அறுசுவை தளத்தில் பிடித்தது பிடிக்காதது?

அன்பு நேயர்களுக்கு வணக்கம்.சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த முறை நான் நமது தளத்தைப் பற்றி உங்களுடன் உரையாடலாம் என்று நினைக்கிறேன். அதாவது பொதுவாக அறுசுவை தளத்தைப் பொருத்தவரையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும் அல்லவா ஆகவே இதில் பிடித்தது பிடிக்காத்து என்னென்ன என்று உங்கள் கருத்துக்களைக் கூறக் கேட்க்கலாம் சரீங்களா. அதன் முதற்கட்டமாக என்னுடைய விமரிசனத்தை எழுதிவுள்ளேன் நீங்களும் உங்கள் விமரிசனங்களை கூறலாம்,ஒரே ஒரு நிபந்தனை இது நமது தளத்தை பற்றிய விமரிசனம் என்பதால் அதை மட்டுமே அடிப்படையாக உங்கள் கருத்துக்கள் இருக்கவேண்டும். யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு எந்த விமரிசனமும் தர வேண்டாம் பொதுவான அம்சங்களை மட்டும் கூறினால் போதும். அதாவது தளததில் பிடித்தது பிடிக்காதது இரண்டே வரிகளில் இருந்தால் கூட போதும். உதாரணத்திற்க்கு எனது விமரிசனத்தை பார்த்துக்குங்க சரிங்களா,எத்தனை இருந்தாலும் எழுதுங்க.வாங்க வந்து உங்க கருத்துக்களை பதிவுச் செய்யுங்க நன்றி.

அறுசுவை தளததில் உள்ள அனைத்துமே பிடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள்:
1. மொழி: அறுசுவை தளம் முழுவதும் தமிழ் மொழியில் உருவாகியுள்ளதால் மிகவும் பிடிக்கும்.
2. மன்றம்: உலகத்தில் வாழும் அனைத்து முக்கியமாக எமது தமிழ் இனத்தவருடன் எண்ணற்ற தலைப்புகளில் உரையாடி மகிழமுடிகின்றது என்பதால் பிடிக்கும்.
3. கூட்டாஞ்சோறு: வெறும் சமையல் மட்டுமே செய்துக் கொண்டிருந்த எனக்கு அதை குறிப்பு வடிவில் உருவாக்கி அதை மற்றவர்களுக்கும் வழங்க உதவிய பகுதி என்பதால் மிகவும் பிடிக்கும்.
4. பிறந்தநாள் வாழ்த்து பகுதி: உறுப்பினர்களை கெளரவிக்கும் விதமாக தினமும் நேயர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பது தினமும் பிடிக்கின்றது.
5. வாக்கெடுப்பு: நல்ல சுவாரசியமாகவும் அதே நேரத்தில் நன்கு சிந்திக்க வைக்க கூடிய பகுதியாதலால் அதுவும் மிக பிடிக்கும்.

பிடிக்காதவை என்றால்:
1. ஆங்கிலத்தில் வரும் பதிவுகள்,
2. ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதும் பதிவுகள்
3. எழுத்துப் பிழைகளுடன் உள்ள குறிப்புகள்,
4. ஆணை பெண்ணாகவும்,பெண்ணை ஆணாகவும் தன்னை சித்தரித்து கொண்டு வரும் பதிவுகள்.
5. சகிப்பு தன்மையில்லாமல் நடக்கும் உரையாடல்கள்.
6. முகப்பில் சமீபத்திய கருத்துக்கள் பகுதி.

பின் குறிப்பு: அட்மின் அவர்களுக்கு நமது தளத்தைப் பற்றி நேயர்களின் விமரிசனங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளவே இந்த பதிவு.மேலும் எங்களின் குறை நிறைகளை நீங்கள் அறிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு,ஆனால் இது வேறு ரூபத்தில் சென்று பிரச்சனையை உண்டாக்கும் என்று கருதினால் நீக்கிவிடவும் நன்றி.

அறுசுவையில் எனக்கு மிகவும் பிடித்தது
1.யாரும் சமைக்கலாம் - சமையலே தெரியாத எத்தனையோ பேருக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். இது போல் தெளிவாக, சமையலை, கிளாஸ் போய் கற்றுக் கொள்வதுபோல் படங்களுடன் விளக்கும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. இதன்மூலம் சமையல் நன்கு தெரிந்தாலும்கூட, சிலரது சமையல் ஸ்டைல், அவர்கள் உபயோகிக்கும் பாத்திர டிசைன், காய்கறி நறுக்கி இருக்கும் ஸ்டைல், பிரசண்டேஷன் என்று பலவற்றையும் அறிய முடிகிறது.

