"இதயத்தால் பேசுகிறாள் - 1 "

வண்ணக்காகிதங்களின் சலசலப்பிலும், புதிதாய் சேர்ந்த இளையோரின் கலகல சிரிப்பொழியிலும், வருடந்தோரும் புதுமையாய், இளமையாய் தோற்றமளித்தது அந்த மருத்துவகல்லூரி.

திருக்கைலாயம் எனும் பெருந்துறை அருகே இயற்கை அன்னையின் எழில் கொஞ்சி விளையாடிட அதில் கம்பீரமாக காட்சியளிக்கிறது அந்த சேனட்டோரியம் மருத்துவக்கல்லூரி. வரவேற்பும், விளையாட்டும் வாடிக்கையாகச்சென்றிட வருடத்தின் முதல்நாள் வகுப்புகள் இன்று ஆரம்பம்.

தன் கனவுகளை நனவாக்கிட முதல் அடியினை வகுப்பினுள் எடுத்துவைத்தாள் ஜானகி. செல்வம் ஜொலிக்கும் வீட்டின் செல்லப்பிள்ளை ஜானகி. இவங்கதாங்க நம்ம கதையோட ஹீரோயின். இப்போதைக்கு இதுபோதும் விரிவா அடுத்த பகுதில பார்க்கலாம். வழக்கமான அறிமுகப்படலம் முடிந்ததும் வகுப்புகள் ஆரம்பமாயின.முதல்நாள் வகுப்பாதலால் மருத்துவம், அதன் மகத்துவம், சேவை பற்றியெல்லாம் பேசப்பட்டது.

பெற்றோர் இல்லாமல் மாமாவோட அன்பில் வளர்ந்த பொறுப்பான இளைஞன் கெளதம். இவர்தான் நம்ம கதையோட ஹீரோ. கலகலப்பு பிடிக்கும், கலாட்டா பிடிக்காது. இவனை நண்பனாக பெற்றதில் ராஜீவும், அவன் நண்பர்களும் ரொம்ப பெருமைபட்டார்கள். என் நண்பேண்டா... இப்படி அடிக்கடி ராஜீவ் சொல்லுவதை நம்காதுகள் இனி கேட்கும். இவர்களின் கலாட்டாவிற்கும், கலாச்சாரத்திற்கும் நடுவில் மாட்டிக்கொண்டான் கெளதம்.

வகுப்புகள் முடிந்த மாலைவேளையில் இளைய மாணவர்களை வம்பு செய்ய துவங்கினார்கள் மூத்த மாணவர்களான ராஜீவும் அவன் நண்பர்களும் (சீனியர்ஸ்ஸாமா). படிப்பில் கலக்கும் கெளதமை என்றும் ராஜீவ் பிரிந்ததில்லை, நண்பேண்டாவை... இப்பொழுதும் அருகிலேயே வைத்திருந்தான்.

"சிலிர்ப்பூட்டும் தென்றல் நடுவில்,
வாதநாராயன் மரம் பூக்கள் உதிர்த்த,
சிரசெங்கும் பூக்களுடனும்,
மனம் முழுதும் படபடப்புடனும்,
இவர்களை கடந்தால் நம்ம ஹீரோயின். அதாங்க நம்ம ஜானகி".

"வானத்தின் நீலமும்...
வெண்மேகநிறமும் கலந்த சல்வாரில்...
கண்களில் மையிட்டு...
இடை தொட்டாடிடும் தளர்வான பின்னலில்,
சிரித்திடும் ஒற்றை ரோஜாவுடனும்...
இதழில் பூத்த புன்னகையுடனும்...
தவழ்ந்து வரும் ஜானகியை...
விழிகளைக் கேட்காமலே,
படம்பிடித்துக் கொண்டது,
கெளதமின் இதயம்..."

