மருதாணி

அனைவருக்கும் இனிமை பொங்கும் தீபாவளியாக அமைய
எனது நல்வாழ்த்துக்கள் :) _()_ :).

இருள் அகன்று ஒளிவீசிட
நலம் நிறைந்து நன்மை விளைந்திட
நாடெங்கிலும் நற்குணம் பெருகி
நறுமணம் வீசிட வேண்டுவோம் இறைவனை!

மருதாணி பொதுவா எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மருதோன்றி என்பதும் இதன் பெயரே. இதனோட காய்கள் பார்க்கிறதுக்கு மரு சைஸ்லதான் இருக்கும். கொத்து கொத்தா இருக்கும்.

சின்ன வயசிலிருந்தே மருதாணினா கொள்ள பிரியம். மாலை நேரத்தில் ஆட்டுக்கல் என்கிற ஆட்டாங்கல் என்கிற செக்குல போட்டு ஆட்டி எடுத்து தேங்கா சிரட்டை என்ற தேங்கா தொட்டில வெச்சு, இரவு சாப்பிட்டு முடிச்சு எப்படா கைகளுக்கு போடுவோம்னு ஒரே பறபறப்பா இருக்கும்.

காலைல எழுந்து பார்த்தா போர்வைல பாதி ஒட்டிஇருக்கும். கைல மீதி இருப்பது நல்லா காஞ்சு போய் இருக்கும். அதனை ஊறவெச்சு கழுவும் போது, வரும் வாசனை ரொம்ப பிடிக்கும்.

ஒரு வாரத்திற்கு மருதாணி வாசனை கையைவிட்டு அகலவே அகலாது. விரல் நகங்களில் பிடித்திருக்கும் சிவப்பு நிறம், நகம் வளரும் வரை போகவே போகாது.

அப்ப எங்க வீட்ல செடி இல்ல, செடி இருக்கிற வீட்ல கெஞ்சாத குறையா கேட்டு வாங்கி அரைச்சு வெச்சதுண்டு. செடி எவ்வளவு முறை நட்டு வெச்சும், வளரவேயில்லை.

அப்புறம் கொஞ்சகாலம் கழிச்சு தானே ஒரு செடி வளர்ந்து பெரிசாகிடுச்சு. ஆனா பாருங்க அப்பலாம் மருதாணி அரைச்சு வெக்கிற ஆசை போய், பொடி வாங்கி கலக்கி, அதற்குனு விக்கிற ப்ளாஸ்டிக் அச்சு வாங்கி அதன் மேல அந்த கலவைய பூசி வெக்கிறதுண்டு. கல்லூரி காலங்களின் போது மெஹந்தி கோன் ரொம்ப பிரபலமாகிடுச்சு.

சிட்டி கேர்ல்ஸ் எல்லாம் பால் கவர்ல கோன் செய்து அசத்தலா போட்டுட்டு வருவாங்க. நம்ம வீட்லதான் பால் கவர்லாம் கிடையாதே. கவ் மில்க் அன்டு பஃப்லோ மில்க் இருந்ததால, பால் பாகெட் கவர்க்கு, இந்த சினிமா தியேட்டர்ல சோடா மூடி தேடுற சின்ன பசங்களாட்டம், எங்கியாச்சும் பால்கவர் கிடைக்காதானு கல்லூரி கேண்டீன் பக்கத்துல எல்லாம் தேடியதுண்டு.
ஆனா அங்கியும் டைரக்டா கவ், பஃப்லோ மில்க் யூஸ் பண்ணியதால, பால் கவர்க்கு பஞ்சம் ஏற்பட்டுப்போச்சு.

கொஞ்சம் கூட மனம் தளராத புத்திசாலி மூளை, வீட்டில பொட்டுக்கடலை வாங்கின பேப்பர், துணி எடுத்தாந்த

(நாங்களாம் துணி வாங்குறதுனு சொல்லமாட்டோம், எடுக்கிறதுனுதான் சொல்வோம். கல்யாணத்திற்கு ஜவுளி எடுத்தாச்சா? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? யூனிஃபாம் எடுத்து கொடுத்து தெச்சாச்சா? ஆனா நகை வாங்கியாச்சானுதான் கேட்போம், சரீங்க அடைப்புக்குள்ள ஒரு மெஹா பதிவு ரேஞ்சுக்கு எழுதுனா கோச்சுப்பீங்களோனு இத்தோட இதை நிறுத்திக்கிறேன்)

கெட்டிக்கவர் இதெல்லாத்தையும் போட்டு வெட்டு வெட்டுனு வெட்டி கோன் தயாரிக்கிற முயற்சில ஈடுபட்டேன்.
ஆனா அந்த கோன்ல இருந்து மருதாணி வெளிய வராம அழிச்சாட்டியம் பண்ணும்.
இருந்தாலும் போராடி போடுறதுண்டு.