2. மன்றம் - பலதரப்பட்ட விஷயங்களை கேள்வியாகவும் கேட்கலாம். தெரிந்தவற்றை மற்றவருக்கு பயன்படுமாறு சொல்லலாம்.ஒரு நோய்க்கு இத்தனை வீட்டு வைத்தியங்கள் வழக்கத்தில் இருக்கிறது என்று அறிந்துக்கொள்ள முடிகிறது. தோட்டம், உணவு, நாடுகள் என்று இங்கே நிறைய விஷயம் பேசறதால இது சமையலுக்கு மட்டுமான தளமா இல்லாம இருக்கறது பிடிக்கும்.

3. லே அவுட் மற்றும் டிசைன் - அறுசுவையின் கண்ணை உறுத்தாத, எழுத்துக்களை தெளிவாகக் காட்டும் நேர்த்தியான போல்டு டிசைன் மிகவும் பிடிக்கும்.ஜிகு ஜிகு கலரிங் இல்லாமல் அதே சமயம் விண்டோ சைசை சிறியது பண்ணாலும் Content மாறாமல் தெரிவது(இது அட்மின் சொல்லித்தான் நானே பார்த்தேன்). ஆபிசில் சைடில் வெச்சுட்டு படிக்க ரொம்ப ஈசியா இருக்கும்.

4. நீங்களும் செய்யலாம் - இதுவும் படங்களோடு கற்றுக் கொள்ள ஈசியாக இருப்பதால் மிகவும் பிடிக்கும்.

5. தமிழ் எழுத்துதவிப் பக்கம் - எனக்கு முதலில் தமிழ் டைப்பிங் பழகியது இந்தப் பக்கத்தின் மூலம் என்பதாலும், என்னைப் போலவே முதலில் பலரும் தமிழ் டைப்பிங் பழக நெட்டில் தேடாமல் இங்கேயே க்ளிக்கிக் கொள்ள ஏதுவாக முதல் பக்கத்திலேயே வைத்திருப்பது பிடிக்கும்.

6. அறுசுவை மூலம் கிடைச்ச நண்பர்கள். அறுசுவைன்னு பொதுவா இல்லாம இதில் பங்கெடுத்துக்கற நிறைய பேரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டது பிடிக்கும். ஜானகியின் பொறுமையான பேச்சு, தளிகாவின் மனதில் பட்டதை தயங்காமல் அப்படியே சொல்லும் பேச்சு, மனோஹரி மேடத்தின் துணிச்சலான, தனக்கு தெரிந்ததை அடுத்தவருக்கும் சொல்லணும்னு நினைக்கற குணம், ஜெயந்தி மேடத்தின் கதை சொல்ற அழகுத் தமிழ், செல்வி அக்காவின் தன்னம்பிக்கை, ஹேமாவின் நகைச்சுவை, சப்ஜெக்ட் மட்டும் பேசும் Dsen, அஸ்மாவின் வீட்டு வைத்தியங்கள், அதிராவின் இலங்கைத் தமிழ், நர்மதாவின் தெளிவான சமையல், கைவேலை செய்முறைக் குறிப்புகள், சரஸ்வதி மேடத்தின் செட்டிநாட்டு சமையல் குறிப்புகள், ஜலீலா அக்காவின் கலகல பேச்சுன்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்.

அறுசுவையில் பிடிக்காதது இதெல்லாம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இதையெல்லாம் சரி செய்ய அட்மின் மனது வைப்பதைக் காட்டிலும் உறுப்பினர்கள்தான் மனது வைக்க வேண்டும்.

1. அரட்டை என்ற பெயரில் யாருக்கும் பயன் தராத விஷயங்களான காலையில் டிபன் சாப்பிட்டீங்களா போன்ற கேள்விகளை மன்றத்தில் கேட்டுக் கொள்வது.

2. பெண்கள் என்றால் அரசியல், நகைச்சுவை,பொது அறிவு போன்றவை அதிகம் பேச மாட்டார்கள் என்பதை நிரூபிப்பதுபோல அதனைப் பற்றி அதிகம் யாரும் அதிகம் கலந்துரையாடாதது.

3. எண்ணிக்கைக்காக குறிப்புகளை கொடுத்து தள்ளுவது. அது செய்து பார்த்ததா என்பதனை படிக்கும்போதே சொல்லி விடலாம். தப்பும் தவறுமாக வேறு பொருள் வரும்படி சமையல் குறிப்புகளை டைப் செய்வது. அரட்டையிலோ, மன்றத்திலோ இவ்வாறு இருந்தால்கூட பரவாயில்லைன்னு சொல்லலாம். எல்லாருக்கும் பயன்படும் குறிப்பினை இப்படி எழுதுவதற்கு, அதனை மற்றவர்கள் படித்து புரியாமல் விழிப்பதற்கு இவர்கள் குறிப்புகளை எழுதாமலேயே இருந்துவிடலாம்னு தோணும்.

4. தமிழ் தெரிந்துக் கொண்டே ஆங்கிலத்தில் டைப் செய்வது. தப்பும் தவறுமாக அடித்தாவது தமிழை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றில்லாமல் எனக்கு தப்பாகத்தான் வரும் என்று சொல்லிவிடுவது. இதற்காகவென்றே தப்பும் தவறுமாக ஒரு பதிவைப் போட்டு பார்த்தீர்களா எனக்கு வரவில்லை என்பது. தளிகா மலையாளப் பெண்ணாக இருந்து இன்று நன்றாக தமிழ் டைப்பிங் செய்யும்போது , தமிழ் தெரிந்தவர்களுக்கு மிகவும் எளிதுதானே. மொழிப்பற்று இருந்தால்தானே நாட்டுப் பற்று வரும். ஏன் நம்மவர்கள் அதனை உணருவதில்லை?

5. 2 பெண்களுக்கு மேல் இருந்தால் சண்டை, சச்சரவுதான் என்று சொல்வதை உண்மையாக்குவது போல எதனையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல், அவதான் மிஸ் காப்பி அடிச்சான்னு சொல்ற ஸ்கூல் பசங்க மாதிரி அட்மின் உயிரை வாங்குவதுன்னு நிறைய விஷயம் பிடிக்காது. சில சமயம் வெப்சைட்டிலேயே இப்படி இருக்கிறார்களேன்னு சிரிப்பாக்கூட இருக்கும். சிறு வட்டத்திலிருந்து இவர்கள் எப்போது வெளிவருவார்கள் என்று இருக்கும்.

6. வாக்கெடுப்பில் நடக்கும் விவாதங்களை என்னவோ கடவுள் கொடுத்த தீர்ப்பாக எண்ணி விரோதமாக பேசிக் கொள்வது, கருத்துக்களை தைரியமாக சொல்லாமல், வேறு பெயரில் வந்து சொல்வது பிடிக்காது.

7. பிறந்த நாள் பகுதி என்று இருந்தும் தனியாக நீளமாக ஒரு தலைப்பைப் போட்டு பதிவு செய்வது. அதில் உறுப்பினர்கள் இல்லாதவர்களின் பிறந்த நாள் பகுதி என்றாலும் தலைப்பை சிறியதாக வைக்கலாமே.

இன்னும் பிடிச்ச, பிடிக்காத லிஸ்ட் நிறைய இருக்கு. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

மனோகரி...! எப்படி இருக்கீங்க? நல்ல தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள்.

முதலில் எனக்கு பிடித்தவைகளை சொல்கிறேன்.

1. ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக தெளிவாக பிரித்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. நாம் எந்த பிரிவை பார்வை இட வேண்டுமோ அதனுள் சுலபமாக செல்லமுடியும். அதை எப்படி சொல்வதென்றால் ........ ப்ரஸன்டேஷன் நன்றாக இருக்கிறது.

2. அருசுவை உறுப்பினர்களுக்கு கொடுத்திருக்கும் கரைக்டான சுதந்திரம் பிடிக்கும். அளவுக்கு அதிகமாக போய்விடாமல் அவ்வப்போது செக் வைப்பதும் பிடிக்கும்.

3. தளம் முழுவதும் தமிழில் இருப்பது பிடிக்கிறது.

4. என்னை கேட்டால் அறுசுவையின் தனிப்பட்ட சிறப்பே ' சமீபத்திய பதிவுகள் ' பிரிவுதான் என்பேன். இந்த வசதி மற்ற எந்த வலை தளத்திலும் இருப்பதாக தெரியவில்லை.

5. மற்றபடி புதிதாக திருமணமாகி செல்லும் பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் நல்ல ஆலோசனைகளை தரும் தோழியாக விளங்குவது.

6. யாரும் சமைக்கலாம் பகுதி நிறைய பிடிக்கும். இவ்வளவு தெளிவாக சரியான கோணத்தில் சரியான தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களுடன் கூடிய விளக்கம் கண்ணுக்கு இதமாக இருக்கிறது. க்ளோசப் என்ற பெயரில் மிக அருகில் புகை மூட்டத்துடனுடன் கூடிய ஷேக்கான படங்களாக இல்லாமல் இருப்பது அருசுவையின் சிறப்பா அல்லது திறமையான உறுப்பினர்களின் சிறப்பா என்று தெரியவில்லை.

