அழையாத அன்பு விருந்தாளிகள்..

ஒரு நாள் இரவு ஏழுமணி வாக்குல எதேச்சையா கதவை திறந்து வெளில போனேன். பார்த்தா கீழ ஒரு குட்டி உசுரு கீச் கீச் னு ஒரே சத்தம். வாசல்படிக்கு முன்னாடியே ஸ்கூட்டர் நிறுத்தி இருப்போம் (பஜாஜ் வேவ்) அதனோட முன்பக்கத்தில இருந்து விழுந்துச்சு.

அட இரண்டு நாட்களா எங்க சத்தம் வருதுனே தெரியாம அங்கயும் இங்கயும் தேடின ஆள் இவங்கதானானு ஒரே ஆச்சர்யமா போச்சு!!

சத்தம் மட்டுமே கேட்கும் ஆனா எங்க இருந்து வருதுனு சரியா கணிக்கவே முடில. கீழ இருந்தா மொட்டைமாடில இருந்து வரமாதிரி இருக்கும், அங்க போனா இங்க சத்தம் கேட்கும் ஆனா எங்கேனு மட்டும் கண்டேபிடிக்கமுடில. அவங்களா வெளிய வந்து நாந்தான் அணிலு குட்டினு சொல்லவும்தான் தெரிஞ்சுது.
அப்புரம் என்ன இராஜ மருவாதியோட அவங்கள உள்ளார இட்டாந்தோம். அவங்களுக்கு துணியால ஆன பொட்டிய வீடா பண்ணோம். அதிலயே அட்டாச்டு பாத்ரூம், டாய்லெட் எல்லாமே.. ..

அந்தன்னிக்கு பூராவும் என் மகனும் மகளும் தூங்கவே இல்ல. அட என்னவரும் அடிக்கொருதடவை ஓடி ஓடி பார்க்கிறாரு. நானுந்தேன்!!
குட்டி உசுரு அம்புட்டு அழகு, அதுக்கு என்ன பண்ணலாம், ஏது பண்ணக்கூடாதுனு ஒரே வலை ஆராய்ச்சி. நான் மட்டும் சும்மா இருப்பனா என்ன.. நம்ம அறுசுவையின் நட்பு பூக்களுக்கு முகநூல் வழியா போட்டோவோட செய்தி போட்டேன்.
என்ன சந்தேகம்னாலும் ஓடோடி வந்து உதவும் அறுசுவை தோழிகளுக்கு நன்றி சொல்லியே ஆகணும் :) செல்ல பிராணிகள் வளர்ப்பில் வல்லுனரா விளங்கும் திருமதி: இமாக்றிஸ் அவர்களிடமும், திருமதி: ஸ்வர்ணாவிஜயகுமார் அவர்களிடமும் இரசிய ஓலை அனுப்பினேன்.
அம்புட்டு தகவல்களை அள்ளி வீசினாங்க. அல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு வந்து அமுல் படுத்தினேன். இந்த இடத்தில மணம் வீசும் ரோசாவை என்னோட அன்பு பரிசா அளிக்கிறேன் மனமுவந்து வாங்கிக்கோங்க தோழிகளே!! :)) ----(@@)>>> ---(@@)>>>

விடியக்காத்தால வழக்கம்போல எழாம நல்லா தூங்கிட்டு இருந்தேன், ஏன்னா அந்தன்னிக்கு சனிக்கிழமை லீவு..
பொட்டிக்குள்ள சத்தம் வேற மாதிரி கேட்டுட்டுச்சு. ஒத்தை ஆளா இல்லாம கூடவே எசப்பாட்டு பாடுறாப்பிலயே இருந்துச்சு.
என்னடானு பார்த்தா கூட இன்னொருத்தரு இவரோட இளையவர் போல இருக்கு!!

எப்படினு பார்த்தா மறுபடியும் ஒரே சத்தமா இருந்திச்சேனு டார்ச் அடிச்சு பார்த்ததில வெளிய வர முயற்சி பண்ணிட்டு இருந்த இவரை வெளிய அழைச்சிட்டு வந்து இவரோட விட்டுட்டார் என்னவர்.
சரி ஒத்தைல இருக்கிறதுக்கு பேச்சுத்துணைக்கு ஆளாச்சுங்கிறாபில ரெண்டு பேரும் சமத்தா அந்த பொட்டிக்குள்ள இருந்தாங்க.