மருதாணி சின்ன குழந்தைங்களுக்கு கை கால்க்கு வெச்சா ரொம்ப அழகா சிவக்கும். என் மகன் நான்கு, ஐந்து, மாத குழந்தையா இருக்கும் போது உள்ளங்கை, உள்ளங்கால்னு வெச்சுவிடுவதுண்டு. அப்ப நல்லா வெயில் கால்ம் கூட அதுனால சளி பிடிக்கல.

அதே போல என் மகளுக்கு ரொம்ப குட்டியா இருக்கும் போது வெச்சதும், அவங்க முகம் போன போக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

செய்முறை:

மருதாணி இலைகள்.... 1கப்
வெட்டுப்பாக்கு........1 துண்டு ( சாமி கும்பிட வெற்றிலை பாக்கு வாங்கினா எடுத்து பத்திரப்படுத்துவது வழக்கம்)
எலுமிச்சை....... 1/2 மூடி

செய்முறை:
மருதாணி இலைகளை மிக்ஸியில் சின்ன ஜாரில் போடவும்.
வெட்டு பாக்கினை லேசாக உடைத்து அதனையும் உடன் போடவும்.
நீர் விடாமல் அரைக்கவும்.
இரண்டு மூன்று சுற்றுகள் அரைத்த பின்பு 1/2 ஸ்பூன் நீர்விடவும்.
நைஸாக அரைத்தெடுக்கவும்.
அரைத்தவற்றை ஸ்பூனாலோ, கைக்கு கிளவுஸ் அணிந்தோ எடுக்கவும்.
ஜாரிலிருந்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எடுத்ததிற்கே சிவந்து விட்டது.
பின்னர் எலுமிச்சையை சாறு பிழிந்து கலக்கவும்.

இந்த கலவையினை டூத் பிக் உதவியால் கைகளுக்கு வேண்டிய டிசைன் போட்டுக்கொள்ளலாம்.

இப்பதான் டூத் பிக்லாம், நான் சிறு வயதில் தென்னோலை குச்சி பயன்படுத்திதான் போட்டிருக்கிறேன்.
இவ்வளவுதாங்க மருதாணி செய்முறை.

இயற்கை விந்தைகளில் மருதாணி எனக்கு எப்பவுமே வியப்பூட்டும் தாவரமாகவே தெரிகிறது.
இந்த தீபாவளிக்கு நீங்களும் இது போல் அரைச்சு வெச்சு பாருங்களேன்.

நன்றி!! வணக்கம்:) _()_ :)

4
Average: 4 (4 votes)

Comments

எங்க‌ வீட்டிலும் ம‌ருதாணி செடி இருக்கு. பூ நல்லா வாசமா இருக்கும். இந்தப் பூ வாசத்துக்கு தூக்கம் நல்லா வரும்னு சொல்லுவாங்க‌. மருதாணியை பறிச்சு அரைத்து தலைக்குப் போட்டால் முடி சும்மா பளபளான்னு இருக்கும்.
நல்ல‌ பதிவு:)
கை வாசம் வீசும்

ரொம்ப‌ அருமையான‌ பதிவு மலரும் நினைவுகள் எனக்குள்...

அதென்னவோ சின்ன‌ வயசுல இருந்தே எனக்கு மருதாணி மேல‌ அவ்வளவு நாட்டம் இல்ல‌ ..
அம்மா ஆசைக்காக‌ மட்டுமே பல‌ நேரங்களில் போட்டதுண்டு ...:)

வருஷத்துல‌ ஒரே தடவை தான் வைக்கிறேன் இப்போலாம்..

