வீட்டில் உள்ள கறை நீக்க‌

நான் 1 yr ஆக‌ எனது கணவருடன் UAE ல் இருந்தேன்.அதனால் இந்தியாவில் எங்கள் வீடு பராமரிப்பின்று நாசமாகி விட்டது.இதனை சரி செய்ய் ஏதேனும் வழி கூறுங்கள் please.எனது வீட்டில் கீழ் பகுதியில் ஒரு கிச்சன்,ஒரு படுக்கை அறை பாத்ரூம் வசதியுடன்,ஒரு ஹால்,ஒரு டைனிங் ஹால்,மாடிப்படி,மேல் பகுதியில் 2 guest bedroom, 1 common bathroom,பால்கனி இவைகள் உண்டு.இதனில் எவ்வாறு சரி செய்து அழகுபடுத்துவது , அட்டாச்ட் பாத்ரூம் ல் closet ,மற்றும் and பாத்ரூம் தரையில் அதிகமான மணல் கறை உள்ளது.போகவே மாட்டேங்குது.அதை சரி செய்ய எதும் liquids உள்ளதா? ஆசிட் பயன்படுத்த‌ பயமாக‌ உள்ளது.நான் திருநெல்வேலி dist இல் உள்ளேன்.இங்கு கிடைக்கும் பொருளாக‌ கூறவும் please.

நீங்க‌ சூப்பர் மார்க்கெட்ல‌ பிகேஃப் அப்படி ஒரு மருந்து கிடைக்கும் அத‌ வாங்க‌ யூஸ் பன்னி பாருங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

கேள்வியைத் திரும்ப தமிழ்ல போடுறீங்களா? ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா என்று பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

//சரி செய்து அழகுபடுத்துவது// இது உங்கள் ரசனை, பஜட் இரண்டையும் பொறுத்தது. கூகுள் இமேஜஸ் தட்டிப் பாருங்க. உங்கள் பக்கம் இருக்கும் ஃபர்னிச்சர் கடைகளுக்கும் ஒரு விசிட் போய்ப் பாருங்க. ஐடியா கிடைக்கும்.

//தரையில் அதிகமான மணல் கறை உள்ளது.// புரியவில்லை. மணல் எப்படி கறை விடும்! தரை... லைனோவா? சீமெந்தா? என்ன நிறம்?

தமிழில் மாற்றி விட்டதற்கு நன்றி டெல்சி. ஃபுல்ஸ்டாப், கமா போடும் ஒவ்வொரு தடவையும் ஒரு ஸ்பேஸ் தட்டிருங்க.

‍- இமா க்றிஸ்

இமா... அவங்க மணல் கறை என்பது அந்த கலரை கண்டுன்னு நினைக்கிறேன். மொசைக் அல்லது டைல்ஸா இருக்கும். அதுல தான் ரொம்ப நாள் பயன்படுத்தாமல் விட்டா, மண்ணு படிஞ்சு நிறம் மங்கி தெரியும். சொத சொதன்னு ஒரு ஈரத்தன்மையில் அந்த தூசு படிஞ்சு ஒரு விதமா இருக்கும், வாடையும் வரும். அதைத்தான் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

* டைல்ஸ் என்றால் டைல்ஸ்க்குன்னு உள்ள கடைகளில் அதை க்ளீன் பண்ண என சில லிக்விட் கிடைக்கும், அதை பயன்படுத்தலாம். டைல்ஸ் / மொசைக்கா இருந்தா ஆசிட் பான்படுத்தக்கூடாது. தரை பாலிஷ் போயிரும், திட்டு திட்டா வெளுத்த மாதிரி ஆயிரும். எனக்கு தெரிஞ்ச வரை லைசால் போன்றவையை கொஞ்சம் ஸ்டராங்கா கலந்து துணி கொண்டு ஒரு முறை கையால் துடைத்தாலே அந்த அழுக்கு போகனும். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்களேன் டெல்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பாக‌ க்ளீன் பண்ணிட்டு சொல்றேன் அக்கா

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

எலுமிச்சை சாறு கலந்து துடைச்சா நல்லதுன்னு எப்போதோ யாரோ அறுசுவையில் சொல்லி இருந்தாங்க. ட்ரை பண்ணுங்க அதையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா போகும்படி கரைனா,
பக்கெட் ல‌ தண்ணி எடுத்து அதுல‌ கிளீனிக் ப்ள்ஸ் சாம்பு ஊத்தி மிக்ஸ் பண்ணி நல்லா மாப்பு வச்சு அழுத்தி துடைச்சா பள‌ பளனு இருக்கும், ஸ்மெல்லும் சூப்பரா இருக்கும், என்ன‌ கொஞ்சம் த்ண்ணி அதிகமா செலவாகும் ஆனா நல்லா சுத்தமாகிடும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கண்டிப்பாக‌ க்ளீன் பண்ணிட்டு சொல்றேன் மா

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்