கணித துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் என்ன

அன்பு தோழிகளே ,
நான் பொறியியல் electronics and communication இன்ஜினியரிங் படித்து விட்டு சாப்ட்வேர் எஞ்சினியர் ஆக பணி புரிந்து வருகிறேன். எனக்கு இந்த துறை மிகவும் அலுப்பாக இருக்கிறது. யோசித்து பார்த்த போது எனக்கு கணிதத்தில் மிகவும் விருப்பம் இருக்கிறது. படிக்கும் காலங்களில் கணிதமே எனக்கு விருப்ப பாடம். எனவே முழுவதும் கணிதத்தை மையமாக வைத்து செய்யும் வேலைகளில் ஆர்வம் அதிகம் உள்ளது. ஆனால் எனக்கு தெரிந்து கணித ஆசிரியராக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி புரிவது தவிர வேறு எந்த மாதிரியான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிய வில்லை. மேலும் கல்லூரிகளில் பணி புரிவதற்கு தேவையான தகுதிகள் என்னவென்றும் புரியவில்லை. தோழிகளே, உங்களுக்கு தெரிந்த விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றியுடன்,
மகாசங்கர்

அன்புள்ள தோழிகளே ,
அறுசுவையில் இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியையாக பணி புரிபவர்கள் யாரெனும் இருக்கிறீர்களா? எனக்கு குழந்தையை பார்த்து கொண்டு IT பணி செய்வது மிகவும் கடினமா இருக்கிறது . அதனால் எதாவது ஒரு பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியையாக பணி புரிய விருப்பம். ஆனால் அதற்க்கான தகுதிகள் என்னவென்று தெரியவில்லை. மேலும் பணிசுமை , வேலை நாட்கள் பற்றியும் அறிய ஆவல். யாரேனும் உதவ முடியுமா ப்ளீஸ்.

நட்புடன்,
மகாசங்கர்

மேலும் சில பதிவுகள்