அதும் கிறிஸ்மஸ்க்கு இல்ல நியூ இயர்க்கு மட்டும் தன‌ .. அதுக்கு இன்னொரு காரணம் ரத்த‌ அலர்ஜி மற்றும் சைனஸ் மருதாணி வச்ச‌ 10 நிமிஷத்துல‌ ஒரு 10 தும்மல் தும்மிடுவேன் இதுக்கு பயந்தே அது மேல‌ இருந்த‌ ஆசை போய்ட்டு..:

ஆனா மருதாணி பிடிக்குற‌ எல்லாருக்கும் உங்க‌ இந்த‌ பதிவு ரொம்பவே பிடிக்கும் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//மருதோன்றி// பெயர்க் காரணம் இதுவா?
//ஒரே பறபறப்பா இருக்கும். // வரவர எல்லாருமே படிக்கிறவங்களால சரியா தப்பான்னு புரிஞ்சுக்க முடியாத மாதிரி சிலேடையா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. ;) கலக்குங்க. எனக்குத்தான் யாரையும் பிழை பிடிக்க முடியலையேன்னு பரபரப்பா இருக்கு. ;D
//கழுவும் போது, வரும் வாசனை// எனக்கும் பிடிக்கும் அருள்.
//பால்கவர் கிடைக்காதானு கல்லூரி கேண்டீன் பக்கத்துல// ஆஹா! ;))
// வியப்பூட்டும் தாவரமாகவே தெரிகிறது.// உண்மைதான்.
ரசித்தேன் இந்த இடுகையை. ;)

‍- இமா க்றிஸ்

////மருதோன்றி// பெயர்க் காரணம் இதுவா?// நிசமா தெரீங்ல, நானே நினைச்சுக்கிட்டேன் :))

//ஒரே பறபறப்பா இருக்கும். // வரவர எல்லாருமே படிக்கிறவங்களால சரியா தப்பான்னு புரிஞ்சுக்க முடியாத மாதிரி சிலேடையா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. ;) கலக்குங்க. எனக்குத்தான் யாரையும் பிழை பிடிக்க முடியலையேன்னு பரபரப்பா இருக்கு. ;D// //பரபரப்பு// இது அதுக்குமேல பறவை மாதிரி பற பறப்புனு சொல்ல வந்தனுங்கோ :))))

ஆமாங்க இமா, கேண்டீந்தான் எங்களுக்கு ரொம்ப புடுச்ச இடம் அப்பலாம். பிறந்தநாள் பார்டியா ஐஸ்க்ரீம் என்ன, மாஸா என்ன ஒரே சந்தோசமா இருக்கும்.

//எனக்குத்தான் யாரையும் பிழை பிடிக்க முடியலையேன்னு பரபரப்பா இருக்கு. ;D// இப்பலாம் ஒருதடவைக்கு 4 தடவை ப்ரூஃப் பார்த்துவிட்டுத்தானே வெளியிடுறோம் :)))

ரொம்ப ரொம்ப நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிகி எனக்கும் மருதாணி பூ வாசம் ரொம்ப பிடிக்கும் :) சிலபேர் தலைல சூடியிருந்ததையும் பார்த்திருக்கேன் :) மருதாணிய மட்டும் தனியே அரைச்சு போட்டா ட்ரை ஆகுதேப்பா?
கூட கற்றாழை, வெந்தயம் போடுவதுண்டு. ஆனா இப்ப இங்கிருக்கிற குளிருக்கு போட்டா சளிபிடிக்கும்னு போடறதில்ல.
மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி //ரத்த‌ அலர்ஜி மற்றும் சைனஸ் மருதாணி வச்ச‌ 10 நிமிஷத்துல‌ ஒரு 10 தும்மல் தும்மிடுவேன் இதுக்கு பயந்தே அது மேல‌ இருந்த‌ ஆசை போய்ட்டு..: // நீங்க சொன்ன 2 வது கேள்விப்பட்டிருக்கேன்ப்பா, ஆனா முதலாவதா சொல்லியிருப்பது இப்பதான் தெரியும். இப்படிக்கூட இருக்கா?

