தெளிவு - - M. சுபி

"அம்மு.. அம்மு... எழுந்துரு.. என்னா இவ்ளோ நேரம் தூங்குற? ஆபிஸ் போற ஐடியா இருக்கா, இல்லையா?"

"ம்ம்... என்னம்மா எழுந்திருக்கிறேன். அதான் யோசிக்கிறேன்..."

"என்னா யோசிக்கிற"

"ஆபிஸ் போலாமா, வேண்டாமான்னு. அம்மா எனக்கு ஆபிஸ் போக புடிக்கலமா. இன்னைக்கு ஆபிஸுக்கு லீவ் போட்டுகிட்டுமாம்மா?"

"சரி லீவ் போட்டுக்கோ. ஆனா நாளைக்கு அதே ஆபிஸுக்கு தானே போனும். அப்ப என்ன பண்ணுவ? இன்னைக்கு புடிக்காத ஆபிஸ் நாளைக்கு பிடிக்குமா என்ன?"

"பிடிக்காது தான் இருந்தாலும் கொஞ்சம் சேஞ்ச் இருக்கும்ல. மனசு ஃப்ரீ ஆகும்ல அதான்.."

"சரி என்னமாவது பண்ணு..அது இருக்கட்டும் ஏன் உனக்கு ஆபிஸ் போக பிடிக்கல? வொர்க் அதிகமா இருக்கா? இல்ல எதாவது வொர்க்ல தப்பு பண்ணிட்டியா?"

"ச்சீ... ச்சீ... அதுலாம் இல்லைம்மா..."

"இல்ல உங்க சீனியர் ஆபிஸர் எதாவது சொன்னாரா? இல்ல கூட வொர்க் பண்றவங்க எதாவது சொன்னாங்களா? இல்லையே... நீ அந்த மாதிரி ஆள் கிடையாதே. யாரும் எதுவும் சொல்ற மாதிரி நடந்துக்க மாட்டீயே. என்ன ப்ராப்ளம்னு சொல்லுமா.. நான் எனக்கு தெரிஞ்ச யோசனையை சொல்றேன். உனக்கும் மனசு ஃப்ரீ ஆகும் சொல்லுடா.."

"பெருசா ஒண்ணும் ப்ராப்ளம் இல்லம்மா. ஆனா கண் முன்னாடி நடக்கிற தப்பை கேட்கவும் முடியல, கண்டுக்காம இருக்கவும் முடியல. அதான்மா கூட வொர்க் பண்றவங்க பண்றது, நடந்துகிறது தான். நிறைய தப்பு பண்றாங்கம்மா. ஒருத்தர பத்தி ஒருத்தர் பின்னாடி திட்றாங்க. நேர்ல அப்படியே மாத்தி எதுவுமே நடக்காத மாதிரி நடந்துகிறாங்கம்மா. இன்னும் என்ன என்னமோ நடக்குதும்மா. நாம வொர்க் பார்த்தாலும் நம்ம கிட்ட வந்து எதாவது பேசுறாங்கம்மா. என்ன மனுஷங்கம்மா இவங்க. எல்லாம் யாருமே யாருக்கும் உண்மையா இல்லம்மா.. அவங்க அப்படி இருக்கதுனால எனக்கு அவங்ககிட்ட பேச, பழக பிடிக்கலம்மா. சகஜமா அவங்க கூட இருக்க முடியல..."

"அப்பாடி உன் மனசுல இருக்கது எல்லாத்தையும் கொட்டி தீர்த்துட்டியா? இதான் உனக்கு பிரச்சனையா? பல பேர் வேலை பார்க்கிற இடத்துல இதெல்லாம் சகஜம். நம்ம ஒரு கைல தான் அஞ்சு விரலும் இருக்கு. ஆனா எல்லாம் ஒரே மாதிரியாவா இருக்கு? இல்ல தானே! இல்லலே.. அப்புறம் எப்படி எல்லா மனுஷங்களும் ஒரே மாதிரி இருப்பாங்க. இதெல்லாம் உனக்கு புதுசு. அதான் உன்னால சகிச்சுக்க முடியல கோபம் வருது.

