டபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச்

தேதி: June 26, 2014

5
Average: 4.2 (5 votes)

 

துணி
எம்ப்ராய்டரி ஃப்ரேம்
எம்ப்ராய்டரி நூல் - விருப்பமான இரண்டு நிறங்களில்
ஊசி
கத்தரிக்கோல்

 

இந்த வகை எம்ப்ராய்டரி போடுவதற்கு படத்தில் காட்டியுள்ளது போல துணியில் இரண்டு கோடுகள் வரைந்து, துணியை ஃப்ரேமில் பொருத்திக் கொள்ளவும். நூலை இரட்டையாகக் கோர்த்து ஒரு பக்கத்தில் மட்டும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
ஊசியை படத்தில் காட்டியுள்ளவாறு துணியில் கீழுள்ள கோட்டின் அடிவழியாக விட்டு, மேலே இழுத்து மேல் புறமுள்ள கோட்டில் இவ்வாறு குற்றவும்.
குற்றிய ஊசியை துணியின் அடிவழியாக இழுக்கவும். இழுத்த பிறகு தையல் " / " வடிவில் இருக்கும்.
அந்த தையலிருந்து இடது புறம் சற்று தள்ளி ஊசியை விட்டு மேலே இழுத்து, இவ்வாறு கீழே உள்ள கோட்டின் மீது குறுக்காக வைத்து குற்றி இழுக்கவும். (இந்த தையலைப் போல பென்சிலால் வரைந்து கொண்டு தைத்தால் இன்னும் எளிதாக இருக்கும்).
அடுத்து கீழுள்ள கோட்டில் குற்றிய ஊசியை, அதன் இடது புறம் சற்று தள்ளி குற்றி மேலே இழுத்து படத்தில் உள்ளது போல்.மேலுள்ள கோட்டில் குறுக்காக வைத்து குற்றி இழுக்கவும். இதே போல் தொடர்ந்து கீழுள்ள கோட்டிலிருந்து மேலுள்ள கோட்டிற்கும், மேலுள்ள கோட்டிலிருந்து கீழுள்ள கோட்டிற்கும் தைக்கவும்.
தையலின் பின்புறம் இவ்வாறு இருக்கும்.
இதே போல் வரைந்த கோடு முழுவதும் தைக்கவும். பிறகு துணியின் அடிப்பகுதியில் கடைசி தையலின் வழியாக ஊசியைவிட்டு ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டு நூலை நறுக்கிவிடவும். இது ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் (Herringbone Stitch).
பிறகு ஊசியில் மற்றொரு நிற நூலைக் கோர்த்து, படத்தில் உள்ளது போல மேலே தைத்த தையலைப் போலவே எதிர்ப்பக்கமாக கோட்டின் இறுதி வரை தைக்கவும். (அதாவது முதலில் கீழுள்ள கோட்டிலிருந்து தைக்கத் தொடங்கியது போல இப்போது மேலுள்ள கோட்டிலிருந்து தைக்கத் தொடங்கவும்).
இது டபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் (Double Herringbone Stitch). இந்தத் தையலை ஒரே நிற நூலிலும் தைக்கலாம். எளிதில் புரிந்து கொள்வதற்காக வேறொரு நிற நூலைக் கொண்டு தைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் :) என்று போட்டால் மேலே இருக்கிற கமண்ட்டை காப்பி பண்ணின மாதிரி இருக்கும். ;))
அருமை டீம்! முன்னாலயும் விதம் விதமான தையல்கள் குறிப்பாகக் கொடுத்திருக்கிறீங்க. ஒவ்வொன்றாக இருக்கிற ஸ்டாக் எல்லாம் வெளில வரட்டும். ;)

‍- இமா க்றிஸ்

//சூப்பர் :) என்று போட்டால் மேலே இருக்கிற கமண்ட்டை காப்பி பண்ணின மாதிரி இருக்கும். ;))// - கர்ர்ர்ர்.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈஸியாகவும் அழகாகவும் இருக்கு...சூப்பர்

சூப்பர், மிகவும் எளிமையாகவும் தெளிவாக உள்ளது.

டபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் அழகா இருக்கு. நல்ல கலர் காம்பினேஷன்.

-> ரம்யா

நல்லா இரிக்கி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அழகாயிருக்கு.சிம்பிலாவும்,சீக்கிரம் போடக்கூடியதாவும் இருக்கு.