ஒரு நாள் பூராவும் லீவும் ஆனதாலே என் மகனும், மகளும் சதா பொட்டிக்கிட்டவே உக்காந்து என்ன பாண்ணுது ஏது பண்ணுதுனு பார்த்து வர்ணணை பண்ணிட்டே இருந்தாங்க. ஆளுக்கு ஒண்னுனு பாகப்பிரிவினையும் நடந்துச்சு. பேரு செலக்ட் பண்ணும் மும்முரத்தில இருந்தாங்க.

அடுத்தநாள் ஞாயிறு .. காலைல பார்த்தா அப்பாவும் மகளும் குசு குசுனு பேசிட்டு பொட்டிக்கிட்டவே இருந்தாங்க. என்னமோ விசியம் இருக்கும் போல இருக்குனு நானும் எட்டிப்பார்க்க மூணு!!!!!!!

அட!!

மறுபடியும் சத்தம் கேட்கவும் என்னவர் வண்டிய சாய்ச்சு பார்த்திருக்கார் உள்ள இன்னொரு வாண்டு இருந்திருக்கு.

அதுவும் எப்படி கூடு பாதுகாப்பா கட்டி இருக்கு பாருங்க. ஸ்கூட்டரோட ஸ்பீடாமீட்டருக்கு அடில, அதாவது ப்ரேக் ஒயர் போற சந்துல (கைப்பிடி) உள்ள போய் ஒரு பக்கத்தை அடைச்சிட்டு, உள்ள போறதுக்கு மட்டும் சின்னதா ஒரு கதவு வெச்சு அழகா அதிக பட்ச பாதுக்காப்பு உணர்வோட கட்டி அதில போய் குட்டி போட்டிருக்கு!! நிஜமாவே விந்தையாதான் இருக்கு இல்லீங்களா?? அஞ்சறிவு உள்ள அணிலுக்கு பாருங்க எம்புட்டு அறிவுனு!!

ஆனா குட்டிகளுக்கு இவ்வளவு காபந்து பண்ணிய அம்மாக்கு தன்னை எப்படி காப்பத்திக்கிறதுனு தெரியாம போச்சு.. நாங்க கூட ஏதோ வெளில போயிருக்கு வந்துரும்னு நினைச்சிட்டேதான் இருந்தோம். என்னனு பார்த்தா அம்மா அணில் வரவே இல்லேங்கிறதாலதான் குட்டிக பசில கத்தியிருக்கு.. முடிலாம் ஓரளவுக்கு வளர்ந்து இருந்துச்சு. ஆனா கண்ணு மட்டும் முழிக்காம இருந்துச்சு.

இனி வரவே வராதுனு எப்படி தெரிஞ்சிதுனா, ஒரு குண்டு திருட்டுப்பூனை ஸ்கூட்டரை வலம் வந்துச்சு, அப்பத்தான் புரிஞ்சுது, இது அம்மா அணில அடிச்சு முழுங்கிடுச்சுனு.
கெரகம்புடிச்ச பூனை!!

ஆனா அப்பத்திக்கு வந்த கோவத்தில இப்படி திட்டி போட்டேன். இப்பவும் அங்கயேதான் சுத்திட்டு இருக்கு, எலி தொல்லை வராம காப்பாத்திட்டு இருக்கு.

அணில் குட்டிகளுக்கு எப்படி பால்புகட்டுவதுனு தெரில, ஆனா ஸ்பூன்ல பால் வெச்சா ஆசையா 2 சொட்டுக்கள் குடிக்கும். அப்புரம் தோழிகள் சொன்னது போல இங்க் ஃப்ல்லர்ல கொடுத்தோம்

தினமும் காலைல சுத்தம் பண்ணிவிட்டு, பசியாறவெச்சு பொட்டிக்குள்ள விட்டா சமத்தா விளையாடிட்டு அழகா இருந்தாங்க. ஒருத்தருகொருத்தர் அடிதடியும் போட்டுக்குவாங்க.
ஆனா ஒருத்தருக்கு நோய் வரவும் அடுத்தடுத்து 3 பேருக்குமே வந்துடுச்சு. போய்ட்டாங்க அவங்க அம்மாகிட்டவே :(
ரொம்ப வருத்தமா போச்சு :((