7. முக்கியமான ஒன்று. தமிழ் எழுத்துதவி பக்கம். மிக, மிக உபயோகமான பகுதி.

8. இன்னும் வெளிநாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிரமங்களையும், சந்தோஷங்களையும் நாம் இங்கிருந்தே தெரிந்துகொள்ளமுடிகிறது.

எனக்கு பிடிக்காதவைகள் என்று கேட்டால்...

1. சில நேரங்களில் அருசுவையை திறக்கமுடியாமல் சிரமப்படுவது.

2. ஆங்கிலத்தில் எழுதுவது பிடிக்கவில்லை. அறுசுவையில் பங்கு கொள்கிறார் என்றால் தமிழ் தெரியும் என்றுதானே அர்த்தம்..! தமிழில் எழுதி இருப்பதை படிக்கமுடிகிறது என்றால் எழுத்துதவி பக்கத்தின் துணையோடு தமிழில் டைப் பண்ண முடியும் தானே? பிறகு ஏன் ஆங்கிலம்? டைப் பண்ணுவதை கற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமை இல்லையா அல்லது திறமை இல்லையா?

3. அறிந்துகொள்வோம் பகுதியில் வெகு காலமாக அந்த கேரட் படமும், செய்தியும் இருப்பது. வேறு மாற்றலாமே...

ஹலோ டியர் தேவா எப்படி இருக்கீங்க? இந்த பதிவிற்க்கு பதில் வருமா வராதா என்று சந்தேகமாய் இருந்தேன் ஆனால் உடனே வந்திருந்த தங்கள் கருத்தைப் பார்த்ததும் சந்தோசமாய் இருந்தது. உங்களுடைய விமர்சனங்கள் அனைத்தும் நிச்சயம் நமது தளத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று கருதுகின்றேன் மிக்க நன்றி.இன்னும் இது போன்றே நிறைய பதிவுகளை காணவும் ஆவலாய் உள்ளது. ஆமா.....நான் யாருடைய பெயரையும் குறிப்பிடக் கூடாது என்றுதானே நிபந்தனை போட்டிருந்தேன் வரிசையாக ஒரு பெரிய பட்டியலையே கொடுத்திருக்கீங்க, உண்மையைச் சொல்லனும்னா அதற்க்கென்று வேறொரு இன்ட்ரஸ்டிங்கான தலைப்பு வைத்திருந்தேன் சரி போகட்டும் விடுங்க.உங்களுக்கு பிடிக்காத விசயங்களை நகைச்சுவையுடன் எழுதியது சிரிப்பை வரவழைத்தது, அதிலும் வரிசை எண் ஏழாவதை பார்த்ததும் வாய்விட்டு சிரித்துவிட்டேன் நடுராத்திரியில் தனியாக சிரித்துக் கொண்டிருந்ததை டைகர் முறைத்து பார்த்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஒகே டியர் மீண்டும் சந்திப்போம் நன்றி.

ஹலோ மாலதி நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோடு மீண்டும் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தலைப்பில் உங்கள் கருத்துக்களை கூறியுள்ளதற்கு மிக்க நன்றி. உங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் மிகவும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள் அருமையான கருத்துக்கள். உங்களுக்கு பிடிக்காதவையில் வரிசை எண் இரண்டில் கூறியுள்ள உங்க கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நன்றி மாலதி மீண்டும் சந்திப்போம்.

பிடித்தது

1. யாரும் சமைக்கலாம் பகுதி எனக்கும் பிடிக்கும் இதில் படத்துடன் , ஒவொரு கட்டமாக விளக்குவது,ஒரு சில பொருட்கள் நமக்கு பேர் மட்டுமே தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும் என்று தெரியாது அதை படத்துடன் பார்த்து தெரிந்து கொள்வது.
2. மன்றத்தில் பல தரப்பட்ட விசயங்களை பற்றி உரையாடுவது நிறைய விசயங்கள் இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
3. அரட்டை இதில் பேசுவதன் மூலம் நான் தனியாக இருப்பது போன்று உணர்வதில்லை நிறைய பேர் என்னுடன் பேசுவது போன்று உணர்கின்றேன்,நம்மில் பல பேர் வெளிமாநிலத்திலோ அல்லது வெலிநாட்டிலோதான் இருக்கிறோம் அதில் நிறை பேர் அருகில் தமிழ் தோழிகள் இல்லாதவர்களே அவர்கள்க்கு இந்த மன்றம் ஒரு மன அழுத்தத்தை போக்கும் இடமாகவே நான் கருதுகிறேன்.
4.கூட்டாஞ்சோறு பகுதியில் எத்தனை குறிப்புகள் இதை பார்த்து வித விதமாக சமைப்பதில் எத்தனை சந்தோஷம். ஒரு சில உணவுகள் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருந்ததை நாமே சமைத்து சாப்பிட்ட சந்தோஷம்.
5. தமிழில் ஒரு இணையதளம்,முற்றிலும் தமிழிலேயே இருப்பது, நம்முடைய கருத்துக்கள் தமிழில் மற்றவர்களுக்கு சென்றடைவது.
6. பிறந்தநாள் பகுதில் நேரில் பார்க்காதவர்களைகூட வாழ்த்துவது.

