குழந்தை வயிற்றில் பூச்சி உதவுங்கள்..

என் மகனுக்கு 2 வயது 3 மாதம் ஆகிறது அவன் இபொதெல்லாம் சரியாக சாப்பிடுவதில்லை அதுமட்டுமின்றி இபொதெல்லாம் இனிப்பு அதிகம் சாப்பிடுகிரான் அதானால் வயிற்றில் பூச்சி வந்துவிட்டது அந்த பூச்சியை எப்படி அழிப்பது அதற்க்கு நான் பாகற்காய் கொடுக்கிரேன் வேறு என்ன உணவு கொடுத்தால் புச்சி அழியும். தயவு செய்து உதவுங்கள்.

ஹாய்,

குழந்தை மருத்துவரிடம் சொல்லி குழந்தைக்கு பூச்சி மருந்து கேட்டுப் பார்க்கலாமே... ஆனால் சில மருத்துவர்கள் பூச்சி மருந்து குடுக்க பரிந்துரைக்கிறார்கள், சிலர் பரிந்துரைப்பதில்லை...

வேப்பம் கொழுந்து அரைத்து ஒரு உருண்டை குடுத்துப்பார்க்கலாம். ஆனால் அந்த கசப்பை குழந்தை சாப்பிடுமானு தெரியலை.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Sister,
En maganukum poochi irunthathu. Doctor marundhu kuduthar sari agivitadhu. Poochi oruvaruku irunthal elarum marunthu edukalam.doctor kita kelunga. Neenga poochi nu epadi kandupidicheenga ?

//இனிப்பு அதிகம் சாப்பிடுகிரான் அதானால் வயிற்றில் பூச்சி வந்துவிட்டது// முதல்ல இந்த எண்ணம் தப்பு என்பதைப் புரிஞ்சுக்கணும் நீங்க. பூச்சி என்ன எறும்பா பையன் வயிற்றுக்குள்ள இனிப்பு இருக்குன்னு உள்ள போக! எப்படிப் போச்சு! வாய் வழியாவா, மூக்கு வழியாவா! சிந்திச்சுப் பாருங்க.

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் குண்டாகலாம். சாப்பிட்ட பிறகு பல்லை ஒழுங்காக சுத்தம் செய்யாதிருந்தால் பல்லில் பூச்சி அரிக்கும். இனிப்பினால எல்லாம் வயிற்றில் பூச்சி வராதுங்க. அப்படி வரதா இருந்தா... பெரியவங்க யாரும் இனிப்பே சாப்பிட மாட்டாங்க. அது என்ன பெரியவங்க இனிப்பு சாப்பிட்டா வராத பூச்சி சின்னவங்க சாப்பிட்டா மட்டும் வருது!! சின்னவங்களைப் பிடிக்காதோ அதுக்கு! :-)

வயிற்றில் பூச்சி வருவதற்கான பிரதான காரணங்கள்... கையும் கிருமித் தொற்றுக்குள்ளான உணவும். உணவு... கெட்டிருக்கத் தேவையில்லை இதற்கு. கிருமி இருக்கும் இன்னொருவர் கையிலிருந்து தொடுகை மூலம் வரும். நீங்க கூட கொடுத்திருக்கலாம் பூச்சியை.

//Poochi oruvaruku irunthal elarum marunthu edukalam.// எடுக்கலாம் இல்ல, எடுக்கணும் கட்டாயம்.

சின்னவருக்கு சுத்தம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க. நீங்களும் இன்னும் கொஞ்சம் சுத்தத்தைக் கவனிங்க. எங்கேயோ பிரச்சினை இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு தவிர்க்கிற வழியைப் பாருங்க. உங்க டாய்லட் & பாத்ரூம் கதவுகள், கைபிடிகள், குழாய், பயன்படுத்தும் கிண்ணங்கள் எல்லாம் ஒரு தடவை டெட்டால் போட்டு சுத்தப்படுத்துங்க.

