தேதி: July 3, 2014
தேன் மெழுகு (வெள்ளை நிறம்) - ஒரு ஷீட்
தேன் மெழுகு (பச்சை நிறம்) - ஒரு சிறு துண்டு
முயல் வடிவ குக்கி கட்டர்கள்
திரி
கண்கள் அல்லது சிவப்பு ரய்ன் ஸ்டோன்ஸ்
கத்தரிக்கோல்
ஹேர் ட்ரையர்
செராமிக் தட்டு ஒன்று
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

குக்கி கட்டரை மெழுகின் மேல் வைத்து அழுத்தி முயல் வடிவத்தை வெட்டி எடுக்கவும்.

குக்கி கட்டரை அழுத்தச் சிரமமாக இருந்தால் ஹேர் ட்ரையரை இளஞ்சூட்டில் வைத்து அழுத்தப் போகும் இடத்தில் ஒரு முறை சட்டென்று காட்டிவிட்டு வெட்டலாம். அவசரப்படாமல் பொறுமையாக வெட்டி எடுக்க வேண்டும்.

இப்படியே ஒவ்வொரு வடிவத்திலும் குறைந்தது பத்துத் துண்டுகள் வெட்டி எடுக்கவும்.

வெட்டி எடுக்கும் துண்டுகள் இரட்டை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். கட்டரை மாற்றி மாற்றி அழுத்தினால் மெழுகு வீணாகாமல் அதிக துண்டுகள் பெறலாம்.

திரி எங்கே வரவேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும். முயல் வடிவத்தை விட அரை சென்டிமீட்டர் உயரம் வரும் விதமாக திரியை வெட்டி எடுக்கவும். ஹேர் ட்ரையரினால் மெல்லிதாக மெழுகை சூடு காட்டிவிட்டு அதன்மீது திரியை வைத்து அழுத்திவிடவும்.

மெழுகு இறுகுமுன் இன்னொரு மெழுகுத் துண்டை அதன் மேல் வைத்து அழுத்தி ஒட்டவும்.

மீதி இருக்கும் துண்டுகளை சரிசமமாக இரண்டாகப் பிரித்து இடம் வலமாக அடுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு சமமாகப் பிரித்து வைத்துள்ள மெழுகுத் துண்டுகளில் ஒன்றை எடுத்து அதன் ஒரு பக்கம் சூடு காட்டி அதன் மேல் மற்றொரு மெழுகுத் துண்டை வைத்து ஒட்டவும். அதனை திரி ஒட்டிய மெழுகுத் துண்டின் மீது வைத்து ஒட்டிவிடவும். ஒரு பக்கம் ஒட்டியதும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, இரண்டு துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒட்டவும். மீண்டும் முதலாவது பக்கம் திருப்பி இரண்டு துண்டுகள் ஒட்டவும். இப்படி மாற்றி மாற்றி ஒட்டினால்தான் இரண்டு பக்கமும் அழுத்தம் சமமாக வரும். வடிவமும் நன்றாக இருக்கும்.

கண்கள் வர வேண்டிய இடத்தில் கத்தரிக்கோல் முனையால் சிறிய பள்ளம் செய்து கற்களையோ கண்களையோ வைத்து அழுத்திவிடவும்.

பச்சை நிறத்தில் படத்தில் காட்டியுள்ள வடிவங்கள் சில வெட்டி எடுக்கவும்.

அவற்றில் ஒன்றிரண்டை சூடுகாட்டி புற்கள் போல வடிவமைத்துக் கொள்ளவும்.

மீதியையும் ஒவ்வொன்றாக இளக்கி அடிப்பகுதியை "L" வடிவில் வருமாறு மடிக்கவும். இலைகளை விருப்பம் போல வளைத்துவிடவும்.

இவற்றை உடனுக்குடனே தட்டில் வைத்து அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். அதன் பிறகு, புற்களின் நடுவே முயல்களை வைத்து அலங்கரிக்கவும்.

Comments
முயல்
இமா மேடம் அழகான முயல்கள்.. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு...
கலை
டும்! டும்!! டும்ம்!!
இத்தால் அறுசுவையோருக்கு அறியத் தருவது யாதெனில்...
இந்த இரண்டு முயல் குட்டிகளையும் 700வது குறிப்பு கொடுத்து அசத்தியிருக்கும் வனிதா வில்வாரணிமுருகன் அவர்களுக்கு டெடிகேட் செய்கிறேன்... ;)
வாழ்த்துக்கள் வனி.
- இமா க்றிஸ்
இமா
அழகு முயல் குட்டீஸ்... அதுவும் எனக்கே எனக்கு :) மகிழ்ச்சியா இருக்கு இமா. மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அழகு
அழகோ அழகு.... இதை பற்ற வைக்கவே மனசு வராதே... சூப்பர் மா....
இமா அக்கா
முயல் மிகவும் அழகாக இருக்கு, பார்க்க பார்க்க பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு, கடைசி படத்தில் அந்த புல்க்கு இடையில் முயல்கள் சூப்பரோ சூப்பர்.
மெழுகு (அழகு) முயல்கள்.
ரொம்ப அழகா இருக்கு. கஷ்டப்பட்டு செஞ்சி கொளுத்த தோணுமோ. அவசரத்தேவைக்கு புல்ல மட்டும் எரிச்சிக்கலாம் என்ன இமாம்மா. அழகு..அழகு
உன்னை போல் பிறரை நேசி.
இமா
ஊஹூம்...மேலே திரி தேவையே இல்லை.எப்படி இமா முயல்குட்டியை ???
முயல் பொம்மைகள் என்பதே சரியான தலைப்பு..
செம க்யூட்!
முயல் குட்டிகள் செம க்யூட், கொளுத்தவே மனம் வராது. ரொம்ப அழகா, நேர்த்தியா செய்திருக்கிங்க. சூப்பர்!!
அன்புடன்
சுஸ்ரீ
முயல் பொம்மை!
//முயல் பொம்மைகள் என்பதே சரியான தலைப்பு.// ;))) ம்... ஆனது ஆகட்டும்; போனது போகட்டும். இனிமேல் தப்பு பண்ணாமல்... உங்கள் தலைப்பை நினைவாகப் பயன்படுத்துகிறேன் நிகிலா. ;D
- இமா க்றிஸ்
திரி!
//புல்ல மட்டும் எரிச்சிக்கலாம்// எப்படி! அதற்கு நோ திரி!
கருத்துக்கு நன்றி க்றிஸ்மஸ். :-)
- இமா க்றிஸ்
நன்றி
சுஸ்ரீ, பாலபாரதி, பிரியா & கலை... உங்கள் பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள்.
- இமா க்றிஸ்