பிடிக்காதது

1.ஏதொவொன்று என்று தேவை இல்லாததை பதிவு செய்வது.
2. ஆங்கிலத்தில் பதிவு செய்வது.
3.உணர்ச்சிவசப்பட்டு பொது மன்றத்தில் தேவையில்லாத வார்த்தைகளை உபயோகபடுத்துவது.

எனக்கு தெரிந்து குறைகள் சிலவே
இது எனது தனிப்பட்ட கருத்து இந்த வார்த்தைகள் யாரையாவது காயப்படித்திருந்தால் மன்னிக்கவும்.

மனோகரி கலக்கறீங்க போங்க.

பிடிச்சது

1. தமிழ் தளம் - எனக்கு தமிழ் மேல் இருக்கும் காதலை ஏற்கனவே சொல்லி இருக்கேன். தாய்மொழியில் பேசுவதால் ஒரு அன்னியோன்யம், நெருக்கும் ஏற்படுவதை உணருகிறேன்.
2. தமிழ் எழுத்துதவி.
3. யாரும் சமைக்கலாம்.
4. சமீபத்திய பதிவு - கொஞ்ச நாள் வராம இருந்துட்டு திரும்பி வரும்போது நமக்கு வந்த பதிவுகளை தெரிந்து கொள்ள உதவுவதால். அப்படியும் சில நேரங்களில் கோட்டை விட்டுவிடுகிறோம்.
5. முகம் தெரியாத சினேகிதம்.
6. சிலர் தங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் கொடுத்திருப்பது (ப்ரொபைலில்)
7. சிலர் தங்களுடைய புகைப்படம் கொடுத்திருப்பது. (மனோகரி என்று நினைத்தவுடன் அவர் முகம் மனக்கண்ணில் தோன்றுவதால்).
8. நமக்குத்தெரியாத நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.
9. அனுபவமே அறிவு. அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.
10. ரொம்பப்பிடித்தது - இவ்வளவு குட்டித்தங்கைகள் கிடைத்தது.
11. வெளிநாட்டில் தனிக்குடித்தனம் நடத்தும் பெண்களுக்கு ஒரு அருமையான கைடு.
12. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இங்கு வந்து உரையாடலில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.
13. முன்பு வாரா வாரம் பட்டங்கள் கொடுத்தது பிடித்திருந்தது.
14. முக்கியமாக யாரிடமும் இந்தத் தளத்திற்கு வாருங்கள் என்று பரிந்துரைக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

பிடிக்காதது

1. ஆங்கிலம் மற்றும் தங்கிலீஷ்
2. எழுத்துப் பிழைகள்
3. சின்ன விஷயத்துக்குக்கூட கோபித்துக் கொள்வது. (பரவாயில்லை. எல்லாரும் சின்னப் பெண்கள்தானே).
என் அம்மா சொல்லுவது "சொல் பொறுக்காத செல்வகுமாரி"
4. ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கும் தளத்தில் மூக்கை நுழைத்து அச்சுப்பிச்சென்று ஏதாவது சொல்வதற்காகவே உள்நுழைவது.
5. தேவையில்லாத கேள்விகள். புதிதாக வரும் தோழிகள் தளத்தை ஒன்றிரண்டு நாட்கள் நிதானமாக பார்த்துவிட்டு பிறகு பங்கு கொள்ள ஆரம்பித்தால் தேவையில்லாத கேள்விகள் வராது. (நான் இதே தவறைச் செய்திருக்கிறேன்).
மனோகரி இப்படி ஒரு பதிவு ஆரம்பித்ததற்கு நன்றி. முதலில் நான் என்னைப் பற்றி அறிந்து கொள்ள அதாவது நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதையும் திருத்திக் கொள்ள கண்டிப்பாக இந்தப் பதிவு உதவும்.