ஆனா இதான் உலகம். பறவைகள் பலவிதம் மாதிரி, மனுஷங்களும் பலவிதம். அவங்க முகங்களும், குணங்களும் பலவிதம். எல்லாரும் ஒரே மாதிரியும் இருக்க மாட்டாங்க. நம்மள மாதிரியும் இருக்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்க்கிறதும் தப்பு. உன்னை இப்படி படைச்ச கடவுள் அவங்கள அப்படி படைச்சு இருக்காருன்னு நினைச்சுக்கோ. அதான் உண்மை. நீ இந்த உண்மையை புரிஞ்சிக்கிட்டா எதுவும் உன் கண்ணுக்கு தப்பா தெரியாது. மனசு கோபமும் படாது. இது ஆபிஸுக்கு மட்டும் இல்ல. அக்கம் பக்கம் இருக்கவங்க, சொந்தகாரவங்க எல்லாருக்கும் பொருந்தும்.

சரி இன்னைக்கு இந்த ஆபிஸ் பிடிக்கல. நாளைக்கு வேற ஆபிஸ் போற அங்கேயும் இதே மாதிரி மனுஷங்க இருந்தா? ஏன் அப்படி தான் இருப்பாங்க. அப்ப என்ன பண்ணுவ? எல்லாம் நம்ம கைல தான் இருக்கு. நாம சகிச்சுகிறதுல தான் இருக்கு..."

"அம்மா நிஜமாவே என் மனசு லேசான மாதிரி இருக்கும்மா. இது ஏன் எனக்கு இவ்ளோ நாளா தெரியல.. புரியல.. இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன்மா. எதையும் கண்டுக்காம இருக்கவும், அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்னு இருக்கவும் பழகிக்கிறேன்...

அம்மான்னா அம்மா தான்..... சரி சரி ஆபிஸுக்கு டைம் ஆச்சு.. சும்மா எதாவது பேசிப் பேசி எனக்கு டிபன் லேட்டா செய்வீங்க... போங்கம்மா போங்க போயி வேலையைப் பாருங்க..."

"ம்ம்... போ போ ஏன் சொல்ல மாட்ட... எல்லாம் என் நேரம்...."

Comments

கதை நல்லா இருக்கு...:)

//நாம சகிச்சுகிறதுல தான் இருக்கு..."//

இந்த‌ வரிகள் ல‌ மட்டும் கொஞ்சம் உடன்பாடு இல்லை... ஏன்னா வேலை விஷயத்து ல மட்டும் சகிச்சுகிட்டு ஒரு வேலை செய்யுறது ரொம்பவே கஷ்டம் ல‌ சுபி அதே மாதிறி நாம‌ பண்ற‌ வேலையிலயும் ஒரு ஈடுபாடே இல்லாம‌ தான் செய்வோம் ஏதொ தலையெழுத்தேனு.... அதுனால‌ நான் லாம் எனக்கு ஒரு விஷயம் புடிக்கலமா அந்த‌ விஷயத்துல‌ இருந்து விலகிடுவேனே தவிர‌ சகிச்சுகிட்டு இருக்க‌ மாட்டேன்.. அது நடிப்பு மாதிரி இருக்கும்ணு தோணும் ... இது என்னோட‌ கருத்து மட்டும் தான் ..:)

உங்க‌ கதை ல‌ வர‌ மாதிரியே
//பறவைகள் பலவிதம் மாதிரி, மனுஷங்களும் பலவிதம். அவங்க முகங்களும், குணங்களும் பலவிதம். எல்லாரும் ஒரே மாதிரியும் இருக்க மாட்டாங்க.//

இதே மாதிரி இது என்னோட‌ எண்ணம் மட்டுமே :)