கிளிக் அட நம்ம‌ ஹீரோவோட‌ இதயம் ஃபோட்டோ எடுத்த சத்தம்தாங்க. இனி இவர்கள் நடுவில் நடக்கும் சிலிர்ப்பான‌ கதையினை அடுத்த வாரம் தொடரலாம்.
- தொடரும்

4
Average: 3.7 (3 votes)

Comments

நீண்ட‌ இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரேணு வந்துள்ளேன். புது முயற்சியாக‌ கதையுடன் வந்துள்ளேன். படித்து பிடித்திருப்பின் கருத்திடுங்கள், கூடவே பிழையிருப்பின் சுட்டுங்கள், இன்னும் சிறப்பாக்கவும் யோசனை கூறுங்கள். திட்டுவதானாலும் திட்டுங்கள்:)

நெடுங்கதை தொடக்கம். தொடக்கமே சூப்பர். வர்ணனை அருமை. விமர்சனம்.., நாங்க எதுனாலும் ஆறு மாசம் கழிச்சிதான் சொல்லுவோம். கதை களம் பிடிக்கத்தான் இவ்வளவு நாள் விடுமுறையா? ரேணுகா சிஸ்டர்.

உன்னை போல் பிறரை நேசி.

கனி இந்த‌ கதையின் அடுத்த‌ பகுதிக்காக‌ வெயிட்டிங் .. ;) ஆனா அதுக்கு அடுத்த‌ வாரம் வரை வெயிட் பண்ணனுமா ..? :(

சீக்கிரமா அடுத்த‌ பகுதியை தொடருங்கள்... நெடுந்தொடர் சிறப்பாக‌ செல்ல‌ வாழ்த்துக்கள் அக்கா ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அசத்தலான அறிமுகம். இதயத்தை தொட்டது. ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

Be simple be sample

சூப்பர் ரேணு :) அடுத்த பகுதியை சீக்கிரமே வெளியிடுங்க, படிக்க ஆவலா
இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர் அக்கா. அழகான‌ தொடக்கம். தொடர்கதை யாராவது எழுதமாட்டார்களா? என்று காத்திருந்தேன். சந்தோஷமா இருக்கு. இனி உங்கள் கதைக்காக‌ காத்திருப்பேன். தலைப்பு வெகு அழகு : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

ரொம்ப நல்ல ஆரம்பம் நிச்சயமா கதையின் தொடர்ச்சியும் அமர்க்களமா இருக்கும்னு நினைக்கிறேன், தொடருங்க ரேணு, ஆனா ஒரு ரெக்வஸ்ட் கொஞ்சம் சீக்கிரம் சீக்கிரம் சொல்லிடுங்க ரேணு ரொம்ப சஸ்பென்ஸ் தாங்காது நம்மளுக்கு.

ஒரு நல்ல படம் வாசிக்கிர மாதிரி பீல் பன்னந் நடுவுல நிருத்திடீங்க
அடுத்த தொடர ஆவளுடன் எதிர் பாாா்கிரன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு ரேணுகா,

அறுசுவையில் தொடர்கதை வேணும்னு நிறையப் பேர் கேட்டுட்டு இருந்தாங்க‌.

அழகா ஆரம்பிச்சிருக்கீங்க‌, தொடருங்க‌. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

//விழிகளைக் கேட்காமலே,
படம்பிடித்துக் கொண்டது,
கௌதமின் இதயம்// சூப்பெர்.
ரொம்ப‌ நாள் காக்க‌ வைக்காம‌ விரைவாக‌ அடுத்த‌ அத்தியாயம் தாருங்க‌ ரேணு:)

நான் வனிதா அக்காவின் அ ஆ அணில் இடுகையில் தொடர்கதை தொடர்பாக பின்னூட்டமிட்டு முழுதாக ஒருநாளில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன் ஒரு சின்ன விண்ணப்பம் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்து அந்த கிழமையில் தொடர் வெளி வந்தால் வாசகர்களான எங்களுக்கு ஆர்வமாக இருக்கும் பிஸியாக இருந்தாலும் அந்த கிழமையில் அடித்து பிடித்து படித்து விடுவோம்!

இதயத்தால் பேசுகிறாள் தலைப்பு மிக அருமைங்க...ஜானகியோட அறிமுகம் சூப்பர் :)
காதல் சப்ஜெக்ட் கதை அப்போ சூப்பரா இருக்கும் .படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் தோழி :)

All is well

ரொம்ப‌ நல்லா இருக்கு,
இப்படி தொடரும் போட்டுடீங்களே....
அடுத்த‌ பார்ட் எப்போ போடுவீங்க‌....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ம்ம்... தொடர் கதை!! கலக்கறீங்க போங்க :) கவிதையும் வரும் போலிருக்கே... அசத்தலா துவங்கி இருக்கீங்க, கலக்குங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதையுடன், தொடரும் கதை....அசத்தலா ஆரம்பிச்சிறுக்கீங்க‌.....