மிக்க நன்றி :) ஒருவிஷயம் மருதாணி சளிபிடிக்காம இருக்க யூக்கலிப்டஸ் ஆயில் சேர்த்தா பிடிக்காதுனு சொல்வாங்க, நீங்க கல்யாணத்துக்கு மெஹந்தி போட்டா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே போடுங்க. கெமிக்கல்ஸ் நிறைய பேர்க்கு ஒத்துக்கிறதில்ல. பயப்படுத்தறேனு நினைக்க வேண்டாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கும் ரொம்ப‌ பிடிக்கும். சின்ன‌ வயசில் இலையை அரைத்து வைப்போம். அதிகமாக‌ நிறம் கிடைக்க‌ பெரியவர்கள் பல‌ டிப்ஸ் கொடுப்பாங்க‌. கோன் வந்த‌ பிறகு இலை அரைத்து வைப்பது இல்லை. பால் கவரில் கோன் செய்வதைப் பர்த்து இருக்கிறேன். முயற்சி செய்தது இல்லை. உங்கள் பதிவைப் பார்த்ததும் மருதாணி இலை ஆசை வந்துவிட்டது. ஆனால் இங்கு யார் வீட்டிலும் மருதாணி செடி இல்லை. : (
கோன் வாங்கி வைத்து இருக்கிறேன். அதை போட்டுக்கொண்டு இந்த‌ தீபாவளியைக் கொண்டாட‌ வேண்டியது தான். : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

சின்ன‌ வயசுல‌ எல்லாம் மருதாணிக்காக‌ எங்கெல்லாமோ அலைந்திருக்கேன்
நான் தனியா தான் போடுவேன் அருள். கூட‌ எதையும் சேர்ப்பதில்லை. ரெண்டு மணி நேரம் வச்சாலே போதும். நல்லா பிடிக்கும். அதிக‌ நேரம் தேவையில்லை.
நைட் ஃபுல்லா வச்சா இப்போ ஒத்துக்கலை. அப்படியே கையெல்லாம் சில்லிட்டுப் போகுது. விறைச்சுப் போகுது.:)

தயூ இங்கலாம் மருதாணி செடிய வாஸ்து பிரகாரம் வீட்டுக்கு முன்னாடி வெச்சா நல்லதுனு சொல்லி வீட்டுக்கு வீடு செடி வெச்சிருக்காங்க :) கோன் ல என்ன டிசைன் போட்டீங்கனு வந்து சொல்லுங்க. மிக்க நன்றி தயூ :)
நானும் கோனும் வாங்கி வெச்சிருக்கேன். ஆனாலும் மருதாணி இலை அரைச்சு வெக்கவே ஆசையா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹ்ம்ம் ஆமா அக்கா சைனஸ் கொஞ்சம் சிவியர் ஸ்டேஜ் ஆகி தான் ரத்தத்துல‌ கல‌ந்துடுச்சு...

//நீங்க கல்யாணத்துக்கு மெஹந்தி போட்டா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே போடுங்க. கெமிக்கல்ஸ் நிறைய பேர்க்கு ஒத்துக்கிறதில்ல. பயப்படுத்தறேனு நினைக்க வேண்டாம்.//

இதுல‌ பயமுறுத்தலாம் எதும் இல்லயே அக்கா நல்லதுதானே சொல்லுறீங்க‌... கல்யாணத்துக்கு மெஹந்து போடுற‌ ஆசை இன்ன‌ வரைக்கும் இல்லை .. அப்படியே போட்டாலும் கெமிக்கல் இல்லாததா வாங்கிப் போடுறேன் ஒக்கேயா... ஒன்னு கேட்கணும் உங்க‌ கிட்ட‌ உங்க‌ குட்டிஸ்க்கு என்ன‌ வயசு ...:)..??

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நிகி //ரெண்டு மணி நேரம் வச்சாலே போதும். நல்லா பிடிக்கும். அதிக‌ நேரம் தேவையில்லை.// இல்ல நிகி, இரவு முழுக்க வெச்சிருக்கும் சிவப்புக்கும், 2 மணிநேரத்துக்கும் வித்யாசம் உண்டு. முதல் வகை ஆரஞ்சு. இரண்டாம் வகை செக்கச்சிவப்பு. அதும் எடுத்த உடனே ரோஜாவண்ணம் கலந்த சிவப்பா எனக்கு தெரியும். அதுவே ஒருநாள் கழியும் பொழுது பிரவுன் நிற சிவப்பா மாறும். அப்படி ஆச்சுனா பித்தம் னு சொல்வாங்க. அது சரியா? தவறா? னு எனக்கு தெரில:)

