ப்ளீஸ் சீக்கிரமா யாராவது வாங்க

வணக்கம்
எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிவிட்டது. இரண்டரை வருடத்திற்கு பிறகு கரு தரித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு துடிப்பு நின்று விட்டதால் அபார்சன் செய்து விட்டோம். இப்போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன்.ஒரு வருடத்திற்கு பிறகுமூன்று மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கிறேன். போன மாதம் கரு முட்டை வெளிப்பட டாப்லட் கொடுத்தார். வளர்ச்சியடைந்த நான்கு முட்டைகளில் மூன்று கருமுட்டை வெளியாகி விட்டது. ஒரு முட்டை நீர் கட்டியாக மாறி விட்டது என்று சொன்னார். அதற்காக "femilon" டாப்லட் கொடுத்து உள்ளார். எனக்கு நார்மல் பீரியட்ஸ். கொடுத்த டாப்லட் கருத்தடை மாத்திரை. எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Pls answer me

மேலும் சில பதிவுகள்