இப்போது அவசியம் சின்னவருக்குப் பூச்சி மருந்து... அங்க என்ன கொடுப்பாங்கன்னு தெரியல. வேமொக்ஸ் கொடுக்கக் கூடும். டாக்டர்ட்ட விசாரிச்சுக்கங்க.

//பாகற்காய் கொடுக்கிரேன் வேறு என்ன உணவு கொடுத்தால் புச்சி அழியும்.// உணவு பற்றித் தெரியாது எனக்கு. மருந்துதான் தெரியும். மேலே சொன்னேன். ஆனால் ஒரு விஷயம்... நீங்கள் ஆயிரம் பாவற்காய், வேப்பிலை என்று குழந்தையைச் சிரமப்படுத்திக் கொடுத்தாலும் அது தற்காலிகம்தான். இருக்கிற பூச்சியைக் கொல்லலாம். திரும்ப வராமல் தடுக்கிற வழியைப் பார்க்காவிட்டால், இது தொடர்கதையாகிப் போகும்.

‍- இமா க்றிஸ்

Imma madam sonna mathiri ellarum edukanum. Nalathu than. En payyan Ku motion pora idathula itching and stomach pain irunthathu. Poochi irunthal udambu therathu. So sekirama marunthu kudunga. Suthama padukai vachukonga. Frequent a bed spread mathunga.payyanoda inners um than. Phone LA irunthu type panren. Epadi Tamil LA type panradhu tholigale?

பதில் அளித்த‌ அனைவருக்கும் மிக்க‌ நன்றி.