//அப்படியே கையெல்லாம் சில்லிட்டுப் போகுது. விறைச்சுப் போகுது.:)// எனக்கு அப்படி ஆகுறதில்லை.
சிலருக்கு குளிர்ச்சி ஒத்துக்காது. பகல்ல வெச்சா உடனே வேலை வரும் அழிச்சிடுவோம். நன்றி நிகி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் எனக்கும் மருதாணி ரொம்ப பிடிக்கும் .
நான் கோன் போல வைக்க மாட்டேன் குட்டி குட்டியா வட்டமா உள்ளங்கையில வைப்பேன் .அதான் இன்னும் தொடரது மாதத்தில் எப்படியும் ஒரு தடைவையாது மருதாணி வச்சுடுவேன் .என் மாமியாரும் நான் கேட்டதும் எங்க இருந்தாலும் வாங்கிட்டு வந்து அரைச்சு குடுத்துடுவாங்க :)

All is well

மருதாணினா எனக்கு ரொம்பவே பிடிக்கும்,
ம்ம் முன்னாடி எதாவது பெஸ்டிவல்னா ம‌ருதாணி கண்டிப்பா உண்டு,
அம்மா அழகா கைல‌, கால் ல‌ வச்சிவிடுவாங்க‌ ......
வைக்கிறதுக்கு முன்னாடி தோணாது தண்ணி குடிக்கனும்னு, வச்சதுக்குஅப்புறம் அது வேணும் இது வேணும்னு தொல்லை பண்ணுவோம், நைட்லாம் சரியா தூக்கம் கூட‌ வராது, சிவந்துருச்சா சிவந்துருச்சானு அடிக்கடி பார்க்கிறது, காலைல‌ எழுந்து உன் கையை காமி ஏ எனக்கு தான் நல்லா சிவந்து இருக்கு அப்படி இப்படினு ஒரே கலாட்டாவா இருக்கும்....

இப்போ கோன் மயமாகிவிட்டது, ஆனா மருதாணி கிடைக்கிறப்ப கண்டிப்பா வைச்சிடுவேன்...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு அருள்,

சூப்பரா எழுதியிருக்கீங்க‌. மருதாணி வாசம் பதிவுல‌ மணக்குது.

நிகிலா சொன்ன மாதிரி, மருதாணிப் பூ வாசம் நல்ல‌ தூக்கத்தை வரவழைக்கும்.

சின்னக் குழந்தைகள் ராத்திரி நேரம் தூங்காமல் அழுதுட்டே இருந்தா, இந்தப் பூவை தலையணை அருகில் வச்சா, நல்லாத் தூங்குவாங்களாம்.

பூ சீசன் சமயத்தில் பறிச்சு, தேங்காய் எண்ணெயில் போட்டு வச்சு, அந்த‌ எண்ணெயில் இரண்டு சொட்டு, குழந்தைகளின் உச்சந்தலையில் லேசாக‌ வச்சாலும், குழந்தைகள் நல்லாத் தூங்குவாங்களாம்.

என்னோட‌ சந்தேகங்கள்: கைக் குழந்தைகளுக்கு மருதாணி வச்சா, சளி பிடிக்காதா?

அப்புறம் ஃபோட்டோல‌ நீங்க‌ அரைச்சு வச்சிருக்கற‌ மருதாணி, கொஞ்சம் நீர்க்க‌ இருக்கே, கையில் வச்சா ட்ரிப் ஆகாதா?

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பரா எழுதியிருக்கீங்க‌. நன்றி.

மருதாணி என்றுதான் நாங்கள் சொல்வோம். ஆனால் அம்மா மட்டும் மருதோன்றி என்றே சொல்வாங்க‌. Bible-ல் மருதோன்றிப் பூக்கள் என்று படித்தவுடன் மருதோன்றியே பிடித்துப்போனது.

// இதனோட காய்கள் பார்க்கிறதுக்கு மரு சைஸ்லதான் இருக்கும் // வித்தியாசமான‌ எண்ணம். ரொம்ப‌ ரசிச்சேன்.