ஆனா அம்மா பொண்ணுக்குள்ள‌ இருக்குற‌ அந்த‌ கான்வர்ஷேசன் தூள்:)

இன்னும் பல‌ கதை படைத்திட‌ வாழ்த்துக்கள் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

"தெளிவு" கதைக்கேற்ற அருமையான தலைப்புடன் ரொம்ப நல்லயிருக்குங்க.
யதார்த்தமான உண்மையை தெளிவா கதையில் சொல்லிட்டீங்க.
வாழ்த்துக்கள் சகோ :-)

நட்புடன்
குணா

அறுசுவை பாபு அண்ணா & டீம்,
எனது கதையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கனி,
உங்கள் வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றிங்க‌.....

//நாம சகிச்சுகிறதுல தான் இருக்கு..."//

//இந்த‌ வரிகள் ல‌ மட்டும் கொஞ்சம் உடன்பாடு இல்லை... // ம்ம் அதான் நீங்க‌ அதற்கான‌ பதிலையும் சொல்லீட்டீங்களே....பறவைகள் பலவிதம்னு

சகிச்சுகிறது கஸ்டம் தான் ஆனா அப்படி சகிச்சிகிட்டாதான் உறவுகள் முறியாம‌ இருக்கும்னு என்னோட‌ கருத்து.....

\\இன்னும் பல‌ கதை படைத்திட‌ வாழ்த்துக்கள் :)\\ தான்க்ஸ் கனி .கண்டிப்பா ட்ரை பண்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உங்கள‌ வருகைக்கும், வாழ்த்திற்க்கும் ரொம்ப‌ நன்றி அண்ணா,

\\யதார்த்தமான உண்மையை தெளிவா கதையில் சொல்லிட்டீங்க\\
பெரும்பாலும் கதைகள் யாவும் நிஜம் தானே அண்ணா...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//பெரும்பாலும் கதைகள் யாவும் நிஜம் தானே அண்ணா... //
பாதிதான்ங்க.. அனுபவங்கள் பாதி கற்பனைகள் மீதியாகத்தான் நிறைய கதைகள் சகோ.

நட்புடன்
குணா

குணா அண்ணா,
ம்ம் ஆமாம் அண்ணா, இரண்டும் கலந்த‌ கலவை தான்...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//நம்ம ஒரு கைல தான் அஞ்சு விரலும் இருக்கு. ஆனா எல்லாம் ஒரே மாதிரியாவா இருக்கு? இல்ல தானே! இல்லலே.//
உண்மை சுபி
கதை தெளிவா எழுதியுருக்கீங்க‌. நடை நல்லாருக்கு. இன்னும் எழுதுங்க‌:)

உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் ரொம்ப‌ நன்றி.
\\இன்னும் எழுதுங்க‌:)\\\ முயற்சி பண்றேன் அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தெளிவு கதை, தெளிவாக‌ எழுதியிருக்கிறீர்கள், அருமை. வாழ்த்துக்கள்.

///பறவைகள் பலவிதம் மாதிரி, மனுஷங்களும் பலவிதம். அவங்க முகங்களும், குணங்களும் பலவிதம். எல்லாரும் ஒரே மாதிரியும் இருக்க மாட்டாங்க. நம்மள மாதிரியும் இருக்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்க்கிறதும் தப்பு. உன்னை இப்படி படைச்ச கடவுள் அவங்கள அப்படி படைச்சு இருக்காருன்னு நினைச்சுக்கோ.// வேலைபார்க்கிற‌ இடத்தில், எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை.

வாங்க‌, வணக்கம்...... உங்கள் வருகைக்கும் பதிவிற்க்கும் ,
///தெளிவு கதை, தெளிவாக‌ எழுதியிருக்கிறீர்கள், அருமை. வாழ்த்துக்கள்////வாழ்த்திற்க்கும் நன்றி அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

kathai romba nalla erukum madam

ரொம்ப‌ நன்றி உங்கள் வருகைக்கும், பதிவிற்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

super kathai