் வாங்கி 3:1 என்றபடி போட்டு செய்தன் ஆனா சட்டியில் இறுந்து எடுக்குரப்பவே அது உரமா தெரியுது பச்சரிசியில் தோசை சுடலாமா இதற்கு உழுந்து எவ்வளவு சேர்கனும் தோசைக்கு ஈஸ்ட் சேர்கனுமா சாப்டா வர என்ன செய்யனும்

யாராவது சொல்லி தாங்களே

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஜனதுல்... ;) அரிசி தான் பிரெச்சனையா? அதென்ன நாட்டரிசி? நான் கேள்விப்பட்டதே இல்லைங்க. சொல்லுங்களேன்... பச்சரிசி தோசைக்கு? இருங்க அறுசுவையில் எதுவும் ரெசிபி கிடைக்குதா பார்க்குறேன்.

உரமா தெரியுது - அப்படின்னா என்ன அர்த்தம் ஜனதுல்? ஹார்டா இருக்கா தோசை? இல்லை ஒட்டுதா?

http://www.arusuvai.com/tamil/node/16731?page=3

http://www.arusuvai.com/tamil/node/12373

பச்சரிசியில் தோசை : http://www.arusuvai.com/tamil/node/7156

இந்த லின்க் பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thosaiku east serkathinka. raw rice 1-cup, 1/4 ulunthu, koncham venthayam, manathiku. pothum. softa iruka konjam sorru arachu sethukonga. dosa nalla varum.

நாட்டரிசினா ஒரு வக பெரிய அரிசிங
தோசை சரியான ஹாட் தான்ங சாப்பிடவே கஷ்டங்க
நான் 4 மணிநேரம்(அதாவது இரவு 6மணிக்கு ) ஊர வச்சு பின் 10மணிக்கு அரைக்கிரன் நைட் புல்லா இருந்தும் உப்ப மாட்டிகுது அப்புடியே உப்பினாளும் நாரி போயிடுது

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இதே பிரெச்சனையை நான் சொன்ன லின்கில் ஜெயந்தி மாமி விளக்கம் சொல்லி இருக்காங்க. பாருங்க. உதவும். நீங்க சொல்லும் நாட்டரிசி பாயில்டா? பச்சரிசியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாயி்ல்ட் தான்ங நீங்க தந்த 7156 லி்ன்க் பார்தன் அதில் 1கப்னா எவ்வளவுனு தெரியுமா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஜலீலா பொதுவா மெஷர்மண்ட் கப் பயன்படுத்துவதாக தெரியல. ஏன்னா அவங்க டம்ளர் அளவை தான் கப் அளவா பயன்படுத்துவதாக எங்கோ சொன்ன நினைவு. சரியா சொல்ல வேண்டுமானால் 1 கப் என்பது 250 ml கப் அளவை தான். ஸ்டாண்டர்ட் அளவு. அதையே பயன்படுத்தி பாருங்க.

ஆனால் ஜலீலா எங்கோ ஒரு லின்கில் கொடுத்திருந்த அளவு:

1 டேபிள் ஸ்பூன் 3 டீஸ்பூன்

1 கப் 16 டேபிள் ஸ்பூன்

1 கப் பால் 250 மில்லி லிட்டர்
கப் மிளகு - 100 கிராம்

1 கப் மாவு 125 கிராம்

1 கப் வெண்ணை 250 கிராம்

1 கப் அரிசி - 250 கிராம்

3 டீஸ்பூன்கள் - 1 டேபிள் ஸ்பூன்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாட்டரிசி என்றால் வீட்டரிசி அது தன் வயல்களில் விளையும் அரிசி.

எல்லா அரிசியும் அப்படி தானே விளையும்? ;) ஐ கெஸ் நீங்க சொல்வது “கைகுத்தல் அரிசி” சரியா? மிஷினில் கொடுக்காம வீட்டுலயே வேக வைத்து குத்துவதுன்னு அம்மா ஏதோ ப்ராசஸ் சொல்வாங்க. அது தானா? அது தான் என்றால் இட்லி தோசைக்கு ரொம்ப நல்லா வரும்னு அம்மா சொல்வாங்க். அளவு... அம்மாவை தான் கேட்கனும், அவங்க தான் அதை பயன்படுத்தறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜனதுல் நாட்டரிசில நீங்க எது யூஸ் பண்றிங்க. கண்ணாடி போல ரொம்ப பாலிஷா ஒரு அரிசி இருக்கே அதுவா? அது இட்லி தோசைக்கு கண்டிப்பா நல்லா இருக்காது. கொஞ்சம் நிறம் மங்கலா உள்ள ஒரு அரிசி இருக்கும் அதுன்னா ஓகே. இல்லன்னா ஸ்டீம் சம்பா போடுங்க அது நல்லா வரும். (விலை 80/-ன்னு நினைக்கிறேன்) ட்ரை பண்ணி பாருங்க. கீரி சம்பாவும் நல்லாருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்