வாழ்த்துக்கள்.....

மிக்க‌ நன்றி கிரிஸ், வருகைக்கும் பாஸிட்டிவ் பதிவிற்கும். கதை களம் பிடிக்கன்னு இல்லை. இப்பவரை நேரம் ஒழுங்கா கிடைக்கலை.

மிக்க‌ நன்றி கனி. வருகைக்கும் ஊக்கத்துக்கும்.

நன்றி ரேவ்ஸ் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்:‍)

அருள், ஆவலா இருக்கா? மிக்க‌ மகிழ்ச்சி. ஆனா இதுக்கே ஆவலா இருக்குன்னா நீங்க‌ எழுதுவதை படிக்க‌ இதைவிட‌ மேலாக‌(ஆவல்) ஒரு வார்த்தை சொல்லனும்பா. நிஜமாவே ரொம்ம்ப‌ அழகா, ஆர்வமா, எழுதறீங்க‌. மிக்க‌ நன்றிபா.

மிக்க‌ நன்றி டெடி, வருகைக்கும், பதிவிற்கும். சொல்லப்போனா தொடர்கதை எனக்கு அதிகம் பிடிக்காதுன்னும் சொல்லலாம். எடுத்தமா படித்து முடிவு த்ரிச்சுக்கிட்டமான்னு இருக்கனும். அப்படியே தொடர்கதைன்னாலும்கூட‌ சீக்கிரம் முடிச்சிடனும், பின் புதிதாக‌ துவங்கனும்.

தேவி, மிக்க‌ நன்றி தேவி வருகைக்கும் பதிவிற்கும். கண்டிப்பா சீக்கிரம் சஸ்பென்ஸ் உடைத்து கதையை முடிந்தவரை இன்ட்ரஸ்டிங்கா கொண்டுசெல்கிறேன்.

ஜனதுல், மிக்க‌ நன்றி ஜனதுல். சின்ன‌ வயதில் பாட்டி அம்புலிமாமா படித்து சொல்வாங்க‌. அதில் படக்கதையில் மாயாவி வரும். அதனை கற்பனை செய்வது மிக‌ பிடிக்கும். நீங்க‌ சொன்னதும் அது கற்பனையில் படம் ஓட்றது எவ்வளவு சுகம்னு தெரியுது. இரண்டாம் பாகம் வந்திடுச்சு, படிங்க‌.

மிக்க‌ நன்றி சீதாம்மா, அப்போ அறுசுவை நேயர்விருப்பங்களை கொடுத்திருக்கேனா? மகிழ்ச்சிதான். மீண்டும் நன்றிகள்.

நிகி, அடுத்த‌ அத்தியாயம் வந்திடுச்சு போய் படிச்சிட்டு சொல்லுங்க‌. என்ன‌ இப்ரூவ் பண்ணனும்னு.

பெனாசிர் வனியின் அ ஆ அணில் படித்தேன் ஆனால் பின்னூட்டங்களை படிக்கவில்லை.அவசரம் அவசரமாக‌ அணில் படம் இருந்ததும் படித்துவிட்டேன். வனியின் சிரியாவை தேங்கி வைத்துள்ளேன். கேட்டா அடிக்க‌ வந்திடுவாங்க‌. ஒன்னா படிக்கலாம்னா உட்கார‌ முடியமாட்டேங்குது.
போன‌ வெள்ளி முதல் பாகம் எழுதினேன். இன்று இரண்டாம் பாகம் எழுதிருக்கேன்.அப்போ அடுத்த‌ வெள்ளி மூன்றாம் பாகம். ஓகே வா?

சஜன் மிக்க‌ நன்றிப்பா, உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும். உங்கள் கவிதைகள் நன்றாக‌ உள்ளன‌. கடைசியாக‌ போட்டதை படிக்கனும். படித்து அதில் பின்னூட்டம் எழுதறேன்.

சுபி அடுத்த‌ பாகம் வந்திடுச்சு, படித்து பாருங்க‌.

வனி மிக்க‌ நன்றி, நீங்க‌, கிரிஸ், அருள், இன்னும் பலர் இருக்காங்க‌, அனைவரையும் பார்த்துதான் நானும் கிளம்பிட்டேன்.

அனு, மிக்க‌ நன்றி அனு படித்து பதிவிட்டமைக்கு.