தேதி: September 18, 2014
பேப்பர் பூ மற்றும் பூ இதழ்கள் - விருப்பமான நிறங்களில்
பேப்பர் ப்ளேட் (அ) சிறிய வட்ட வடிவ அட்டை
க்ளூ
மணி (சிறியது)
ஊசி & நூல்
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

படத்தில் உள்ளவாறு பேப்பர் ப்ளேட்டில் க்ளூ வைத்து 8 பூ இதழ்களை ஒட்டவும். (பூ இதழ்களை வெவ்வேறு நிறங்களிலோ அல்லது ஒரே நிறத்திலோ ஒட்டலாம்).

அதன் நடுவில் பேப்பர் பூவை ஒட்டிவிட்டு, ஊசியில் நூல் கோர்த்து அதில் மணியைக் கோர்த்து மணி வெளியில் வராமலிருக்க ஒரு முடிச்சுப் போட்டுக் கொண்டு, படத்தில் உள்ளவாறு பூவின் நடுவில் விட்டு பேப்பர் ப்ளேட்டின் அடிப்பகுதி வழியாக இழுக்கவும்.

ப்ளேட்டின் அடிப்பகுதியில் இழுத்த நூலை சீலிங்கில் மாட்டுவதற்கு தகுந்தாற்போல் முடிச்சுப் போட்டுவிட்டு மீதமுள்ள நூலை நறுக்கிவிடவும்.

பிறகு ஏற்கனவே ஒட்டிய 8 இதழ்களைச் சுற்றிலும், மற்றொரு வரிசை பூ இதழ்களை ஒட்டிக் கொள்ளவும்.

ஈஸியாகச் செய்யக்கூடிய சீலிங் ஹேங்கிங் (Ceiling Hanging) ரெடி.

Comments
அலங்கார குறிப்பு
ஃப்ளவர்ஸ் ரொம்ப அழகா இருக்கு. இவைகளை வைத்து எப்படி அலங்கரிக்க போறீங்க என்ற குறிப்பை வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அருமை ! அருமை !!
அன்புடன்
ஜெயா
ரேணு
சுப்பர்ப் க்ராஃப்ட் ரேணு. அழகா இருக்கு.
- இமா க்றிஸ்
ரேணு அக்கா
க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங் ரொம்ப கலர்ஃபுல்லா அழகா இருக்கு:) இது சீலிங் ஹாங்க் பண்ணோம் நா காத்தடிச்சா பிச்சுட்டு வந்துடாது ல அக்கா :) ட்ரை பண்ணலாமேனு தான் கேக்குறேன் :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலர்ஃபுல்
ரேணு... ரொம்ப நல்லா இருக்குங்க :) வெல்கம் பேக்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணு
அழகா இருக்கு.:)
ரொம்ப அழகா இருக்கு
கை வேலை ரொம்ப அழகா இருக்கு
அய்யோ அண்ணா இப்படி ஒன்னு
அய்யோ அண்ணா இப்படி ஒன்னு அனுப்பியதே மறந்து போச்சு:))
வனி இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை:)) வெயிட் வெயிட்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
கனி
கனி எங்க வீட்ல இரண்டு வருஷமிருந்தது, இங்க பலமான காத்துக்கு வழியில்லை:)) லேசாகவரும் ஏசி காத்துக்கு அழகா ஆடிகிட்டே இருக்கும், நீங்க டிரை பண்ணிட்டு சொல்லுங்க நின்னுச்சா இல்லையான்னு:))
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா