குழந்தை அலர்ஜி

என் குழந்தை முகத்தில் ஒரு மாதமாக அலர்ஜியாக இருக்கு லோசன் போட்டும் சரியாக வில்லை . என்ன பண்ணறதுன்னு தெரியல .உடம்பு புல்லா பொறி பொறி யாக இருக்கு. என்ன போட்டு குளிக்க வைக்கலாம் . என்ன பிரச்சனையா இருக்கும் யாராவது உதவி செய்க. மனசு ரொம்ப கவலையாக இருக்கு .உணவு முறைல அலர்ஜி வருமா . கஞ்சி ல பாதாம் பருப்பு கொடுக்கிறோம் . அது பிரச்சனையா இருக்குமா? எனக்கு நல்ல ஒரு பதில் சொல்லுங்க . உங்க பதிலுக்கு காத்திருக்கும் அன்பு தோழி .

குழந்தை விஷயத்தில் கை வைத்தியம் வேண்டாம் டாக்டரிடம் கொண்டு போங்க பா. ஒரு மாதமாக இருக்கு என்கிறீர்கள் இன்னும் டாக்டரிடம் செல்லவில்லையா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//என் குழந்தை முகத்தில் ஒரு மாதமாக அலர்ஜியாக இருக்கு லோசன் போட்டும் சரியாக வில்லை .// என்ன லோஷன் யாரிடம் அறிவுரைப் பெற்று போட்டீர்கள். டாக்டரின் அறிவுரை இல்லாமல் குழந்தைக்கு கெமிக்கல் பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரின் தோலின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு மாதிரி மருந்து தேவைப்படும். டாக்டரிடம் உடனே காட்டுங்க. குழந்தை விஷயத்தில விளையாடாதீங்க.

//என்ன பண்ணறதுன்னு தெரியல// டாக்டர்கிட்ட காட்டியும் சரியாகலைன்னா இத accept பண்ணிக்கலாம்ங்க. ஆனால் டாக்டரிடம் ஆலோசனை பெறாமலே இப்படி சொன்னால் உங்களை என்னன்னு சொல்றது.

3 வயதுக்குள் குழந்தையின் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் பாதாம் பருப்பு 3 வயதுக்கு மேல் கொடுக்கலாம் என்று என் தோழி கூறினாள். இதைப்பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால் டாக்டரின் ஆலோசனை பெற்ற பின் பாதாம் பருப்பு கொடுங்கள்.

என் குழைந்தைக்கு ஒரு வயதாகிறது நெற்றியில் பொறி பொறியாக (வேர்க்குரு மாதிரி) இருக்கிறது. டாக்டரிடம் ட்ரீட்மென்ட் பண்ணியும் இன்னும் குறைய வில்லை. உங்களின் குழைந்தை யாருகாவது இந்த மாதிரி ப்ரொப்லெம் இருக்க? எந்தனை நாட்கள் சரியாக எடுத்துகொண்டது?

Babyku cool waterla adikadi facesa kaluvunka heat water atukathinka doctor kutuntha lotionna aply pannuka heatnala kuta entha problem varum oil path atunka

ML

மேலும் சில பதிவுகள்