மருதோன்றியில் இன்னொன்றும் உண்டு. அது ராப்பற்றி (இரவு மருதாணி‍_ பொடி இலையாக‌ இருக்கும், இரவில் வைத்தால் நன்றாக‌ பற்றும்), பகல் பற்றி (பகல் மருதாணி_ பெரிய‌ size இலையாக‌ இருக்கும், பகலில் வைத்தால் நன்றாக‌ பற்றும்)

இப்போது எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்திருக்கிறேன். போன‌ வாரம் கூட‌ வைத்துக் கொண்டேன். சிரிக்காதீங்க‌. பழைய‌ தொப்பி model தான். எனக்கு வேறு design வைக்க‌ பிடிப்பதில்லை. ஆனால் பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.

அன்புடன்
ஜெயா

எனக்கு மருதானி ரொம்ப பிடிக்கும்.எங்கவீட்டுகொல்லையில் பெரியமரம் இருக்கு இருக்கு.நான் ஊருக்கு போனா முதல்வேளை மருதானி போடுரதுதான்.கையில் சிவப்பு குரைய குரைய நான் போட்டுப்பேன்.எனக்கு அவ்லோ இஷ்டம்.எனக்கு கோன் போட பிடிக்காது.அரைத்து குச்சியால் சூப்ப்ரா நான் டிஸைன் போடுவேன்.நீங்க பதிவு போட்டதும் எனக்கு ஊர் நியாபகம் வந்திடுச்சு

அருட்செல்வி மருதான் போட்டு தீபாவளி சந்தோஷமா கொன்டாடுங்க தீபாவளி வாழ்த்துக்கள்

எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் மருதாணி வைக்கிறது. அது மறையும் வரை வாசம் பிடிச்சுனே இருப்பேன்.

Be simple be sample

ஒன்ஸ் அப்பான் அ டைம்... லாங் லாங் அகோ.. எங்க பாட்டி வீட்டுக்கு போகும் போது அம்மியில் அரைச்சு வெச்சிருக்கேன். எனக்கு இது ஆவதில்லை... தும்மல், காய்ச்சல் எல்லாம் வந்துவிடும். ஆனா இதன் வாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னும் எங்க கிராமத்து வீட்டில் ஒரு மரம் உண்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க‌ பதிவு படிச்சவுடனே எனக்கு நிறைய‌ விஷயங்கள் நியாப‌கத்துக்கு வந்தது,

சின்ன‌ வயசில‌ மருதாணி அரைத்து வைக்கிறதுங்கறது எனக்கு ரொம்ப‌ பிடிச்ச‌ விஷயம், இரவு தூங்கறதுக்கு முன்னாடிதான் எப்பவுமே வெச்சுவிடுவாங்க‌...அது வெச்சவுடனே எப்படா விடியும்னு காத்திருப்பேன்.....தூக்கத்திலகூட‌ அதே ஞாபகமா இருக்கும்.....காலையில‌ எழுந்தவுடனே அதைப்பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாயிருக்கும்.....சரியா சிவக்கலைன்னா அவ்வள‌வுதான் உடனே மூட் அவுட்.....அந்த‌ மருதாணி வெச்ச‌கையை பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தம்....அதைவிட‌ அந்த‌ விரல்களுக்கு மாட்டிய‌ தொப்பியை தூக்கிபோடவே மனசு வராது....

நான் முதல்முறையா மைசூர் போனப்போ (ஹைவேஸ்ல‌ ரோடுக்கு நடுவே செடிவைக்கிறாங்க‌ இல்லையா) ஒரே மருதாணி செடியா வெச்சுருந்தாங்க‌... அது பூ பூத்து நல்ல‌ வாசனையா இருந்தது, அந்த‌ டிராவல்ல‌ இனிமையான‌ விஷயமே அந்த‌ மருதாணி வாசனைதான்.....

கடைசியா ஒரு சந்தேகம், மருதாணி அரைத்து தேங்காய் தொட்டியில் ஏன் வைக்கிறாங்க‌? நான் நிறைய‌ வீட்டில‌ பார்த்திருக்கிறேன்... ஆனா காரணம்தான் தெரியவில்லை?

உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இந்த‌ தீபாவளி மருதாணி போல் நல்ல‌ நறுமணத்துடன் வண்ணமயமாக அமைய‌ என் வாழ்த்துக்கள் அருள்....

