Thyroid problem இருந்து குழந்தை பாக்கியம்

Thyroid problem இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தோழிகள் நீங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் , வேறு என்னென்ன‌ மாற்றங்கள் செய்து பலன் கன்டீர்கள் என்று இங்கு வந்து பகிர்ந்துக் கொண்டால் என்னை போன்ற Thyroid ப்ராப்ளம் உள்ள தோழிகளுக்கு மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கண்டிப்பாக பதில் போடுங்கள் தோழிகளே .. ப்ளீஸ்......

டோஸ்... உங்கள் தாய், பிள்ளைக்கு இருந்தாலும் கூட ஒப்பிட்டுப் பார்க்காதீங்க. டெஸ்ட் முடிவு இவ்வளவு இருந்தா இத்தனை mcg என்கிற அளவு விகிதாசாரம் எல்லாம் கிடையாது. அது டாக்டர்கள் ஒரு அனுமானத்தில் கொடுக்கிறது. ஒவ்வொரு தனி ஆளுக்கும் சரியான தைராயிட் அளவு என்று ஒன்று இருக்கும். அது மற்றவரது தைராயிட் அளவிலிருந்து வேறுபடும். அதை இவ்வளவுதான் என்று நிர்ணயிக்க முடியாது. டாக்டர் ஒரு குத்துமதிப்புல கொடுக்கிற டோஸ் அனேகம் சரியான அளவா அமைஞ்சுருது. அவங்களுக்குத் தெரியும், எப்ப எவ்வளவு கொடுக்கணும் என்று. சில சமயம் இடையில் டோஸை மாற்ற வேண்டியும் வரலாம்.

எது எப்படியாக இருந்தாலும் அவரவருக்கு கொடுக்கும் டோஸ் மட்டும் எடுங்க. கூட்டணும் குறைக்கணும் என்பது எல்லாம் டாக்டர் சொல்லணும்.

சின்னவங்க குழைந்தை வேணும் என்று ஆசையா இருக்கிறவங்க இதுல உங்க டாக்டரைத் தவிர, மற்றவங்க அபிப்பிராயம் கேட்டு தப்புப் பண்ணீராதீங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா. நீங்கள் சொல்வது போல் தான் நானும் நினைக்கிரேன். எவ்வளவு என்பதல்ல‌ என்னுடைய‌ சந்தேகம். ஆனால் குழந்தை உருவான‌ பிரகு குழந்தைக்கும் சேர்த்து டோஸ் போடனுமா என்பது தான் என்னுடைய‌ டவுட் இமாம்மா....

:-) சொன்னேனே.. டாக்டரைக் கேட்டு பண்ணுங்க. நானா எதையாச்சும் சொல்லி ஏதாவது ஆகிட்டுன்னு வைங்க. என்னாலன்னு வந்துரும். ;)) என்ன டவுட் ஆனாலும் உங்களைப் பார்க்கிற மருத்துவரிடம் கேட்டுத் தெளிவதுதான் புத்திசாலித்தனம்.

சாதாரணமாக சில மருந்துகள் குழந்தை உண்டாகி இருக்கும் சமயம் & பாலூட்டும் சமயம் தவிர்க்க வேண்டும். அதை நிச்சயம் டாக்டர் கொடுக்க மாட்டாங்க. இது வேற. ஹோர்மோன் தொடர்பானது.

ஹோர்மோன்களும் பாலூட்டும் சமயம் கடத்தப்படுவது உண்டு. ஆனால் உங்களுக்கு தைராயிட் குறைபாடு இருப்பதால் இப்பவே குழந்தைக்கும் அப்படி இருக்க வேணும் என்கிறது இல்லை. குழந்தைக்குத் தேவையான ஹோர்மோன்கள் அதன் உடலிலேயே சுரக்கும்.

குழந்தைக்கும் இதே பிரச்சனை இருப்பதாக கண்டு பிடித்தால் டாக்டரே சொல்லுவாங்க என்ன செய்ய வேணும் என்று.

நீங்கள் சாப்பிடுவது எல்லாமே குழந்தைக்குப் போவது இல்லை. தேவையானவை மட்டும்தான் கடத்தப்படும்.