ஒன்று புரிகிறது. பிடிக்காதது என்று குறிப்பிட்டவற்றை பிடித்தவையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

இன்னும் வரும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? எனக்கு இந்த சைட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏன்னா? நான் இங்க வந்து கொஞ்சம் நாள் தான் ஆனா நிறைய விஷயங்க என்ன இம்ப்ரஸ் பண்ணியிருக்கு. நிறைய பெரியவங்க இங்க இருக்காங்க,
ஆனா நான் முந்திரி கொட்டை மாதிரி முந்திகிட்டு வந்து பதில் கொடுக்கறேன்னு யாரும் கோவிச்சுக்க வேண்டாம்.
பிடித்தது:
1. தமிழில் ஒரு இணையத்தளம் கிடைக்காதான்னு தேடிகிட்டு இருந்தேன் பார்த்தா அறுசுவையோ எல்லாமே தமிழில் இருந்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷம் அதற்கு நான் நிச்சயம் அட்மின் சார தான் பாராட்டனும்.
2. first impression is the best impression ன்னு சொல்லுவாங்க அறுசுவைய திறந்தவுடனே வரும் அந்த பேஜ் ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டிருக்கு.
எனக்கு டெக்னிகலா அவ்வளவா தெரியாது ஆனா அட்மின் சைட்ட இன்னும் கொஞ்சம் கலர்புல்லா மாத்தலாமே. தவறா இருந்தா மன்னிக்கவும்.
3. இத சொல்லாம இருக்கவே கூடாது, யாரும் சமைக்கலாம் பகுதி சூப்பரோ சூப்பர். தெளிவான படம் அதோட அந்த விளக்கம் என்னை போல உள்ள சமையல் மக்குகளுக்கும் தெளிவா புரியும்.
4. தனித்தனியா ஒவ்வொன்றையும் கேட்டகிரி(category) பிரித்து வைத்திருப்பது, எதையாவது தேடினா ஈஸி எடுக்கற மாதிரி இருக்கு.
5. அறுசுவை ஒரு சமையல் என்சைக்லோபிடியா.
6. மன்றம்: 6 லிருந்து 60 வரை நீங்க எது பற்றி வேண்டும்னாலும் இதுல கேட்கலாம், சமையல், ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சைகள், பொது பிரச்சனைகள், குழந்தைகள் ஆரோக்கியம், உணவு, ஆன்மீகம், பொழுது போக்கு, அழகு குறிப்பு இப்படி
எல்லாத்தையும் பத்தி பேசுறது ரொம்ப ரொம்ப சிறப்பு.
7. தாய் மடி போல ஒரு அரவணைப்பு இங்க உள்ள அத்தனை பேரும் என்னவொரு அன்பான ப்ரண்ட்ஸ், அன்பான அம்மாக்கள், அக்காக்கள், தோழிகள். நிச்சயம் திருமணம் ஆகி போன அப்பறமும் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த தளத்தையோ, இங்கு
உள்ளவங்களையோ நான் மறக்க மாட்டேன்.

பிடிக்காதது:
1. அன்பு, தோழைமையை மறந்து மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசுவது.தேவையில்லாமல் பேசுவது.

முதலில் மனோகரி மேடத்துக்கு நன்றி நல்ல சப்ஜெக்ட்.
ஒன்று நான் கூற விரும்புவது எனக்கும் தமிழ் தப்பாக வரும் நான் தமிழில் பெர்பெக்ட கிடையாது அது அடிமினுக்கு தெரியும் வேனுமென்று நான் + யாருமே தப்பாக டைப் செய்வது கிடையாது.

இங்கு நிறய்ய சினியர்ஸ் இருக்காங்க, இருந்தாலும் எனக்கு பிடித்ததும்&பிடிக்காததும் சொல்கிறேன், தவறாக இருந்தால் நினத்தால் அதை எடுத்து சொன்னால் நன்றி.

பிடித்தது

அருசுவை தமிழில் இருப்பதலால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அருசுவையில் யாரும் சமைக்கலாம் பகுதி எனக்கு மிகவும் பிடிதது இதில் தெளிவா ஸ்டெப்ஸோட படங்களுடன் குறிப்புகள் இருப்பது.

கூட்டஞ்சோறு பகுதி நிறய்ய அனுபவசாலிகள் சமையல் & திறமை சாலிகள் குடுத்துள்ள நல்ல அளவுகளோடுள்ள குறிப்புகளும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. நான் இதில் சில என்னோட பேபரிட் ஆடக்ளின் சமையல்களை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன் அதில் அளவுகளும், சுவைகளும் ரொம்ப நன்றாக இருந்தது.மனோ மேம் சொன்னதினால் அவர்களின் பெயரை நான் இதில் கூற முடியவில்லை.