சஜன் நடு உள்ளங்கைல பெரிய வட்டம் வைத்து, அதனை சுற்றிலும் வட்டம் வைப்பது நானும் வைத்ததுண்டு. அப்புறமா ஸ்வஸ்திக் போடுறது.
//மாதத்தில் எப்படியும் ஒரு தடைவையாது மருதாணி வச்சுடுவேன் .என் மாமியாரும் நான் கேட்டதும் எங்க இருந்தாலும் வாங்கிட்டு வந்து அரைச்சு குடுத்துடுவாங்க :)// அப்ப சிவந்த கையோடவேதான் எப்பவும் இருப்பீங்கனு சொல்லுங்க.
மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி மருதாணி பிடிக்காதவங்க ரொம்ப குறைவுதான் இல்லியா? :) கால்ல கைல வெக்கிறதோட நிறுத்தாம, நெற்றி பொட்டுல வெச்சு, அது சிவந்தா பணக்காரி, சிவக்கலேனா ஏழையாகிடுவேனு கதையெல்லாம் கேட்டதுண்டு சிறுவயதில் :))
மிக்க நன்றி சுபி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சீதாமேடம் மருதாணி பூ வாசனை நல்லா இருக்கும். ஆனா அதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்குனு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
நானும் பூ பறிச்சு தேங்காய் எண்ணைய்யில் போட்டு வைக்கப்போறேன்.

//என்னோட‌ சந்தேகங்கள்: கைக் குழந்தைகளுக்கு மருதாணி வச்சா, சளி பிடிக்காதா?// அது இருக்கும் இடம், காலநேரத்துக்கேற்ப மாறுபடும். என் மகன் நவம்பர் என்பதால், ஏப்பரல், மே மாதங்களில் வைத்த பொழுது சளிப்பிடிக்கல. ஏன் என் உறவினர் குழந்தைகளுக்கு, இதனை விட குறைந்த மாதங்களில் வைத்திருப்பதையும் பார்த்திருக்கேன். ஆனால் குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது பகல் நேரத்தில் வைத்துவிட்டு உடனே எடுத்து விடவேண்டும். கைகள் மரத்துப்போய்விடும். பெரியவர்களுக்கு மட்டுமே முழு இரவும் வைத்திருந்து எடுக்க வேண்டும். அதுவும் சேராதவங்க கொஞ்சம் யோசனை செய்தே வைக்க வேண்டும் :)

//அப்புறம் ஃபோட்டோல‌ நீங்க‌ அரைச்சு வச்சிருக்கற‌ மருதாணி, கொஞ்சம் நீர்க்க‌ இருக்கே, கையில் வச்சா ட்ரிப் ஆகாதா?// அரைத்த உடனே எடுத்த போட்டோ அது :)) (ஸ்ஸப்பா எவ்வளவு கூர்மையா பார்த்து கேள்வி கேட்குறாங்கோ) மேலும் மிக்ஸியில் அரைத்ததால் நீர்க்க தெரிகிறது. கொஞ்ச நேரம் காத்தாட வைத்திருந்தால், நீர் ஆவியாகிவிடும் :)

முடிலீங்கோ முடிலீங்கோ :))) மிக்க நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயா வாங்க, எப்படி இருக்கீங்க :) பாராட்டிற்கு மிக்க நன்றி.

// Bible-ல் மருதோன்றிப் பூக்கள் என்று படித்தவுடன் மருதோன்றியே பிடித்துப்போனது. // படித்த விஷயத்தை பகிருங்களேன் ஜெயா :)

//மருதோன்றியில் இன்னொன்றும் உண்டு. அது ராப்பற்றி (இரவு மருதாணி‍_ பொடி இலையாக‌ இருக்கும், இரவில் வைத்தால் நன்றாக‌ பற்றும்), பகல் பற்றி (பகல் மருதாணி_ பெரிய‌ size இலையாக‌ இருக்கும், பகலில் வைத்தால் நன்றாக‌ பற்றும்) // இவ்விரு வகை இலைகளையும் பார்த்திருக்கேன். ஆனால் இது போன்ற வேறுபாட்டினை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி

// பழைய‌ தொப்பி model தான். எனக்கு வேறு design வைக்க‌ பிடிப்பதில்லை. ஆனால் பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.// இந்த டொப்பி மாடலை எழுதிய ஞாபகத்தில் இருந்தேன். இப்பொழுதும் கை விரல்களின் நுனிப்பகுதிக்கு டொப்பிதான் உள்பக்கத்தில் சில சமயம் 4 புள்ளி கோல டிசைன்கூட போடுவதுண்டு.
எளிமையான டிசைன் தான் அரைத்த மருதாணியில் வைக்கமுடியும் இல்லையா?