‍- இமா க்றிஸ்

அது மிகவும் சரி..ஹார்மோன் மருந்துகள் எப்போது எவ்வளவு சாப்பிட‌ வேண்டும் என்பது அப்போதைய‌ அவர் உடல் நிலையை பொறுத்தது தான்..எனது உடலுக்கு கர்ப்பமானதும் கூடுதல் தேவைப்பட்டது அதாவது இரண்டாம் மாதம் பரிசோதித்துப் பார்க்கையில் tsh அளவு கூடியிருந்தது..அதனால் தான் கூடுதல் மருந்து..மற்றபடி குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட்டதல்ல‌...மேலே இமா அவர்கள் கூறியது போல‌ குழந்தைக்குத் தேவையான ஹார்மோன்கள் அதன் உடலிலேயே சுரக்கும்..ஆனால் கர்ப்ப‌ காலத்தில் நமது தைராய்டு இயக்கம் சரியாக‌ இல்லாமல் போனால் பிற‌க்கும் குழந்தைக்கு IQ குறைபாடு இருக்குமாம்.எனவே கர்ப்ப‌ காலத்திலும் பாலூட்டும் போதும் மாத்திரை மிக‌ நிச்சயமாக‌ போட்டுக்கொள்ள‌ வேண்டும்.எவ்வளவு என்பதை உங்கள் மருத்துவர் தான் முடிவு செய்ய‌ வேண்டும்..எனது மருத்துவர் சொல்லுவார் "I am just doing titration with ur harmones and medicine to determine ur dosage" என்று..

ந‌ன்றி இமா & ஷனிதா நீங்க‌ 2 பேரும் சொல்லும் கருத்து தான் என்னுடையதும். நான் கேட்க‌ வந்தது, கடந்த‌ தடவை 55 நாளில் கரு கலைந்து விட்டது. அதற்கு 3 மதங்கலின் முன் செக் பன்னி 50 மிகி போட்டு வந்தேன். கர்பம் கன்போம் பன்னியவுடன் டாக்டரிடம் போனேன். அவர் சொன்னார் இன்னும் 3 மாதம் ஆன‌ பின் தைரொயிட் செக் பன்லாம்னு. அதற்குள் கலைந்து விட்டது. (தைரயிட் காரனம்னு சொன்னாங்க). அடுத்த‌ தடவை இப்படி நடந்து விட‌ கூடதுங்கிரதுகாக‌ கேட்டன்.
//குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட்டதல்ல‌... குழந்தைக்குத் தேவையான ஹார்மோன்கள் அதன் உடலிலேயே சுரக்கும்.//. சாரிப்பா. இது எனக்கு நிச்சயமா தெரியும். நான் கேட்ட‌ விதம் தப்புன்னு நினைக்கிரேன். குழந்தை தங்கியவுடன் தைரொயிட் ஹார்மோன் அப்னோர்மலாக‌ அதிகம் சுரக்குமான்கிரது தான் என் சந்தேகம். சகோதரிகளின் அனுபவங்கள் எப்பிடி என்று அறிய‌ ஆவலாக‌ இருந்தது.

ரேணுகா எனக்கு கன்ஃபார்ம் பண்ணிய‌ பிறகு டாக்டரின் முதல் அப்பாயின்மென்டிலேயே செக் பண்ண‌ சொல்லிட்டாங்க‌..அனேகமாக‌ 46 வது நாள் தைராய்ட் டெஸ்ட் பண்ணினேன்னு நினைக்கிறேன்..ஹைப்போ தைராய்டிசம் இருக்கிறவங்களுக்கு ப்ரெக்னென்சியால் தைராய்டு சுரப்பில் மாற்றங்கள் இருக்கும் அதனால் டெஸ்ட் செய்து விட்டு வந்து பாருங்கள் என்று தான் கூறினார்.அதே போல் அதிகமாக‌ தான் இருந்தது..மேலும் ஒரு நாள் கூட‌ மருந்து போட‌ மறக்கக்கூடாது, அதனால் மாத்திரை டப்பாவை டூத் பிரஷ் வைக்கும் இடத்துக்கு பக்கதிலேயே வச்சுக்கோ அப்போ தான் மறக்காது என்று வலியுறுத்திக் கூறினார்.அடுத்து மூன்றாம் மாத‌ முடிவில் டெஸ்ட் செய்ய‌ சொன்னார்கள்..அதற்குப் பின் தைராய்டு பற்றி டாக்டர் ரொம்ப‌ கண்டு கொள்ளாதது போல் தான் எனக்குத் தோன்றியது..நானாகத்தான் ஏழாம் மாதம் நாடு திரும்புவதற்கு முன் வலிய‌ டெஸ்ட்டுக்கு எழுதிக் கேட்டு செய்து கொண்டேன்(ஏன்னா இங்க‌ ஃப்ரீயா செஞ்சுக்கலாம்ல‌)..எல்லாமே எனக்கு நார்மலாத்தான் இருந்தது...இதுதான் என் அனுபவம் :)

//ஹைப்போ தைராய்டிசம் இருக்கிறவங்களுக்கு ப்ரெக்னென்சியால் தைராய்டு சுரப்பில் மாற்றங்கள் இருக்கும் அதனால் டெஸ்ட் செய்து விட்டு வந்து பாருங்கள்//
தாங்ஸ் ஷனிதா. மிகவும் பயனுள்ள‌ தகவல். [ எம்மிடங்களில் எல்லாம் வைத்தியர்களால் சரியான‌ விளக்கம் சொல்லப் படுவதில்லை. :( . விதி விலக்குகள் இருக்கலாம்].

மேலும் சில பதிவுகள்