நம்ம அட்மின அவர்கள் நாம என்ன குறை & நிறை சொன்னாலும் அதை ஏற்று அதற்க்கு தகுந்தாற் போல் நமக்கு பதில் தருவது எனக்கு பிடிததது.

தற்போது நம்ம அருசுவை உடனுடன் ஒபன் ஆகிறது நன்றி அட்மின்.

அருசுவையில் திருமணநாள்,குழந்தைகளின் பிறந்த்நாள்,பிறந்தநாள், விடுமுறை நாட்களின் அட்டென்ஸ் போன்ற நல்ல விஷயங்கள்.

அரட்டை அரங்கத்தில் நல்ல விஷயங்களை பற்றி நாம் நிறய்ய தெரிந்து கொள்ள முடிகிறது நிறய்ய புதிய முகங்களின் கருத்துகளும் நட்புகளும்.

மருத்துவம்,அழகு,தோட்டம்,இன்னும் நிறய்ய தலைப்புகளுடன் கூடிய பயனுள்ள பல குறிப்புகள்.

எல்லாவற்றிற்க்கும் மேல் எழுத்தழுதவி என்னை போல் தமிழ் டைப் செய்வதற்க்கு உதவியது.

ரொம்ப பிடித்தது எனக்கு இந்த அருசுவை வழியா நிறய்ய தோழிகளின் நட்பு கிடைதது. ( நன்றி அட்மின் & அருசுவை)

அடுத்தாக சொல்ல வேண்டுமென்றால் குறிப்புகளை பார்த்து& செய்து பார்த்து பதிவு போடுவபர்களை நினத்து பெருமை & சந்தோஷம் நல்ல உள்ளங்களை நினத்து.

எதிர் பார்ப்பது நல்ல கலர்புல்லா டார்க &லைட் கலரில் அருசுவை வந்தால் மேலும் பார்க்க நன்றாக இருக்கும் எனோட கருத்து. அந்தகால ப்ளாக்&வெயிட் படம் பார்ப்பது போல் இருந்தாலும் ஒல்ட் இஸ் கோல்ட் இதுவும் நன்றாக தான் இருக்கு. இப்ப இருக்கிற நடைமுறையில் கலர்புல்லா இருந்தால் கொஞ்சம் கூட அருசுவை நன்றாக இருக்கும். ( ஸாரி அட்மின் என்னோட கருத்து தவறாக எடுக்காதிங்க)

பிடிக்காது

அருசுவை எப்பாவது மக்கர் பன்னுவது

அடுத்தாக இந்த அருசுவையில் சிலர்கள் நாம் ஏன் இவங்க குறிப்புக்கு பதிவு போடனும் ( இன்னும் சொல்ல போனால் அவங்க கண்டிப்பா படித்து இருப்பார்கள் ) ஆனல் அதை பகிர்ந்துக்காமல் இருக்கிறவர்களை, உண்ம்யிலேயே டைம் இல்லாமல் இருந்தால் நல்லது ஆனால் இது என்ன ரெசிப்பி நான் இதைவிட நல்ல செய்வேன் என்று அலட்டி கொள்வது,

சில சினியர்ஸ் நாம தான் இந்த அருசுவையில் தலைவி நாங்க தான் அருசுவையை வளர்த்துள்ளோம் என்பது போல் இருக்கும் சில நபர்களை ஒருசிலர் ஜோக்காவே கூட சொல்லியிருக்கிறார்கள்,எல்லாரும் ஒன்று என்று எண்ணம் வராமல் இருக்கும் நெஞ்சங்களை நினத்து. ஆனால் அட்மின் அந்த மாதிரி எந்த இடத்திலும் சொல்லவில்ல. உறுப்பினர்கள் தான் இப்படி சொல்வது காதில் விழுகிறது சில ஜுனியர்ஸுக்கும் ஆர்வமுட்ட வாய்ப்பு குடுக்க வேண்டும்.

குறிப்புகள் பிடித்து இருந்தும் பதிவு போடமல் இருப்பது

சம்பந்தமே இல்லாமல் வந்து பதிவு போடுவது சிலர் அவங்க மட்டும் தான் பெர்பெக்ட் என்று காட்டி + அலட்டி கொள்வது.

