மாவுகளைப் பற்றிய சந்தேகம்

அறுசுவை தோழிகளே என் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள்.
1.செல்ஃப் ரெய்சிங் (self raising flour)மாவில்,பேக்கிங் பவுடர் மட்டும்தான் கலந்திருக்குமா?இல்லை பேக்கிங் சோடாவும் கலந்திருக்குமா?
2.மைதா என்பது உண்மையில் என்ன?
3.ஆல் பர்பஸ் ஃப்ளோர் (all purpose flour) என்பது என்ன?
4.ப்ளெயின் ஃப்ளோர் (plain flour) என்பது என்ன?

இன்னும் ஒரு கேள்வி
செல்ஃப் ரெய்சிங் (self raising flour)மாவில் பரோட்டா செய்யலாமா?
இநத கேள்விகளுக்கு தோழிகள் மட்டுமல்ல தோழர்களும் பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பை கொஞ்சம் கேள்விக்கு ஏற்றபடி மாற்றிவிடுங்க அனு... அப்பத்தான் பலரும் பார்ப்பாங்க. உங்களுக்கும் பதில் கிடைக்கும்.

1. எனக்கு தெரிஞ்சவரை என்னோட சின்ன முளை சொல்றது செல்ஃப் ரெய்சிங் மாவு (flour + Leavening agents) என்பது ஆல் பர்பஸ் மாவு + பேக்கிங் பவுடர் + உப்பு.

2. கோதுமை மாவு என்பது அப்படியே கோதுமையை அரைத்து தயாரிப்பது.

இதன் ரீஃபைண்ட் ப்ராடக்ட் தான் மைதா / ஆல் பர்பஸ் மாவு / ப்ளெய்ன் மாவு (plain flour... flour without Leavening agents) என்பது. அதாவது உமி தவிடு என எல்லாம் நீக்கப்பட்டு மென்மையான மாவாக மாற்றப்பட்டது. செக்கில் ஆட்டிய எண்ணெய்க்கும், ரீஃபைண்ட் ஆயிலுக்கும் உள்ள வித்தியாசம் தான் இவை இரண்டுக்கும்.

3 & 4. கடைசி இரண்டு கேள்வி... நம்ம ஊரில் இரண்டும் ஒன்றே தான். ஆனால் சில நாடுகளில் இவை இரண்டும் வேறாக இருக்கும் என்பார்கள். காரணம் அரைக்கும் விதம். ஆல் பர்பஸ் மாவு என்பது ப்ளெய்ன் மாவை விடவும் சற்று ப்ரோடீன் கண்டண்ட் அதிகம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கேக் செய்யலாமென்று மைதாவைத் தேடப்போய் அதைத்தவிர வித விதமான மாவுகள் கண்ணில் பட்டதினால் வந்த கேள்விகள் இவை.

நானும் இதை அனுபவிச்சிருக்கேன் ;) சிரியாவில் வித விதமா இருக்கும், சர்க்கரை கூட அப்படித்தான். எது எதுன்னு புரியாம ஒரு முறை படிச்ச படிப்பு தான் இன்னைக்கு பதில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//1.செல்ஃப் ரெய்சிங் (self raising flour)மாவில்,பேக்கிங் பவுடர் மட்டும்தான் கலந்திருக்குமா?இல்லை பேக்கிங் சோடாவும் கலந்திருக்குமா?//
பேக்கிங் பவுடர் = பேக்கிங் சோடா + க்ரீம் ஆப் டாட்டர் + கொஞ்சம் சாதாரண மா (இது corn flour / அல்லது வேறு ஏதாவதாகவும் இருக்கலாம்.)
எதிலாவது பேக்கிங் பவுடர் இருந்தால் பேக்கிங் சோடா இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இதுல ப்ளெய்ன் பட்டர் கேக், ஸ்பஞ்ச் போன்ற பாரமில்லாத கேக்குகள் செய்யலாம். பாரமான கேக்குகள் பொங்குவதற்கு சிரமப்படும். நன்றாக இராது. பிஸ்கட் செய்யலாம். பான்கேக், பைக்லட் செய்யலாம். தோசை வார்க்கலாம்.

//2. மைதா// எனக்குத் தெரியாது. இலங்கைல இருந்த வரை ஒரே மா - கோதுமை மா. குறிப்பில் அரிசி மா என்று குறிப்பிடாமல் ஏதாவது மா என்று இருந்தால் எனக்கு அது கோதுமை மாதான். அதாவது இங்கு கிடக்கும் plain flour.

//3.ஆல் பர்பஸ் ஃப்ளோர் (all purpose flour) என்பது என்ன?// இங்க உள்ள சூப்பர் மார்க்கட்டில் ஆல் பர்பஸ் மாவு என்று ஒன்று இது வரை நான் காணவில்லை. என் விளக்கம்... வனி சொன்னது போல்... இது plain flour தான். இதுல மா தவிர வேற எதுவுமே இல்லை. உமி, தவிடு, ரெய்ஸிங் ஏஜண்ட் ப்ளீச் எதுவுமே இல்லை. (இங்க ப்ளீச்சிங் செய்த மா விற்கிறது சட்டப்படி குற்றம்.) இதுல என்ன வேணுமானாலும் பண்ணலாம். பைக்லட், பான் கேக், பிஸ்கட், கேக், பை, ரொட்டி, ரோல், பீட்ஸா பேஸ் எது வேணுமானாலும் பண்ணலாம்.

