குழந்தை பேறு தள்ளி போக மிக மிக முக்கிய காரணம் மனஅழுத்தம்.

ஆமாங்க. மனஅழுத்ததிலிருந்து விடுபட்டதும் எனக்கு பிள்ளை நின்றதுனு இந்த தளத்திலேயே நிறைய பேர் சொல்லியிருக்காங்க. நானும் தான். அது முழுக்க முழுக்க உண்மை. தள்ளி போக போக நமக்குள் எத்தனை கேள்விகள்? எத்தனை போராட்டங்கள் மனதில்? இதனால் நிக்கலையோ? அதனால் நிக்கலையோ? இப்படி செய்தால் தங்குமோ? அப்படி செய்தால் தங்குமோனு எவ்வளவு யோசனைகள்? மனம் படும் பாட்டை கேட்டால் நாய் கூட கண்ணீர் விடும். என்ன தான் சொல்ல வரன்னு கேட்பது கேட்கிறது. தயவு செய்து சந்தோஷமா இருங்க. அதையே நினைக்காதீங்க. நான் திருமணத்திற்கு பின் பிள்ளை வேண்டாமென்று ஒரு வருடம் தள்ளி போட்டேன். பின் நின்று கலைந்தது. கஷ்டபட்டேன். ஆறு மாதம் ஆகியது. அப்போது தான் வேண்டும் என்று ஆசைபட்டு முயற்சி செய்தோம். ஆனால் கரு தங்கவில்லை. மூன்று மாதம் கடந்தது. பயமும், மனஅழுத்தமும் என்னை ஆட்கொண்டது. டாக்டர், மருந்து, மாத்திரை, ஆகாரம் என்று எல்லாமும் மாறியது. எதுவும் நடக்கவில்லை. இணையத்தில் தேடாத வார்த்தைகள் இல்லை இதை பற்றி. அறுசுவையில் பார்க்காத பதிவுகள் இல்லை. கேட்காத கேள்விகள் இல்லை. அழதா நாட்கள் இல்லை, வேண்டாத தெய்வங்களும் இல்லை. கடைசியாக வீடு மாற நேர்ந்து சூழல், மனிதர்கள் மாறி மனம் வேறு ஒன்றை பற்றி ஆர்வம் கொண்டு அழுத்ததிலிருந்து விடுபட்ட அந்த மாதமே என் நாள் தள்ளியது. அந்த பொன் நாளும் வந்தது. இன்று என் மகன் என் மடியில். அப்பாடா கை வலிக்குது. எனவே தோழிகளே மனஅழத்திலிருந்து எப்படியாவது வெளிவர முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம்.

ஹாய் உங்களுக்கு கருகலைந்து பின் மீண்டும் குழந்தை உண்டானதா? எனக்கும் முதலில் கரு தானாக இதய துடிப்பு இல்லாமல் கலைந்து விட்டது. d&c பண்ணவில்லை. இன்னும் ஒன்பது மாதமாகியும் கரு தங்க வில்லை .அதனால்தான் கேட்டேன். நானும் மனமாற்றத்திற்காக இந்தியா வரை உள்ளேன்.

ஆமாம் பா. உங்களை போல தான் ஆனது. ஒரு வருடம் ஆச்சு கரு தங்க. கவலை வேண்டாம் நிச்சயமாக பிள்ளை உண்டாகும். அதை மறந்துவிட்டு மனதை லேசாக வையுங்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Hai ashvitha.. congrats da.... unga words romba caring ah vum aruthalaavum irukku.. nambikkaiyodu irukken pa.... Naan tour poittu vanthen.. manasu relax ah irukku... arusuvai la irukkura hand craft LA seithu paarthuttu irukken...

Home based job kaaga try panren....... maamiyaar veetuku poittu varen weekly weekly..... theiva nambikkai athigam undu... thiruchendur murugan thaan En ishtta theivam.. thinamum kantha shashti kavasam solluren.......

Kadavul arulaal, ungalai pola nalla ullangal arulaal nichayam engalukku kuzhanthai pirakkum nu nambikaiyodu irukkom...

Anbudan,
Viji

ரொம்ப நன்றி நீங்கள் கூறிய பதில் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தப்ப நினைக்க ?வேண்டாம் . உங்களுக்கு முதல் குழந்தைக்கு d&c செய்தாற்களா ? எனக்கு செய்ய வில்லை அதுவே பெரிய பயமாக உள்ளது

விஜி,
இதே போல சந்தோஷமா இருங்க. உங்களுக்கு அந்த நினைப்பே வராம பாத்துக்கங்க. நிச்சயம் நல்லது நடக்கும் விரைவில்.
சக்தி,
ஆமா பா எனக்கு டி&சி செய்யல. எதாவது சிறு துளி கருக்குழாயில் உள்ளனவா பார்க்க hsg செய்து பார்த்தார்கள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல எல்லா டெஸ்டும் செய்தாச்சு எல்லாமே நார்மல். ஆனாலும் தள்ளி கொண்டே போயிற்று. எதையும் நினைக்காமல் என் வேலையுண்டு நானுண்டு என்று இருந்தேன். விட்டமின் மாத்திரை எடுத்து கொண்டேன். நல்லது நடந்தது.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Nandri ashvitha........

Anbudan,
Viji

நான் புது வீடு மாறியதும் கூட குழந்தையில்லையே என்ற சோகத்தில் தான் இருந்தேன். இதற்கு முன் இருந்த வீட்டில் முறை வாசல் கிடையாது. இங்கு ஒவ்வொரு மாதம் ஒவ்வொருத்தர் செய்ய வேண்டும். எனக்கோ கோலம் போட வராது. வேறு வழியில்லாமல் கற்று கொள்ள ஆரம்பித்தேன். சமையல் முடிந்ததும் போட்டு போட்டு பார்ப்பேன். அதுவரை எதிலும் இல்லாத ஈடுபாடு அப்போது கோலம் போடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதுவே என் கவலைகளை மறக்கடித்தது. வீட்டிற்க்குள் சிறை கைதி போல் இருப்பேன் அதையே யோசித்து. ஆனால் அப்போது போர் அடித்தால் மேல் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்தேன். அப்படியே மெல்ல மறந்துவிட்டேன். அந்த மாதமே கரு நின்றது. அது கூட தெரியாமல் ஒரு வாரம் கழித்து தான் டெஸ்ட் செய்தேன். அப்போது தான் புரிந்து கொண்டேன். இத்தனை காலம் மனஅழுத்தம் தான் மகபேறை தள்ள செய்தது என்று. தோழிகளே சிரமம் தான் இருப்பினும் முயன்று பாருங்கள். நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Hi ashvitha.. congrats pa... Enakum Papaela nanum romba kasta paduran dr.keta nethutha pona iui waste ivf pana soiluerukaga enaku oninum puriyala azugai than varuthu pa...

Congrats ashvitha. ரொம்ப நன்றி. இப்ப நான் கவலை இல்லாமல் இருப்பேன். உண்மையா நீங்க சொன்னது கேட்கும் போது எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்து விட்டது. தேங்க் யூ பா.

thank u ashvitha ungaloda words lam romba aaruthala irukku. enakkum en baby ku heart beat illa nu d&c panna sollitanga. d&c seithu 2 month aaitu ippa na job ku try pannikitu irukken. veetla thaniya iruntha en baby niyabagam athigama irukku so mind divert panna job ku polamnu irukken. thank u once again. take care u and ur family...

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்