ப்ளாஸ்டிக் பாட்டில் ஃப்ளவர் வேஸ்

தேதி: November 24, 2014

5
Average: 4.3 (3 votes)

 

ப்ளாஸ்டிக் பாட்டில்
கத்தரிக்கோல்
ப்ரஷ்
பேர்ல் கலர் பெயிண்ட் - விருப்பமான நிறத்தில்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். ப்ளாஸ்டிக் பாட்டிலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பாட்டிலின் கழுத்து பகுதி முடியும் இடத்தோடு நறுக்கி எடுத்துவிடவும்.
பிறகு பாட்டில் முழுவதும் பேர்ல் கலர் பெயிண்ட்டை அடித்துக் காய வைக்கவும்.
காய்ந்ததும் படத்தில் காட்டியுள்ளபடி 4 செ.மீ அளவிற்கு நறுக்கவும்.
இதே போல் பாட்டிலைச் சுற்றிலும் ஒரே அளவில் இருக்கும்படி நறுக்கிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளபடி பாட்டிலைக் கவிழ்த்து வைத்து, நறுக்கிய துண்டுகளை நன்றாக மடக்கிவிடவும்.
பிறகு நறுக்கிய ஒவ்வொரு துண்டையும் பாதியாக மடித்து, அதற்கு முன்பு இருக்கும் துண்டுடன் வைத்து சொருகிவிடவும்.
இதே போல் சுற்றிலும் மடித்து சொருகிவிட்டுக் கொள்ளவும்.
பாட்டிலைக் கொண்டு எளிதாகச் செய்யக் கூடிய அழகிய ஃப்ளவர் வேஸ் ரெடி. பூக்களை வைத்து அலங்கரிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் க்ராஃப்ட். முயற்சி செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர்.. 1 வீக் முன்னாடி இந்த டிசைன் நா பன்னினேன். நம்பவே முடியலை. பட் உங்களோடது இன்னும் சூப்பர் அக்கா.. நா கலர் அடிக்கல .. ஆல்ரெடி க்ரீன் கலர் பாட்டல்லதா பன்னேன் சொ கலர் பன்னல. :)