ப்ரெட் செய்ய high grade flour பயன்படுத்துவோம். plain flour ப்ரெட் நன்றாக வராது.

//செல்ஃப் ரெய்சிங் (self raising flour)மாவில் பரோட்டா செய்யலாமா?// நான் ரொட்டி செய்வேன். பீட்ஸா பேஸ் கூட செய்வேன். என் நாவுக்கு மெல்லிதாக சுருசுரு என்று பேக்கிங் சோடா சுவை தெரியும். ;(
பரோட்டா - நிச்சயம் செய்யலாம்.

மேலே நீங்க கேட்டிருந்ததை விட வேற பெயர்களிலும் மா இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நாட்டுக்கு நாடு வித்தியாசம் வருது. சிரியாவிலும் கோதுமை மாவு என்றால் அது ப்ளெய்ன் மாவு தான். இந்தியாவில் கிடைப்பது போல இருக்காது. வெண்மையாக இருக்கும். அதில் சப்பாத்தி செய்தால் மைதாவில் செய்வது போல இருக்கும்.

இந்தியாவில் மைதா / ஆல் பர்பஸ் மாவு / ப்ளெய்ன் மாவு - எல்லாம் ஒன்னு தான். ஒரு வேளை ரொம்ப பெரிய சூப்பர் மார்க்கட்டுகளுக்கு போனால் வித்தியாசம் கண்டு வாங்கலாம். கோதுமை வேறு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பேக்கிங் பவுடர் = பேக்கிங் சோடா + க்ரீம் ஆப் டாட்டர் + கொஞ்சம் சாதாரண மா (இது corn flour / அல்லது வேறு ஏதாவதாகவும் இருக்கலாம்.)
எதிலாவது பேக்கிங் பவுடர் இருந்தால் பேக்கிங் சோடா இருக்கிறது என்றுதான் அர்த்தம்//

இமாம்மா, இங்கு அறுசுவையில் உள்ள சில தோழிகளின் கேக் செய்முறையில்,பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டுமே சேர்க்க சொல்லியிருக்கிறதே அது எதனால்?

இங்குள்ள சூப்பர் மார்க்கட்டில் ப்ரெட் செய்யவென்று மாவுகள் தனியாக உள்ளன,அதைத்தவிர இந்த மாவுகள் + அதில் white, brown என்று colour வேறு உள்ளது.

பேக்கிங் பவுடரில் பேக்கிங் சோடா இருப்பதால், பேக்கிங் சோடாவுக்கு பதிலாக கூடுதல் பேக்கிங் பவுடர் சேர்த்து பேக் பண்ணலாம். ஆனால், பேக்கிங் பவுடரில் சோடா மட்டும் இல்லையே, இன்னும் சில பொருட்களும் கலந்து இருக்கிறதே. அதனால் தேவையான அளவுக்கு மாவை உப்பி வர வைக்கவும், உப்பி வந்த கேக் மீண்டும் அழுந்தி விடாமல் இருக்கவும், கூடுதலாக சோடா மட்டும் இன்னும் சிறிது தேவைபடுவதால் சேர்க்கிறோம்.

இதுவே பேக்கிங் பவுடரை (பேஸ் (சோடா) + க்ரீம் ஆஃப் டார்டர்(ஆசிட்) + ஃபில்லர் (ஸ்டார்ச்)) சோடாக்கு பதிலாக அதிகப்படுத்தினால் மற்ற இரண்டும் கூடி அசிடிக் தன்மை கேக்கின் சுவையை பாதிக்கக்கூடும். புரிஞ்சுதா? எனக்கு இதை தமிழில் விளக்குவது கொஞ்சம் சிரமம் தான். :(

ட்ரை இங்ரெடியண்ட்ஸ் கூட பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா எல்லாம் சேர்க்கும் போது அது ரியாக்ட் பண்ணாது. கடைசியா வெட் இங்ரெடியண்ட் கூட மிக்ஸ் பண்ணும் போது ரியாக்ட் பண்ண ஆரம்பிக்கும். அதனால் தான் அதிக நேரம் கலக்கினாலோ, கலந்த பின் வெச்சிருந்தாலோ கேக் கெட்டியா அழுந்தி போய் இருக்கும். இட்லி மாவில் உள்ளே இருக்கும் காற்று மாவை அதிகம் கலக்கினால் போயிடும் தானே? அது போல... கேக்கில் இந்த கெமிக்கல் ரியாக்‌ஷன் நடந்து உள்ளே பப்புல்ஸ் ஃபார்ம் ஆகும்... கலக்கிக்கொண்டே இருந்தால் அவை காணாம போகும். வெளியே ரொம்ப நேரம் வெச்சிருந்தாலும் அந்த ரியாக்‌ஷன் அடங்கி போயிருக்கும். அதனால் தான் கலந்த உடனே முற்சூடு செய்த அவனில் வைப்பது.

- இது தான் என் மண்டைக்கு எட்டுனது :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எவ்வளவு விளக்கங்கள், தகவல்கள்... இதுக்குதான் அறுசுவை தோழிகள் வேணுங்கிறது

பைக்லட் என்றால் என்ன

மேலும் சில பதிவுகள்