நன்றிங்க ஜெயா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிஷா //அரைத்து குச்சியால் சூப்ப்ரா நான் டிஸைன் போடுவேன்.நீங்க பதிவு போட்டதும் எனக்கு ஊர் நியாபகம் வந்திடுச்சு// அடடா ஊர் ஞாபகத்தை கிளறிட்டேனா? அடுத்த முறை செல்லும் போது போட்டு சந்தோசப்படுங்க.
எனக்கு மிகவும் நுணுக்கமான டிசைன் வராது. எளிமையானவற்றை போட்டுப்பார்ப்பேன். மிக்க நன்றி நிசா தீபாவளி வாழ்த்திற்கும் வருகைக்கும் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மருதாணி வாசம் பிடிக்காதவங்க ரொம்ப குறைவுனு நினைக்கிறேன். ரொம்ப நன்றி ரேவ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி நான் அம்மில அரைச்சு வச்சதில்ல, ஆனா பதிவுல சொன்னது போல ஆட்டுக்கல்ல அரைச்சு வெச்சிருக்கேன் :) இங்க அது இல்லாத காரணத்தால மிக்ஸி.
//தும்மல், காய்ச்சல் எல்லாம் வந்துவிடும்//
யூக்கலிப்டஸ் ஆயில் கலந்து வெச்சுபாருங்க.
மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனு //சரியா சிவக்கலைன்னா அவ்வள‌வுதான் உடனே மூட் அவுட்.....அந்த‌// மீண்டும் மிச்சம் மீதி இருக்கும் மருதாணியையும் எடுத்து போட்டுக்குவேன் :))

//அதைவிட‌ அந்த‌ விரல்களுக்கு மாட்டிய‌ தொப்பியை தூக்கிபோடவே மனசு வராது....// நீங்க சமத்து போல இருக்கு. பத்ரமா வெச்சிருந்திருக்கீங்க :)

//நான் முதல்முறையா மைசூர் போனப்போ (ஹைவேஸ்ல‌ ரோடுக்கு நடுவே செடிவைக்கிறாங்க‌ இல்லையா) ஒரே மருதாணி செடியா வெச்சுருந்தாங்க‌... அது பூ பூத்து நல்ல‌ வாசனையா இருந்தது, அந்த‌ டிராவல்ல‌ இனிமையான‌ விஷயமே அந்த‌ மருதாணி வாசனைதான்....// வாவ்வ், சூப்பர்பா ஆச்சர்யமான விசயம் கூட:)
இங்க இடைல அரளிச்செடிதான் கலர்கலரா பூத்து குலுங்குது.

//கடைசியா ஒரு சந்தேகம், மருதாணி அரைத்து தேங்காய் தொட்டியில் ஏன் வைக்கிறாங்க‌? நான் நிறைய‌ வீட்டில‌ பார்த்திருக்கிறேன்... ஆனா காரணம்தான் தெரியவில்லை?// பழைய ஞாபத்தை மீட்டுவதற்காகத்தான் தொட்டில வெச்சேன். சிலுவர் கப்லதான் வெப்பேன். நான் நினைக்கிறேன் கலர் பிடிக்கும்னு நினைச்சு தேங்கா தொட்டிய பயன்படுத்தி இருக்கலாம். இல்ல அதிகப்படியான நீரை எடுக்கும்னு நினைத்து வைத்திருக்கலாம். எனக்கும் தெரிலீங்க அனு :)

தீபாவளியை நீங்களும் அமோகமாக கொண்டாட வாழ்த்துக்களும், நன்றிகளும் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தோழி மருதாணியை பற்றி படித்தபோது மலரும் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்டேன்

மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா ;) மருதாணிய பாத்ததும் பாட்டு ஞாபகம் வந்துடுச்சி அருள் சூப்பரான பதிவு எனக்கும் மருதாணியும் அதன் வாசனையும் ரொம்ப பிடிக்கும் எத்தனை விதமான ஹென்னா பொடி வந்தாலும் இதன் பக்கத்தில் நிக்க முடியாதுல்ல :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.