என் நாத்தனாரின் 10வயது பொண்ணுக்கு நெஞ்சில் ஒரு புண் இருந்தது. அது இப்போ வளர்ந்து கொண்டே போகிறது. டாக்டர் அதை keloid என்று சொல்கிறார். அதை பற்றி தெரிந்தால் பதில் கூறுங்கள்.
என் நாத்தனாரின் 10வயது பொண்ணுக்கு நெஞ்சில் ஒரு புண் இருந்தது. அது இப்போ வளர்ந்து கொண்டே போகிறது. டாக்டர் அதை keloid என்று சொல்கிறார். அதை பற்றி தெரிந்தால் பதில் கூறுங்கள்.
Pls pa ungaluku therincha
Pls pa ungaluku therincha solunga pa.
வணக்கம்
கவலை வேன்டாம் நல்ல ஸ்கின் டாக்டரை பார்க்கவும்... என் தாத்தா வும் இதெ பிரச்சன... அதை தொட வேன்டம்
வணக்கம் அக்கா
Tamil la type panna konjam kashtama erukku.. athu nalla arikkum soriya kudathu illana ella idathulaiyum paravum... en thathavukkum ithea pirachanai.. neraya doctor pathachu no use.. athoda condition parthutu laser panlama venama nu skin doctor solvanga... Better nalla skin doctor ta once kaaminga
கீலொய்ட்
இது பரம்பரையில் கடத்தப்படக் கூடிய விடயம். என் கணவர், இரண்டு பையன்கள், நாத்தனார், அவரது மகள் இத்தனை பேருக்கு கீலொய்ட் டென்டன்ஸி இருக்கிறது.
பரவாது. சிலது ஒரு அளவில் நிற்கும். சிலது அதே இடத்தில் அளவு பெருத்துக்கொண்டே வரலாம். சொறியக் கூடாது. ஊசி போட்ட இடத்தில் கூட வரலாம்.
மிகவும் பெரிதாக இருப்பதை அறுவை சிகிச்சை செய்து நீக்கலாம். ஆனால் அறுவைசிகிச்சை செய்த தழும்பிலிருந்து மீண்டும் வளரக் கூடும். பிரச்சினை இல்லாவிட்டால், இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுங்கள்.
//என் நாத்தனாரின் 10வயது பொண்ணுக்கு// அப்படியானால் உங்கள் குழந்தைகளுக்கும் வரச் சாத்தியம் இருக்கிறது. முகத்தில் காயங்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். என் மூத்தவருக்கு சிறுவயதில் வேறு ஒரு சத்திரசிகிச்சை செய்ய நேர்ந்தது. அந்தச் சமயம் தையல் போடுவதற்கு விசேடமான ஊசி ஒன்று வாங்கிக் கொடுக்குமாறு எழுதிக் கொடுத்தார்கள். இது இருபது வருடத்துக்கு முந்தைய கதை. இப்போது முறைகள் மாறியிருக்கும்.
//athoda condition parthutu laser panlama venama nu skin doctor solvanga... Better nalla skin doctor ta once kaaminga// இதுதான் என் கருத்தும்.
- இமா க்றிஸ்
நன்றி shabana &imma
நன்றி shabana & imma. நிறைய doctor பார்த்தாச்சு இதை ஒன்னும் செய்ய முடியாது சொல்லிட்டாங்க. ஆனா அவளுக்கு அது வளர்ந்து கிட்டே இருக்கு. அது தான் பயமா இருக்கு. Chennai la appolo cosmetics காமிக்கலாம்னு ஒரு யோசனை. அது பத்தி தெரிஞ்சா சொல்லுங்க.
Keloid நோய்
அப்போலா cosmotic பற்ற் எனக்கு தெரியாது
இது ஒரு பரம்பரை நோய் என்பதால் குணப்படுத்துவது சிரமமே என்றாலும் மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ள நிலையில் தோல் சம்பத்தப் பட்ட மருத்துவரிடம் காண்பித்து தீர்வு காணலம் keloid should not undergo cosmotic surgeries and procedure such as for piercing என்பதுதான் ஆய்வுகளின் முடிவுகள் சொல்லுகின்றன.
உங்கள் நாத்தனாரின் குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
Information is wealth