சிலர் எங்கு இருந்தோ கட்&பேஸ்ட் செய்து இதில் குறிப்புகள் & டிப்ஸ் கொடுப்பது& அதை மறைப்பது.
அப்படி குடுப்பதாக இருந்தால் அந்த உரிமையாளரின் பெய்ர் அல்லது அதில் இருந்து எடுத்தது என்று போட்டால் நல்லது அதை விட்டு அபத்தமாக இதில் போடுவது சுத்த தப்பு.

சிலர் இதில் அருசுவை வழியாக கிடைத்த தோழிகளாக இருந்தும் நல்ல பழகியும் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரியாத மாதிரி இருப்பதும். இன்னும் நிறய்ய இருக்கு நான் எழுதி போரடிக்க விரும்பவில்லை.

நன்றி மனோ மேடம் இதை எங்களுக்காக இதில் ஒரு தலைப்பை போட்டு எழுத வாய்ப்பு குடுத்ததிற்க்கு.

நல்ல தலைப்பு தோழி!
பிடித்தது:
1. முழுக்க தமிழில் இருப்பது.
2. கண்ணை உறுத்தாத முகப்பு பக்கம்.
3. தனித்தனியாக பிரித்து வகைப்படுத்தி இருப்பது.
4. எழுத்துதவி.
5. சமீபத்திய பதிவுகள் - எவ்வளவு நாட்கள் கழித்து வந்தாலும் நமக்கான பதிவுகளை பார்க்க முடியும்.
6. யாரும் சமைக்கலாம் - சமையல் தெரியாதவர்களும் கற்றுக் கொள்ளும் வண்னம் தெளிவாக படத்துடன் இருப்பது.
7. கூட்டாஞ்சோறு - என்னை உலகம் முழுவதும் உள்ள அறுசுவை சகோதரிகளுக்கு அடையாளம் காட்டிய பகுதி.
8. மன்றம் - எங்கெங்கோ இருக்கும் தமிழ் சகோதரிகளை ஒன்றாக இணைப்பதால்.
9. அட்மினும் அப்பப்ப வந்து மன்றத்தில் கலந்து கொள்வது.
10. யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும் ஆறுதல் சொல்லும் சகோதரிகளின் பாங்கு, ஒவ்வொருவரையும் வாழ்த்துவதில் முன் நிற்கும் நல்ல மனங்கள்.

பிடிக்காதது:
1. ஆங்கிலத்தில் பதிவுகள் - ஆங்கிலத்தில் பதிவு இருந்தால் படிக்கவே மாட்டேன். தமிழ் தெரிவதால்தானே இத்தளத்திற்கே வரமுடிகிறது. அப்பறம் தமிழில் டைப் அடிக்க என்ன கஷ்டம்? (எனக்கு தெரிந்து எல்லோரும் பிடிக்காததில் இதை சொல்லி இருக்கிறார்கள்).
2. உறுப்பினர் அறிமுகம் பக்கத்தில் ஒன்றுமே கொடுக்காமல் காலியாக இருப்பது. அவ்வளவு பயம் இருப்பவர்கள் ஏன் பதிவு செய்ய வேண்டும்? (இல்லைன்னா, மாற்றுப் பெயரில் வருபவராக இருக்க வேண்டும்)
3. தேவையில்லாத விவாதங்கள், குற்றச்சாட்டுகள்.
4. அவ்வப்போது எழும் மதத்தைப் பற்றிய பிரச்னைகள். இது முழுக்க, முழுக்க தமிழ் தளமாகவே இருக்கும் போது, வேறு மொழி வார்தைகளால் பிரச்னை வருகிறது எனும் போது, அதை எதற்கு பயன்படுத்த வேண்டும்? ( வேறு ஒரு தமிழ் தளத்தில் அந்த வார்த்தைகளை தவிர்க்க சொல்லி என்ன அழகாக சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா? அதையும் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். இங்கு போல் அங்கு விவாதிக்கவில்லை).
இன்னும் வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பிடித்தது.

1. தளம் தமிழில் இருப்பது.
2. என்ன பிரச்சனை என்றாலும் மன்ற தோழிகளிடமிருந்து தீர்வு தரும் யோசனைகள்.
3. எண்ணிலடங்கா குறிப்புகள்.
4. தமிழரை ஒருங்கினைக்கும் தளமாக இருப்பது.

பிடிக்காதது.

1.உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லும் கருத்துக்கள்.
2.தமிழில் வேகமாக அச்சடிக்க முடியாதது.(அது எனது பிராபளமோ?)
3. சிலரின் பிடிவாதத்தால் அவ்வப்பொழுது எழும் பிரச்சனை.

மேலும் சில பதிவுகள்