http://www.arusuvai.com/tamil/node/33656?page=257 பக்கத்தில் அபினயா ஆனந்த் கேட்ட‌ கேள்விக்கான‌ பதில் இது.
~~~~~~~~~~

//poochi marunthu saptu pathutan// ;) என்னன்னு சொல்லாம‌ இப்பிடி மொட்டையா சொன்னால் எப்பிடி! என்ன‌ மருந்து எடுத்தீங்க‌? மாத்திரையா? என்ன‌ மாத்திரை? எப்படி எடுத்தீர்கள்?

மேலே இழையில் உள்ள‌ மீதி இடுகைகளை முதலில் படித்துப் பாருங்கள். அங்கே பதில் கிடைக்காவிட்டால் அல்லது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

//இந்த சமயத்தில் உங்கள் உடல் மெலிவது நல்லது அல்ல..// என்று சகோதரி சொல்லியிருக்கிறார். அப்படியானால்... நீங்கள் கர்ப்பமா? எனக்குத் தெரிந்து, கர்ப்ப‌ காலத்தில் முதல் நான்கு மாதங்களுக்குள் பூச்சிக்கு மருந்து கொடுப்பது இல்லை. காரணம் முளையத்தை மருந்து இன்னொரு பூச்சியாகப் பாவித்து அழித்து விடலாம். மருத்துவ‌ ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

//1 yrs ah intha pblm iruku ithuku poochi marunthu saptu pathutan, loose motion tablet saptu pathuta kekala,// மருந்து கேட்கவில்லை என்பது இதன் அர்த்தம் அல்ல‌. வீட்டிலுள்ள‌ அனைவரும் மருந்து சாப்பிடாவிட்டால் (அவர்களுக்கு பிரச்சினை இல்லாவிட்டாலும் சாப்பிட‌ வேண்டும்.) மீண்டும் மீண்டும் தொற்றும். //eathu senjalum sari aga matiguthu.// இல்லை, நீங்கள் முக்கியமானது எதையோ கோட்டை விடுகிறீர்கள். வீட்டார் அனைவரும் சுத்தத்தைப் பின்பற்றுவது வெகு பிரதானம். வெளியே இருந்து கூட‌ மீண்டும் மீண்டும் தொற்றலாம். உ+ம் பாடசாலை, வேலையிடம். கூட‌ எப்பொழுதும் தரமான‌ ஹாண்ட் சனிடைசர் வைத்திருந்து பயன்படுத்துங்கள். சில‌ விடயங்களை நாம் பெரிதுதாகக் கவனத்தில் எடுப்பது கிடையாது. குளியலறைக் குழாய்கள், அங்கு நீர் எடுக்க‌ வைத்திருக்கும் வாளி, கிண்ணங்கள். இவற்றிலிருந்து சுலபமாகக் கிருமிகள் தொற்றலாம். அவற்றைத் தனியாக‌ இடைக்கிடையே பாத்திரம் கழுவுவது போல‌ கழுவிப் பயன்படுத்துவது நல்லது. //motion pora edathula itching aguthu,// புழுக்கள் முட்டையிடும் சமயம் இப்படி இருக்கும் என்று படித்ததாக‌ நினைவு.

//uri// என்ன‌ உறி!! எனக்குத் தமிங்கிலம் இடிபாடு. தமிழில் கேட்டால் நல்லது. அல்லாவிட்டால் தப்புத் தப்பாக‌ ஊகித்து வைப்பேன்.

//ithunala pasika matiguthu// நீங்களே இதலால்தான் என்று முடிவு செய்ய‌ வேண்டாம். காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லவா? // evlo saptalum odambu melunjute pothu// ம். //ithuku ena solution nu soluga// டாக்டர்ட்ட‌ போறது தான் பெஸ்ட் சொலுஷன்.

//intha poochiya total ah veliya kondu vara mudiuma?// முடியும், உங்கள் வீட்டார் வளர்க்காமலிருந்தால் மட்டும். நீங்கள் உள்ளே அனுப்பி அனுப்பி வெளியே கொண்டு வர‌ நினைக்கிறீர்கள். எல்லோர் ஒத்துழைப்பும் இல்லாமல் அது எப்படி டோட்டலாக‌ நடக்கும்!

//15 week pregnant ah iruka.// //ithuku thaguntha mari eathachum solution// நிச்சயம் நீங்க‌ டாக்டர்ட்ட‌ கேட்காம‌ எதுவும் பண்ண‌ வேண்டாம். ஆனால் உங்கள் வீட்டிலுள்ள‌ மீதிப் பேரை இப்பவே பூச்சிக்கு மருந்து குடிக்க‌ வையுங்க‌. வேமொக்ஸ் ஆறு வகைப் புழுக்களை அழிக்கக் கூடியது. சுலபமாக‌ ஃபார்மஸியில் வாங்கலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு நன்றி.
எனக்கு சரியா அந்த மாத்திரை பெர் தெரியல. இனி சுத்தமா வாஷ் பன்னி வெச்சுகறே..நா இப்போ 4 மாசம் கர்ப்பமா இருக்க அதனாலதா இப்ப இதுக்கு என்ன பன்றதுனு தெரில...நீங்க சொன்னா மாதிரி நான் நிச்சயம் டாக்டர்ட்ட போய்டு வரே..அம்மா...

அன்புள்ள சகோதரிகளுக்கு,
எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது, குழந்தை இல்லை.எனக்கு 28 நாளுக்கு விலக்கு ஆகிறது.தோழிகள் சொன்னது போல கடந்த முன்று மாதமாக விலக்கு ஆன 10ம் நாளிலிருந்து 16ம் நாள் வரை நாளுக்கு இரண்டு ,மூன்று முறை இருக்கிறோம் இதுவரை எந்த பச்சிடிவ் நிகழ்வும் இல்லை. நான் என்ன செய்ய தோழிகளே?நாங்கள் இதுவரை எந்த மருத்துவமும் செய்யவில்லை.ப்ளிஸ்.....

Hi, enaku regular period last period date DEC 4 27 days cycle last 3 days period varala bt today bleeding aguthu ena reason pls reply sister's

Pls reply me my question sister's

மேலும் சில பதிவுகள்