5
Average: 4.3 (3 votes)

Comments

உங்க வலைபதிவின் தலைப்பை பார்த்ததும் அணிலை பற்றிதான் எழுதி இருப்பிங்கன்னு ஆசையா படிக்க வந்தேன்.. அருமையா இருந்தது...கடைசியில் ஒரே சோகமா போச்சு...அடித்த தடவை இந்தியா வரும்போது உங்க வீட்டுக்கு வந்து அணிலை பார்க்கலாம்னு நினைச்சேன்....ஒரே வருத்தமா இருக்கு....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க, முடிவுதான் ரொம்ப சோகம் :-(

நட்புடன்
குணா

நானும் சோகமா இருக்குமே எழுதவேண்டாம்னுதான் நினைச்சேன். எப்படி வளர்க்கணும்னு தெரிஞ்வங்க வ்ந்து பகிர்வாங்களேனு நினைச்சுதான் போட்டேன்.
10 நாட்கள் மட்டுமே இருந்துச்சு..
இன்னும் நிறைய அணிலகள் இருக்கு..ஆனா அவங்க எல்லாம் இதைவிட பாதுக்காப்பான இடத்தில குட்டி போட்டு வளர்த்திடுவாங்க போல இருக்கு.

இதுவும் யாருமே கண்டுபிடிக்க முடியாது . அவ்வளவு பாதுக்காப்பாதான் கூடு கட்டி இருக்கு. ஆனா இரைதேடப்போவதை பார்த்திட்டிருந்த பூனை பிடிச்சிடுச்சு போல இருக்கு :(
முக்கியமா சோக பதிவுகள் இல்லாமதான் எழுதணும்னு நினைச்சிட்டிருக்கேன்.
கண்டிப்பா இந்தியாவரும்போது வாங்க ராஜி :) மிக்க நன்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குணா வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,

கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருந்துச்சு, படிக்கறப்ப. இருந்தாலும் உங்க உணர்வுகளை எழுதியதால், பாரம் குறைஞ்சிருக்கும்தானே.

அன்புடன்

சீதாலஷ்மி

சரியா சொன்னீங்க சீதாமேடம்.. மிக்க நன்றிங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அட அருள் விருந்தாளிங்க இங்கயும் வந்தாச்சா ம்ம் முடிவு கஷ்டமாகத்தான் இருக்கு என்ன செய்வது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமாம் சுவா.. உங்களிடம் எத்தனை முறை இவர்களின் பராமரிப்பு பற்றி கேட்டேன் என்பது ஞாபகம் வந்திருச்சு..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கடைசி பத்தியை படித்து வருத்தமா இருந்தது... ஆனால் ஏதோ உங்களால் கொஞ்ச நாள் கவலை இல்லாமல் சந்தோஷமாகவும் இருந்தாங்களே ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சந்தோஷமா இருந்திருப்பாங்களானு தெரில..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

காப்பாத்த‌ முடியலையா பா:(

எனது வீட்டிலும் ஒரு குட்டி அணில் கிடைத்தது, அதை எங்களால் சரியாக கவனிக்க முடியாது என நினைத்து அதனுடைய அம்மா பார்க்கும்படி முன்னால் வைத்தோம். பெரிய அணிலும் அதை தூக்கி சென்றது திடீரென வீட்டு மோட்டில் கீச் கீச் என சத்தம் பார்த்திருக்க கீழே வந்து விழுந்தது சிறிய அணில்.பிறகு நான் அதை எடுத்து ஒரு கூட்டுக்குள் வைத்து திரியில் பால் கரைத்து கொடுத்தேன் எனக்கு என்னவோ அது குடித்ததாக தெரியவில்லை. மறுநாள் காலை 5மணி இருக்கும் மறுபடியும் குட்டி அணில் கத்திக்கொண்டு இருக்க என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. திரும்பவும் அதை அதனுடைய அம்மா பார்க்கும் வகையில் துணி சுற்றி வைத்தேன் சிறிய அணிலின் கீச்சல் ஒலி கேட்டதும் பெரிய அணில் எங்கிருந்தோ ஓடி வந்து வாயில் கவ்வி கொண்டு போனது. சரி எதோ குட்டி அணில் தப்பி விட்டது என எண்ணியிருக்கையில் பித்து பிடித்த பெரிய அணில் மறுபடியும் மோட்டில் இருந்து கீழே விழ வைத்தது இவ்வாறு நானும் கொடுக்க கொடுக்க அதை கீழே போட்டுக்கொண்டே இருக்கிறது. இத்துடன் 04 முறை கீழே போட்டு விட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. :(