friends nan sewing machine vangalamnu eruken.tv addla varra mini sewing machine yarenum use panringla epdi eruku nan vangalama vendamanu pls advice pannunga pa
friends nan sewing machine vangalamnu eruken.tv addla varra mini sewing machine yarenum use panringla epdi eruku nan vangalama vendamanu pls advice pannunga pa
மினி மெஷின்
//tv addla varra mini sewing machine// :-) என்ன ப்ராண்ட் அது?
- இமா க்றிஸ்
telebuy ma
telebuy ma
மினி மெஷின்
உங்களுக்காக ஒரு கூகுள் சர்ச் போட்டேன். :-)
என்ன தைக்கப் போகிறீர்கள்? வெறுமனே திருத்த வேலைகள் என்றால் ஓகே.
படத்தைப் பார்க்க, நேர்த்தையல் ஆப்ஷன் மட்டும்தான் தெரிகிறது. பாதங்கள் எக்ஸ்ட்ராவாக இல்லை. அப்படியானால் ஸிப், cord, பட்டன் தைக்க இயலாது. டார்னிங் ப்ளேட் இல்லை என்று தெரிகிறது. எம்ப்ட்ராய்டரி எல்லாம் எதிர்பார்க்காதீங்க. பெரிய ஸ்பூல் போடலாம் என்கிறார்கள். நேர்த்தையல்கள் மட்டும் அதிக நேரம் தைக்கக் கூடியதாக இருக்கும்.
முக்கியமாக நான் கவனித்த விடயம்... நான் பார்த்தவற்றில் வாரன்டி ஒரு மாதம் அல்லது 7 நாட்கள் என்பது போல இருக்கிறது. இதற்குப் போவதற்கு கொஞ்சம் அதிகம் செலவளித்து ஒழுங்கான மெஷினுக்குப் போகலாம். நீங்கள் மெஷினை வாங்கி வைத்து முதலாவது தையல் தைக்கும் முன்பே வாரன்டி பீரியட் முடிந்திருக்கும்.
தைக்க ஆரம்பித்திருந்தாலும் பிறகு பெரிய மெஷினில் தைக்கும் அளவுக்கு இதைப் பாவிக்க நினைத்தால் விரைவில் மெஷின் இறந்துவிடும். இது மென்மையான வேலைக்குத்தான் சரி. கைவினைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
விளம்பரத்தில் என்ன சொல்லியிருந்தாங்க என்று தெரியாது. என்னதான் சொன்னாலும், பாட்டரி ஆப்பரேட்டட் மெஷின்கள் ப்ளக் பாயின்ட்டில் போட்டாலும் பாரமான வேலைகளுக்கு ஆகாது.
- இமா க்றிஸ்
thanks ma.
thanks ma.